கணேஷ்க்கு வீட்டில் பெண் பார்த்துவிட்டார்கள். அந்த பெண் பெயர் சியாமளா அவனுடன் ஒன்றாக வேலை பார்க்கிறாள். சியாமளா, திமிர் பிடித்த பெண் என்று கேள்விப்பட்டால் கூட பரவாயில்லை. நேராக பார்த்து பேசி, டென்ஷன் டரியல் ஆகியிருந்தான். (எவ்வளவு டென்ஷன் என்றால் இங்கே போய் பார்க்கவும்)
இப்போது அவன் நம்பிக்கை எல்லாம் அப்பா, அம்மாவிடம் பேசி இந்த சம்மந்தத்தை இத்தோடு நிறுத்துவதில் தான் உள்ளது. தனியாக கிச்சனில் இருந்த அம்மாவிடம், அஸ்திரத்தை ஆரம்பித்தான்.
"ம்மா, இந்த பொண்ணு வேணாம்மா. ரொம்ப குண்டா இருக்கா? நான் தான் சொன்னேன்ல, எனக்கு ஒல்லியான பொண்ணுதான் வேணும்"
ஃபோட்டோவை வாங்கி பார்த்துவிட்டு,"இவ குண்டா? ஆடிக்காத்துல பறந்துபோற மாதிரி இருக்குறவ தான் வேணுமா? லூசாடா நீ. பரிமளா சித்திய பார்த்தது இல்லையா?"
"யாரு அவங்க?"
"அதான்டா, திருமங்கலம் குண்டு சித்தி"
"ஆமா"
"அவ சின்ன வயசுல எப்படி இருந்தா தெரியுமா? முருங்கைக் காய் மாதிரி ஒல்லியா இருந்தா? இப்ப பாரு, அவ பேரே குண்டு சித்தின்னு சொல்றோம். கல்யாணத்துக்கு அப்புறம் எல்லா பொண்ணுங்களும் கண்டிப்பா குண்டு ஆயிடுவாங்க. ஒல்லியான பொண்ணுங்க தான் ரொம்ப ஃபாஸ்ட்டா குண்டு ஆவாங்க. மனசை போட்டு குழப்பிக்காதடா"
"அம்மா, நான் சொல்றது ஸ்லிம்மா, ஸ்ட்ரக்சர்டா... ம்மா ப்ளீஸ் அதெல்லாம் உங்களுக்கு சொன்னா புரியாது. அதுவும் இல்லாம இவ ரவுடிமா. என்கூட தான் வேலை பாக்குறா"
"ஓ.. அப்படியா.. ரொம்ப நல்லதா போச்சி. கண்ணா,சொல்றத கேளு ரொம்ப நல்ல இடம், நல்ல் குடும்பம்டா. வீணா மனசைப் போட்டு குழப்பிக்காத. போ, ஈவ்னிங் போறதுக்கு கெளம்பு"
அம்மாவிடம் திட்டம் பலிக்காது. வேற வழி இல்லை, அப்பா காலிலாவது விழுந்து இதை நிறுத்த வேண்டும்.
ஹாலில் உட்கார்ந்து டி.வி. பார்த்துக் கொண்டிருந்தவரிடம்,
"அப்பா, இந்த பொண்ணு சம்மந்தம் வேணாம்ப்பா ப்ளீஸ்!"
"ஏன்டா, இப்ப போய் சொல்ற?"
"ஒரு வாரம் முன்னால நீங்க அனுப்பினத, நேத்து தான் நேர்ல பாத்தேன். என் புது ஆஃபிஸ்ல தான் வேலை பாக்குறா. சரியான திமிர் புடிச்ச பொண்ணுன்னு கேள்விப்பட்டேன். ப்ளீஸ் வேணாம்ப்பா"
"ஓ.. ரொம்ப நல்லதா போச்சி"
(ஏன் சொல்லி வச்சதுபோல ரெண்டு பேரும் ஒரே மாதிரி ரியாக்ட் பண்றீங்க)
"அதெப்படிடா, ரெண்டே நாள்ல ஒரு பொண்ணைப் பத்தி இம்ரெஸ்ஷன் டெவலப் பண்ணுவ"
"அப்பா... அவ நான் தான் மாப்பிள்ளைன்னு தெரிஞ்சதும், என்னை லஞ்ச் கூப்பிட்டுப் போய் செமத்தியா கலாசிட்டா.. பெண்ணுரிமை, ஆண்கள் அதிகாரம்ன்னு விட்டு விளாசிட்டு கடைசில நான் தான் கல்யாண பொண்ணுன்னு சொல்றா. எனக்கு பேச்சு மூச்சே நின்னு போச்சி"
"ஹா ஹா.. ரொம்ப தெளிவான பொண்ணு தான். கல்யாணத்துக்கு முன்னாடி உங்க அம்மாவோடா இன்னோசன்ட் முகத்த வச்சி தான் கட்டிக்கிட்டேன். ஆனா அதுக்கு அப்புறம் உரிமை, அதிகாரம்,ராஜ்யம் எல்லாம் அம்மா தான். எல்லாமே என்கிட்ட ஒரு ஃபார்மலிட்டிக்கு தான் கேட்பா. அந்த வகைல நீ கொடுத்து வச்சவன்டா. சியாமளா ரொம்ப தெளிவா முன்னாடியே உன்கூட வெளில வந்து பேசி இருக்கா, என்ஜாய்"
"நீங்க காமெடி பண்றதுக்கு இது தான் டைமா? இது என் வாழ்க்கை பிரச்சினைப்பா. கல்யாணத்துக்கு அப்புறம் ஆஃபிஸ்ல இருந்தே லேட்டா பதினோரு மணிக்கு வந்தா சாப்பாடு கூட போட மாட்டா. 'நீங்க வர்ற வரைக்கும் நான் ஏன் வெயிட் பண்ணனும், உங்களுக்கு நான் ஏன் சாப்பாடு போடணும். இது கூட காலங்காலமா ஆண்கள் மனைவி மீது நடத்தும் அடக்குமுறைகளில் ஒன்னு'ன்னுனு மேடைல பேசுற மாதிரி பேசுவா"
"ஒண்ணும் கவலைப்படாதடா. கல்யாணத்துக்கு அப்புறம் உன்னைய பட்டினியா தூங்கவிட மாட்டா"
"வாட்? ஏதோ டபுள்மீனிங்ல பேசுற மாதிரி இருக்கே" முனகினான். பின் சத்தமாக "அப்பா, நான் சொல்றது உங்களுக்கு புரியவே இல்லையா?"
"நீ போய் கெளம்பு. கல்யாணத்துக்கு அப்புறம் சியாமளா ஆஃபிஸ் போகமாட்டாள்ன்னு சொல்லிட்டாங்க"
"ஐயய்யோ.. 24 மணிநேரமும் வீட்ல தான் இருப்பாளா? நான் செத்தேன்" என்று அயர்ச்சியாய் நடந்தான்.
பெண் பார்க்கும் படலம் நடந்து கொண்டிருந்தது. தலையைக் கீழே குனிந்தவன், அரைமணிநேரமாய் நிமிர்ந்துகூட பார்க்கவில்லை. பெரியவர்கள் தான் பேசிக்கொண்டிருந்தனர்.
சியாமளா அப்பா, "கணேஷ், பொண்ணுகூட தனியா 5 நிமிஷம் பேசுறீங்களா?"
(அய்யோ, தனியா பேசி நானே எனக்கு சூனியம் வச்சிக்கவா, நான் மாட்டேன்) "இல்லங்க, பரவால்ல" குனிந்த தலையை நிமிரவே இல்லை.
"அட, கூச்சப்படாதீங்க மாப்ள, போய் பேசுங்க, நாங்க எதுவும் சொல்ல மாட்டோம்" சொல்லி அவரே சிரித்துக்கொண்டார்.
