அவளுடன் காணும் பொங்கல்

செங்கரும்பின் சாறு
செவ்விதழ்களை தாண்டி
வழிந்தோட நீ அடிக்கரும்பை
சுவைக்க ஆரம்பிக்கும்போது
அதை நான் ரசிக்க
ஆரம்பிக்கும்போது
என்ன என என்னைப் பார்க்க
பொங்கல் வாழ்த்துக்கள்
என்றேன் சத்தமாக
துள்ளிக் குதித்து புள்ளிமான்
போல் நீ ஓட
எனக்கான புன்னைகைகள்
வாழ்த்துக்களாக கிடைக்காமல்
திரும்பிக் கொண்டிருக்கின்றேன்

ஆச்சர்யாமாக அடுத்தநாள்
இன்று தானே உனக்கு ஸ்பெஷல்
என நீ எனக்கான புன்னகையில்
எதிர்பார்த்த வாழ்த்துக்கள் கூற
பூம்பூம் மாட்டின் தலையாட்டல்
புதிதாக ஆரம்பிக்கின்றன என்னுள்
காணும் பொங்கலுக்காக
காத்திருக்கிறேன்
கொண்டாட வழிகள் என்ன
நீ சொல்வாய் என?

*****************************

முத்த யாசகன், சொன்னவன் கடவுள்

முத்த யாசகன்!

உன் இதழ்களில்
மூச்சு வாங்கும்
முத்த மிச்சங்களையும்
மிச்ச முத்தங்களையும்
மொத்தமாக யாசகம் பெற
முடியாமல்
முடியாமலே இருக்க கூடாதென்ற‌
முடிவில் உனக்காக‌ இந்த
முத்தக் கவிதை என்
முத்தங்களுடன்!

......................

ரகசியங்களின் ரகசிய உரையாடல்!


இதயம் எகிறி துடித்து
மின்சாரம் காதுகளில் பரவ‌
பரவசத்தில் லேசாக
வேர்வை வெளிறி
கண்களில் அவசர அலைபாய
நாக்கு வறண்டது
நல்ல வேளை இரண்டு
நிமிடத்தில் முடித்துவிட்டாள்
ரகசியங்கள் காதருகில்
சொல்லப்பட வேண்டுமென
சொன்னவன் கடவுள்

தினந்தந்தியின்
தலைப்பு செய்திகளை உன்
தலையின் கற்றை முடிகள்
தாண்டி நான் சொல்ல
நினைத்த‌போது
நாக்கு தந்தி அடித்தது
யார்ட்லியோ லாவண்டரோ என‌
மூக்கு வியர்த்தது
ரகசியங்கள் காதருகில்
சொல்லப்பட வேண்டுமென
சொன்னவன் கடவுள்

**************************************

கண்ணசைவில் மட்டும்!


சில நேரங்களின்
சிநேகமற்ற உஷ்ண பார்வைகளிலும்
பல நேரங்களின்
சிநேக புன்னகைகளிலும்
சில நேரங்களின்
ஓயாத பேச்சுகளிலும்
பல நேரங்களின்
அடம்பிடிக்கும் கண்ணீர்களிலும்
சில நேரங்களின்
அதிகார திமிர்களிலும்
இன்னும் ப‌ல‌ சில‌ நேர‌ங்க‌ளின்
பல பல அர்த்தங்கள்
புரியாமல் புரியாம‌லே இருந்தாலும்
உன் சிறு க‌ண்ண‌சைவு
பார்வையின் ப‌ரிணாம‌ங்க‌ளை உட‌னே
ப‌ற்றிக் கொள்கிறேன்
க‌ட்டிலில் மட்டும்!

*******************************

வாளிப்பான காதல்!

வாரி க‌ட்டிக் கொள்ளும்
குழ‌ந்தையைப் போல்
கதவைத் திறந்ததும்
ஒவ்வொரு முறையும் என்னை
வாரிக் கட்டிக் கொள்ளும்
வாளிப்பான காதல்!

சிவ‌ப்பு ப‌ட்டாசு வெடியின்
சிவ‌ப்பு ம‌ருந்து காத்திருக்கும்
சின்ன‌ நெருப்பு போல்
என்னுள் புதைந்து இருப்ப‌து வெடிக்க‌க்
‍‍காத்துக்கொண்டிருக்கும் உன்
கண்ணசைவின் ச‌ம்ம‌த‌ம்!

கோடை கால தண்ணீர் தீர்க்கும்
தாகம் மீண்டும்
தாகம் தூண்டும் போல்
தாப‌ம் மீண்டும்
தாகம் தூண்டும்
தீ நீ!

தனிமையின் துணையில்
தலையணை அணைக்கும் மனம்போல‌
அணைக்க தவிக்கும் மனம்
ஏங்கும் த‌லைய‌ணை
உன் மெத்தை!

இவை யாவும்
உள்ளமும் உள்ளம்
சார்ந்த காதல் அன்று
உடல் ம் டல் சார்ந்த
கா ம்!

***********************

குடிகார காதலன், கோபக்கார காதலி!

"ஆஃபிஸ்ல இருந்து ஏன் லேட்டு?"

"அதான் சொன்னேன்ல‌.. க்ளைய‌ண்ட் கால் 11 ம‌ணிவ‌ரைக்கும் இழுத்துட்டாங்க‌.. இன்னைக்கு ஒரு மாட்யூல் லைவ் போகுது.. அதான் டென்ஷ‌ன்."

"த‌ண்ணி அடிச்சிட்டு வ‌ந்திருக்கியா?"

"இல்லைமா. அதான் கொஞ்ச நாள் முன்னாடியே ப்ராமிஸ் ப‌ண்ணேன்ல‌.
இனிமே ரெண்டு மாச‌த்துக்கு ஒரு த‌ட‌வை தான் அடிப்பேன். அதுவும் வீட்ல‌ உட்கார்ந்து. ப்ளீஸ் பிளீவ் மீ"

"என‌க்கு ந‌ம்பிக்கை இல்ல‌. கிங்க்ஃபிஷ‌ர் பீர் ஸ்மெல் அடிக்குது"

"உன்னோட‌ ஒரே தொந்த‌ர‌வா போச்சே. த‌ண்ணி அடிக்கிற‌தா இருந்தா, நைட் ஷிஃப்ட்ன்னு சொல்லிட்டு ஃப்ரெண்டு வீட்டுல‌ அடிச்சிட்டு காலைல‌ வ‌ர‌ மாட்டனா?" என்று சொல்லி கண்ணடித்துவிட்டு அவ‌ளைக் க‌ட்டிபிடிக்க‌ ட்ரை ப‌ண்ணினான்.

"இதுக்கு ஒண்ணும் கொற‌ச்ச‌ல் இல்ல.." என்று சிணுங்கிக் கொண்டே அனுமதித்துவிட்டு திடீரென்று கோபம் வந்தவளாக, அவனை தள்ளிவிட்டு "நான் இப்படி பண்றது தொந்தரவு இல்ல.. டே, உன‌க்கு லைஃப்ல‌ எதுவுமே சீரிய‌ஸ் இல்லியா? உருகி உருகி லவ் பண்ணி தான நாம கல்யாணம் பண்ணிகிட்டோம். நான் சொல்றத எதையுமே சீரியஸா எடுத்துக்க மாட்டியா?" என்றாள் ஹைடெசிபலில்.

"உன்ன‌ க‌ல்யாண‌ம் ப‌ண்ணிகிட்டேனே.. அதுவே லைஃப்ல‌ நான் ப‌ண்ண‌ ரொம்ப‌ சீரிய‌ஸான‌ விஷ‌ய‌ம்.." என்று டையை கடுப்புடன் க‌ழ‌ற்றினான்.

"ல‌வ் ப‌ண்ற‌ பொண்ணை க‌ல்யாண‌ம் ப‌ண்ற‌து சீரிய‌ஸான‌ விஷ‌யமா?"

"ஹ‌லோ மேட‌ம். எந்த‌ செஞ்சுரில‌ இருக்க‌ நீ.. இன்விடேஷ‌ன் கொடுக்கும்போது ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் எப்படி கலாய்ச்சாங்க தெரியுமா.. ல‌வ் ப‌ண்ற‌ பொண்ணையே க‌ல்யாண‌ம் ப‌ண்ற‌ மொத‌ ஆள் நீதான்டான்னு சொல்லி எல்லாரும் அசிங்க‌ப்ப‌டுத்திட்டாங்க‌.."

"அப்புற‌ம் எதுக்குதான்டா ல‌வ் ப‌ண்றீங்க?"

(டியூப் லைட் டியூப் லைட் என்று மனதுக்குள் முனங்கிக் கொண்டே)"உன‌க்குத் தான் சுத்த‌மா தெரிய‌ல‌.. ஊரு உல‌க‌த்த‌ பாரு.. பொண்ணுங்க‌ளே, க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்கிறேன்னு சொன்னா க‌ட் ப‌ண்ணிவிட்றாங்க‌.. ஒண்ணா சேர்ந்து ஊர் சுத்த‌ற‌துக்கும்,....... ச‌ரி விடு.. இதெல்லாம் உன‌க்கு தெரியாது. க‌ல்யாண‌த்துக்கு முன்னால‌ உன் கைய‌ பீச்ல‌ பிடிச்சு ந‌ட‌ந்து வ‌ந்த‌துக்கே, ஒரு வார‌ம் பேசாத ஆளுக்கெல்லாம் சுட்டாலும் புரியாது" சொல்லிக் கொண்டே ஷார்ட்ஸ்க்கு மாறியிருந்தான்.

"அப்புற‌ம் எதுக்குதான்டா என்ன‌ ல‌வ் ப‌ண்ணே?"

சிரித்துக்கொண்டே "டூ லேட். லைஃப் சென்ட‌ன்ஸ். இனிமே நோ யூஸ்? என்ன‌ டின்னர்?"

ரொம்ப‌ க‌டுப்பாகி, "அப்ப‌வே சொல்லி இருக்க‌லாம்ல‌.. டின்னரும் கிடையாது. ஒண்ணும் கிடையாது. என‌க்கு தெரிஞ்சாக‌ணும்?.. இப்ப‌வே.."

"உன் க‌ல‌ரை பாத்தும், மீட்டிங்க்ல ரொம்ப‌ க‌ரேஜா த‌ஸ் புஸ்ஸுனு பேசுற‌த‌ பாத்தும் தான், இப்ப‌ அது எதுக்கு.. பசிக்குதுடி..ப்ளீஸ்டி.. என் செல்ல‌ம்ல?" என்று கொஞ்சினான்.

"ஓ, இவ‌ளே க‌ருப்பா இருந்தா திரும்பி பாத்து இருக்க‌ மாட்டேளே? அப்ப‌டி என்ன‌டா இருக்கு இந்த‌ க‌ல‌ர் தோல்ல.. அது ஏன் ஒருத்தனுக்கும் க‌றுப்பா இருக்கிற‌ எவ‌ளையும் பிடிக்க‌ மாட்டீங்குதுன்னு தெரிய‌ல‌?"

"இப்ப‌ உன‌க்கு என்ன‌ பிர‌ச்சினை? நான் லேட்டா வ‌ந்த‌தா? த‌ண்ணி அடிச்சேன்ங்கிற‌ ச‌ந்தேக‌மா? உன்ன‌ லவ் & கல்யாணம் ப‌ண்ண‌தா? இல்ல‌ ஊர்ல‌ இருக்கிற‌வன் எவனும் க‌றுப்பா இருக்கிற‌ பொண்ண‌ ல‌வ் ப‌ண்ணாத‌தா?"

"என்ன‌ பாத்தா ப்ராப்ள‌ம் மேக்க‌ர் மாதிரி தெரியுதா யூ பெக்கர்? ஓ.கே. லீவ் இட்.. க‌ல்யாண‌த்துக்கு முன்னால‌ வ‌ரைக்கும் நிலா, இத‌ழ், முத்த‌ம்ன்னு க‌விதையா கொட்டுனீயே. இப்ப‌ ஏன் எல்லாம் DRY ஆயிடுச்சா?"

"கூல் ஹனீ.. பை தி வே.. குட் கொஸ்டின்" அப்ப‌டியே அவ‌ளை தோளை பிடித்து டைனிங் ஹாலில் உட்கார‌ வைத்துவிட்டு, "அப்பா காசுல டாஸ்மாக் பார்ல‌ போய் ச‌ண்டை போட்டு பிடிச்ச‌ பிராண்ட் பீர் ச்சில்ன்னு கூலிங்கா வாங்கி அடிக்கிற‌துக்கும், 20 பீர் பாட்டில்ல‌ வீட்டு ஃப்ரிட்ஜ்ல‌ வ‌ச்சி தோணும்போதெல்லாம் அடிக்கிற‌துக்கும் வித்தியாச‌ம் இல்லீயா?" என்றான் ஹாட்பாக்ஸில் எடுத்த சப்பாத்தியை மென்று கொண்டே..

"நான் என்ன கேட்டேன்? நீ என்ன‌ சொல்ற...." சில விநாடிக‌ளுக்கு பிற‌கு.. மாரிய‌ம்மான் கோவில் பூஜையில் சாமி வ‌ந்த‌வ‌ளாக‌, "அப்ப அதுக்கு தான் லவ் பண்ணீயா? செக்ஸ் தான் லைஃபா? இப்ப‌ எல்லாம் முடிஞ்சிடுச்சா?" என்று க‌த்திக் கொண்டு மேஜையில் இருந்த‌ எல்லாத்தையும் த‌ட்டி விட்டாள்.

