சில படங்களை முதல் நாள் பார்க்கும்போது கொடுக்கும் பிரமிப்பு உன்னதமானது. இந்த படமும் அப்படியே. மிகவும் கஷ்டமான கதை. அதை பார்வையாளர்களுக்கு விஷுவலாக கொண்டு செல்வதற்கு எக்கசக்கமாக மெனக்கெட்டிருக்கிறார்கள். முக்கியமான மூன்று கேரக்டர்கள் தவிர 1000 க்கும் மேற்பட்ட துணைநடிகர்கள். படம் முழுவதும் ஏகப்பட்ட காட்சிகளில் ஒவ்வொரு ஃப்ரேமிலும் குறைந்தது 200 முதல் 500 பேர் இருக்கிறார்கள். ஏறத்தாழ இரண்டு வருடத்திற்கும் மேலான அயராத உழைப்பு. அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.
முதல் காட்சியில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பாண்டிய நாட்டில் இருந்து முக்கியமான சிலையை, பார்த்திபன் தலைமையிலான சோழ ராஜ்ய படைகள் கடத்திக் கொண்டு போகிறார்கள். சோழ ராஜ்யம் பாண்டிய படைகளால் சுற்றி வளைக்கப்பட்ட பின், சோழ ராஜ்யத்தின் ராஜா, இளவரசன் மற்றும் மக்களுடன் தஞ்சையை விட்டு கடல்வழி மார்க்கமாக வெளியூர் செல்கிறார்கள். சோழ மக்களின் புகலிடத்தை தேடி சென்ற அகழ்வாராய்ச்சியாளர் பிரதாப் போத்தன் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார் என செய்திகள் வருகின்றன. இதைத் தொடர்ந்து சி.ஐ.டி ஆஃபிசர் ரீமா சென், பிரதாப் போத்தனின் மகள் ஆண்ட்ரியா, செக்யூரிட்டி கமாண்டர் அழகம்பெருமாள் க்ருப்புடன் அந்த ஆராய்ச்சியை தொடர ஆரம்பிக்கிறார். இவர்கள் கார்த்தி தலைமையிலான லோக்கல் ஆட்களையும் அழைத்துக் கொண்டு வியட்நாம் அருகில் உள்ள தீவுக்கு கப்பலில் செல்கின்றனர். அங்கு தான் நம்மை இதுவரை காணாத உலகத்திற்கு கைபிடித்து அழைத்து செல்கின்றனர். அந்த காட்சிகள் இதுவரை நாம் ஹாலிவுட் சினிமாக்களில் மட்டும் கண்டது.
வழியில் ஆறு கடுமையான தடங்கல்களை சோழ அரசு ஏற்படுத்தி சென்றுள்ளனர் என ஒரு காட்சியில் அகழ்வாராய்ச்சியாளர் ஆண்ட்ரியா சொல்கிறார். தண்ணீர், காட்டுவாசிகள், சர்ப்பம், பசி, புதைகுழி, கிராமம். ஒவ்வொரு தடங்கலும் இன்னொன்றுக்கு சற்றும் சளைக்காதது. தண்ணீரில் அந்த தீவுக்கு செல்லும்போது பாதிவழியில் படகு தரைதட்டி நின்று விட, எல்லாரும் நடந்து செல்கின்றனர். அப்போது வித்தியாசமான மீன் மாதிரியான ஜந்து, நாலைந்து ஒன்று சேர்ந்து ஒரு மனிதனையே சாகடித்துவிடுகின்றது. காட்டுவாசிகள், பார்ப்பதற்கே மிரட்டலாக உள்ளனர். அவர்கள் அனைவரையும் ஆர்மி கொத்தாக கொத்தாக சாகடித்துவிட்டு, எரித்துவிட்டு செல்கின்றனர். பாம்பு, பாலைவனம் தாண்டி செல்கின்றனர்.