(மாப்ளயா???? ஆஹா முடிவே பண்ணிட்டாய்ங்களா?)எழுந்து போனான்.
மொட்டைமாடிக்கு அனுப்புனா கூட அப்படியே கீழே குதிச்சி எஸ்கேப் ஆகலாம். இவிங்க என்ன பெட்ரூமுக்கு அனுப்புறாய்ங்க. சம்திங் ஃபிஷ்ஷி, குழம்பினான் கணேஷ்.
உள்ளே போனான். வந்த வேகத்தில் கதவு மூடிக் கொண்டது. கதவில், ஒரு ச்சின்னக் குழந்தை, வாயில் விரல் வைத்து மூடி "Oh My GOD!" என்று சொன்ன வால்பேப்பர் கண்ணுக்குப் பட்டது.
"ஆஹா சகுனமே சரியில்லையே" மைண்ட் வாய்ஸ்
சியாமளாவைப் பார்த்தான். இவனுக்கு பிடித்த ஃப்ளூ கல்ரில் டார்க் பார்டர் வைத்த பட்டுபுடவையில் ஜெகஜோதியாக இருந்தாள். தலையைக் கீழே குனிந்து இருந்தாள். கால் விரல்களை புடவை மூடியிருந்தது.
"ஓ. வெட்கப்படுறா போல கள்ளி, எமகாதகி. கணேஷ் உஷார். புடிக்கலைன்னு நேரா சொல்லிட்டு எஸ்கேப் ஆகிடு" தீர்மானித்தான்.
தொண்டையை செருமிக் கொண்டே, "இங்க பாருங்க, உங்களுக்கும் எனக்கும் செட் ஆகாது. நீங்க உங்க ரேஞ்சுக்கு ஏத்த நல்ல மாப்பிள்ளையா பாத்து செட்டில் ஆகிக்கோங்க. என்னை விட்ருங்க. நீங்களே உங்க அப்பா, அம்மாகிட்ட 'என்ன பிடிக்கலை'ன்னு சொல்லி நிறுத்திடுங்க" தம் பிடித்து விடாமல் பேசினான்.
""
"என்னங்க எதுவும் பேச மாட்டேங்குறீங்க"
"ம்ம் சரி"
"ரியல்ல்ல்லீ. தேங்க்ஸ்ங்க. Thanks a Lot" என்று சொல்லிவிட்டு திரும்பி பார்க்காமல் கதவை நோக்கி ஓடினான்.
"ஒரு நிமிஷம்"
("ஆஹா, விடமாட்டேங்கிறாளே") திரும்பாமல் கதவைப் பார்த்து நின்றான்.
"I Love You!"
கதவில் அந்த குழந்தை இவனையே பார்த்துக் கொண்டிருந்தது.
************************
கணேஷ்-சியாமளா.. 1 2 3 4 5 6 7 8 9 10
************************
சியாமளா-2: கணேஷ்க்கு கல்யாணம்!
கன்னி ராசி!
இடம் 1: ஆஃபிஸ் பார்க்கிங் & ஸ்மோக்கிங் ஏரியா.
'மச்சி, நான் டூவீலர் வாங்கி 9 மாசம் ஆச்சி. இன்னும் ஒரு பொண்ணைக் கூட பின்னால வச்சி அப்படியே ஜாலியா போனதே இல்லைடா.என்னை மாதிரியே என் வண்டியும் பேச்சிலரா இருக்கு' என ஆற்றாமையில் பொங்கினான் என் நண்பன், புகையை ஊதிக் கொண்டே. நான், 'மச்சி, ஒண்ணும் கவலைப்படாதடா. If you don't mind, உன் வண்டியத் தர்றீயா. வெளில ATM வரைக்கும் போக வேண்டியிருக்கு. 2 மினிட்ஸ்ல வந்திருவேன். 'ஓ.கே டா. நேரா இங்கேயே வந்துடு. நான் உனக்காக வெயிட் பண்றேன்.'.
திரும்பி வந்தேன். பில்லியனில் அனிதா. வண்டியை பார்க் பண்ணிவிட்டு, அவள் அவனுக்கு 'ஹாய்' சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டாள். அதைப் பார்த்து ஷாக்காகி வாயைப் பிளந்தான். 'என்னடா நடக்குது. உனக்கும் மட்டும் எப்படிடா' என்று டென்ஷனை பொறுமையாகக் கொட்டினான்.
'எல்லாம் என் ராசி மச்சி' என்று தோளைக் குலுக்கினேன்.
இடம் 2: பஸ்.
'ஸார் என்ன இது? இப்படி இன்டீசன்டா லேடீஸ் சீட்ல உட்கார்ந்து இருக்கீங்க. எந்திரீங்க' என்று ஒரு கண்ணாடி அணிந்த அப்பாவியை அதட்டி எழுப்பினாள் கார்ப்பரேட் ஐடி கார்டை கழுத்தில் மாட்டியிருந்த ஒரு ஆன்ட்டி.
நான் கொஞ்ச தூரத்தில் நின்றிருந்தேன். இரண்டொரு ஸ்டாப் தள்ளி வண்டி நின்றவுடன், அவள் அருகே இருந்தவள் எழுந்து போய்விட்டாள். சுற்றும் முற்றும் ஒரு முறை பார்த்துவிட்டு, என்னைப் பார்த்து, "நீங்க வந்து உட்காருங்க" என்று என்னைப் பார்த்து அழைத்தாள்.
போய் கம்ஃபர்டபிளாக உட்கார்ந்த பின், தலையை தூக்கினால் அந்த அப்பாவி, என்னை எரித்து விடுவதுபோல் பார்த்துக் கொண்டிருந்தான்.
தோளை சிலுப்பி, புன்முறுவலுடன் சிரித்துவிட்டு வேறுபக்கம் திரும்பிக் கொண்டேன்.
இடம் 3: நான் தங்கியிருக்கும் ரூம், இரவு நேரம்.
எல்லாரும் 7 மணிக்கே ஆஃபிஸில் இருந்த வந்துவிட்டு, சீரியஸாக கிரிக்கெட் மேட்ச் பார்த்துக் கொண்டிருந்தனர். நான் வந்த போது நேரம் 9. ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிவிட்டு, ஃபேஸ் வாஷ் பண்ணிக் கொண்டிருந்த போது, மாடி வீட்டு ஹவுஸ் ஓனர் அம்மா, "கணேஷ், கணேஷ், கணேஷ்" என கத்தி கூப்பிட்டுக் கொண்டிருந்தார். அவர் கத்திய சத்தத்தில் முச்சந்தி விநாயகரே எழுந்து வந்து, "என்ன மாமி, அவசரம்" என்று கேட்டிருப்பார்.
நான் அவசரம் அவசரமாக ஷார்ட்ஸில் காலை நுழைத்து, பனியனுடன் வாசல் நோக்கி ஓடி வந்தேன். "வீட்ல குலோப்ஜாமூன் பண்ணோம்டா. நீங்க சாப்பிடுறதுக்கு கொண்டு வந்தேன்" என்று டப்பாவை நீட்டினாள். "ம்ம் சரிம்மா. தேங்க்ஸ்" செயற்கையாக சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு உள்ளே வந்தேன்.
ரூம்மேட்ஸ் மூன்று பேரும் கொலைவெறியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். "நாங்க மூணுபேரும் வந்து ஒரு மணிநேரம் மேல ஆச்சி. எங்ககிட்ட எல்லாம் கொடுக்காம அது மட்டும் ஏன் நீ வந்ததக்கு அப்புறம் உன்கிட்ட கொடுக்கிறாங்க?" என்று அவர்கள் பார்வையை ரீட் பண்ணினேன்.
