1) அரைலிட்டர் எண்ணெயை தலையிலும், முகத்திலும் ஊற்றிக் கொண்டு மொக்கையாக சுற்றிக் கொண்டு பெண்களை, ரொம்ப ஈஸியாகக் கண்டுபிடிக்கலாம். எப்போதும் கடலை மாவு, சோயாஸ் மாவு என எதையாவது அப்பிக் கொண்டு அதை லைட்டாக கழுவி விட்டு, 'யூ நோ, நேத்து நான் ஃபேஸியல் பண்ணேன்' என திரிவார்கள்.
2) 'ச்சே, அவர்கிட்ட இருந்து ஃபோன் வரவே மாட்டேங்குது, என்னை அவர் மறந்துட்டார்ன்னு நினைக்கிறேன், ஏன் தான் இவர் இப்படி இருக்காரோ' என்று தன்னந்தனியே புலம்பிக் கொண்டு திரிபவர்களை, 'என்ன ஆச்சுமா, யாரு?' என்று கேட்டு விட்டால் போதும், 'அவர் தான் என் வீட்டுக்காரர்' என்று தவுசண்ட் வாலா பட்டாசைக் கொளுத்திப் போட்டு வெட்கத்தில் பயமுறுத்துவார்கள். வேப்பிலை அடித்தால்தான் தெளியும்.
3) தினமும் தலையில் மல்லிகைப் பூ, ஒரு நாளைக்கு மூணுவாட்டி சோப் போட்டு முகம் கழுவிக் கொண்டு ஃப்ரெஷ்ஷாக இருப்பார்கள். 'ஏன்மா, என்ன ஆச்சி'ன்னு கேட்டுட்டா போதும், 'அவர் திடீர்ன்னு சர்ப்ரைஸ்ஸா என்னை பாக்க வந்தார்ன்னா, உன்னை மாதிரியா எண்ணெய் வடிஞ்சி இருக்கிறது?' என்று பல்பு கொடுத்து திமிராக கனவில் மிதப்பார்கள்.
4) அதுவரைக்கும் மேனிக்யூர், மேடிக்யூர் பத்தி என்னன்னே தெரியாது "அது ஏதாவது சைட் டிஷ்ஷா?" என்ற ரேஞ்ச்சில் திரிபவர்கள், வாரம் வாரம் மெஹந்தி, மருதாணி என எதையாவது கை கால்களில் அப்பி சிவப்பிந்திய பெண்களின் மிச்ச் சொச்சமாக திரிவார்கள்.
5) கைகளில் நகம் வளர்க்கும் பழக்கமே இருக்காது, கொஞ்சம் எட்டி பார்த்தாலும் கடித்து கரும்பி மொட்டையாக வைத்து இருப்பார்கள். அப்படி இருக்கும் நகங்களை எல்லாம் உரம் போட்டு வளர்த்து தினமும் ஒரு நெயில் பாலிஷ் போட்டு அலப்பரையை கூட்டுவார்கள்.
6) லஞ்ச்சில் பக்கத்தில் உட்கார்ந்து ஒரு அன்லிமிட்டட் மீல்ஸை தலைகீழாக கவிழ்ப்பவர்கள், "யூ நோ, ஐயாம் இன் டயட்" என ஆப்பிள் ஜூஸ் ஆர்டர் பண்ணி, அவர்கள் போடும் 140mm சீன் தாங்காது. அவர்களே பசி தாங்க முடியாமல், 4, 5 மணிக்கு கேன்டீனுக்கு கமுக்கமாக படை எடுத்து எக் சாண்ட்விச்சை உள்ளே தள்ளுவார்கள். பின்னே பழகின வயிறு தாங்குமா? அது என்ன எவ்வளவு ஃபேஸியல் பண்ணாலும் தாங்குற முகமா, இல்லை எத்தனை வாட்டி மெஹந்தி போட்டாலும் தாங்குற கையா?
7) காலேஜ் ஃபைனல் இயரில் எடுத்த நைந்து போன சுரிதாரை எல்லாம், வீட்டு பரணில் தூக்கிப் போட்டுவிட்டு, புதுசு புதுசாக பத்து செட் சுரிதார் எடுத்து இருப்பார்கள். அந்த கொடுமை எல்லாத்தையும் விட ஒவ்வொரு ட்ரெஸ்ஸுக்கும் மேட்சிங்காக இயர், நெக் ஃபிட்டிங்க்ஸ், இமிடேஷன்ஸ், பேங்கில்ஸ், ஹேர் க்ளிப்ஸ், பேர்ல்ஸ் என்று பின்னி பெடல் எடுப்பார்கள். அடிஷனல் பி.கு: இதெல்லாம் புது சுரிதாரை விட காஸ்ட்லியாக இருக்கும் :(
8) இந்த எல்லா காமெடிகளையும் விட அல்டிமேட் ஒண்ணு இருக்கு. டிவியில் ஏதாவது ஒரு பாட்டு ஓடும்போது, "திருமண மலர்கள் தருவாயா" ஜோதிகா போல ஒரு மாதிரியான கனவுலகத்தில் இருப்பார்கள், சாப்பிட பிடிக்காது, எப்போது ஃபோன் வரும் என செல்போனின் டிஸ்ப்ளேயை ஆன்லயே வைத்து இருப்பார்கள். கறுப்பாக இருக்கும் பெண்கள் கூட லிப்ஸ்டிக்கை பூசிக் கொண்டு, ஐ ப்ரோவ் ஷேட் பண்ணிக் கொண்டு திரியும் அலம்பல்கள், "ரீல் அந்து போச்சிடா சாமியோவ்" என ஒரே உல்டாவாக கால் தரையில் படாமல் திரிவார்கள்.