அவ‌ன் செல்லில் SMS 'பீப் பீப்' என‌ அடித்த‌து.

அவ‌ள் எடுத்து பார்த்தாள். "Have you safely reached home? No hangover right?" அவ‌ன் உயிர்த்தோழ‌னிட‌ம் இருந்து.

"பொய், பொய், வாயை தொற‌ந்தாலே பொய். த‌ண்ணி அடிக்க‌லைன்னு பொய். இப்ப‌ நானும் தேவையில்லை. இனிமே நான் உன்கூட‌ ஒண்ணா வாழ்ந்தா, அது அசிங்க‌ம். " என்று அழுதுகொண்டே மொபைலை அவன் மூஞ்சியில் தூக்கி எறிந்தாள். பெட்ரூம் போய், மூட்டையைக் க‌ட்டிக் கொண்டிருந்தாள்.

அவ‌னுக்கு ஒண்ணும் புரிய‌வில்லை. செல்போனைப் பார்த்தான். உயிர்ந‌ண்ப‌ன், எட்ட‌ப்பன் ஆனான். அடித்த‌து எல்லாம் இற‌ங்கிவிட்ட‌து. அவ‌ளை க‌ன்வின்ஸ் ப‌ண்ணி தோற்றுப் போய்விட்டான். கோய‌ம்புத்தூர் போய்விட்டாள்.

()

அவ‌ள் வீட்டிற்கு கால் ப‌ண்ணினான். காலில் விழாத‌ குறையாக‌ கெஞ்சினான். ச‌னிக்கிழ‌மைக்குள் வ‌ர‌வில்லையென்றால், மார்னிங் அங்கே இருப்பேன் என்று காலில் விழுந்து விட்டான்.

()

வெள்ளிக்கிழ‌மை ஈவினிங் ஆஃபிஸ் முடிந்து வீட்டுக்கு வ‌ந்து சேர்ந்தான். ஹால் க்ளீனாக‌ இருந்த‌து.

அட்டகாச‌மான‌ சேலையில், த‌லை நிறைய‌ ம‌ல்லிகைப்பூவுட‌ன் அவ‌ள் நேரே வ‌ந்தாள்.

"ஹேய் டார்லிங்.." என்று ஓடிப்போய் க‌ட்டிபிடித்து மேலே தூக்கினான்.

"என்ன‌ திடீர் ச‌ர்ப்ரைஸ்? உங்க‌ப்பா தொர‌த்தி விட்டுட்டாரா?"

லேசாக‌ முறைத்துக் கொண்டு, "எல்லாமே காமெடி தான் உன‌க்கு. ஐ ஹேவ் டூ குட் நியூஸ்!"

"ந‌ம்ம‌ க‌ல்யாண‌ நாளா? இல்லையே அதுக்கு இன்னும் மூணு மாச‌ம் இருக்கு. என் ப‌ர்த்டே இல்ல‌.. உன் ப‌ர்த்டே, நான் ம‌ற‌ந்து இருந்தா செருப்பால‌ அடிப்ப‌?.. பின்ன‌. ம்ம்ம்... யா.. நான் உன்கிட்ட‌ ல‌வ் ப்ரோப்ப‌ஸ் ப‌ண்ன‌ டேட் தான‌?"

"நோ. இன்னிக்கு‌ நான் கொடுத்த‌ ப்ராமிஸ்ப‌டி, நீ த‌ண்ணி அடிக்க‌வேண்டிய‌ டியூ டேட்"

"ஹேய் கமான். ஸாரி டியர். நான் இன்னிக்கு அடிக்க‌ல‌.. நான்தான் பொய் சொல்லி அன்னைக்கே அடிச்சிட்டேன்ல‌. ப்ளீஸ்."

"ப‌ர‌வாயில்ல‌. இன்னிக்கி நீ அடிக்க‌லாம். எங்க‌ப்பாகிட்ட‌ ச‌ண்டை போட்டு கேன்டீன்ல இருந்து ஹை குவாலிட்டி மிலிட்ட‌ரி ச‌ர‌க்கு வாங்கிட்டு வந்திருக்கேன்."

"என்ன‌ ஹ‌ர்ட் ப‌ண்றே. நோ. ஐ கான்ட்." என்றான் வீராப்புடன்

"இல்ல‌. நீ அடிச்சா தான், அடுத்த‌ குட் நியூஸ‌ சொல்வேன்.."

இதுல ஏதோ உள்குத்து மாதிரி தெரியுதே என‌ தாடையை த‌ட‌விக் கொண்டே, "அடிக்கும்போது, இது தான் லாஸ்ட் டைம்னு சொல்ல‌ மாட்டியே"

"குடிகார‌ன் புத்தி உன்னைவிட்டு போகுதான்னு, பாரு" என்று சொல்லிக் கொண்டே முத‌ல் லார்ஜை ஊற்றிக் கொடுத்தாள்.

த‌லைவ‌ர் ஒரே கல்ப்பில் அடித்துவிட்டு, "இப்ப‌ சொல்லுமா, செல்ல‌ம்?"

அநியாய‌த்துக்கு வெட்க‌ப்ப‌ட்டாள். த‌லையைக் குனிந்து கொண்டாள். "ந‌வ், ஐயாம் டூ"

"வாட்?"

"மை டியர், டியூப்லைட் புருஷா! நீ அப்பா ஆயிட்டே" என்று காதைக் க‌டித்தாள்.

"ஹேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.. ரிய‌லிலிலிலிலி....." என்று ச‌ந்தோஷ‌த்தில் க‌த்திக் கொண்டு, அவ‌ளை அலேக்காக‌ தூக்கிக் கொண்டு பெட்ரூமுக்கு ஓடினான்.

***********************

சியாமளா-1: அடாவடி பொண்ணும், அப்பாவி பையனும்!

புதிய ஆஃபிஸில் முதல் நாள். கணேஷ்க்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சுற்றியும் ஆந்திரா, கர்நாடகா, ராஜஸ்தான், தமிழ்நாடு, கேரளா என மாநிலம் வாரியாக லட்டு மாதிரியான‌ பெண்கள் கூட்டம். எந்த பொண்ணைப் பார்க்க, என்ற ஏகக் குழப்பத்தில் இருந்தவனின் செல்ஃபோன் சிணுங்கியது.

"மச்சி, என்ன ஆஃபிஸ்டா இது? ஒரே பொண்ணுங்க கூட்டம். அம்பி மாதிரி இருக்கிற என்னை ரெமோ மாதிரி ஆக்குறாளுங்கடா..?" செய‌ற்கையாக‌ வெட்க‌ப்ப‌ட்டான்.

"உனக்கு மச்சம் தான்டா. 'கணேஷ்'ங்கிற பேரைவிட 'கிருஷ்ணன்'னு சிச்சூவேனலா பேர் வச்சிருந்தா நல்லா இருந்திருக்கும். என் ப்ராஜ்க்ட்லயும் இருக்காங்களே. ஹூம்ம் ஒரே ஆன்ட்டிஸ்"

"சரி புலம்பாத. அதுக்கெல்லாம் லக் வேணும். சரி லஞ்ச்க்கு ஃபோன் பண்றேன். வை. டிஸ்டர்ப் பண்ணாத..பை"

ஒரு மாதிரியாக‌ செட்டில் ஆகியிருக்கும்போது ல‌ஞ்ச் டைம் வ‌ந்த‌து. கெள‌ம்ப‌லாம் என்று இருந்த‌வ‌னின் முதுகின் பின்னால் ஒரு கீச்சுக் குர‌ல்.

"எக்ஸ்கியூஸ் மீ"

ஜீன்ஸ், டாப்பில் பின்னால் ஒரு பெண். துப்ப‌ட்டா மாதிரி இருக்கும் வ‌ஸ்துவை தோளில் துண்டு போடுவ‌து மாதிரி போட்டு இருந்தாள். தெளிவான‌ திருத்த‌மான‌ முக‌ம். டாப்ஸில் ஏதோ எழுதியிருந்த‌து.

என்ன என பார்த்தவன் கணநேரத்தில் தெளிந்து "யெஸ்" என்றான்.

"ஐயாம் சியாமளா, இந்த ப்ராஜெக்ட்ல தான் நானும் வொர்க் பண்றேன். வெளில லஞ்ச் போகலாமா?" மென்மையாக கேட்டாள்.

"ஷ்யூர்" என்றான் த‌ன்னிச்சையாக‌. அவ‌ள் பின்னாலேயே சென்றான்.

"யார் இவள்,நான் ஏன் இவ‌ள் பின்னால் போகிறேன்" என்ற‌ உண்மை லேட்டாக மனதில் உறைத்த‌து.

பார்க்கிங்கில் க‌ணேஷ், அவ‌ன் வ‌ண்டி அருகே சென்றான். அப்போது, "என் வ‌ண்டியில‌ போயிட‌லாமே?" என்றாள்.

"ஓ.. ஷ்யூர்"

அப்போதும் ஏன் அப்ப‌டி சொன்னான் என்று அவனுக்கே தெரிய‌வில்லை.

பின்னால் அநாயச‌மாக‌ உண‌ர்ந்தவ‌ன், அவ‌ள் விரித்து போட்டிருந்த‌ கூந்த‌ல் வ‌ண்டி வேக‌த்தில் முக‌த்தில் மோத‌, "என்ன‌ ஷாம்பூவாக‌ இருக்கும்?" என்ற‌ ஆராய்ச்சியில் இற‌ங்கினான்.

எதிரெதிர் டேபிளில் இருவ‌ர். சிக்க‌ன் பிரியாணி, ப‌ட்ட‌ர் சிக்க‌ன் ஆர்ட‌ர் ப‌ண்ணிவிட்டு எனக்கு தேவையான‌தை ஆர்ட‌ர் ப‌ண்ண‌ சொல்லிவிட்டு, ஹேண்ட் வாஷ் ப‌ண்ண‌ போயிருந்தாள்.

ம‌ன‌திற்குள் ஐன்ஸ்டீன் பிஸிக்ஸ் க்ளாஸ் எடுப்ப‌துபோல் ஒன்றும்புரியாம‌ல் உட்கார்ந்திருந்தான். வ‌ந்தாள்.

"என‌க்கு ஆண்க‌ள் சுத்த‌மாக‌ப் பிடிக்காது. சுய‌ந‌ல‌வாதிக‌ள். பெண்க‌ளிட‌ம் ம‌ட்டும் அதிகார‌த்தைக் காட்டும் வீர‌ர்க‌ள்" என்று சியாமளா ஆர‌ம்பித்தாள்.

"ஙே!"

"எல்லா விஷ‌ய‌த்திலும் பெண்க‌ள் த‌ங்க‌ளுக்கு க‌ட்டுப்ப‌ட்டு போக‌வேண்டும் என்று யோசிக்கும் narrow minded peoples" என்றாள் க‌டுப்பாக‌.

மனதிற்குள், "இவளுக்கு என்ன பிரச்சினை? சம்பந்தமே இல்லாமல் என்கிட்ட புலம்பிக்கிட்டு இருக்கா?" என்று எண்ணினான்.

"என்ன? எதுவும் பேசாம இருக்கீங்க?"

"இல்லங்க, அதெல்லாம் ஒண்ணும் இல்ல. எனக்கு ஜீன்ஸ் போட்ட பொண்ணுங்கன்னா அலர்ஜி"

"இதுகூட ஆண்களின் வறட்டு அதிகாரம். பெண்கள் ஆண்களுக்கு சமமாக ஜீன்ஸ் போடுறாங்களேன்கிற கோப‌த்தின் வெளிப்பாடு தான்."

"வெல், இது முத்திப் போன‌ கேஸ். ரொம்ப‌ அடிப‌ட்டு இருக்கா" என்று நினைத்துக் கொண்டிருந்த போது, அவ‌னுடைய‌ ஃபோன் அடித்த‌து.

"எக்ஸ்கியூஸ் மீ" என்று கடுப்புடன் க‌த்த‌ரித்துவிட்டு, "என்ன‌ம்மா இந்த‌ நேர‌த்துல‌?"

"இல்ல‌டா, இந்த‌ வார‌ம் ஊருக்கு வ‌ர்றேல்ல‌?"

"ஏன்மா, எதுவும் முக்கிய‌மான‌ விஷ‌ய‌மா?"

"எல்லாம் ந‌ல்ல‌ விஷ‌ய‌ம் தான்"

"சரி ச‌ரி நான் நைட் கூப்பிடுறேன்" என்றான் சியாமளா மீது இருந்த கடுப்பில்.

உள்ளே லெக்பீஸை க‌டித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

மூடை மாற்ற‌லாம் என‌ யோசித்துக் கொண்டு, "இந்த‌ ப்ராஜெக்ட்ல‌ உங்க‌ளுக்கு என்ன ரோல்?" என‌ சாஃப்டாக‌ கேட்டான் க‌ணேஷ்.

"இதுவும் ஒரு வ‌கையான‌ ட்ரீட்மெண்ட். உங்க‌ லெவ‌ல்ல‌ விட‌ கீழே டெவ‌ல‌ப்பராக‌ இருந்தால் அதிகார‌மாக‌ பேச‌லாம் என்கிற‌ ம‌ன‌ப்பான்மையின் வெளிப்பாடு" என்றாள் சூடு கொஞ்ச‌மும் குறையாம‌ல்.