வழக்கம்போல் அசட்டுத்தனமாக சிரித்துவிட்டு, நான் காலிபண்ணியது போக மிச்ச டப்பாவை அவர்களுக்குக் கொடுத்தேன்.
இடம் 4: அதே இடம், இரவு நேரம் 11 மணி.
கிரிக்கெட் மேட்ச்-ம் முடிந்துவிட்டது. ஒருவன் ஃபோனை எடுத்து மொட்டை மாடிக்கு போய்விட்டான். இன்னொருவன் வராண்டாவில் "Walk & Talk" பண்ணிக் கொண்டு இருந்தான். டைம் பாஸ் ஆகவில்லை. நான் லேப்டாப்பை ஓபன் பண்ணினேன். ரொம்ப நாளாக "நான் ரொம்ப பிஸ்ஸீ" என்று சூரியன் பட கவுண்டமணி போல் ஓவர் ரவுசு பண்ணிக் கொண்டிருந்த தோழி ஆன்லைனில் வந்து, "ஹாய்" என்றார்.
லேப்டாப் மானிட்டரைப் பார்த்து அதே வழக்கமான சிரிப்பைக் கொட்டிவிட்டு, திரும்ப "ஹாய்" அடித்தேன். தொடர்....ந்தது.
பின்குறிப்பு: இதில் என்னவோ நுண்ணரசியல் இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் மிகச்சரி. நுண்ணரசியல் மட்டும் அல்ல, நிறைய பெண்ணரசியலும் உள்ளது. மேலே சொன்னது எல்லாம் பாதி உண்மைகள். மீதி உண்மைகள் கீழே!
இடம் 1: ATM ல் பணம் எடுத்துவிட்டு திரும்பும்போது, பாய்ஃப்ரெண்டுடன் லஞ்ச் முடித்துவிட்டு குமரகம் ஹோட்டலில் இருந்து வந்தவள், மெயின் ரோட்டில் இருந்து DLF உள்ளே திரும்ப ரொம்ப தூரம் நடப்பதற்கு சோம்பேறித்தனம் பட்டுக்கொண்டு, என்னிடம் "ஒரு ஹாய், நாலு சிரிப்புகள்" பரிமாறிவிட்டு பின்னால் தொற்றிக் கொண்டாள். ஆஃபிஸ் வந்ததும் கழற்றிவிட்டு எஸ்கேப் ஆனாள்.
இடம் 2: ஜன்னலோர இருக்கையில் மழைத்தண்ணீர் உள்ளே சட சடவென அடித்துக் கொண்டிருக்க, என் சாந்த சொரூபமான முகத்தை பார்த்தவுடனே முடிவு பண்ணி, என்னை உள்ளே உட்கார வைத்து தற்காத்துக் கொண்டாள் கார்ப்பரேட் ஆன்ட்டி.
இடம் 3: போன தடவை மாமி கொடுத்த டப்பாக்களை சக ரூம்மேட்ஸ் இன்னும் கழுவி தரவில்லை. நான் ஒரு முறை கழுவிக் கொடுத்தேன். அதை நினைவில் வைத்து, என்னை அழைத்துக் கொடுத்தார் ஹவுஸ் ஓனர் மாமி.
இடம் 4: மேலே போனவனும், வராண்டாவில் இருந்தவனும் தம்தம் காதலிகளுடன் கடலை போட்டுக் கொண்டிருந்தனர். ஒன்றும் தேறாத, என்னை மாதிரி நல்லவனை, அந்த மெகா மொக்கை தோழி ஹாய் சொல்லி முடித்தவுடன், சொன்னாள், "லூசுப் பையா?".
கன்னி ராசியிலும் பல கண்டங்கள் உள்ளன.
******************************************
சுட சுட இரண்டு கவிதை!
முன்னால் சென்றவனின்
பின்னால் உட்கார்ந்து
போன சுரிதார் பெண்ணின்
இரண்டு முழ மல்லிகை
மகரந்தம்
மறுபடியும்
சொல்லிவிட்டு
போகிறது
உன் பிரிவை
பரபரப்பான சாலைகளின்
பேரிரைச்சல் இடையிலும்
*****
இறந்த காலத்தின் கேள்விகள்
சுழற்றி அடித்து என்னை
என்னுள் தேடிக் கொண்டிருக்க
நிகழ் காலத்தின் கேள்விகள்
ஏளனச் சிரிப்புடன்
எள்ளி நகையாடுகின்றது
இறந்த இறந்த காலத்திற்கான
பதில்களின் வடிவம்
பதியும்போது
கேள்விகளின் வண்ணம் மங்கி
கேள்விக்குறி புதிதாய்
முளைக்க
இறந்த காலத்திற்கு சென்ற
நிகழ் காலத்தின் கேள்விகளில்
இன்னும் கேட்கிறது அதே
ஏளனச் சிரிப்பு!
*********************
சியாமளா-1: அடாவடி பொண்ணும், அப்பாவி பையனும்!
புதிய ஆஃபிஸில் முதல் நாள். கணேஷ்க்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சுற்றியும் ஆந்திரா, கர்நாடகா, ராஜஸ்தான், தமிழ்நாடு, கேரளா என மாநிலம் வாரியாக லட்டு மாதிரியான பெண்கள் கூட்டம். எந்த பொண்ணைப் பார்க்க, என்ற ஏகக் குழப்பத்தில் இருந்தவனின் செல்ஃபோன் சிணுங்கியது.
"மச்சி, என்ன ஆஃபிஸ்டா இது? ஒரே பொண்ணுங்க கூட்டம். அம்பி மாதிரி இருக்கிற என்னை ரெமோ மாதிரி ஆக்குறாளுங்கடா..?" செயற்கையாக வெட்கப்பட்டான்.
"உனக்கு மச்சம் தான்டா. 'கணேஷ்'ங்கிற பேரைவிட 'கிருஷ்ணன்'னு சிச்சூவேனலா பேர் வச்சிருந்தா நல்லா இருந்திருக்கும். என் ப்ராஜ்க்ட்லயும் இருக்காங்களே. ஹூம்ம் ஒரே ஆன்ட்டிஸ்"
"சரி புலம்பாத. அதுக்கெல்லாம் லக் வேணும். சரி லஞ்ச்க்கு ஃபோன் பண்றேன். வை. டிஸ்டர்ப் பண்ணாத..பை"
ஒரு மாதிரியாக செட்டில் ஆகியிருக்கும்போது லஞ்ச் டைம் வந்தது. கெளம்பலாம் என்று இருந்தவனின் முதுகின் பின்னால் ஒரு கீச்சுக் குரல்.
"எக்ஸ்கியூஸ் மீ"
ஜீன்ஸ், டாப்பில் பின்னால் ஒரு பெண். துப்பட்டா மாதிரி இருக்கும் வஸ்துவை தோளில் துண்டு போடுவது மாதிரி போட்டு இருந்தாள். தெளிவான திருத்தமான முகம். டாப்ஸில் ஏதோ எழுதியிருந்தது.
என்ன என பார்த்தவன் கணநேரத்தில் தெளிந்து "யெஸ்" என்றான்.
"ஐயாம் சியாமளா, இந்த ப்ராஜெக்ட்ல தான் நானும் வொர்க் பண்றேன். வெளில லஞ்ச் போகலாமா?" மென்மையாக கேட்டாள்.
"ஷ்யூர்" என்றான் தன்னிச்சையாக. அவள் பின்னாலேயே சென்றான்.
"யார் இவள்,நான் ஏன் இவள் பின்னால் போகிறேன்" என்ற உண்மை லேட்டாக மனதில் உறைத்தது.
பார்க்கிங்கில் கணேஷ், அவன் வண்டி அருகே சென்றான். அப்போது, "என் வண்டியில போயிடலாமே?" என்றாள்.