புதைகுழி தடங்கல் சம்பந்தப்பட்ட யோசனை, அட்டகாசம். தூண் தூணாக திசைக்கு ஒன்றாக நிற்கும் 10 கற்கள். சாதாரணமாக சென்றால் மண் விழுங்கி விடும் அபாயம். ஆனால் சூரிய உதயம், அஸ்தமனத்தின் போது கற்களின் நிழலில் தோன்றும் நடராஜர் உருவம், அந்த ஐடியா ஹேட்ஸ் ஆஃப் டூ செல்வராகவன். அப்போது அந்த நிழலில் நடந்து சென்றால் மட்டும் மண் விழுங்காது. மொத்தமாக அந்த ஏரியாவை தாண்ட முடியாமல், மறுநாள் காலை வரை வெயிட் பண்ணுவது நல்ல காட்சியமைப்பு.
அபரிதமான சத்ததில் காது, மூக்கில் இருந்து ரத்தம் சொட்ட சொட்ட, மனம் பிறழ்ந்து அவர்கள் கிராமத்தில்(கடைசி தடங்கல்) பண்ணும் லூட்டி நம்மை டெர்ராக்குறது. இப்படி அனைத்து கண்டங்களையும் தாண்டி விட்டபின், ஒரு வழியாக இடைவேளை.
இரண்டாம் பாதி, முழுவதும் அதிர்ச்சிகள். ஆயிரம் பேருக்கு மேல் ஒரு பெரிய மலைக்குள் 1000 சோழர்களுடன் வசிக்கிறார் ராஜா பார்த்திபன். அந்த சூழலில் புதிதாக வந்த மூவரை விசாரிக்கும் காட்சிகளில், ரீமா சென் சம்பந்தபட்ட ட்விஸ்ட் எதிர்பாராத ஒன்று. தொடர்ந்து வரும் ஏமாற்றங்கள், போர் கடைசி வரை சோழ நகரம் சேர்வோமா சாவோமா என ஏக்கத்துடன் இருக்கும் மக்களின் துயரம் என கண்கலங்க வைக்கின்றனர்.
என்ன தான் இது வரலாற்றுப் படமாக இருந்தாலும், ‘துள்ளுவதோ இளமை’, ‘7/g' செல்வராகவன் டச் இல்லாமல் இருக்குமா? எக்கச்சக்க இடங்கள். ரீமா சென், ஆண்ட்ரியா இருவரையும் கார்த்தி எட்டி எட்டி பார்க்கும் காட்சிகள், குளிரில் இருவரையும் கட்டிப் பிடித்துக் கொள்வது, பாம்பு துரத்தும்போது இருவரையும் இடுப்பில் தூக்கிக் கொண்டு ஓடுவது, கிராமத்தில் ஆண்ட்ரியாவை ஏடாகூடாமாக அடிப்பது என பல காட்சிகள். வசனங்களிலும்.
ரீமா சென் - சூப்பர் ரோல். முதல்பாதியில் இவருக்கு டப்பிங், குஷ்பு(?)என நினைக்கிறேன். அந்தப்புரத்தில், பார்த்திபனுடன் நேருக்கு நேர் சுத்த தமிழில் பேசும் காட்சியில் நல்ல நடிப்பு. எக்கச்சக்க கவர்ச்சி. சாதாரணமாக க்ளீவேஜ் மட்டும் காட்டும் கதாநாயகிகள் மத்தியில், ‘ஓ.. ஈசா’ மற்றூம் ‘தாய் தின்ற மண்ணே’ பாடல், அதைத் தொடர்ந்து வரும் சண்டை காட்சிகளில் அவரின் மேலாடை அவிழ்ந்து விடும் தொலைவில் தொக்கி நிற்கிறது. சோழப் பேரரசை எதிர்க்கும், சிலையை கைப்பற்ற நினைக்கும் பாண்டிய மன்னரின் கடைசி வம்சமாக இவர் அவதாரம் எடுக்கும்போதும், அதைத் தொடர்ந்து பார்த்திபனை நம்ப வைத்து ஏமாற்றும்போதும் உதறுகிறது.