க‌ணேஷ் க‌டுப்பின் உச்சிக்கே போனான். "பாவ‌ம் உங்க‌ள‌ க‌ட்டிக்க‌ போற‌வ‌ன் நெல‌மை" என்று ச‌த்த‌மாக‌வே முன‌கினான்.

"வாட்? என்ன‌ சொன்னீங்க‌?"

"இதெல்லாம் எதுக்கு என்கிட்ட‌ புல‌ம்பிக்கிட்டு இருக்கீங்க‌. வாட்ஸ் யுவ‌ர் ப்ராப்ள‌ம்?" க‌த்தியே விட்டான்.

"'பாவ‌ம் உங்க‌ள‌ க‌ட்டிக்க‌ போற‌வ‌ன் நெல‌மை'ன்னு நீங்க‌ முன‌கின‌து என‌க்கு கேட்டுருச்சி. இருந்தாலும் உங்களுக்கு self-sympathy அதிகம்" என்று சொல்லிக் கொண்டே ஹேண்ட் பேகில் இருந்து அவ‌ள் எதையோ எடுப்ப‌த‌ற்கும்,

"வாட்?" என‌ அதிர்ச்சியின் உச்சியில் க‌த்துவ‌ற‌கும் ச‌ரியாக‌ இருந்த‌து.

அவ‌ள் கையில் அவ‌னுடைய‌ லேண்ட்ஸ்கேப் க‌ல‌ர் ஃபோட்டோ.

"ஹ‌லோ, இது எப்ப‌டி உங்க‌ கையில‌..? என்று அதிர்ச்சியில் உறைந்தான்.

"இந்த‌ ச‌ன்டே, நீங்க‌ பொண்ணு பார்க்க போகும் முருகேச‌ன் வாத்தியார் வீட்டுப் பொண்ணு நான் தான்" என்றாள் முத‌ல் முறையாக‌ வெட்க‌ப்ப‌ட்டுக் கொண்டே.

அவ‌ள் டாப்ஸில் எழுதியிருந்த‌ வாச‌க‌ம், "SAY SOMETHING!"

*****************************
கணேஷ்-சியாமளா.. 1 2 3 4 5 6 7 8 9 10
*****************************

ஷாப்பிங் போன காதலனும் காதலியும்!

"சிந்து, தீபாவளிக்கு புது டிரெஸ் எதுவும் எடுக்கலியா? இன்னும் ஒரு வாரம் தானே இருக்கு?"

"என்கிட்ட மலை மாதிரி குமிஞ்சு இருக்கற ட்ரெஸ்ல என்ன எடுக்கிறதுனே தெரியல? போன மாசம் வேற ரெண்டு செட் எடுத்தேன். நீ ஏதாவது ஐடியா கொடேன்?"

"எனக்கெல்லாம் பொண்ணுங்க ட்ரெஸ் பத்தி எதுவும் தெரியாது. நல்லா அவங்க போட்டிருந்த கொஞ்சம் நேரம் சைட் அடிப்பேன். அவ்வளவு தான். அதுவும் சுரிதார் சைட்ல ரொம்ப லாங்கா கட் பண்ணிட்டு, ரொம்ப டைட்டா பேண்ட் போட்டு திரியுற பொண்ணுங்கள அவங்க போற இடத்துக்கெல்லாம் போய் சைட் அடிப்பேன்."

"நாய் மாதிரி தான.. வெட்கமா இல்ல.. இப்படி என்கிட்டயே சொல்றதுக்கு? இடியட்"

"இதில என்னம்மா தப்பு? இது வாலிப வயசு. நாங்க எல்லாம் பாக்குறதுக்குத் தான அவங்க அப்படி போட்டு திரியுறாங்க. முதல்ல அவங்கள நிறுத்த சொல்லு. நான் நிறுத்துறேன்."

"சரி சரி போதும் போதும் உன் பஞ்ச். நான் நைட் யோசிச்சிட்டு மார்னிங் சொல்றேன். நாம‌ ப‌ர்சேஸ் போக‌லாம்"

"ஒகே.. குட் நைட்"

~

"ஹ‌லோ, என்ன‌ சைல‌ண்டா வ‌ர்ற‌.. எனக்கு ஒரு சான்ட‌ல் க‌ல‌ர் டீஷ‌ர்ட், காஃபி க‌ல‌ர் டஃப் ஜீன்ஸ். முடிவு ப‌ண்ணிட்டேன். உன‌க்கு என்ன?"

பில்லிய‌னில் உட்கார்ந்துகொண்டு வான‌த்தை பார்த்து யோசித்துக் கொண்டே, "முடிவு ப‌ண்ணிட்டேன் வினோத். நீ மட்டும் அத‌ பார்த்த‌ ஷாக் ஆகிடுவே."

"ம்ம்ம்ம்.. பாக்க‌லாம்.. போத்தீஸ் தான‌.."

"ஆமா.."

~

"வினோத், ச‌ரி நீ போய் உன்னோட‌த‌ எடுத்திட்டு இரு.. நான் செல‌க்ட் ப‌ண்ணிட்டு இருக்கேன்."

"ஓகே.."

ப‌த்து நிமிட‌ங்க‌ள் க‌ழித்து செல்போனில் கால்.

"வினோத், உட‌னே ட்ரைய‌ல் ரூம் வா... என் ட்ரெஸ்ஸ‌ பாத்துட்டு எப்ப‌டி இருக்குன்னு சொல்லு.."

"ஓ.கே.."

உள்ளே போனால், ஜ‌க‌ன் மோகினியில் வ‌ரும் குட்டி பேய்க‌ள் போல‌, ஒயிட் அண்ட் ஒயிட்டில் சிரித்தாள். மாஸ்க் ம‌ட்டும் தான் மிஸ்ஸிங்.

"ஐயோ, என்ன‌ கொடுமை இதெல்லாம்? இது தான் நீ சொன்ன‌ ஷாக்கா?"

"ச‌ம்திங் ச‌ம்திங் பார்த்திருக்கியா?"

மிரண்டு போய், "வாட் நான்சென்ஸ்? உன் மேல ச‌த்திய‌மா என் லைஃப்ல‌ அதெல்லாம் பார்த்ததே இல்ல‌.. தப்பு. அதுவும் இல்லாம‌ அதெல்லாம் க‌ல்யாண‌த்துக்கு அப்புற‌ம் தான்"

"செருப்பால‌ அடிப்பேன். நான் கேட்ட‌து 'ச‌ம்திங் ச‌ம்திங் உன‌க்கும் என‌க்கும்' ன்னு ஜெய‌ம் ர‌வி, த்ரிஷா ந‌டிச்ச‌ ப‌ட‌ம்"

"ஓ.. அதுவா" மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டு, "ரெண்டு வ‌ருஷ‌ம் முன்னாடி பார்த்த‌து. ச‌ரியா நியாப‌க‌ம் இல்ல‌"

"அதுல‌ ஒரு பாட்டுல‌ த்ரிஷா போட்டு இருப்பா, நியாப‌க‌ம் இருக்கா?"

"'கோழி, வெட‌க் கோழி' பாட்டுல‌யா. அதுல‌ அவ‌ போட்டிருக்கிற‌ ட்ரெஸ் இப்ப‌டியெல்லாம் இருக்காதே"

"இடிய‌ட். ப‌ட‌த்துல‌ அந்த‌ பாட்டு ம‌ட்டும் தான் இருக்கா? நான் சொல்ற‌து, 'உன் பார்வையில் பைத்திய‌ம் ஆனேன்'ல‌ ஒயிட் குர்தா, பேண்ட், ரெட்ல‌ ஒரு ஷால் வ‌ச்சி ஆடுவாளே. அதான் ட்ரை ப‌ண்ணேன். ப‌ட் இது கொஞ்ச‌ம் லூஸ்"

"அது ம‌ட்டுமா"

"என்ன‌?"

"கொஞ்ச‌ம் இல்ல‌, ரொம்ப‌வேன்னு சொன்னேன்"

"ம்ம்.. நான் அதே மாதிரி செல‌க்ட் ப‌ண்ணாம‌ போக‌ மாட்டேன்."

"குட் ஸ்பிரிட், நான் என் ட்ரெஸ்ஸ‌ எடுக்க‌ப் போறேன்."

எஸ்கேப்பாகி ஓடினால், பின்னால் அவள் அங்கே இருந்த‌ ஒரு பெண் வேலையாளிட‌ம், 'ச‌ம்திங் ச‌ம்திங்' க‌தையை சொல்லிக் கொண்டிருந்தாள்.

அரைம‌ணி நேர‌ம் க‌ழித்து, "வினோத், எதுவுமே என‌க்கு செட் ஆக‌ மாட்டேங்குது" புல‌ம்பிக் கொண்டே

"ஹேய் அது த்ரிஷா உட‌ம்புக்கு செட் ஆச்சின்னா அதுக்கெல்லாம் வேற‌ ரீச‌ன்ஸ். உன் ஜ‌ம்போ மீல்ஸ் பாடிக்கு சுரிதாரும், நாலு மீட்டர் ஷாலும் தான் லாய‌க்கு. ஒழுங்கு ம‌ரியாதையா அத‌த் தேடு. டைம் வேஸ்ட் ப‌ண்ணாத‌"

"நான்சென்ஸ். உன்கிட்ட‌ போய் கேட்டேன் பாரு"

மீண்டும் அரைமணி நேர‌ம் க‌ழித்து, ட்ரைய‌ல் ரூம் வ‌ர‌ச்சொல்லி கால்.

"இப்ப‌வே இந்த‌ கொடுமைன்னா, க‌ல்யாண‌த்துக்க‌ப்புற‌ம் நினைச்சாலே ப‌ய‌மாயிருக்கு" என‌ எல்லாக் க‌டவுளிடமும் அங்கலாய்த்துக் கொண்டே , அவ‌ளைத் தேடி போனேன்.

அங்கே சைடில் ரொம்ப‌வே லாங்காக‌ க‌ட் ப‌ண்ணின‌ சுரிதார் டாப்ஸுட‌ன், ஓயிட் க‌ல‌ர் டைட் பேண்ட் போட்டு முன் நின்றாள்.

வெட்க‌த்துட‌ன், ஓர‌க்க‌ண்ணால் "எப்ப‌டி?" என‌க் கேட்ட‌து ஆயிர‌ம் க‌விதை.

அவ‌ன் முன்முறுவ‌லுட‌ன், "ஃபென்டாஸ்டிக்" என‌ இர‌ண்டு விர‌லை ம‌டித்து சொன்ன‌து, த‌னிக்க‌விதை.

டிஸ்கி: இது ச‌த்திய‌மாக‌ சிறுக‌தை இல்ல‌. அட் தி சேம் டைம், என் அனுப‌வ‌மும் இல்லை. காத‌லி கிடைக்காத‌ எலிஜிபிள் பேச்சில‌ர் நான். (ஹி..ஹி. ஒரு விள‌ம்ப‌ர‌ம்)

******************************

உயிர்கொல்லிகள்!

புகைந்து கொண்டிருந்த
ஏக்கங்களை
உன்னில் கொட்டிய
நொடியில்
உன் கண்களில் தெறித்த
நெருப்பு
திடீரென முளைத்த
ஆறாம் விரலுக்கு
ப‌ற்ற‌ வைத்தேன்

நாளொரு பொழுதும்
பொழுதொரு க‌ண‌மும்
வ‌ள‌ர்த்த‌ காதல், முத்தங்கள்
என்னை ஏகாந்த்த‌தில்
சுழ‌ல‌ வைக்கும்
பொழுதுக‌ள்
பொழுதுக‌ளில்
உள்ளே இழுத்த‌ புகையின்
ப‌ரிணாம‌ சுழ‌ற்சி
உச்ச‌ந்த‌லையை தாக்கி
சுழ‌ன்றேன் பின்
நின்றேன்

ஏதோ எவ‌னோ
கார‌ணமாக‌
சம்பந்தமில்லாதவன்
போல‌
உத‌றி எழுந்து
ச‌ம்ப‌ந்த‌மில்லாமல்
போன போது
ஒரு நொடியில்
எதுவும்
ச‌ம்ப‌ந்த‌மில்லாதது
போல்
உதிர்ந்த‌ புகை சாம்ப‌லின்
பிரிவு

பார்க்கும் காத‌ல‌ர்கள்
பற்ற வைக்கும்
நினைவலைகளின்
ரணம்
தொட‌ர்ந்து வ‌ந்து
விட்டாலும் எவன்
கையில் க‌ண்ட‌வுட‌ன்
உட‌னே
பற்ற வைக்க
ரணம்

நீ விட்டு சென்ற‌
காத‌லின்
நினைவ‌லைகள்
ம‌ட்டும் என்றும்
அழியாம‌ல்
நெஞ்சில் த‌ங்கி
பின்னர்
வெளியே விட்ட‌
பின்னும்
கொஞ்ச‌ம் அழியாம‌ல்
நெஞ்சில் த‌ங்கி
சித்ர‌வ‌தை

ஒரே வகையில்
ஒரே முறையில்
ஒற்றுமை
இர‌ண்டுமே
உயிர்கொல்லி!

*************************

கவிதையா? கதையா? காத்திருக்கிறேன்!