"ஓ.. ஷ்யூர்"
அப்போதும் ஏன் அப்படி சொன்னான் என்று அவனுக்கே தெரியவில்லை.
பின்னால் அநாயசமாக உணர்ந்தவன், அவள் விரித்து போட்டிருந்த கூந்தல் வண்டி வேகத்தில் முகத்தில் மோத, "என்ன ஷாம்பூவாக இருக்கும்?" என்ற ஆராய்ச்சியில் இறங்கினான்.
எதிரெதிர் டேபிளில் இருவர். சிக்கன் பிரியாணி, பட்டர் சிக்கன் ஆர்டர் பண்ணிவிட்டு எனக்கு தேவையானதை ஆர்டர் பண்ண சொல்லிவிட்டு, ஹேண்ட் வாஷ் பண்ண போயிருந்தாள்.
மனதிற்குள் ஐன்ஸ்டீன் பிஸிக்ஸ் க்ளாஸ் எடுப்பதுபோல் ஒன்றும்புரியாமல் உட்கார்ந்திருந்தான். வந்தாள்.
"எனக்கு ஆண்கள் சுத்தமாகப் பிடிக்காது. சுயநலவாதிகள். பெண்களிடம் மட்டும் அதிகாரத்தைக் காட்டும் வீரர்கள்" என்று சியாமளா ஆரம்பித்தாள்.
"ஙே!"
"எல்லா விஷயத்திலும் பெண்கள் தங்களுக்கு கட்டுப்பட்டு போகவேண்டும் என்று யோசிக்கும் narrow minded peoples" என்றாள் கடுப்பாக.
மனதிற்குள், "இவளுக்கு என்ன பிரச்சினை? சம்பந்தமே இல்லாமல் என்கிட்ட புலம்பிக்கிட்டு இருக்கா?" என்று எண்ணினான்.
"என்ன? எதுவும் பேசாம இருக்கீங்க?"
"இல்லங்க, அதெல்லாம் ஒண்ணும் இல்ல. எனக்கு ஜீன்ஸ் போட்ட பொண்ணுங்கன்னா அலர்ஜி"
"இதுகூட ஆண்களின் வறட்டு அதிகாரம். பெண்கள் ஆண்களுக்கு சமமாக ஜீன்ஸ் போடுறாங்களேன்கிற கோபத்தின் வெளிப்பாடு தான்."
"வெல், இது முத்திப் போன கேஸ். ரொம்ப அடிபட்டு இருக்கா" என்று நினைத்துக் கொண்டிருந்த போது, அவனுடைய ஃபோன் அடித்தது.
"எக்ஸ்கியூஸ் மீ" என்று கடுப்புடன் கத்தரித்துவிட்டு, "என்னம்மா இந்த நேரத்துல?"
"இல்லடா, இந்த வாரம் ஊருக்கு வர்றேல்ல?"
"ஏன்மா, எதுவும் முக்கியமான விஷயமா?"
"எல்லாம் நல்ல விஷயம் தான்"
"சரி சரி நான் நைட் கூப்பிடுறேன்" என்றான் சியாமளா மீது இருந்த கடுப்பில்.
உள்ளே லெக்பீஸை கடித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
மூடை மாற்றலாம் என யோசித்துக் கொண்டு, "இந்த ப்ராஜெக்ட்ல உங்களுக்கு என்ன ரோல்?" என சாஃப்டாக கேட்டான் கணேஷ்.
"இதுவும் ஒரு வகையான ட்ரீட்மெண்ட். உங்க லெவல்ல விட கீழே டெவலப்பராக இருந்தால் அதிகாரமாக பேசலாம் என்கிற மனப்பான்மையின் வெளிப்பாடு" என்றாள் சூடு கொஞ்சமும் குறையாமல்.
கணேஷ் கடுப்பின் உச்சிக்கே போனான். "பாவம் உங்கள கட்டிக்க போறவன் நெலமை" என்று சத்தமாகவே முனகினான்.
"வாட்? என்ன சொன்னீங்க?"
"இதெல்லாம் எதுக்கு என்கிட்ட புலம்பிக்கிட்டு இருக்கீங்க. வாட்ஸ் யுவர் ப்ராப்ளம்?" கத்தியே விட்டான்.
"'பாவம் உங்கள கட்டிக்க போறவன் நெலமை'ன்னு நீங்க முனகினது எனக்கு கேட்டுருச்சி. இருந்தாலும் உங்களுக்கு self-sympathy அதிகம்" என்று சொல்லிக் கொண்டே ஹேண்ட் பேகில் இருந்து அவள் எதையோ எடுப்பதற்கும்,
"வாட்?" என அதிர்ச்சியின் உச்சியில் கத்துவறகும் சரியாக இருந்தது.
அவள் கையில் அவனுடைய லேண்ட்ஸ்கேப் கலர் ஃபோட்டோ.
"ஹலோ, இது எப்படி உங்க கையில..? என்று அதிர்ச்சியில் உறைந்தான்.
"இந்த சன்டே, நீங்க பொண்ணு பார்க்க போகும் முருகேசன் வாத்தியார் வீட்டுப் பொண்ணு நான் தான்" என்றாள் முதல் முறையாக வெட்கப்பட்டுக் கொண்டே.
அவள் டாப்ஸில் எழுதியிருந்த வாசகம், "SAY SOMETHING!"
*****************************
கணேஷ்-சியாமளா.. 1 2 3 4 5 6 7 8 9 10
*****************************
ரசித்த பாடல்: "கரிகாலன் காலைப் போல" மற்றும் சில
சமீபத்தில் நான் மிகவும் ரசிக்கும் பாடல்,வேட்டைக்காரன் படத்தின் "கரிகாலன் காலைப் போல" என்னும் பாடல். பாடிய இருவரில் ஆண் குரல் அவ்வளவாக பிடிக்கவில்லை. ஆனால் பெண்குரல் கிறங்கடிக்கிறது. தேடிப்பார்த்ததில் சங்கீதா என தெரிகிறது. அவர் பாடிய மற்ற பாடல்களைத் தேடிக் கொண்டிருக்கின்றேன். பாடல்வரிகளும் பல இடங்களில் ஓவர் கிக். உதாரணம்
ஆண்குரல்: மாராப்பு பந்தலிலே மறைச்சி வச்ச சோலை!
பெண்குரல்: சோலை இல்ல சோலை இல்ல, ஜல்லிக்கட்டு காளை
என்ன ஒரு கற்பனை! கவிஞர் வாழ்க! அனுஷ்கா வாழ்க!
சில இடங்களில் புரியவில்லை
ஆண்குரல்: வலம்புரி சங்கு போல பளபளக்குது கழுத்து
பெண்குரல்: கழுத்து இல்ல கழுத்து இல்ல கண்ணதாசன் எழுத்து!
ஙே! கழுத்துக்கும் கண்ணதாசன் எழுத்துக்கும் என்ன சம்பந்தம் என்று விடிய விடிய யோசித்து பார்த்ததில் ஒன்றும் புரியவில்லை.
ஆனால் அந்த லட்டு மாதிரியான குரல், ஏதோ பண்ணுகிறது. இரண்டாவது பல்லவி முடிவில், "மச்சம் இல்ல மச்சம் இல்ல நீ விட்டு வைச்ச மச்சம்" என்று முடிக்கும் போது, உடனே இதற்கு அனுஷ்காவின் நடிப்பை(?) பார்க்கவேண்டும் என ஆசை அதிகமாகிக் கொண்டே போகிறது. ஆனந்த விகடனும், "விஜய் படத்தில் இப்படி ஒரு ரசனையான பாடலா?" என்று ஆச்சர்யப்பட்டுக் கொண்டது உப தகவல்!
ஹும்ம்.. சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்கப்பா..