இதெல்லாம் கேர்ள்ஸ் திங்க், உனக்கு என்னடா பிரச்சினை என்று படிப்பவர்கள் நினைக்கலாம், திட்டலாம். அவர்கள் எல்லாம் ஒரு வயசு பையனின் பாய்ண்ட் ஆஃப் வியூவில் இருந்து பார்க்க வேண்டும். எந்நேரமும் பார்த்துக் கொண்டிருக்கும் மொக்கை ஃபிகர்கள், இதெல்லாம் தேறாது என ரிஜக்ட்டட் லேடீஸ் லிஸ்டில் ஒதுக்கி வைத்தவர்கள், ஒன் ஃபைன் டே இப்படி அப்படி என ஃப்ரெஷ்ஷாக வந்து திரியும் போது ஒருவனின் மனம் என்ன பாடுபடும்? ச்சே ஒரு வொன்டர்ஃபுல் ஃபிகரை மிஸ் பண்ணிட்டோமேன்னு அவளுக்கு கல்யாணம் ஆகிற வரைக்கும் கில்ட்டியா ஃபீல் பண்ணுவான். அந்த ஃபீலிங்க்ஸின் உளறல்களே மேலே பார்த்தவை.
ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...
எங்கிருந்தாலும் வாழ்க!
******************************
கல்யாணம் ஆகப் போகும் குமரிகளின் கூத்து குத்துகள்!
செல்வராகவனின் அடுத்த படம் - ஸ்டோரி டிஸ்கஷன்
ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு அப்புறம் என்ன படம் பண்ணலாம் என்று செல்வராகவன், அவர் அசிஸ்டென்டுகளுடன் பார்க் ஷெரட்டனில் ரூம் போட்டு டிஸ்கஸ் பண்ணிக் கொண்டுள்ளார்.
அசிஸ்டென்ட் 1: (பம்மிக் கொண்டே) சார், இந்த படம் காதல் கதையா, ரவுடி ஏரியாவா, இல்ல ஆயிரத்தில் ஒருவன் மாதிரி புராதன காலத்து படமா?
செல்வா: (கிங்ஸை உள்ளே இழுத்துக் கொண்டு) ப்யூர் லவ் ஸ்டோரி
அ 1: டேய், யாரு அங்க.. போய் ஆண்ட்ரியா மேடம்கிட்ட ஆறுமாசம் டேட்ஸ் கேளு.
செல்வா: ஹீரோயின் அப்ப தான் காலேஜ்ல போய் சேர்றா.
அ 1: ஓகே சார். நோ ப்ராப்ளம். போத்திஸ் ஷோரூம்ல இருக்குற பொம்மை மாதிரி டைட்டா 40 சுரிதாருக்கு ஆர்டர் கொடுத்திடலாம். அப்படியே ஹீரோயினுக்கு நாலு ஷார்ட்ஸ், டி ஷர்ட்டும் கொடுத்திடலாம்.
அ 3: (போஸ்டர் டிசைனரிடம்) ஹீரோவும், ஹீரோயினும் காலேஜ் ரெஸ்ட் ரூம்ல பேசிக்கிட்டு இருக்குற மாதிரி போஸ்டர் டிசைன் பண்ணி, சிட்டி ஃபுல்லா ஒட்டுறோம். முக்கியமா அந்த ஜெமினி பிரிட்ஜ் மேல பெரிய ஹோர்டிங்ஸ்
அ 2: ஸார், இந்த படத்துல ஹீரோ சைக்கோவா, அரை லூசா இல்ல முழு லூசா?
செல்வா: வெல்.. அவரு யாருன்னு க்ளியரா நானே ஒரு முடிவுக்கு வரல. ஆனா க்ளைமேக்ஸ்ல மௌண்ட் ரோட் எல்.ஐ.சி சிக்னல்ல இருந்து எக்மோர் வரைக்கும் நியூடா ஓடுறான்.
அ 1: (அப்ப கண்டிப்பா அவன் சைக்கோ தான்)
தனுஷ்: அண்ணா, நான் அந்த கேரக்டர்லல.....(மென்று முழுங்கிக் கொண்டே..)
செல்வா: (எதையும் காதில் வாங்காமல்) இந்த படத்துல மியூசிக் அதிரணும். ரெண்டே பாட்டு தான். ஏழு தீம் மியூசிக்.