வீட்டு முற்றத்தில் பூத்த ஒற்றை ரோஜா மொட்டு

புதிய டூ வீலரின் பில்லியன் சீட்

பூஜையறையின் குத்துவிளக்கு

ஃபோட்டோ இல்லாத புதிய ஃபோட்டோ ஃப்ரேம்

செஸ்போர்டின் எதிரே காலியான குஷ‌ன் சீட்

கிங்க் ஃபிஷர் ஃபில்டர் சிகரெட் பாக்கெட்

ஃபிரிட்ஜில் ரெண்டு கிங்ஃபிஷ‌ர் பீர் பாட்டில்

டேபிளில் பெட்காஃபி குடிக்க ரெண்டு புதிய மக்

தின்று தின்று வளர்த்த தொப்பை

விசாலமான இரட்டை படுக்கை அறை

அனைத்தும்
முறையே
வாங்குவ‌த‌ற்கும்
அணைப்பதற்கும்
ஒளிர்வதற்கும்
நிர‌ப்புவ‌த‌ற்கும்
ஆடுவதற்கும்
நிறுத்துவ‌த‌ற்கும்
உடைப்பதற்கும்
கொடுப்ப‌த‌ற்கும்
க‌ரைப்ப‌த‌ற்கும்
க‌ரைவ‌த‌ற்கும்
காத்திருக்கிறேன்
உன‌க்காக‌
காத‌லி!
சீக்கிர‌ம்
காத‌லி!

********************************(ப்ளீஸ், என்னை யாராவது தடுத்து நிறுத்துங்க... என்னை பார்த்தா எனக்கே பயமா இருக்கு.)
********************************

பழைய காதலும், புதிய காதலர்களும்!

கார்த்திக், "சுப்பு, உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்னு நெனச்சிக்கிட்டு இருந்தேன். இன்னிக்கி சொல்ல முடியல. முடிஞ்சா நாளைக்கி சொல்றேன். பஸ் வந்திடுச்சி.. பை"

சுப்புவுக்கு லேசாக வெட்கம் எட்டிப் பார்த்தது. "நானும் உன்கிட்ட சொல்லணும்னு நெனச்சிக்கிட்டு இருந்தேன். நாளைக்கி பேசலாம். பை டா"

இர‌வு 11 ம‌ணி தாண்டி ஓடிக்கொண்டு இருக்கும்போது திடீரென‌ ஹேங்க் ஆகிவிட்ட‌து. யெஸ். சுப்புவுக்கு உல‌க‌ப் ப‌ந்து காலுக்கு கீழே ந‌ழுவி விழும் போல‌ ஒரு ப‌ர‌வ‌ச‌ம். யெஸ் யெஸ். கார்த்திக்கிட‌ம் இருந்து ஒரு எஸ்.எம்.எஸ். இத்த‌னை நாளாய் அவ‌னிட‌ம் சொல்லிவிட‌ வேண்டும் என‌ துடியாய் துடித்துக் கொண்டிருந்த‌ மூன்று வார்த்தைக‌ள். "மின்னல் ஒரு கோடி எந்தன் வழி தேடி வந்ததே... உன் வார்த்தை தேன் வார்த்ததே" என ஹரிஹரன் பெண்குரலில் சுப்புவுக்காக பாடிக் கொண்டிருந்தார். ப‌ச‌ங்க‌ ப‌ச‌ங்க‌ தான், லவ் ப்ரோப்பஸ் பண்றதுல்ல . ஆனா, "I Love U"ன்னு சிம்பிளா எஸ்.எம்.எஸ்ல‌ முடிச்சிட்டானே? கால் ப‌ண்ணிப் பார்க்க‌லாம்.

"ஹாய் டா"

"ஹாய் சுப்பு, என்ன திடீர்ன்னு இந்த நேரத்துல ஃபோன்?"

(அடப்பாவி, ஒண்ணுமே தெரியாத மாதிரி பேசுறான். ஒருவேளை நான் பேசணும்ன்னு வெயிட் ப‌ண்றான்னோ?)

"ஒண்ணும் இல்ல‌. உண்மையா அந்த‌ எஸ்.எம்.எஸ்?"

"எது?"

"இப்ப அனுப்புனேல்ல‌. அந்த‌ I love you எஸ்.எம்.எஸ்"
ஹ்ஹா ஹா ஹ்ஹா என அவ‌ன் அதிர‌ அதிர‌ சிரித்த‌து ஃபோன் வ‌ழியே அவ‌ளுக்கு இடியாக‌ வ‌ந்த‌து.

"அத‌ ஃபுல்லா ப‌டிக்க‌லையா? ஃப‌ர்ஸ்ட் அத‌ ப‌டிச்சிட்டு வா. நான் லைன்ல‌யே இருக்கேன்"

I love U




Not only U, Also V, W, X, Y,Z
Sender:
Karthik
+9198888888888

அவ‌ளுக்கு வெட்க‌ம், அவ‌மான‌ம் எல்லாம் ஒரே நேர‌த்தில் பிடுங்கித் தின்ற‌து. ஒரே செக‌ண்டில் ஒரு வ‌ழியாக‌ சமாளித்துக் கொண்டு, அவ‌ளும் ஃபோனில் சிரித்தாள்.

"ஃபுல்லா ப‌டிக்காம‌ தான் ஃபோன் ப‌ண்ணியா?"

"இல்ல‌.. ஆமா.."

"ஆமாவா, இல்லியா?"

"இல்ல‌ எஸ்.எம்.எஸ் வ‌ந்த‌துல‌, அதான் நீ முழிச்சி இருப்பேன்னு கால் ப‌ண்ணேன்." உஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா...

"இதையே ஏன் முத‌ல்ல‌யே சொல்லாம, உண்மையான்னு கேட்ட‌?" ம‌ட‌க்கியே விட்டான்.

"ச்சும்மா தான். உன‌க்கு இந்த‌ எஸ்.எம்.எஸ் யாரு அனுப்புனா?"

"உன் ஃப்ர‌ண்ட் காய‌த்ரி தான் அனுப்புனா. ஆனா நான் உன்னை மாதிரி எல்லாம் தாம் தூம்னு குதிக்க‌ல‌ப்பா"

"அவ‌ளா??? அவ‌ எதுக்கு உன‌க்கு அனுப்புனா?"

"ஃபார்வ‌ர்டு எஸ்.எம்.எஸ் தான. யார் யாருக்கு அனுப்புனா என்ன‌?"

"ச‌ரி, நான் என்ன‌ தாம் தூம்ன்னு குதிச்சேன். நீ எப்ப‌டி அப்ப‌டி சொல்ல‌லாம்?"

"குதிச்ச in the sense உன்ன மாதிரி நான் அவ‌ளுக்கு ஃபோன் ப‌ண்ணி உண்மையா?, யாரு அனுப்புனான்னு எல்லாம் ஃபோன் ப‌ண்ணி டார்ச்ச‌ர் ப‌ண்ண‌ல‌"

"டார்ச்ச‌ரா? ஸோ, ஃபைன‌ல்லா நான் என்ன‌ சொல்ல‌ வ‌ர்றேன்னு உன‌க்கு புரிய‌ல‌?" குஷி ப‌ட‌த்து மொட்டை மாடி சீனில் ஆக்ரோஷ‌மாக‌ இருந்து திடீரென‌ சென்டிமென்டில் க‌ண்ணீர் உடையும் ஜோதிகா போல் ஆனாள்.

"புரிய‌லையே. நீ சொன்னா தான புரியும்"

"உன‌க்கு புரியும். ஆனா ந‌டிக்கிற‌. ஓ.கே. காலேஜ் முடிஞ்சி கெள‌ம்பும்போது ஏதோ முக்கிய‌மா சொல்ல‌ணும்ன்னு சொன்னியே. என்ன‌ அது?"

"ஓ.. அதுவா.. நீ கொஞ்சம் குண்டு தான், ஆனா இன்னிக்கி போட்டிருந்த சுரிதார்ல‌ ரொம்ப‌ குண்டா இருக்கிற‌ மாதிரி இருந்த‌, அதான் இனிமே அத‌ போடாத‌ன்னு தான் சொல்ல‌ நென‌ச்சேன். இது முக்கியாமான விஷயம்ன்னு நான் சொல்லலை. டவுட்டா இருந்த மேல போய் படிச்சி பாரு ஸாரி, நல்லா யோச்சி பாரு"

"ஓ. இத‌த் தான் சொல்ல‌ணும்னு நென‌ச்சியா?

"ஆமா.."

"நானும் ஏதோ சொல்ல‌ணும்ன்னு சொன்னேன்னே, அது என்ன‌ன்னு கேட்க‌ மாட்டியா?"

"முக்கிய‌மான‌ விஷ‌ய‌மா இருந்தா தான் நீயே சொல்லி இருப்பீயே?"

"ஓ, யெஸ்.... இப்ப‌க் கூட‌ கேட்க‌ மாட்டில்ல‌"

"என்ன‌ தான் உன‌க்கு ப்ராப்ள‌ம்? ஏன் இப்ப‌டி சுத்தி வ‌ளைச்சி டார்ச்ச‌ர் ப‌ண்ற? ச‌ரி சொல்லு"

"ஒண்ணும் இல்ல சாமி. யாரும் உன்னை டார்ச்ச‌ர் ப‌ண்ண‌ல‌.. போய் தூங்கு"

"ஹேய், ஏன் ரொம்ப‌ அப்செட்டா இருக்க‌. கூல் ட‌வுன். Digital Communication assignment முடிச்சிட்டியா?"

"ப்ளீஸ் கார்த்திக், நாம‌ நாளைக்கி பேச‌லாம். குட் நைட்"

"ஏய் சுப்பு........"

டிங்.. டிங்.. டிங்..

"ஏன் இப்ப‌டி இவ‌ன் டார்ச்ச‌ர் ப‌ண்றான். வேணும்ன்னே ப‌ண்றான்னா? இல்லை என்ன‌ சுத்த‌ விடுறான்னா?" க‌ர்ச்சீப்பை எடுத்து க‌ண்ணைத் துடைத்துக் கொண்டாள்.

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..

1
New Message
Recieved

ஓப‌ன் ப‌ண்ணினாள்.

"I Love you"

Sender:
Karthik
+919888888888

நாலுவாட்டி மேலேயும் கீழேயும் ஸ்க்ரோல் ப‌ண்ணி பார்த்தாள். உண்மையிலேயே ம‌றுப‌டியும் ஆன‌ந்த‌த்தில் குதிக்க ஆர‌ம்பித்தாள். "ஆனா நான் கால் ப‌ண்ண மாட்டேன். என்னை எப்ப‌டி அழ‌ வ‌ச்சான் ராஸ்க‌ல்" செல்போன் டிஸ்பிளே செக் ப‌ண்ணிக் கொண்டே இருந்தாள்.

அவ‌ன் கால் ப‌ண்ண‌வே இல்லை. அவ‌ளுக்கு இருப்பு கொள்ள‌வில்லை.

2 நிமிட‌ம் 42 செக‌ண்ட் க‌ழித்து, சுப்புவே ப‌ண்ணினாள்.

"என்ன‌ சுப்பு?"

ஐய‌ய்யோ, ம‌றுப‌டியும் ஒண்ணுமே ந‌ட‌க்காத‌ மாதிரி கேக்குறான்னே. ம‌றுப‌டியும் இன்பாக்ஸை செக் ப‌ண்ணினாள். அவ‌ன் தான், அவ‌னே தான். அப்புற‌மும் ஏன்?

"இல்ல‌.. எஸ்.எம்.எஸ்?"

"ஆமா. இப்ப‌ அதுக்கு என்ன‌?"

"......."

"என்ன‌டி, இப்ப‌ உண்மையான்னு கேட்க‌ மாட்டியா? இப்ப‌டி சிம்பிளா முடிக்கிற‌துக்கு ஏன் அவ்வ‌ள‌வு எமோஷ‌னல் ஆன‌. இடியட்,"

"நாயே, யாரை பார்த்து டி போட்டு கூப்பிடுற‌.. நான் உன்னை ல‌வ் பண்றேன்னு யாரு சொன்னா?"

"அப்ப‌டியா, ஸாரி, அது காய‌த்ரிக்கு அனுப்ப‌ வேண்டிய‌து. உனக்கு அனுப்பிட்டேன்"

"நேர்ல‌ பாக்கும்போது, செருப்பால‌ அடிப்பேன்"

(ச‌ரி போங்க‌ பாஸ், அந்த மொக்கை(கடலை?)இன்னும் 2 ம‌ணிநேர‌ம் ஃபோன்ல‌ பேட்ட‌ரி தீர்ற‌வ‌ரைக்கும் க‌ருகும். ந‌ம்ம‌ போய் வேலைய‌ பார்க்க‌லாம்)

***********************************************************

புது வெட்கம் வருதே.. வருதே..!

"என்னங்க...." என்று அனு அலறினாள். காதல் படத்தின் க்ளைமேக்சில் சந்தியா பெரிய கூச்சல் போடுவாளே, அப்படி கற்பனை பண்ணிக் கொள்ளுங்கள்.

அவள் போட்ட சத்தத்தில் ராம், கையில் வைத்திருந்த N72வை கீழே போட்டுவிட்டான். மிகவும் பதறிப்போய், "என்னடி ஆச்சி?, எங்க இருக்க?" என்றான்.