ரிலீஸ் என்றவுடன் மறுபடியும் நினைவுக்கு வருவது, மிகுந்த மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் "ஆயிரத்தில் ஒருவன்". டிரையிலரைக் கூட கண்ல காட்ட மாட்டேங்குறாங்க. இந்த படத்தின் பாடல்களின் வரிகளை தூக்கத்தில் எழு.ப்பிக் கேட்டால் கூட சொல்லும் அளவுக்கு கேட்டு விட்டேன். ஆனால்...செல்வராகவனுக்கே வெளிச்சம்.
அதற்குள் அவர் அடுத்த படத்தின் ஷூட்டிங்கிற்கு விக்ரம், சுப்ரமணியபுரம் சுவாதியுடன் வெளிநாடு போய்விட்டதாக செய்தி.
ஹும்ம்.. சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்கப்பா..// ரீப்பீட்டு.
"சிவா மனசுல சக்தி" படத்தில் "ஒரு அடங்காப்பிடாரி மேல நானே ஆசைப்பட்டேன்" பாடலை யாராவது கவனித்து பார்த்திருக்கிறீர்களா? வெளிநாட்டில் ரெண்டு பேரும் தண்டர்பேர்ட் ஓட்டிக் கொண்டு ஆரம்பாகுமே?
அதில் இரண்டாவது பல்லவியின் ஆரம்பத்தில் ஷங்கர் மகாதேவன் பாடுவார்
"அடிக்கடி ஆணவம் கொல்வதினாலே
நான்வெஜ்ஜில் அவளுக்கு பிடித்தது கொழுப்பு"
இந்த வரிகளின் போது கேமராவின் கோணத்தைப் பார்த்து இருக்கிறீர்களா? இது டைரக்டர் யோசனையா இல்லை கேமராமேனுடையதா? தெரியவில்லை. ஆனாலும்
எப்படி எல்லாம் யோசிக்கிறாய்ங்கப்பா....?
ரசிக்க:
*******************************
தீபா..வளி...வலி!
உனக்கு என் மீது காதலா
உன் கேள்விக்கு
இல்லை பைத்தியம்
என என் பதிலை
நீ எதிர்பார்க்கவில்லை
நானும்
நீ ரசிப்பாய் என
நீ ஏன் கவிதையாக
பேசுகின்றாய்
ஆச்சர்யமில்லை தினமும்
குற்றாலத்தில்
குடியிருப்பவன் அருவியில்
குளிப்பது
நீ
கலகலவென சிரிக்கும் சப்தம்
வித்தியாசமில்லை
அருவி நீர் கொட்டும் சப்தம்
அவன் அடிக்கடி கேட்பது
முடியல சாமி
முடிவே இல்லையா
உன் கவிதை கதறலுக்கு
என்ற உன் கதறலுக்கு
நான்
ஒரு வேளை
இருக்கலாம்
மரபுக்கவிதை எனது
புதுக்கவிதை ஆனவுடன்
ஹைக்கூ கவிதை
பிறந்தால்?
என் பதில்
முடிந்தகணத்தில்
மரபு புதுசாக மாற
துடித்தது
தவித்தது
ஒரு நாள் மட்டும்
இல்லை
365 நாட்களும்
தீபா உன்
உடன்
தீபாவளி
மெல்லவும் முடியாமல்
விழுங்கவும் முடியாமல்
தவித்த மாதிரியான
சூழ்நிலையில்
நினைக்கவில்லை
உன்னை
சந்திப்பேன் என்று
சில சொற்களுக்கே
சோதனை என்கிறபோது
வார்த்தைகள் வரம்
வரம் வாங்கி வரைந்தேன்
நினைவுகளின் வட்டம்
விட்டம் பெரிதாகி
கடந்த கால
காதல் வாழ்க்கையின்
மையத்தில் என்னை
விட்டது
எத்தனை கவிதைகள்
தீபா
தீபாவளி தீபா'வலி'யாக
உடைந்த ஒரு நாளில்
இருந்து
இன்று வரை
ஒரு நாள் மட்டும்
இருந்தது
ஒரு நாளும் இல்லை
என் வாழ்வில்
டிஸ்கி: இந்த கவிதை(அடடே, சொல்லவே இல்லை) எழுதியதில் இருந்து தீபாவளி செலிப்ரேஷன் மூடே போச்சு. :( ஹெல்ப் மீ..
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும்!
***************************************
ஷாப்பிங் போன காதலனும் காதலியும்!
"சிந்து, தீபாவளிக்கு புது டிரெஸ் எதுவும் எடுக்கலியா? இன்னும் ஒரு வாரம் தானே இருக்கு?"
"என்கிட்ட மலை மாதிரி குமிஞ்சு இருக்கற ட்ரெஸ்ல என்ன எடுக்கிறதுனே தெரியல? போன மாசம் வேற ரெண்டு செட் எடுத்தேன். நீ ஏதாவது ஐடியா கொடேன்?"
"எனக்கெல்லாம் பொண்ணுங்க ட்ரெஸ் பத்தி எதுவும் தெரியாது. நல்லா அவங்க போட்டிருந்த கொஞ்சம் நேரம் சைட் அடிப்பேன். அவ்வளவு தான். அதுவும் சுரிதார் சைட்ல ரொம்ப லாங்கா கட் பண்ணிட்டு, ரொம்ப டைட்டா பேண்ட் போட்டு திரியுற பொண்ணுங்கள அவங்க போற இடத்துக்கெல்லாம் போய் சைட் அடிப்பேன்."
"நாய் மாதிரி தான.. வெட்கமா இல்ல.. இப்படி என்கிட்டயே சொல்றதுக்கு? இடியட்"
"இதில என்னம்மா தப்பு? இது வாலிப வயசு. நாங்க எல்லாம் பாக்குறதுக்குத் தான அவங்க அப்படி போட்டு திரியுறாங்க. முதல்ல அவங்கள நிறுத்த சொல்லு. நான் நிறுத்துறேன்."
"சரி சரி போதும் போதும் உன் பஞ்ச். நான் நைட் யோசிச்சிட்டு மார்னிங் சொல்றேன். நாம பர்சேஸ் போகலாம்"
"ஒகே.. குட் நைட்"
~
"ஹலோ, என்ன சைலண்டா வர்ற.. எனக்கு ஒரு சான்டல் கலர் டீஷர்ட், காஃபி கலர் டஃப் ஜீன்ஸ். முடிவு பண்ணிட்டேன். உனக்கு என்ன?"
பில்லியனில் உட்கார்ந்துகொண்டு வானத்தை பார்த்து யோசித்துக் கொண்டே, "முடிவு பண்ணிட்டேன் வினோத். நீ மட்டும் அத பார்த்த ஷாக் ஆகிடுவே."
"ம்ம்ம்ம்.. பாக்கலாம்.. போத்தீஸ் தான.."
"ஆமா.."
~
"வினோத், சரி நீ போய் உன்னோடத எடுத்திட்டு இரு.. நான் செலக்ட் பண்ணிட்டு இருக்கேன்."
"ஓகே.."
பத்து நிமிடங்கள் கழித்து செல்போனில் கால்.
"வினோத், உடனே ட்ரையல் ரூம் வா... என் ட்ரெஸ்ஸ பாத்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லு.."
"ஓ.கே.."
உள்ளே போனால், ஜகன் மோகினியில் வரும் குட்டி பேய்கள் போல, ஒயிட் அண்ட் ஒயிட்டில் சிரித்தாள். மாஸ்க் மட்டும் தான் மிஸ்ஸிங்.
"ஐயோ, என்ன கொடுமை இதெல்லாம்? இது தான் நீ சொன்ன ஷாக்கா?"
"சம்திங் சம்திங் பார்த்திருக்கியா?"
