வெள்ளிபுகையின் நடுவே
அதிகாலைப் பனியில்
வெட்கத்தில் சிவப்பவளும்
கோபத்தில் சிவப்பவனும்
முட்டிக் கொண்டபோது
பார்வைகளில் பாஸ்பரஸ்
பற்றிக் கொள்ள
வார்த்தைகள் வளர
வெள்ளைக் கொடி பறந்தது
சிவப்பவளும் சிவந்தவனும்
சிவப்பதை சிறிதுநேரம்
மறந்துவிட்டனர்
கடுப்பில் சிவந்த சிவப்பு
இடமாற்றமடைந்து
அவஸ்தையாக ஆட்டோகாரனின்
வாயில் வளர
'ஓரமா நின்னு ரொமான்ஸ் பண்ணுப்பா'
என முடித்துக் கொண்டு
அவன் விலகி ஓட
சமாதானத்துடன் திரும்பவும்
அவர்களிடம் ஒட்டிக் கொண்டது
சிவப்பில் வளர்ந்த
சிவப்பு
***********************
சிவப்பில் வளர்ந்த சிவப்பு
Labels:
அய்யோ கவிதை,
கவிதை
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
onum puriala
annal nala eruku..
orey sevapa eruku..ennna????
mappu..enna achu...
sari sari etho nalathu nadantha sari..
olunga kadhai eluthukitu erunthenga..
epdi kavithai ellam eluthina..sari sari nala erungapa..
valga valamudan..
epo diviya????
// பார்வைகளில் பாஸ்பரஸ்
பற்றிக் கொள்ள
//
உங்க கவிதையில பொருட்குற்றம் இருக்கு...
வெறும் பாஸ்பரஸ் இல்ல, வெண் பாஸ்பரஸ் மட்டும் தான் பத்திக்கும்....
"சிவப்பு" பாஸ்பரஸ் பற்றாது.
(கவிதை கிவிதைன்னு இனி கிளம்புவீங்க??)
;-)
இப்படிக்கு,
பாண்டியன் பரம்பரையில் வந்த ரீமா மாதிரி நக்கீரன் பரம்பரையில் வந்த ப்ரியா.
//வெள்ளிபுகையின் நடுவே//
அழகிய தீயே?
சியாமளா?
//வெறும் பாஸ்பரஸ் இல்ல, வெண் பாஸ்பரஸ் மட்டும் தான் பத்திக்கும்....
"சிவப்பு" பாஸ்பரஸ் பற்றாது. //
முடியல.. படிப்ஸ்னாலே இப்பிடி தானோ?
நன்றி Complan Surya!
நீங்க நெனைக்கிற மாதிரி எல்லாம் ஒண்ணும் இல்ல பாஸ்... கவிதை எழுதுறது எல்லாம் ஒரு குத்தமா?
******************
நன்றி ப்ரியா!
உங்க கவிதையில பொருட்குற்றம் இருக்கு...
வெறும் பாஸ்பரஸ் இல்ல, வெண் பாஸ்பரஸ் மட்டும் தான் பத்திக்கும்....
"சிவப்பு" பாஸ்பரஸ் பற்றாது.
(கவிதை கிவிதைன்னு இனி கிளம்புவீங்க??)
;-)
இப்படிக்கு,
பாண்டியன் பரம்பரையில் வந்த ரீமா மாதிரி நக்கீரன் பரம்பரையில் வந்த ப்ரியா.//
ஏன்? ஏன்? ஏன்?
நல்லாத் தானே போய்கிட்டு இருந்துச்சி :)
இந்த மாதிரி அடிக்கடி வரவும் :)
******************
நன்றி Rajalakshmi Pakkirisamy!
அழகிய தீயே?
சியாமளா?//
வேற வேலையே இல்லையா?
முடியல.. படிப்ஸ்னாலே இப்பிடி தானோ?//
உங்க சண்டைக்கு நடுவுல நானா? :)
******************
Post a Comment