"காணோம்"

"எதை காணோம்? எதையும் தொலைச்சிட்டியா? இப்ப நீ எங்க இருக்க?"

"வீட்டில தான். எனக்கு அழுகை அழுகையா வருது. அரைமணி நேரமா தேடிக்கிட்டு இருக்கேன். சீக்கிரம் வர்றீங்களா?

"என்னத்த தேடிக்கிட்டு இருக்க?"

"உங்க அம்மா அப்பா எப்ப வர்றாங்க?"

"மதியம் 3.30க்கு வந்திடுவாங்க.. வைகைல.. நீ மதியம் தான் ஆஃபிஸ்க்கு லீவ் போட்டு வர்றேன்னு சொன்ன? இப்ப என்ன பண்ணிக்கிட்டு இருக்க வீட்டுல?"

"அய்யோ.. போச்சி போச்சி.. அவங்க வர்ற நேரம் பாத்து தானா இப்படியெல்லாம் நடக்கணும்" குரல் உடைந்து அழ ஆரம்பித்தாள்.

"என்னடி? ஒண்ணும் புரியல.. சரி இன்னும் 20 மினிட்ஸ்ல வீட்டுல இருப்பேன். கூல் டவுன்."

**

"ன்னம்மா ஆச்சி?" கதவை திறந்த உடனே கேள்வியுடன் அவளை ரூம் ரூம்மாக தேடிக் கொண்டு வந்தான்.

பெட்ரூமே கலைந்து கன்னாபின்னாவென இருந்தது. உள்ளே, "சின்னத்தம்பி" குஷ்பு போல முடியெல்லாம் கலைந்து எல்லாவற்றையும் கலைத்துக் கொண்டிருந்தாள்.

"போலீஸ்ல‌ க‌ம்ப்ளைன் கொடுக்க‌லாமா அனு? "

"அதெல்லாம் ஒண்ணும் வேணாம். நேத்து கூட‌ நான் பாத்தேன்"

"எதுவும் ந‌கை எதுவும் காணோமா?"

"ஆங்.. ஆங்.." என்று ஏறெடுத்து பார்த்த‌வ‌ளை புதியவ‌ர்க‌ள் யாராவ‌து பார்த்தால் பைத்திய‌ம் என்று தான் நினைப்பார்க‌ள்.

"ஏன் இப்ப‌டி இவ்வ‌ள‌வு டிஸ்ட‌ர்ப்டா இருக்க‌? இரு... நானும் தேடுறேன்." அவளை லைட்டாக கட்டிப்பிடித்து ஆறுதல் சொல்லிவிட்டு,

அவ‌னும் அவ‌ன் ப‌ங்குக்கு ஷெல்பில் அடுக்கி வைத்திருந்த‌ போர்வை, த‌லைய‌ணை எல்லாவ‌ற்றையும் ஒவ்வொன்றாக‌ எடுத்து உதறி போட்டுக் கொண்டிருந்தான்.

"அய்ய‌ய்யோ இன்னும் ஹால்ஃப் அன் ஹ‌வ‌ர்ல‌ அவ‌ங்க‌ வ‌ந்திடுவாங்க‌ளே? அதுக்குள்ள‌ க‌ண்டுபிடிச்சாக‌ணும் ராம்?"

"அவ‌ங்க‌ வ‌ர்றதுக்கும் இதுக்கும் என்ன‌ ச‌ம்ப‌ந்த‌ம்?"

"போன‌ வாட்டி அதை போடாம‌ ஷோகேஸ்ல‌ வ‌ச்சிருந்த‌துக்கு உங்க‌ அம்மா தாளிச்சி கொட்டிட்டாங்க‌..? இந்த‌ த‌ட‌வையும்னா, என்ன‌ ம‌ரும‌க‌ளே இல்ல‌ன்னு சொல்லிடுவாங்க‌..?

"அவ‌ங்க‌ வாங்கிக் கொடுத்த‌ நெக்லெஸ்ஸா..? அதைத் தான் லாக்க‌ர்ல‌ வ‌ச்சிருந்தியேடி..?

"இதுக்கெல்லாம் கார‌ண‌ம் நீ தான். ம‌வ‌னே, உன்னை முதல்ல‌ கொல்ல‌ணும்.. அது முத‌ல்ல‌ கெடைக்க‌ட்டும் அப்புற‌ம் வ‌ச்சிக்கிறேன் உன்ன‌?

"அடிப்பா.....வி.. நாலு மீட்டிங்க‌ க‌ட் ப‌ண்ணிட்டு ப‌த‌றி போய் வ‌ந்தா..."

"வெயிட் வெயிட்.. அதை எடுத்துக் கொடுங்க‌.. " அவ‌ன் கையில் இருந்த‌ த‌லைய‌ணையை வாங்கினாள். உறையை உருவினாள். கீழே விழுந்த‌து.

மஞ்சள் வாசம் மாறாத தாலியை கையில் எடுத்துக் கொண்டு, "அப்பாடா.... இப்ப‌த் தான் உயிரே வ‌ந்த‌து" என்று க‌ழுத்தில் போட‌ போனாள். சில விநாடிக‌ள் யோசித்துவிட்டு..

"நீங்க‌ளே க‌ழுத்தில‌ போடுங்க‌.." புதுசாக முளைத்த வெட்கத்துடன், அவ‌ன் கையில் திணித்தாள்.

"உன் முதுகுல‌ தான் போட‌ணும்..லூஸூ"

"ஏன்? ஏன்? நீ தான் நேத்து நைட் குத்துதுன்னு க‌ழ‌ட்டி போட்ட‌.. என் த‌ப்பா சொல்லு.. சொல்லு என் த‌ப்பா?"

"ஓ.. அப்படியா.. அவ‌ங்க‌ வ‌ர்ற‌துக்குத் தான் இன்னும் ஹால்ஃப் அன் ஹ‌வ‌ர் இருக்கே.. அதுவ‌ரைக்கும்...." எக்ஸ்பிரஸ் தடம்புரண்டது.

"அடி செருப்பால?... " என்று சொல்லிக் கொண்டே ஹாலுக்குள் புள்ளிமானாக துள்ளிக் குதித்து ஓடினாள் அனு. பின்னாலேயே ராம்.
**************************

இனிமேல் ம்ம்ம்ம்ம்ம்ம்ம் தான்!

தோற்கும் காதல் கதைகள் காவியமாம்
எனக்கு பேராசையில்லை
உன்னுடன் வாழும் வாழ்க்கையே
எனக்கு காவியம் தான்!
ஆதலால் காவியம் படைப்போம்,
சீக்கிரம் வாடி!

உனக்கும் எனக்குமான இடைவெளிகள்
ஏன், உன் மேலுதடுக்கும்
கீழ் உதடுக்கும் இடையேயான
தூரமாக இருக்கக் கூடாது?
அன்பே, அடிக்காமல் கடிக்காமதில் சொல்லவே முடியாதா
இந்த கேள்விக்கு உன்னால்?

இந்த சுரிதார் அழகா என்று கேட்கிறாய்
மீன் விழிகளின் மூச்சுத் திணறலில்
அலுங்காமால் குலுங்காமல்
அழகாக இப்போது தான் தெரிகிறது,
உன்னால் இன்று சுரிதார் அழகானது.
நான் எப்போது?

இரவு முழுவதும் வேர்க்கிறது
பயமாக இருக்கிறது
மூச்சு திணறலும் வந்து போகிறது.
எழுந்திருக்கவும் மனதில்லை
நில்.
பிசாசே,ஒன்று கனவில் வா, இல்லை வராதே
வந்து வந்து போய் கொல்லாதே!

வெட்கம் ஒதுக்கு ஒதுக்கு, அது இடைஞ்சல்
சொன்னவன் முட்டாள் கவிஞன்
என்னால் சிவக்க சிவக்க வெட்கம்
உன்னிடம் பிறக்கும் தருணங்கள்
நான் செத்து செத்து மீண்டும்
பிறக்கும் அபூர்வ தருணங்கள்

கஷ்டமாக இருக்கிறது, ஏதோ ஒன்று குறைகிறது
தயவுசெய்து புலம்பாதே!
ஒன்றும் குழப்பிக்க வேண்டாம்
ஒரே ஒரு முறை முத்தமிடலாம்
எல்லாம் சரியாகிவிடும்!
சரிபார்த்து விடலாமா?
பொறுக்கி, என அடிக்க ஓடி வருகிறாய்
இப்போதும் குறைகிறதா?
அட ஆமா, எதுவும் குறையவில்லை
அதனால்,
அதனால்?
முத்தமிட ஆரம்பிக்கலாமா?
ம்ம் என்றாய், தலையைக் குனிந்து கொண்டு
தலையை நிமிர்த்தினேன்
இனிமேல் ம்ம்ம்ம்ம்ம்ம்ம் தான்!

************

நாளொரு PizzaHut-டும் பொழுதொரு MaryBrown-னுமாக!

காதலிக்கும் பெண்களின் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு அர்த்தம் உண்டு என்ற நம்ம டாபிக்கில், இன்னைக்கு இரண்டாவது மேட்டர்.

1. ஸ்நாக்ஸ் சாப்பிடுறீயா/என்ன சாப்பிடுற?:

2. "ஹாய், ஹலோ" என அறிமுகபடலத்தில், உஷார்:

இதை உங்கள் காதல் வாழ்க்கையின், தினசரி நடக்கும் ஒரு துயர சம்பவம். உங்க ஆள் கூட எங்கேயாவது வெளியில சுத்திக்கிட்டு இருக்கும்போது, திடீர்ன்னு அவங்க கூட காலேஜ்ல படிச்சவங்களோ இல்லை ஆஃபிஸ்ல வொர்க் பண்றவங்களோ பாத்துட்டாங்கன்னா, நாம தான் டென்ஷன் ஆவோம். ஆனா அவங்க கூலா இருப்பாங்க. நல்லா பழகினவங்கன்னா, நேரா அவங்ககிட்ட போய், "ஹாய், திஸ் இஸ் மை ஃபிரண்ட் *****" (ஃப்ரண்டா, என்ன கொடுமை சார் இது? இருடி உனக்கு "HotDog" கெடையாது.) அப்படின்னு அறிமுகப்படுத்துவாங்க. ஓரளவுக்கு பழக்கம் இல்லைன்னா, அவங்க அதை கண்டுக்க மாட்டாங்க‌. நீங்களும் தான். என்னடா ஒழுங்கா தான போய்கிட்டு இருக்கு? இங்க என்ன பிரச்சினைன்னு கேட்குறீங்களா?
இங்க தான் பிரச்சினையே பாஸ். கொஞ்சம் நல்லா பழகினவங்கன்னா, உங்க ஆளு அவங்கள பத்தி இன்ட்ரோ கொடுப்பாங்க.. லைக்.. என்கூட ஃபைனல் இயர் ப்ராஜெக்ட் ஒண்ணா பண்ணோம் இல்லை ஒரே ப்ராஜெக்ட்ல வொர்க் பண்றோம் மாதிரி. அவங்க ஒரு நிமிஷம் என்ன பேசுறதுன்னு தெரியாம முழிச்சிட்டு, கெளம்பலாம்ன்னு இருக்கும்போது, நம்ம பசங்க வேலையக் காட்ட ஆரம்பிச்சிடுவோம். அவங்க ஒரு பொண்ணா இருந்து, பார்க்க கொஞ்சம்(உங்க ஆள விட)லட்சணமா இருந்துட்டா, நம்ம வழக்கம்போல "ஓ அப்படியா, உங்கள பத்தி அடிக்கடி சொல்லுவா.. BTW நீங்க அங்க தான் வொர்க் பண்றீங்க?" ஹி ஹின்னு ஜொள்ளுவிட ஆரம்பிப்போம். அதுக்குள்ள அங்க இருந்து ஒரு கோபமான, கேவலமான, வார்த்தைகளில் விவரிக்க முடியாத அளவுக்கு லுக் விடுவாங்க. ஆற்காட்டார் மட்டும் அவங்கள மாதிரியான ஆளுங்கள பார்த்து, அவங்க காதுல இருந்து வர்ற கோபப்புகையை பயன்படுத்தி மின்சாரம் எடுத்தார்னா, தமிழ்நாட்டுக்கு காதலர்கள் இருக்கிறவரை மின்சார தட்டுப்பாடே வராது.

ஒருவேளை நம்ம கெட்டநேரம், ஃப்ரண்ட் ரொம்ப நச் ஃபிகரா இருந்தா, நாம ஆள் இருக்கிறதையே மறந்துட்டு, அப்படியே கடலை போட்டுகிட்டு வானத்தில பறந்துகிட்டு இருப்போம். தப்பி தவறி, இந்த மாதிரி சூழ்நிலையில மட்டும் மாட்டிகிட்டீங்கன்னா, அவ்வளவு தான் உங்கள ரெண்டு பேர சமாளிக்கிற முருகன்(கடவுள்ங்க) வந்தா கூட காப்பாத்த முடியாது. அதுக்கப்புறம் ஒரு வயசான பாட்டிக்கிட்ட கூட பேசாம, பெண்கள் காற்று உங்க பக்கம் கொஞ்சம் கூட‌ அடிக்காம, ஒரு சாமியார் மாதிரி(போலி சாமியார்னா, சங்கு தான்டி.. ஸ்ட்ரெய்ட் டிக்கெட் டூ நரகம்) இருந்தீங்கன்னா, ரெண்டு வாரம் கழிச்சி அவங்க உங்க பக்கம் ஆறுதல் பார்வை திரும்ப வாய்ப்பு இருக்கு. நாளொரு PizzaHut டும் பொழுதொரு MaryBrown னுமாக காதலை மீண்டும் வளர்க்கவேண்டும்.