மிரண்டு போய், "வாட் நான்சென்ஸ்? உன் மேல சத்தியமா என் லைஃப்ல அதெல்லாம் பார்த்ததே இல்ல.. தப்பு. அதுவும் இல்லாம அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான்"
"செருப்பால அடிப்பேன். நான் கேட்டது 'சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்' ன்னு ஜெயம் ரவி, த்ரிஷா நடிச்ச படம்"
"ஓ.. அதுவா" மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டு, "ரெண்டு வருஷம் முன்னாடி பார்த்தது. சரியா நியாபகம் இல்ல"
"அதுல ஒரு பாட்டுல த்ரிஷா போட்டு இருப்பா, நியாபகம் இருக்கா?"
"'கோழி, வெடக் கோழி' பாட்டுலயா. அதுல அவ போட்டிருக்கிற ட்ரெஸ் இப்படியெல்லாம் இருக்காதே"
"இடியட். படத்துல அந்த பாட்டு மட்டும் தான் இருக்கா? நான் சொல்றது, 'உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்'ல ஒயிட் குர்தா, பேண்ட், ரெட்ல ஒரு ஷால் வச்சி ஆடுவாளே. அதான் ட்ரை பண்ணேன். பட் இது கொஞ்சம் லூஸ்"
"அது மட்டுமா"
"என்ன?"
"கொஞ்சம் இல்ல, ரொம்பவேன்னு சொன்னேன்"
"ம்ம்.. நான் அதே மாதிரி செலக்ட் பண்ணாம போக மாட்டேன்."
"குட் ஸ்பிரிட், நான் என் ட்ரெஸ்ஸ எடுக்கப் போறேன்."
எஸ்கேப்பாகி ஓடினால், பின்னால் அவள் அங்கே இருந்த ஒரு பெண் வேலையாளிடம், 'சம்திங் சம்திங்' கதையை சொல்லிக் கொண்டிருந்தாள்.
அரைமணி நேரம் கழித்து, "வினோத், எதுவுமே எனக்கு செட் ஆக மாட்டேங்குது" புலம்பிக் கொண்டே
"ஹேய் அது த்ரிஷா உடம்புக்கு செட் ஆச்சின்னா அதுக்கெல்லாம் வேற ரீசன்ஸ். உன் ஜம்போ மீல்ஸ் பாடிக்கு சுரிதாரும், நாலு மீட்டர் ஷாலும் தான் லாயக்கு. ஒழுங்கு மரியாதையா அதத் தேடு. டைம் வேஸ்ட் பண்ணாத"
"நான்சென்ஸ். உன்கிட்ட போய் கேட்டேன் பாரு"
மீண்டும் அரைமணி நேரம் கழித்து, ட்ரையல் ரூம் வரச்சொல்லி கால்.
"இப்பவே இந்த கொடுமைன்னா, கல்யாணத்துக்கப்புறம் நினைச்சாலே பயமாயிருக்கு" என எல்லாக் கடவுளிடமும் அங்கலாய்த்துக் கொண்டே , அவளைத் தேடி போனேன்.
அங்கே சைடில் ரொம்பவே லாங்காக கட் பண்ணின சுரிதார் டாப்ஸுடன், ஓயிட் கலர் டைட் பேண்ட் போட்டு முன் நின்றாள்.
வெட்கத்துடன், ஓரக்கண்ணால் "எப்படி?" எனக் கேட்டது ஆயிரம் கவிதை.
அவன் முன்முறுவலுடன், "ஃபென்டாஸ்டிக்" என இரண்டு விரலை மடித்து சொன்னது, தனிக்கவிதை.
டிஸ்கி: இது சத்தியமாக சிறுகதை இல்ல. அட் தி சேம் டைம், என் அனுபவமும் இல்லை. காதலி கிடைக்காத எலிஜிபிள் பேச்சிலர் நான். (ஹி..ஹி. ஒரு விளம்பரம்)
******************************
'கடலை' எனப்படுவது யாதெனில்..
கடலை. கல்லூரியில் செமஸ்டர், அசைன்மென்ட், லேப், ப்ராக்டிகல், அரீயர்ஸ் போன்ற சொல்களை விட மிக அதிகமாக புழங்கும் சொல். இந்த சொல்லை சொல்லாமல் இருந்தால் அவன் கல்லூரி மாணவனே இல்லை என்ற அவப்பெயருக்கு ஆளாக நேரிடலாம். இதில் ஆண், பெண் பாகுபாடு இல்லை. குறிப்பாக, லேடீஸ் ஹாஸ்டலில் தான் இந்த சொல் அதிகமாக பயன்படுத்தப்படும். பாய்ஸ் ஹாஸ்டலிலும் சரி, லேடீஸ் ஹாஸ்டலிலும் சரி, இந்த கடலை போடுவார்கள் தனித் தீவாக இருப்பார்கள். யாரும் சீண்டக் கூட மாட்டார்கள். அது அப்படியே கம்பெனி, மேரேஜ் லைஃப் என்று போனாலும், கடலை என்ற சொல்லை கேள்விப்பட்டால், அது ஏன் கேள்விப்பட்டால், பஸ் ஸ்டாண்டில் எவனாவது வேர்க்கடலை விற்றால் கூட, திடீரென கல்லூரி லைஃப் ஒரு செகண்ட் க்ராஸ் ஆகும். பின்னர் ஒரு செகண்டில் திரும்ப அதே வேலை, பொண்டாட்டி/புருஷன் டென்ஷன், ஸோ அன்ட் ஸோ....
காலேஜில் ஃபர்ஸ்ட் இயரில் கடலை போடுபவனை கன்னா பின்னாவென கிண்டல் செய்யும் ஒருவன், காலேஜ் முடிவதற்குள் எவளுடனாவது கடலை போட்டுக் கொண்டு பேரைக் கெடுத்து, சேது விக்ரம் மாதிரி மாறி விடுவான். Vice versa also applicable :) இது காலேஜின் விதி. இதைக் கடந்து யாராலும் வந்து இருக்க முடியாது. மாறி வந்து இருந்தால், அவன்/ள் அப்நார்மல். மாத்ரூபூதம், நாராயண ரெட்டி மாதிரி டாக்டர்களிடம் செக் பண்ணினால் ஷேமம்.
இந்த கடலை நோய்க்கு ஆண்/பெண் வித்தியாசம் எல்லாம் கெடையாது. கடலை போடுவதில் ஒரு மிகப்பெரிய அட்வான்டெஜ் என்னவென்றால், லவ் பண்ணியே தீர வேண்டும் என்ற கட்டாயம் எல்லாம் இல்லை. ரெண்டு பேருக்குமே பிடித்திருக்கிறது என்றால் மட்டுமே அது லவ்வில் முடியும். அது 5% ஒன்லி. மத்தபடி பிடிக்கவில்லையென்றால், ஈஸியாக கழற்றிவிட்டு வேற ஒரு ஆளைத் தேடிப் போகலாம். இது தான் எல்லாரையும் ஈர்க்கும் அதிசயம். மற்றபடி, ஏதாவது ஒரு ஆளுக்கு மட்டும் லவ் வந்து, அடுத்த ஆளுக்கு வரவில்லையென்றால், ரொம்ப சிம்பிள். க்ளைமேக்சில் ஹீரோயின்ஸ் சொல்வது மாதிரி, "உன்னை நல்ல ஒரு ஃப்ரெண்டா மட்டும் தான் நெனச்சி இருந்தேன். மற்றபடி நமக்குள்ள வேற ஒண்ணும் வேணாமே ப்ளீஸ்" என்று டையலாக் பேசி நைசாகக் கழன்று விடலாம். இது முடிந்தவுடன் வேற ஒரு கடலை பார்ட்னர் கிடைக்கும் வரை, நன்றாக ஃபீல் பண்ணலாம். அது ஒரு நைஸ் ஃபீலிங்.