கார்த்தி - கப்பலில் எம்.ஜி.ஆர் பாட்டுக்கு ஆடிபாடும் காட்சியில் இருந்தே அவர் ரகளையை ஆரம்பித்து விடுகிறார். ரெண்டு ஹீரோயின்களையும் சமாளிக்க முடியாமல் தவிக்கும் எக்ஸ்பிரஷன்களை கண்களிலேயே காட்டி விடுகிறார். அடிக்கடி ரீமா சென்னிடம் அறை வாங்குகிறார். இரண்டாவது பாதியின் ஆரம்பத்தில் அதிக வேலை இல்லாமல், க்ளைமேக்ஸ் நெருங்க நெருங்க அவரின் இருப்பை ப்ரூவ் பண்ணுகிறார். அதுவும் அந்த ’க்ளாடியேட்டர்‘ சண்டைக் காட்சி போல் இருக்கும் திறந்தவெளி மைதான காட்சியில் கொந்தளிக்கிறார்.
பார்த்திபன் - அட்டகாசமான ரோல். இரண்டாவது பாதியில், முகக்கவசம் அணிந்து ராஜநடையுடன் நடந்து வரும் ஸ்டைலே அழகு. ‘தாய் தின்ற மண்ணே’ பாடலில் அவர் ஆடும் நடன மூவ்மெண்ட்ஸ் அழகு. சொந்த நாடு திரும்ப முடியாத சோகம், எல்லா காட்சிகளிலும் அவர் கண்களில் தேங்கி நிற்கிறது. அதே போல் கடைசிகாட்சியில், அவர் வீழும்போது கலங்க வைக்கிறார்.
ஆண்ட்ரியாவுக்கு அதிக வேலை இல்லை. எந்நேரமும் உம்மென இருக்கிறார். அந்த கிராமத்தில் நடக்கும் அடாவடி காட்சிகளில், இவரின் ட்ரெஸ் கன்னாபின்னாவென கொடுமையாக இருக்கிறது. பிண்ணனி இசையில் ஜி.வி.பிரகாஷ் மிரட்டுகிறார். ‘மாலை நேரம்’, ‘பெம்மானே’ பாடல்கள் படத்தில் இல்லை. ‘பெம்மானே’ பாட்டின் பி.ஜி.எம் மட்டும் க்ளைமேக்ஸில் கலங்க வைக்கிறது.
கடைசி காட்சிகளில், பாண்டிய பேரரசின் படைகளான இந்திய ராணுவப்படை, சோழப் பெண்களின் மீது ஏவிவிடும் வன்முறை சகிக்க முடியவில்லை. அதுவும் கில்லி ‘அப்படி போடு’ பாடலுக்கு நிர்வாணமாக பார்த்திபன் மனைவியை நடனமாடச் சொல்லும்போது.
படத்தில் ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள். இவர்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு வருவதற்கு ஹெலிகாப்டரால் வரமுடியாதா? அப்புறம் ஏன் ஆறு தடங்கல்கள்? அவ்வளவு கஷ்டமான தடங்கல்கள் செட் பண்ணியவர்கள், ஏன் எதிரிகளுடன் புத்திசாலித்தனமாக சண்டை போடாமல் வேல்கம்பு, வில்லுடன் சண்டை போடுகின்றனர்? ரீமா சென்னுடன் சண்டை போடும்போது, அவரது நிழலை வைத்தே பார்த்திபன் அடக்குகிறார். அந்த சக்தியைக் கொண்டு, ஏன் எதிரிகளுடன் போரிடவில்லை? ஆனால் இவையெல்லாம் படம் பார்க்கும்போது உறுத்தவில்லை.
இந்த படத்தின் க்ளைமேக்ஸ், எனக்கு புரிந்தது. ஆனால் எத்தனை பேருக்கு புரியும் என்பது தவுசன்ட் டாலர் கொஸ்டின். என்னுடன் பார்த்தவர்களுக்கே புரியவில்லை.
ஒரே ஒரு கேள்வி. இந்த படத்தில் யார் ஆயிரத்தில் ஒருவன்? செல்வராகவன்.
*******************************
ஆயிரத்தில் ஒருவன்!