இந்த டைம்ல பொண்ணுங்க நோட் பண்றதுக்கு ஒரு மேட்டர் இருக்கு. ஒருவேளை நீங்க இன்ட்ரோ கொடுக்கிற ஆள் மட்டும் பையனா இருந்தா, அவன் உங்க நல்ல ஃப்ரண்டா இருந்தா, தலைவர் "ஒரு ஹாய்" மட்டும் சொல்லிட்டு அங்கே இருந்து எஸ்ஸாகி விடுவார். மனசுக்குள் அவன அசிங்கம் அசிங்கமா திட்டுவார். ரெண்டு நிமிஷம் பார்ப்பார். அப்படியும் நீங்க வரலைன்னா, டீசன்டா உள்ளே புகுந்து "அப்புறம் போன வாரம் உங்களை அடையார் டிப்போ பக்கத்துல் இருக்க பார் பக்கம் பார்த்தேன்" அப்படின்னு உங்க ஃப்ரண்ட ஓட ஓட துரத்துற மாதிரி நோஸ்கட் பண்ணி அனுப்பி வச்சிடுவார். இது தாங்க பசங்க திறமை. மைண்ட்ல வச்சிக்கோங்க.

பேக் டூ பாய்ஸ்: உங்க காதலிக்கு தங்கச்சி இல்லாமல் இருந்தால், உங்கள் காதல் லைஃப், ஃப்ளைட்ல‌ போற மாதிரி ஸ்மூத்தா, ட்ராவல் பண்றதே தெரியாத மாதிரி போய்கிட்டே இருக்கும். ஒரு வேளை இருந்தால், கொஞ்சம் அழகாகவும் இருந்தால், உங்க ஆளை விட ரெண்டு வயசு கம்மியாக இருந்தால், இத்தனை 'இருந்தால்' இருந்த்தும் "நீங்க நல்லவர், ராமன்(இவரும் கடவுள்ங்க) மாதிரி நல்ல பழமாக இருந்தால்" மட்டும் தொடருங்கள். உங்க காதல் லைஃப் கெட்டி. இல்லையென்றால், மனசாட்சியை கொஞ்ச நாள் கழற்றி டாஸ்மாக்கில் தொங்கவிட்டு விட்டு, இந்த காதலை கட் பண்ணிவிடுங்கள். ஏன் தெரியுமா? "தெரியும்டா, கொஞ்சம் சின்னபொண்ணா, என்னவிட அழகா இருக்கிறதுனால‌, ஜொள்ளு விட்டு அவளுக்கு தெனமும் SMS பண்ண ஆரம்பிச்சிட்ட. ஒருநாளாவது எனக்கு நீ குட் மார்னிங் SMS அனுப்பி இருக்கியா?" இந்த மாதிரி எதுக்கெடுத்தாலும் சண்டை போட்டு, ஒரு நாளும் நிம்மதியாக இருக்க விடமாட்டார்கள். நீங்க மறந்தாலும், அவங்களே நியாபகப்படுத்தி சண்டை போடுவார்கள். நாளடைவில் உங்க ஆளுக்கு, இதுவே ஒருவித காம்ப்ளக்ஸாக மாறி விடக்கூடிய ஆபத்தும் இருக்கிறது. உஷார்.
முழிச்சிக்கோ, ஃபிகர கரெக்டா மெயின்டெயின் பண்ணி பொழச்சிக்கோ!

(டிப்ஸ் இன்னும் வரும்)

**********************

சத்தியமாக புரிய‌வில்லை!


சத்தியமாக புரிய‌வில்லை
கல்லூரி இறுதிநாள் விழாவில்
எனக்கு காதல் கல்யாணம் தான்
என்று நீ சொன்ன போது,

சத்தியமாக புரிய‌வில்லை
உனக்கு வேலை கிடைத்ததை
நீ என்னிடம் தான் முதலில்
சொன்னாய் என்று
அந்தி மங்கிய மாலையில்
என்னிட‌ம் நீ சொன்ன‌ போதும்,

சத்தியமாக புரிய‌வில்லை
வேலை மும்பைக்கு மாற்றம்
என கண்ணை கசக்கி
வருந்தி சொன்ன போதும்,

சத்தியமாக புரிய‌வில்லை
உன் தோழியுடன் டூவீல‌ரில்
சென்ற‌ நாட்க‌ளில்
என்னிட‌ம் சிடுசிடுத்த‌போதும்,

ச‌த்திய‌மாக‌ புரிய‌வில்லை
வ‌ழிய‌னுப்ப‌ பின்னிர‌வில்
ஏர்போர்ட்டுக்கு நீ த‌னியொரு
பெண்ணாக‌ வ‌ந்த‌ போதும்,

ச‌த்திய‌மாக‌ புரியவில்லை
என்னுடைய பிற‌ந்த‌நாளுக்கு
புட‌வையை சும‌ந்து
சிவ‌க்க‌ சிவ‌க்க‌ வெட்க‌த்தை
உடுத்தி வ‌ந்த‌ போதும்,

சத்தியமாக புரிய‌வில்லை
ஏதோ ஒரு விவாதத்தில்
த‌லையில் குட்டி
"இது கூடவா பொண்ணுங்க
வெட்கத்தை விட்டு சொல்லுவாங்க"
என சொல்லி வெட்கச்சிரிப்பு
உதிர்த்த‌ போதும்,

வாக‌ன‌ங்க‌ளின் இரைச்சலின் ஊடே,
பாஸ்ப‌ர‌ஸ் விள‌க்கின்
வெளிர் மஞ்சள் வெளிச்சத்தில்,
"உன்னை ல‌வ் ப‌ண்றேன்டா, இடிய‌ட்"
என்று ஒற்றை ரோஜாவுட‌ன்,
விரும்புகிறேன்
என்று நீ சொல்லும்வ‌ரை!

ஒரு ஹைக்கூ

நீ கடித்து கொடுத்த‌ க‌ட்லெட்
நீ: "எப்ப‌டியிருக்கு"
நான்: "சாக்லெட் சூப்ப‌ர்"

...

(காதலிக்கும்)பெண்கள் பேசும் வார்த்தைகளின் அர்த்த‌மே வேற‌!

கணவன் மனைவியை அடக்கி ஆள்வதும், மனைவி கணவனை மிரட்டி வாழ்வதும், கட்டுபெட்டித்தனமான வாழ்க்கையின் ரெண்டு எக்ஸ்ட்ரீம் கேட்டகிரிஸ். ஆனால் ரெண்டுக்கும் இடைப்பட்டு எதற்கெடுத்தாலும் முறைக்கும், சிணுங்கும் மனைவி, தொட்டதற்கெல்லாம் மனைவிக்கு பயந்து நடுங்கும் அல்லது பயந்தது மாதிரி நடிக்கும், செல்லமாக கோபப்படும், சண்டைபோடும் கணவன். இவர்கள் இருவர் என்றுமே இளமையாக இருக்கும் திருமண பந்தத்தின் உயிர்நாடி.

அதேபோல் தான் காதலும், காதலர்களும். சண்டைக்கோழிகளாக எந்நேரம் அடித்துக் கொண்டு திரியும் ஈகோ மோதல்கள், நைட் தூங்கபோறதுக்கு முன்னால "ஐ லவ் யூ"ன்னு காதல் SMSல முடியும். 'உன்னாலே உன்னாலே' படத்தில் வரும் ஃபேமஸ் டையலாக். பொண்ணுங்க, "Thanks"னு சொன்னா, "நீ பண்ண இந்த மொக்கை வேலைக்கு இது ஒண்ணு தான் கொறச்சல்"ன்னு அர்த்தம். இது மாதிரி போகும். பொண்ணுங்களோட ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கும். அது புரியாம பேக்கு மாதிரி இருந்தா பையனோட மூக்கு உடைஞ்சிடும். இந்த பதிவு, அந்த மாதிரி பசங்களுக்கு ஹெல்ப் பண்ணும் நோக்கத்துடன் பதிவு செய்யப்படுகிறது. மே பி, ஃப்யூச்சர்ல எனக்கு கூட யூஸ் ஆகலாம். Girls, please excuse me.
1) ஸ்நாக்ஸ் வாங்கிட்டு வ‌ர‌ட்டுமா/என்ன‌ சாப்பிடுற‌?

பாஸ், நீங்க‌ ரெகுல‌ரா சினிமாவுக்கு ஜோடியா போகின்ற ஆளா? அப்ப‌டின்னா, க‌ண்டிப்பா இந்த‌ கேள்வியை உங்க‌ ஆளிட‌ம் இர‌ண்டு மூன்று த‌ட‌வையாவ‌து கேட்டு நோஸ்க‌ட் வாங்கி இருப்பீர்க‌ள். ந‌ல்ல‌ ப‌ட‌மோ, மொக்கை ப‌ட‌மோ இன்டெர்வெல்லில் ம‌ட்டும் சீட்டில் ஒரு நிமிஷ‌ம் கூட‌ ந‌ம்ம‌ ப‌ச‌ங்க‌ளால் உட்கார‌ முடியாது. ஃபிகரோட போயிருப்பதால் தம்மும் அடிக்க முடியாது. ஆனால் பொண்ணுங்க‌, பிடித்து வைத்த‌ பிள்ளையார் மாதிரி உட்கார்ந்து செல்போனை எடுத்து நோண்டிக் கொண்டிருப்பார்கள்(ஏழாம் உலகம்?). ஓ.கே அது வேற‌ டாபிக். ந‌ம்ம‌ மேட்ட‌ருக்கு வ‌ருவோம்.

ரொம்ப‌ ஜென்டிலாக‌, நீங்க‌ வெளியே போகும்போது "நீ ஏதாவ‌து சாப்பிடுறீயாம்மா?" என்று கேட்பீர்க‌ள். உட‌னே அவ‌ங்க‌ உங்க‌ள ஒரு முறை முறைச்சிட்டு, "ஒண்ணும் வேணாம்" என்று சொல்வார். நீங்க‌ளும், ஒண்ணும் வேணாம்ன்னுட்டாளே, ந‌ம்ம‌ளும் எதுவும் ஸ்நாக்ஸ் வாங்க‌ வேணாம்ன்னு ச்சும்மா வெளில‌ போயி ம‌த்த‌ ஃபிக‌ர்ஸ‌ சைட் அடிச்சிட்டு, ப‌ட‌ம் போட்ட‌வுட‌னே உள்ளே வ‌ந்துடுவீங்க‌. அதுக்கு அப்புற‌ம் மேட‌ம், ப‌ட‌ம் முடிஞ்சி வெளியே வ‌ந்த‌தில் இருந்து, அன்னைக்கு நைட் தூங்குற‌து வ‌ரைக்கும் உங்க‌கூட சரியாவே பேச‌வே மாட்டாங்க‌.

அவ‌ங்க‌ ச‌ரியா பேச‌லைன்னு, உங்க‌ளுக்கு அடுத்த‌ நாள் ஆஃபிஸ்ல‌ உட்கார்ந்து இருக்கும்போது தான் புரியும். உட‌னே ஃபோன் ப‌ண்ணி, என்ன‌ ஏது என்று விசாரித்தால், "நான் கோபமாக இருக்கேன்"ன்னு கண்டுபிடிக்க உனக்கு இவ்வளவு நேரம் ஆச்சான்னு 15 நிமிஷம் கன்னாபின்னான்னு திட்டிட்டு, மறுபடியும் பழைய பிரச்சினைக்கு வந்து அர்ச்சனையை ஆரம்பிப்பாங்க.

"இங்க‌ பாரு, ந‌ம்ம எங்கே ப‌ட‌த்துக்கு போயிருக்கோம்? க‌ம‌லா தியேட்ட‌ருக்கு. அங்க‌ எத்த‌னை த‌ட‌வ‌ நாம‌ போயிருக்கோம். அங்க‌ கெடைக்கும் ஜிகீர்த‌ண்டா என‌க்கு ரொம்ப‌ பிடிக்கும்ன்னு தெரியாதா? இல்லை தெரிஞ்சிட்டே தான் என்ன சாப்பிடுறேன்னு ந‌க்க‌லா கேட்டீயா? நீ கேட்டு இருப்ப‌டா?" என்று 15 நிமிட‌ம் மூச்சி விடாமல் உங்க‌ளை தாளித்து எடுத்து விடுவார்க‌ள். உங்க‌ளை, "என்ன‌ கொடுமைடா இது? கேட்காம‌ இருந்தா தான் த‌ப்பு? நான் கேட்டேன். கேட்டும் திட்டும் வாங்குறேனே?" அப்ப‌டின்னு ஃபீல் ப‌ண்ணுவீர்க‌ள். ம‌ற‌ந்தும் வாயை திற‌ந்து ஆர்கியூ ப‌ண்ணாதீர்க‌ள். அது உங்க‌ள் உட‌ல்ந‌ல‌த்துக்கும், ப‌ர்ஸ்ந‌ல‌த்துக்கும் ந‌ல்ல‌து. இல்லையென்றால் ச‌ண்டை பெரிதாகி மோக்காவில் 75 ரூபாய்க்கு ஐஸ் காஃபி வாங்கி கொடுத்து க‌ன்வின்ஸ் ப‌ண்ண‌ வேண்டி இருக்கும்.