பாகுபாடு இன்றி பார்க்கும் எல்லாரிடமும், கடலை போடுபவனு/ளுக்கு ஒரு பார்ட்னர் கூட அமையாது. இது காலேஜின் மோசமான தலையெழுத்து. வருடத்திற்கு ஒரு ஃபிகர் என்று வாழ்பவனது வாழ்வில் ஒரு நல்ல நச் ஃபிகர் அமையும். அதுவும் காலேஜ் லைஃப் முடிந்தவுடன் கழன்றுவிடும். மற்றவனுக்கெல்லாம், லேப் அசைன்மென்ட் எழுத ரிக்கார்ட் நோட் கொடுக்கும் அளவுக்கு மட்டுமே ஒரு அட்டு ஃபிகர் அமையும்.
க்ரூப்பாக அதாவது ஃபைவ் ஸ்டார் மாதிரி மூணு பசங்க, ரெண்டு பொண்ணு என்று சுற்றுபவர்களில், யாருக்கும் தெரியாமல் மினிமம் கியாரண்டியாக ரெண்டு ஜோடி உஷார் ஆகிவிடும். கடைசி ஒருவனுக்கு லாலிபாப் தின்றது போக குச்சி மட்டுமே. இப்படி திரிபவர்களை மட்டும் நம்பவே கூடாது.
இந்த கடலையை ரொம்ப யூஸ்ஃபுல்லா யூஸ் பண்ற ஒரு க்ரூப் இருக்கு. அதாவது கடலை போடுற பொண்ணுகிட்டயே, அந்த காலேஜ்ல சூப்பர், நச் ஃபிகர்கிட்ட லவ் லெட்டர், கிஃப்ட் ஐட்டம்ஸ் பாஸ் பண்ணுவாய்ங்க. அதே மாதிரி தான் பொண்ணுங்களும். கடைசில அவன், "காதல் கொண்டேன்" தனுஷ் மாதிரி சைக்கோவா திரிவான். இதெல்லாம் காலேஜ் வாழ்க்கையின் இன்றியமையாத அங்கம்.
இதுல ஒரு மோசமான க்ரூப் ஒண்ணு இருக்கு. அதாவது ஒரு டைம்ல ஏர்டெல்ல லவ்வர் பேக்னு ஒண்ணு இருந்துச்சி. எப்படின்னா, ஒரு நம்பர்ல இருந்து இன்னொரு ஏர்டெல் நம்பருக்கு மட்டும் எப்ப பேசுனாலும் ஃப்ரீ. இதை லவ் பண்றேன்னு சுத்திக்கிட்டு இருக்க ஜோடி போட்டுக்கிட்டு பண்ற அளப்பறை தாங்காது. அந்த பொண்ணை தூங்க விடமாட்டான், சாப்பிட விட மாட்டான். அது ஏன், பாத்ரூம் கூட போக விடமாட்டான். அந்த அளவுக்கு. ஒரு படத்துல கவுண்டமணி சொல்ற மாதிரி, "ரெண்டு பேரும் இப்பிடியாம்"ன்னு ரெண்டு கை விரலையும் ஒண்ணா சேர்த்து, பிணைந்து சொல்வார்ல. அந்த மாதிரி திரிவாய்ங்க. இவிங்க தான் அந்த செட்டின் மெகா காமெடி பீஸ்.
இதற்கு விதிவிலக்கு ஒன்று உண்டு. கடலையும் இருக்காது. செல்ஃபோன் பேட்டரி வாய்விட்டு அழும் அளவுக்கு புகையும் கெடையாது. ஆனால் ஆல் ஆஃப் தி சடன், ஒரு நாள் நாங்க ரெண்டு பேரும் லவ் பண்றோம்ன்னு காலேஜேயே இன்ச் இன்ச்சா அளப்பாங்க. கேட்டால், அவங்க கண்ணாலேயே பேசி லவ் பண்ணாங்களாம்(மௌனம் பேசியதே சூர்யா சொல்வது போல்). முடியலடா சாமி, ரீல் அந்து போச்சி என்ற அளவுக்கு அவர்கள் பில்டப் இருக்கும்.
சரி, இதெல்லாம் விடுங்க.. இந்த கொடுமையான பழக்கத்துக்கு கடலை என்று எப்படி பேர் வந்துச்சின்னு தெரியுமா? அதே சந்தேகத்தை, நான் அசோக் நகர் முண்டக்கண்ணி அம்மன் கோவில் பக்கத்தில் இருக்கும் ஜோசியரிடம் கேட்டேன். அவர் சொன்னது என்னவென்றால், "தம்பி, நீ ஒரு கடலையை உடைச்சின்னா, உள்ளே ரெண்டு பருப்பு இருக்கும். அந்த ரெண்டு பருப்பும் எப்படி இருக்கும்? ரெண்டும் எதிரெதிரா, ரெண்டுக்கும் ஒரு சின்ன இடத்துல கான்டாக்ட் மாதிரி இருந்தாலும், உண்மையிலேயே கொஞ்சம் இடைவெளி இருக்கும். அதை உடைச்சி பார்த்தா மட்டும் தான் தெரியும். அது மாதிரி, பையனும் பொண்ணும் ரொம்ப நேரம் சிரிச்சி, சீரியஸா பேசிக்கிட்டு இருந்தா பார்க்குறவங்களுக்கு அவங்க லவ் பண்றா மாதிரி தெரியும். ரெண்டு பேரையும் கொஞ்சம் தனியா நோண்டுனா தான், உண்மையான மேட்டர் தெரியும். கடலையை குலுக்குனாலும் சத்தம் வரும். இவங்க ரெண்டு பேரையும் ஒண்ணா பார்த்துட்டாலும், ரெண்டு பேர்கிட்ட இருந்து ஓவர் சவுண்ட் வரும். அதே மாதிரி, கடலை பருப்ப வறுத்தாலும் ஒரு மாதிரி தீயிற ஸ்மெல் வரும். ரெண்டு பேரும் ஓவரா குலையிறத பார்த்தாலும், பார்க்குறவன் ஸ்டொமக் பர்ன் ஆகி புகை, ஸ்மெல் வரும்" என்று நீண்ட விளக்கம் கொடுத்தார். ஏதோ புரிந்தவனாக, நாட்டுக்கு சம்பந்தமான விஷயத்தை,அதி முக்கியமாக ப்ளாக் நல்லுலக மக்களுக்கு சொல்லுகிறேன்.
சரிடா, இவ்வளவு வியாக்ஞானமா பேசுறீயே, இதுல நீ எந்த கேட்டகிரி? அப்படின்னு கேட்கலாம். அந்த லாலிபாப் தின்றது போக குச்சியோடு ஒருவன் இருப்பான்னு சொன்னேன்ல, அந்த கேட்டகிரி தான் நான். :(
****************************************
ஜிலீர் காதல் சடுகுடுகுடு!
"அனு, காஃபி" "அனு, காஃபி" என்று பெட்டில் இழுத்துபோர்த்திய போர்வைக்குள் இருந்து ஹை டெசிபலில் கத்தினான் வினு என்கிற வினோத்.
"காஃபி எல்லாம் கெடையாது. சீக்கிரம் எந்திரிச்சி ரெடியாகு" என்று அனு என்கிற அனிதாவின் குரல் எதிரொலித்தது. பெட்ரூமில் உள்ள அட்டாச்ட் பாத்ரூமில் இருந்து வந்தது.
"ஏன்?"
"இன்னிக்கி என்ன நாள்னு மறந்து போச்சா?"
""
எந்த பதிலும் வரவில்லை.
வெளியே வந்தவள், அவன் போர்வையை துகிலுரித்தாள். தலைகீழ் y ஷேப்பில் குப்புறப்படுத்திருந்தான்.