அ 1: டேய் தம்பி, ஜி.விக்கு ஃபோன போட்டு ஒரு ஆறுமாசம் கால்ஷீட் வாங்கிடு.
செல்வா: நோ, நோ.. யுவன் தான் கரெக்ட்.
அ 1: ஸார், அவருக்கும் உங்களுக்கும் தான் வாய்க்கால் தகராறு.. அதுனால...
செல்வா: (இதையும் காதில் வாங்காமல்) ஹைதராபாத்ல ஒரு ஏழு அடுக்கு அப்பார்ட்மெண்ட் உச்சில இருந்து தான் அவன், லவ் ப்ரோப்பஸ் பண்றான். அப்படியே கீழே காலேஜ் முடிஞ்சி வர்ற பொண்ண, டாப் ஆங்கிள்ல இருந்து ஜூம் பண்ணி அவ ரியாக்சனை தெளிவா காட்டுறோம்.
அ 1: புரியுது ஸார், புரியுது. அந்த பொண்ணு அன்னைக்கு ஜீன்ஸ், டீ ஷர்ட்ல வருது.
செல்வா: யெஸ், எக்ஸாக்ட்லி..
அ 2: ஸார், சன் பிக்சர்ஸ் ஹக்சேனா லைன்ல வர்றார். எவ்வளவு பட்ஜெட், எவ்வளவு மாசம் ஆகும்ன்னு கேக்குறார். குத்துமதிப்பா 25 சி, 2 இயர்ஸ்ன்னு சொல்லிடட்டுமா?
செல்வா: நோ, நோ.. கட் தி கால்.. இந்த படத்தை என் சிஸ்டர் புரொடியூஸ் பண்றா. ஆர்.கே.புரொடொக்சன்ஸ்.
அ 1: ஹேய் தம்பி இங்க வா. படம் இந்த தீபாவளி ரிலீஸ். மூணு மாசம் தான் ஷீட்டிங்.. டிஸ்டிரிப்யூட்டர்ஸ்கிட்ட சொல்லிடு. அப்படியே யுவன், ஆண்ட்ரியா கிட்ட எல்லாம் சிக்ஸ்ட்டி டேஸ் மட்டும் டைம் வாங்கிடு போதும். பட்ஜெட் 3 கோடி தான்.
செல்வா: யெஸ் இது தான் என் ப்ளான். அசோசியேட்ஸ், நல்லா முன்னேறிட்டு வர்றீங்க. கீப் இட் அப்.
அ 1: (ஹும்ம்.. எத்தனை வருஷம் உங்களோட இருக்கோம்... இது கூட தெரியாதா?)
அ 2: ஸார், உங்களை பார்க்க ரவீந்தரன் சார் வந்திருக்காரு
செல்வா: யார்றா அவரு...
அ 2: ஸார், அவரு தான் "ஆயிரத்தில் ஒருவன்" புரொடியூசர். ட்ரீம் வேலி கார்ப்பரேஷன் ரவீந்தரன்.
செல்வா: அவர் ஏன், இப்ப வர்றாரு... நான் தான் அந்த படத்தோட எல்லா வேலையும் முடிச்சிட்டேனே? சரி வர சொல்லு..
செல்வா: ஸார், வாங்க.. "வாமனன்" படத்துல கமிஷனர்றா சூப்பரா நடிச்சி இருந்தீங்க.. நல்லா இருக்கீங்களா?
ரவீந்தரன்: இந்த கேள்விக்கி என்ன பதில் சொல்றதுன்னு தெரில்ல.. ஏற்கெனவே "வாமனன்" அடியே ரொம்ப வலிக்குது.. இப்ப உங்க படம் வேற..
செல்வா: ஏன் ஸார்.. இந்த படம் கண்டிப்பா நேஷனல் அவார்டு வாங்கும்..
ரவீந்தரன்: அந்த அவார்டு யாருப்பா கேட்டா.. கேக்குறவன் எல்லாம் அடிமாட்டு ரேஞ்சுக்கு விலை பேசுறாய்ங்க.. 35 கோடி முதல்ல பாதி கூட திரும்ப மாட்டேங்குது.. கொஞ்சம் வித்துக் கொடுப்பா..
செல்வா: ஸார், ஒண்ணும் கவலைப்படாதீங்க.. எப்படியாவது சரிக் கட்டிடலாம்.. வேணும்னா, நான் அடுத்த படத்தையும் உங்களுக்கே பண்ணுறேன்..
அ 1: ஃபோனில், எல்லா ப்ளானும் மாறிடுச்சி.. பட்ஜெட் 40 கோடி, 3 மூணுவருஷம் (ரகசியமாக யாருடனோ பேசிக் கொண்டிருக்கிறார்)
ரவீந்தரன்: அய்யய்யோ.. இன்னொரு படமா.. என் வேட்டிய அவுத்து கையில கொடுத்துருவாய்ங்க போல் இருக்கே.. ஆள விடு சாமி.. (என்று பின்னங்கால் பிடறியில் அடிக்க தெறித்து ஓடுகிறார்)
***********************************