பாஸ், உங்க‌ளுக்கு ஒரு அட்வைஸ். உங்க‌ ஆளுட‌ன் ரெகுல‌ரா ப‌ட‌த்துக்கு போறீங்க‌ன்னா, ஒவ்வொரு தியேட்ட‌ர்ல‌யும் என்ன‌ ஸ்பெஷ‌ல், அது உங்க‌ ஆளுக்கு பிடிக்குதா, அப்ப‌டி இப்ப‌டின்னு மொக்க‌யான‌ டேட்டாவை எல்லாம் க‌லெக்ட் ப‌ண்ணி டேட்டாபேஸ்ல‌ ஸ்டோர் ப‌ண்ணி வ‌ச்சிக்கோங்க‌. ஆனா "த‌னியாவோ, ப‌ச‌ங்க‌ளோடோ போனால் 4 ரூபாய்க்கு கிங்க்ஸோடு முடிஞ்சிருக்கும்" டேட்டாபேஸ் கிரியேட் பண்ணும்போது இந்த‌ மாதிரியான‌ தாட்ஸ் வ‌ராம‌ல் பார்த்துக் கொள்ளுங்க‌ள்.

முழிச்சிக்கோ, ஃபிக‌ர‌ க‌ரெக்டா மெயின்டெயின் ப‌ண்ணி பொழ‌ச்சிக்கோ!

எச்சரிக்கை: ஒரு கேள்வியே பெரிய பதிவாக‌ போன‌தால், இதே போல் ப‌திவுக‌ள் எதிர்கால‌த்தில் தொட‌ர்ந்து வ‌ரும் என்று அனைவ‌ருக்கும் அறிவுறுத்த‌ப்ப‌டுகிற‌து.

**********************

ஒவ்வொரு ம‌னுஷ‌னுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்!

தினேஷும், கீர்த்தனாவும் சிறந்த(means டீசன்டான) காதலர்கள், 2007 டிசம்பரில் இருந்து. அதற்கு முன்னால் இருந்தே ஒரு வித நேசம், பாசம் இருவரிடமும். பையன் ரொம்ப ரொம்ப ஜாலி டைப். அவள், கொஞ்சம் எமோஷனல் அண்ட் சீரியஸ். அதை காதல் என்று அப்போது தான்(எப்போது தான், அதான் 2007 டிசம்பரில் இருந்து) இருவரும் உணர்ந்த்து, தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். தினேஷ் ஒரு ஐ.டி கம்பெனியிலும் கீர்த்தனா வேறொரு ஐ.டி. கம்பெனியிலும் தீவிரமாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எந்தவித மனகசப்பும், சண்டையும் இல்லாமல் பெர்ஃபெக்ட் அன்டர்ஸ்டேன்டிங்கில் கபாலீஸ்வரர் கோவில், பெசன்ட் நகர் பீச், சத்யம் சினிமாஸ், லேட் நைட் சாட்டிங்க்ஸ் என்று ஸ்மூத்தாக ஓடிக் கொண்டிருந்த காதல் வாழ்க்கையில், தினேஷுக்கு கொஞ்ச நாளாக ஃபீலிங். ஒவ்வொரு ம‌னுஷ‌னுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்.

கீர்த்தனா, ஒழுங்காக கால் பண்ணுவதில்லை; ஈவினிங் பார்க்க வரவிடாமல் ஆஃபிஸில் ஓவர் பிஸி; எப்போது பார்த்தாலும் டார்கெட், டெலிவரி, அப்ரைசல் என்று புலம்பல்கள். இதெல்லாம் அவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. 2000 ரூபாய் தண்டம் ஆனாலும் பராவயில்லை என்று,அவளுக்கு பிடித்த ஷாப்பிங்க்கிற்கு அழைத்தாலும் வராமல்,வீக் எண்டிலும் ஆஃபிஸ் போய்க் கொண்டிருக்கிறாள். ரொம்ப ஃபார்மலாக லஞ்ச் பிரேக்கிலும், டீ டைமிலும் கால் பண்ணி, கொஞ்ச நேரம் பேசி கட் பண்ணிவிட்டாள். இவனுக்கு எரிச்சலாக இருக்கும். கடைசியாக, "நான் கடவுள்" பார்த்தது. ஒரு மாதம் ஓடிவிட்டது. சத்யமில் "VALKRIE" படத்துக்கு கூப்பிட்டாலும், "Project in RED" என்று பசி, தூக்கம், காதல் இல்லாமல் ஆஃபிஸே கதி என்று ஆகிவிட்டாள்.

இவள் தேற மாட்டாள் என்றும் ஒன்றுக்கும் உதவாத ரூம் மேட்ஸுடன் சேர்ந்து சத்யம், செகண்ட் ஷோவுக்கு டிக்கெட் புக் பண்ணிவிட்டான். படமும் பார்த்துவிட்டான்.படம் முடிந்து 12.30க்கு வெளியே வந்து டூவீலரில் அப்பிராணி நண்பனை பில்லியனில் ஏற்றிக் கொண்டு விர்ரென்று கெளம்பி போய்க் கொண்டிருந்தான்.

யாருமே இல்லாத மவுண்ட் ரோடில், ஜில்லென்று முகத்தில் அடிக்கும் குளிர் காற்றை ரசித்துக் கொண்டே ஓட்டினான். ஹெல்மெட்டை கழட்டிக் கொண்டு ஓட்டலாமா? என்று ஒரு செகண்ட் யோசித்தான். இல்லை, வேணாம் என்று முடிவு பண்ணிவிட்டு, மூன்றிலிருந்து நான்காவது கியருக்கு மாற்றி 75Km ல் விரட்டி கொண்டிருந்தான்.பின்னால் உட்கார்ந்தவன்,எதையும் கண்டுகொள்ளாமல் அவன் கேர்ள் ஃப்ரெண்டுக்கு குட் நைட் SMS அனுப்பிக் கொண்டு, மொபைல் ஃபோன் பார்த்து சிரித்துக் கொண்டு வந்தான்.

சைதாப்பேட்டை ப‌ஸ் ஸ்டாண்ட் ஓர‌த்தில், போய்க் கொண்டிருந்த கால் டாக்ஸி நிறுத்தி விட்டான். அவ‌ன் பின்னால், அதாவ‌து தினேஷுக்கு 200 அடி முன்னால் போன‌ மாருதிகார‌ன் ரைட்டில் வ‌ளைத்து திருப்பி, அதே ஸ்பீடில் கெள‌ம்பி போய்விட்டான். தினேஷ் கொஞ்ச‌ம் முன்னால் போய் ரைட் ஒடிக்காம‌ல், 200 அடி முன்னாலேயே ரைட்டில் லைட்டாக‌ ஒடிக்க‌, பின்னாலே அதிவேக‌த்தில் வ‌ந்த‌ டாடா சுமோ லேசாக‌ த‌ட்டிவிட‌ இருவ‌ரும் பேலன்ஸ் தடுமாறி ந‌டுரோட்டில் த‌ரையை உர‌சி விழுந்தார்க‌ள். பின்னால் உட்கார்ந்த‌வ‌னின் காலை உர‌ச‌வில்லை, தினேஷ் காலையும் உர‌ச‌வில்லை. விதி யாரை விட்டது. ரைட் ஹேண்ட் பாரையும், ரிய‌ர் வியூ மிர்ர‌ரையும் ந‌ன்றாக இடித்து திருப்பிவிட்டான் சுமோகார‌ன். 200 அடி த‌ள்ளி நிறுத்தினான். இருவ‌ர் உயிருக்கும் எந்த‌ பிர‌ச்சினை என்று தெரிந்த‌தினால் தான் என்ன‌மோ, அவ‌ன் அடித்து தூள்கெள‌ப்பி கெள‌ம்பிவிட்டான். இருவ‌ருக்கும் வ‌ல‌து காலின் முட்டி ஏரியா முழுவ‌திலும், கால் க‌ட்டைவிர‌லின் முன்னாலும் ஏதோ குத்தி கிழிந்து ர‌த்த‌ம் கொட்டிய‌து. தினேஷுக்கு, கொஞ்ச‌ம் எக்ஸ்ட்ரா.. வ‌ல‌து கை பின்புற‌ம் முழுவ‌தும் உராய்ந்துவிட்ட‌து. வ‌ல‌து தோள்ப‌ட்டையில், ர‌த்த‌மே வ‌ராம‌ல் மினி இட்லி சைஸுக்கு வ‌ட்ட‌மாக‌ தோள் உராய்ந்து வெள்ளைத்த‌சை ப‌ல் இளித்த‌து. இவையெல்லாம் ஜீன், டீஷ‌ர்ட் கிழிந்து விழுந்த‌ அடிக‌ள்.

ஹெல்மேட் இருந்த‌தால் த‌லை த‌ப்பிய‌து தினேஷுக்கு. ஹெல்மேட் உர‌சியும் தாடை தோல் கிழிந்து இருந்த‌தை ம‌றுநாள் காலையில் தான் பார்த்தான். அவன் ந‌ண்ப‌ன், விழுந்த‌ அடியுட‌ன் அவ‌ன் கேர்ள் ஃபிரெண்டிட‌ம் அழுது புல‌ம்பிக் கொண்டிருந்தான். தினேஷ், அவன் காதலியை யோசித்து பார்த்தான். இப்போது தான் ஆஃபிஸில் இருந்து திரும்பி அய‌ர்ந்து தூங்கிக் கொண்டிருப்பாள்; டிஸ்ட‌ர்ப் ப‌ண்ண‌ தோன்ற‌வில்லை.

ஆஸ்பிட்ட‌ல் எதுவும் செல்லாம‌ல் நேராக‌ ரூம் வ‌ந்து விட்டன‌ர். தினேஷுக்கு வ‌லி தாங்க‌ முடியவில்லை. முட்டியில் தெறிக்கும் வ‌லி, உச்சி ம‌ண்டையில் சுத்திய‌ல் வைத்து அடித்த‌து போல் இருந்த‌து. த‌ம், த‌ண்ணி அடிக்க மாட்டேன் என்று கீர்த்துவுக்கு ப‌ண்ண ப்ராமிஸை முத‌ல் முறையாக‌ மீறி, த‌ம் அடிக்க‌ வேண்டும் என்று தோன்றிய‌து. த‌ம் அடிப்பவ‌ர்க‌ளை திருந்த‌விட‌க்கூடாது என்று க‌ங்க‌ண‌ம் கட்டிக் கொண்டு இருப்பார்க‌ள் போல பெட்டிக்கடைகாரர்கள், அவ‌ர்க‌ள் ம‌ன‌ம் ச‌ஞ்ச‌ல‌ப்ப‌டும் அந்த‌ க‌ண‌நேர‌த்தையும் வீண‌டிக்காமல் நைட் எந்நேரமும் 24Hrs கிங்ஸ் கிடைக்கும் கடையை திறந்து வைத்து இருக்கிறார்கள். அவ‌னுக்கு த‌ம் அடிக்கும் சென்சேஷ‌ன் வ‌ந்த‌ ரோட்டில் பார்வையை செலுத்தும்போது ஒரு க‌டை பாதி திற‌ந்து இருந்த‌து. ஹால்ஃப் பாக்கெட் கிங்ஸும், ஒரு ச்சில் வாட்ட‌ர் பாக்கெட்டும் வாங்கினான். ஹெல்மெட்டைக் க‌ழ‌ற்றி முக‌த்தைக் க‌ழுவினான்.

நைட் முழுவ‌தும் தூக்க‌ம் வ‌ர‌வில்லை. ஆனால் தூக்க‌மும், வ‌லியும் த‌லையையும், க‌ண்ணையும் மாறி மாறி அடித்த‌து. காலையில் முத‌ல்வேலையாக‌ ஹாஸ்பிட‌ல் போய் காய‌த்திற்கு டிர‌ஸ்ஸிங் ப‌ண்ணிவிட்டு, டி.டி இன்ஜெக்ச‌ன் போட்டுவிட்டு திரும்பினான், அவ‌ன் ந‌ண்ப‌னுட‌ன். ப‌த்து ம‌ணிவாக்கில், கீர்த்துவுக்கு ஃபோன் ப‌ண்ணி, நடந்த விஷயங்களை எடிட் பண்ணி "லேசான காயம்தான் டா.. Nothing to worry" என்று சொன்னான். அவ‌ள் ரொம்ப‌ டென்ஷ‌னாகி, "உன்னை யார் ப‌ட‌த்துக்கு போக‌ சொன்னா?" என்று கொஞ்ச‌ம் க‌த்திவிட்டு, "ரொம்ப‌ வ‌லிக்குதா.. நான் வேணா ஈவினிங் வ‌ந்து பாக்க‌ட்டுமா?" என்று ஃபீல் ப‌ண்ணி பேசினாள். எப்ப‌டியோ சொல்லி சமாளித்து, அவ‌ளை வ‌ர‌ வேண்டாம் என்று சொல்லிவிட்டான். ஆஃபிஸுக்கு வியாழ‌ன், வெள்ளி ம‌ட்ட‌ம்.