"சீக்கிரம் கெளம்புன்னு சொன்னேன்ல? டைம் இப்பவே 11.30. 2 மணிக்கு அங்க இருக்கணும்"
"எதுக்குடி?" இன்னும் கண்களை மூடி தூங்கிக் கொண்டு தான் இருந்தான்.
கண்ணாடி முன் மேக்கப் பண்ணிக் கொண்டிருந்தாள் அனு.
"உங்க அக்கா வீட்டுக்கு விருந்துக்கு வர்றோம்ன்னு ப்ராமிஸ் பண்ணி இருந்தோம்ல. மறந்து போச்சா?"
"ஓ.. என் அக்காவுக்கு அறிவே இல்ல. மூணு வாரமா எல்லார் வீட்டுக்கும் கல்யாண விருந்துக்கு போய் டயர்டாகி இங்க வந்தா, இங்கேயும் இவ டார்ச்சர் பண்றா? "
"உன் அக்கா தான உன்னை மாதிரி தான் இருப்பாங்க..? முணுமுணுத்தாள்.
அவள் அடித்த யார்ட்லியின் மணம் அவன் மூக்கினுள் நுழைந்து நாளமில்லா மற்றும் நாளமுள்ள சுரப்பிகளை நாலாவது கியரில் இயங்க வைத்தது. திரும்பி அனுவை பார்த்த்த்... துக் கொண்டிருந்தான். அனுவின் காஸ்ட்யூம் ப்ளஸ் மேக்கப் வொர்க் அரையும் குறையுமாக தொடர்ந்து கொண்டிருந்தது.
"அனு........" வாய்ஸ் மாடுலேஷனில் லைட்டாக எஸ்.ஜே.சூர்யா எட்டிப் பார்க்க, கட்டில் ஓரம் புரண்டு படுத்துக் கொண்டே அவள் அருகில் வந்தான்.
திரும்பி பார்த்தவள் ஷாக்காகி, "ஹேய், கிட்ட வராதே. கொன்னுடுவேன்."
"ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்"
"ஹேய் லுக், நான் இப்ப கெளம்புறதுக்கே 8 மணிக்கே எழுந்திரிச்சி ரெடி ஆகிட்டு இருக்கேன். இனிமே மறுபடியும் நான் குளிச்சி கெளம்புனா, நாம லஞ்சுக்கு போக மாட்டோம். டின்னருக்கு தான் போவோம். "
"ஸோ வாட்.. அவகிட்ட நான் பேசிக்குறேன்.." முன்னேறினான்.
அவள் துள்ளிக் குதித்து ஓடுகிறாள். இவனும் பின்னாலேயே..
மாறி மாறி கபடி ஆட்டம் தொடர, "ஹேய் இங்க பாரு, கிட்ட வராதே.. இல்லைன்னா நான் கத்தி ஊரைக் கூட்டிடுவேன்"
"இந்த கோலத்துலயா..?" அதிர அதிர சிரித்துக் கொண்டே விரட்டினான்.
அந்த நேரத்தில் ஒரு ஃபோன் கால்.
"ஹலோ"
"டேய் வினோத், நான் அக்கா பேசுறேன்..........."
"என்ன சொல்ற.. சரியா கேட்கலை.. சத்தமா பேசு." சொல்லிவிட்டு தவுசண்ட்ஸ் வால்ட்ஸ் பல்பு பிரகாசத்துடன் ஃபோனில் ஸ்பீக்கரை ஆன் பண்ணினான்.
"டேய், என் கொலீக் சித்ராவோட அப்பா இறந்துட்டாரு. நாங்க அவசரமா கெளம்பி போறோம். நெக்ஸ்ட் வீக் விருந்துக்கு வாங்கடா.. ஸாரி.. அனுகிட்டயும் சொல்லிடு.. சரியா?"
"ஓ.கே. ஒண்ணும் ப்ராப்ளம் இல்ல. நான் அப்புறம் கூப்பிடுறேன்." ரிசீவரை வைத்துவிட்டு, மூலையில் இருந்த அனுவை பார்த்து கண்ணடித்தான்.
அவள் கண்ணடித்துக் கொண்டே வெட்கத்துடன், வினுவை நோக்கி ஓடிவந்தாள்.
***********************
காத்திருக்கிறேன்!!
திருவிழாவில்
தொலைந்த
குழந்தையின்
கண்கள் தேடும்
பெற்றோர்
கடைசி பேருந்தை
கணத்தில் தவறவிட்ட
ஒருவனின் கண்கள்
தேடும் அவசர உதவி
தேர்வு முடிவுகள் நாளிதழில்
தேர்வு எண்
தேடும் சராசரி
மாணவன்
என மனத்திரையில்
ஒருவர் பின் ஒருவர்
கடந்து செல்லும்
அபத்த சூழ்நிலையில்
வெளி அழைப்புகள்
செல்லாத
செயலற்ற
அலைபேசியில் உன்
அழைப்புக்காகக்
காத்துக்
கொண்டிருக்கின்றேன்
கண்மணியே!!
**********************
பதின்பருவத்து நெருப்பு!
புருவ வளைவுகளை
நேர்த்தியாக செதுக்கி
சுண்டி இழுத்தவளிடம்
விழுந்த மனம்
மதியத்தில் தெற்றுப்பல்
மாலாவிடம் தெறித்த
சிரிப்பில் சிக்கியது
ஒரு வழியாக
வீட்டிற்கு வந்தால்
முறைப் பெண்
புதிதாக இளமையாக
அழகிய தாவணியுடன்
வந்ததும் அதன்
அவள் மடிப்பில்
மடிந்தது
*
*
*
இப்படியான எனது
பதின் பருவத்து
காதல் நெருப்பு
ஒருவர் கை மாறி
ஒருவர் கை செல்லும்
ஒலிம்பிக் தீபம்
போல் அணையாமல்!
******************************
அதிர்ச்சிகள் பலவிதம்!!!
1. நடிகர் விஜய் காங்கிரஸ் கட்சியில் சேர்வதற்கு முயற்சி செய்து பின்னர் கிடைக்காமல் போனதற்கு காரணம், அவருடைய அப்பாவிற்கு கவர்னர் பதவி வேண்டும் என்று கோரிக்கை வைத்தது தான் என்ற ஆ.வி. கிசுகிசு
2. கேப் விட வேண்டாம் என்று சிம்பிளாக கமலஹாசன் ரீமேக் பண்ணிய படத்திற்கு, இணையத்தில் மக்கள் கிழிகிழியென்று கிழித்த உ.போ.ஒ விமர்சனங்கள். (அடுத்த பத்தாம்பசலி என்று யாரும் என்னை திட்ட வேண்டாம். ஹி.. ஹி.. ஒரு விளம்பரம்)
3. கலைஞருக்கு அண்ணா விருது. யாருக்கு யார் விருது கொடுத்தார்? யாரால் பாராட்டு விழா நடத்தப்பட்டது?
4. ரஜினியின் சிவாஜி படத்திற்கு சிறந்த படம், சிறந்த நடிகர் விருது. அடுத்த வருடம் எந்திரனுக்கு தேசிய விருது வரலாம் என்ற பயம்கலந்த அதிர்ச்சியும் போனஸ்.
5. இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய ஃபார்ம். நெஹ்ரா, டிராவிட் இன்னுமா இந்திய அணியில்?
6. ஸ்வைன் ஃப்ளூவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது என்று வரும் செய்திகள்!
7. ஜக்குபாய் படத்தில் ஸ்ரேயாவின் அப்பாவும், காதலனும் சரத்குமார் என்றால் அந்த காதலனுக்கும், அப்பாவுக்கும் என்ன உறவாக இருக்க முடியும்? ஏன் ஒரே ஜாடையில்? அப்படி என்றால் ஸ்ரேயா என்ன உறவுமுறை?
*************************