ராவணன் - ராமாயணம் Touchpoints
1. கதாபாத்திரங்கள் ஒற்றுமை.
2. அன்று தசரதனின் மூன்றாவது மனைவி செய்த சூழ்ச்சியால் 14 வருடங்கள் வனவாசம் போகிறான் ராமன். இன்று உடன் வேலை பார்க்கும் போலீஸ்காரர்கள் ஒரு பெண்ணுக்கு செய்த சூழ்ச்சியால், மனைவியைத் தேடி 14 நாட்கள் வனவாசம் போகிறான் நவீன ராமன்.
3. அன்று, அனுமார் இலங்கையில் சீதையை சந்தித்து பின் வாலில் தீப்பற்றி இலங்கை எரிந்தது. இன்று, கார்த்திக், விக்ரமை சந்தித்தபின் தம்பி சாகிறான். காட்டுக்குள் நடக்கும் நேரடி சண்டையில் தீப்பற்றி எரிகிறது.
4. சீதை அழகில் மயங்கி, அவளை கவர்ந்ததால் ராமர் எதிரியாகிறான். இன்று, ராமன் எதிரியானதால், சீதையைக் கவர்ந்து, பின் அவள் அழகில் மயங்குகிறான்.
5. 10 தலை ராவணனின், பத்து குணாதிசியங்களை அதாவது நல்லவன், மக்களுக்கு உதவுபவன், அடிக்கடி காமெடி செய்வான், பெண்கள் விரும்பும் அழகன் என இதே போல் பத்து பேர் வந்து சொல்கின்றனர். அதில் ஒருவன் மட்டும் கெட்டவன் என்கிறான்.
6. அனுமார் சீதையை சந்திப்பது, சூர்ப்பநகை மூக்கை மோப்பநாய் மாதிரி செய்வது, கும்பகர்ணன் சாப்பட்டு தட்டுடன் எப்போதும் திரிவது, தம்பி விபீஷ்ணன் என மற்றவற்றை அனைவரும் எழுதிவிட்டனர்.
நகைமுரண்கள்:
1. கல்யாணத்தன்று ஓடிப் போன மாப்பிள்ளையை, கோழை பேடி எனக்காட்ட ஐஸ்வர்யாராயின் உடையுடன் கட்டித் தொங்கவிடப்பட்ட இடம்.
2. காட்டுக்குள் ஒரு நாள், ஷேவிங் நுரையுடன் இருக்கும்போது, வெளியே ஏற்பட்ட தகராறினால் ஷேவிங் நுரையைத் துடைத்துவிட்டு போய்விடுவார் ப்ரித்விராஜ். மீண்டும் ஐஸ்வர்யாராயை சந்தித்தபோது, அவர் கேட்ட கேள்வி, "இது தான் நீங்க என்னைப் பிரிஞ்சி 14 நாள் வளர்த்த தாடியா?"
3. ராவணன் மேல் ஆரம்பத்தில் நெருப்பாய் உமிழ்ந்த வெறுப்பு கடைசியில் அன்பில் முடிகிறது. ராமன் மேல் கடவுளாக இருந்த அன்பு, கடைசியில் வெறுப்பாய் முடிகிறது.
4. மிஷனின் ஆரம்பத்தில், 14 மணி நேரத்தில் சீதையை பிடித்துவிடுவதாக சொல்லும் ராமன் மொத்தத்தில் எடுத்துக் கொள்ளும் காலம் 14 நாட்கள்.
5. 10 தலை ராவணனின், பத்து குணாதிசியங்களை அதாவது நல்லவன், மக்களுக்கு உதவுபவன், அடிக்கடி காமெடி செய்வான், பெண்கள் விரும்பும் அழகன் என இதே போல் பத்து பேர் வந்து சொல்கின்றனர். அதில் ஒருவன் மட்டும் கெட்டவன் என்கிறான். அந்த கெட்டவனை மட்டும் ராமன் பார்க்கிறான். மற்றவற்றை சீதை பார்க்கிறாள்.
எக்ஸ்ட்ரா மேட்டர்ஸ்:
1. பருத்திவீரனில் இருந்து அதே காட்சியை, அதே டோனில் "வலிக்குதுடாஆஆ" என புலம்பும் ப்ரியாமணி
2. ஐஸ்வர்யாராயின் ட்ரெஸ். முகத்தில் தெரியும் வயது, தலைக்கு கீழே தெரியவில்லை. கடைசி சுரிதாரிலாவது ஒழுங்காக தெரிவார் என்று பார்த்தால், அங்கேயும் மணிரத்னம் தெரிகிறார்.
3. இளம்வயது பெண்களுக்கே ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் ப்ளஸ் ஸாரி, ஆண்ட்டி லுக் கொடுக்கும் என என்னைப் போன்ற சினிமா பார்ப்பவனுக்கே தெரியும்போது, ஒரு காட்சியில் ஐஸ் ஆன்ட்டிக்கு அதே காஸ்ட்யூம் கொடுத்த டிசைனர் வாழ்க!
4. விக்ரம். என்ன புஜங்கள்? சாதாரணமாக கையை உள்வாங்கி மடக்கி இருக்கும் காட்சியிலேயே, ச்சும்மா திமிறிக் கொண்டிருக்கிறது.
5. லாஸ்ட் பட் நாட் லீஸ்ட், நாடோடி தென்றலாக ரஞ்சிதா. அதே ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டுடன். ஆடு தான் மேய்க்கவில்லை. நித்தியை மேய்த்துக் கொண்டிருப்பார் போலும்.
மத்தபடி வேறெதும் நோட் பண்ணலீங்க....
**********************************
ராவணன்-ராமாயணம் Touchpoints, Trivia, Extra
Subscribe to:
Posts (Atom)