Labels:
ஆயிரத்தின் ஒருவன்,
சினிமா,
விமர்சனம்
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
NICE REVIEW.
nice preview Ganesh
thx
//ஒரே ஒரு கேள்வி. இந்த படத்தில் யார் ஆயிரத்தில் ஒருவன்? செல்வராகவன்.
//
Super Punch
படத்தை ரொம்ப ரசிச்சு பாத்தீங்க போலிருக்கு. இன்னைக்கு நைட்டுதான் இங்க ரிலீஸ்.
adhenna thousand dollar question? million dollar question dhanae solluvanga. idhellam logic pakka koodadhu illa? :))
enga shiyamala va kanom boss?
helicopter la varalam but oru velai damage agina yenna pannarathu...
ஒன்று புரிகிறது செல்வராகவன் பழைய இங்க்லீஷ் படங்களை, Ten Commandments and Meckennas Gold போன்ற பழைய படங்களை DVD இல் பார்த்துள்ளார் என்று புரிகிறது.
Really its nice review... me too feel the same... i like the movie very musc i want to see the movie again in thater.... this is not usual masala movie... please watch
annal parunga enathu nanban oruthan padam paka poitu thirumba vanthu orey alugai..
selvaragavan ematitardanu..
400rupees vera poitenu feel panan..
but neenga elthi erukiratha patha pakalam pola..
ok super comments..
nan padam pakka pogala yena..
neenga eluthinatha vaithey
padam patha oru feelings..
Nandri
GAnesh..
Valga valamudan.
parthiban thalaimyil illai. Chola manaral anuipi vaikapaitta illaravasanin vamsa valil vanthu tharpothu irukkum mannan Parthiban. Climax kachyil Karthik kapatri kodu varapadum siruvan apothiya illavarasan.
//படத்தின் க்ளைமேக்ஸ், எனக்கு புரிந்தது//
pls tell us.v expect that chola's will win.i dont like that க்ளைமேக்ஸ்
நன்றி குப்பன்.யாஹூ
நன்றி ♠புதுவை சிவா♠
நன்றி முகிலன்
நன்றி சின்ன அம்மிணி
படத்தை ரொம்ப ரசிச்சு பாத்தீங்க போலிருக்கு. இன்னைக்கு நைட்டுதான் இங்க ரிலீஸ்.//
பாருங்க. உங்களுக்கு பிடிக்குமான்னு தெரியலை :)
நன்றி Saran-DBA
adhenna thousand dollar question? million dollar question dhanae solluvanga. idhellam logic pakka koodadhu illa? :))// ஆமா :)
enga shiyamala va kanom boss?//
சீக்கிரமாவே :)
நன்றி hasan
helicopter la varalam but oru velai damage agina yenna pannarathu...//
ஆமா என்ன பண்றது. கஷ்டம் :)
நன்றி கக்கு - மாணிக்கம்
ஒன்று புரிகிறது செல்வராகவன் பழைய இங்க்லீஷ் படங்களை, Ten Commandments and Meckennas Gold போன்ற பழைய படங்களை DVD இல் பார்த்துள்ளார் என்று புரிகிறது.//
:)
நன்றி a!
நன்றி Complan Surya!
நன்றி roomno104!
நன்றி Anonymous
nice review pa..
Intha padam yellarukkum puriyum pidikkum nu sollave mudiyathu (u r correct )...
According to me nice movie...
Good effort...
"நன்றி Complan Surya!"
ellam nalathan eruku.."
nandri...venam..
adutha episoda soon
release panuga sir..
Valga Valamudan.
//இந்த படத்தின் க்ளைமேக்ஸ், எனக்கு புரிந்தது. ஆனால் எத்தனை பேருக்கு புரியும் என்பது தவுசன்ட் டாலர் கொஸ்டின். என்னுடன் பார்த்தவர்களுக்கே புரியவில்லை.//
padam paarthu muditthavudan ithe kelviyum ennamum enakkum thondriyathu....
nam indraiya thalai muraiyinar vaarakkadasi kudikkum, vara muluvathum pengalukkum adimaiyaagi ullanar enbathu en ennam.
Post a Comment