டாக்ட‌ர் கொடுத்த‌ டேப்ள‌ட்ஸ் எதுவும் வாங்க‌வில்லை. அதை எவ‌ன் சாப்பிடுவான் என்று வாங்க‌வில்லை. இருந்தாலும் வ‌லி பின்னியது. இத‌ற்கு ஒரே வ‌ழி, "Royal Challenge" தான் என்று முடிவு ப‌ண்ணி அந்த‌ காலுட‌ன் ம‌திய‌ம் மூன்றாவ‌து ஃப்ளோரில் இருந்து நொண்டி நொண்டி இற‌ங்கி, "அங்கே" போய் வாங்கிக் கொண்டு த‌ல‌ப்பாக்க‌ட்டு லெக்பீஸ் பிரியாணியும், இதர பொருட்களையும் வாங்கி மாடிப்ப‌டிக‌ள் ஏறினான். கீர்த்துவை காத‌லிப்ப‌த‌ற்கு முன், தினேஷுக்கு இது தான் ஃபேவ‌ரிட் பிராண்ட். அடித்து முடித்த‌வுட‌ன் தொண்டை முழுவ‌தும் இனிக்கும்.வாமிட் வ‌ராது என்ப‌து அவ‌ன் அசைக்க‌முடியாத‌ ந‌ம்பிக்கை.

இர‌ண்டு ர‌வுண்ட் முடிந்த‌வுட‌ன், ஹீரோவுக்கு ஒரே ஃபீலிங். "வ‌ர‌ வ‌ர‌ கீர்த்துவுக்கு என்மேல‌ கொஞ்ச‌ம் கூட‌ ல‌வ் இல்லை. என்னை க‌ண்டுக்கிற‌தே இல்லை. நான் அவள வேலைய விட்டு நிக்க சொல்ல போறேன் மச்சி. அவ இந்த வேலையால தான் என்ன இக்னோர் பண்றா.. உனக்கு தெரியுமா.. அவ‌ என‌க்கு டார்லிங், பேபின்னு SMS அனுப்பி ப‌ல‌ மாச‌ங்க‌ள் ஆச்சி மச்சி. இது தான் ம‌ச்சி அவ‌ என‌க்கு அப்படி அனுப்பின‌ க‌டைசியா SMS" என்று பாஸ்வேர்டு லாக் போட்ட‌ அவ‌ன் மொபைலை அவ‌ன் ஆக்சிடென்ட் ஃபிரெண்டிற்கு காட்டினான். அவ‌ன் அடுத்த‌ SMSஐ இன்பாக்ஸில் நோண்டிக் கொண்டிருக்கும்போது கீர்த்து கால் ப‌ண்ணினாள்.குப்பென்று விய‌ர்த்து,உஃப் உஃப்பென்று ஊதிவிட்டு, "சொல்லுடா" என்றான் தூங்க கலக்கக் குரலில். "ரொம்ப‌ க‌ஷ்ட‌மா இருக்குமா. நான் ஈவினிங் வ‌ர்றேனே..."என்று கெஞ்சி இழுத்தாள். "கிழிஞ்ச‌து கிருஷ்ண‌கிரி, இவ‌ வ‌ந்தா மொத்த‌மும் போச்சி, தண்ணி அடிச்சேன்னு மவனே தெரிஞ்சது, ஏற்கெனவே டொக்கு விழுந்த கால்ல ஹீல்ஸ் செருப்பால மிதிப்பா" என்று ம‌ன‌சாட்சி,சுடுகாட்டு முனி ரேஞ்சில் ப‌ய‌முறுத்த‌, ரொம்ப‌ தெளிவா "இல்லை ஹ‌னீ, ந‌த்திங். i'm just feeling tired and pain. If i have comfortable sleep, i will be alright then!" என்று பீட்ட‌ருட‌ன் தெளிவாக‌ பேச‌வும் "இவ‌ன் தூங்க‌ட்டும்" என்று பெரிய‌ ம‌ன‌து ப‌ண்ணி கீர்த்தி ஃபோனை வைத்துவிட்டாள்.

போதையெல்லாம் இற‌ங்க‌, ந‌ண்ப‌னை டெர்ர‌ராக‌ பார்த்து மிச்ச‌மிருந்த அவன் சரக்கையும் மொத்தமாக சேர்த்து ஒரே க‌ல்ப்பாக‌ அடித்து முடித்தான். இர‌ண்டு நாள் ஆர்.சியுட‌ன் கூத்தும் போதையுமாக‌ என்ஜாய் ப‌ண்ணினான். காய‌மும் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ ஆறிய‌து. வ‌ண்டியை ச‌ரி ப‌ண்ணிவிட்டு, வெள்ளிக்கிழ‌மை நைட் அவ‌ளை பார்க்க‌ சென்றான். அவ‌ளுக்காக‌ வெயிட் ப‌ண்ணிக் கொண்டிருந்தான். கீர்த்தி வ‌ந்தாள். அவ‌ன் கையையும், காலில் இருந்த‌ க‌ட்டையும் பார்த்த‌வுட‌ன்,க‌ண்ணீர் விட்டு விசும்ப‌ ஆர‌ம்பித்துவிட்டாள். "என்னமா, இப்படி அடிபட்டிருக்கு.. ஒண்ணுமே இல்லைன்னு சொன்ன.. இதோட நீ எதுக்கு வண்டி ஓட்டி வந்த.. ரெஸ்ட் எடுக்க வேண்டியது தான.." என்று அழுதுகொண்டே சொன்னாள். தினேஷுக்கு ஒரு நிமிட‌ம் எப்ப‌டி ரியாக்ட் ப‌ண்ணுவ‌து என்றே தெரிய‌வில்லை. முத‌ல்முறையாக‌ கீர்த்து அழுகிறாள். என‌க்காக‌ அழுகிறாள்.

"த‌ம்மும், த‌ண்ணியுமாக‌ போன‌ ஆக்சிடென்ட், இவ‌ளுக்கு க‌ண்ணீர் விடும் அள‌வுக்கு சோக‌மான நிக‌ழ்வாக‌ உள்ளதே.. இது தான் true love" என்று ஆன‌ந்த அதிர்ச்சியில் கீர்த்தியை இழுத்து த‌லையை உச்சி முக‌ர்ந்தான். கீர்த்தி, அவ‌ன் ஆதரவாக தோளில் சாய்ந்தாள். "இனிமேல் நீ வ‌ண்டி ஓட்ட‌க்கூடாது" என்றாள் க‌ண்டிப்பான‌ குர‌லில். அவ‌ன் ஆன‌ந்த‌த்தில் த‌லையை சரியென்று அசைத்தான்.
ஒவ்வொரு ம‌னுஷ‌னுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்.

டிஸ்கி: பைக், ஆக்சிடென்ட், ஆர்.சி என‌ கீர்த்தி ச‌ம்ப‌ந்த‌ப்ப‌டாத‌ அனைத்தும், என‌க்கும் நேர்ந்த‌வையே. :( கீர்த்தி எபிசோட், சும்மா ஜாலிக்கு. என‌க்கு ஆக்சிடென்ட் ஆச்சுன்னு போஸ்ட் பண்ணா, யார் படிப்பீங்க‌??? அதுக்காக‌ ஏன்டா, காத‌லை வ‌ச்சி வெத்து சீன் கிரியேட் ப‌ண்ணி காதல் ப‌ட‌ம் போடுறே? அப்ப‌டீன்னு கேட்க‌ற‌வ‌ங்க‌ளுக்கு ஒரு கேள்வி.

ஹிந்துஸ்தான் பெட்ரோலிய‌ம்ல‌, ஹிந்துக்க‌ளுக்கு ம‌ட்டும்தான் பெட்ரோல் போடுறாங்க‌ளா? அக்ப‌ர் க‌சாப்பு க‌டைல‌, முஸ்லீம்க‌ளுக்கு ம‌ட்டும்தான் க‌றி கொடுக்குறாங்க‌ளா? இல்லைலே.. அதே மாதிரி.. காத‌ல‌ர்க‌ள் ம‌ட்டும்தான் காத‌ல் கதை, கவிதைன்னு போஸ்ட் போட‌ணுமா? நாங்க‌ போட‌க் கூடாதா?

டிஸ்கிக்கு டிஸ்கி: அந்த‌ "ஹிந்துஸ்தான்...." ப‌ஞ்ச் டைய‌லாக் த‌ற்போது வெற்றிந‌டைபோடும் ப‌ட‌த்தில் இருந்து சுட்ட‌து. அந்த‌ ப‌ட‌த்தின் பெய‌ரை ச‌ரியாக‌ சொல்ப‌வ‌ர்க‌ளுக்கு, ம‌திய‌ம் உச்சி வெயிலில் மேட்னி ஷோவுக்கான(பரங்கிமலை ஜோதி)டிக்கெட் வ‌ழ‌ங்க‌ப்ப‌டும்.. ***Conditions Apply

**********************

காதல் செத்து ஒழியட்டும்

காதலின் பரம‌திருப்தி ஆணுக்கும்
பெண்ணுக்கும் சமம் எனும்போது
தோல்வி மட்டும் ஆணுக்கு
ச‌பிக்க‌ப்ப‌ட்ட‌து ஏன்?
க‌ட‌வுளே உன‌க்கு தெரியுமா?
என‌க்கும் தெரிய‌வில்லை,
ஒன்று ம‌ட்டும் தெரியும்..

யாருமற்ற தனிமையில் ஒன்றுக்கும்
உதவாத இர‌ண்டு நாள் அழுகை,
விசும்ப‌ல்கள், ப‌ட்டினி
எவ‌னோ ஒருவ‌னுட‌ன் 1000 பேர்
சூழ‌ க‌ல்யாண‌ம், முத‌லிர‌வு,
ச‌ந்தோஷ‌ வாழ்க்கையில் ஒரு குழ‌ந்தை,
ஒருவேளை க‌ண‌வ‌ன் ஒரு அம்மாஞ்சி
எனில் சந்தோஷம் குழ‌ந்தையின்
பெய‌ர் காத‌ல‌ன்!
பேர் தெரியாத‌ திருவிழாவிலோ,
பேருந்திலோ பார்த்துவிட்டால் பேசும்
துணிச்சல் எந்த‌ புதுமைபெண்ணுக்கும்
இல்லை ஆனால் மீண்டும்
யாருமற்ற தனிமையில் ஒன்றுக்கும்
உதவாத இர‌ண்டு நாள் அழுகை,
விசும்ப‌ல்கள், ப‌ட்டினி
பெண்ணே, உன் காதல் தோல்வி
இப்படித்தானே போகிறது?

ஆணின் வலி தெரியுமா உனக்கு?
சொல்ல வார்த்தைகளை கண்களை
மூடி தேடிக் கொண்டிருக்கிறேன்
ஒன்றும் புதிதல்ல, நீ செய்வதைத்
தான் நானும் செய்கிறேன்,
கொஞ்சம் புதுமையாக
போதையுடனும், புகையுடனும்
ப‌ல வருடஙகள்
ஆனால் ஒரு வித்தியாசம்

நீ புது வாழ்க்கையில்
காதலுக்கு முற்றுபுள்ளி இட்டு
வருந்திக் கொண்டு வாழ்கிறாய்!

நான் வருந்திக் கொண்டு
நீ இட்ட முற்றுப்புள்ளி அருகே
ஒரு புள்ளி வைத்துத் தொடர‌
விழிகளால் காத்துக் கொண்டு
வாசலில் காத்திருக்கிறேன்
என்றாவது வருவாய் என‌
(மூட)நம்பிக்கையுடன்..

எனக்கு நிமிடங்கள் வருடங்களாகவும்,
உனக்கு வருடங்கள் நிமிடங்களாக‌
போனாலும் பயனில்லை
நீ வரவே இல்லை
என் நம்பிக்கையும் நம் காதலுடன்
இத்துபோய் துருப்பிடித்துக் கொண்டிருப்பது
மட்டுமே மிச்சம் இல்லை எச்சம்..

இதோ என் வாழ்க்கையை நான்
ஆரம்பிக்க எத்தனிக்கிறேன்
உன்னை குழந்தையுடன்
பேர் தெரியாத‌ திருவிழாவிலோ,
பேருந்திலோ கண்ட கணத்தில் இருந்து

இது பழிக்கு பழியா?
தெரியவில்லை, பலவீனபடுத்தும்
காதல் எனக்கு தேவையில்லை
துச்சமாக தூக்கியெறிந்த‌
காதல் தேவதை இல்லை பிசாசு
(வேண்டாம், இல்லை என்று ஆனபின்
அவளை பற்றி சொல்ல
என்ன உரிமை?)
முடிவாக ஒரு பெண், எனக்கு
தேவையில்லை!

அவள் புதைத்த காதலின்
சமாதியில் நானும் பூக்களைத்
தூவுகிறேன்!
காதல் செத்து ஒழியட்டும்

தோல்வி மட்டும் ஆணுக்கு
இல்லை காதலர்களுக்கு
ச‌பிக்க‌ப்ப‌ட்ட‌து ஏன்?
க‌ட‌வுளே உன‌க்கு தெரியுமா?
ஒருவேளை
இதுதான் முடிவு என்ற தெரிந்ததினால்
தான் பதில்கூறாமல் மௌனமாக‌
இருக்கிறானோ கடவுள்?

********************

எப்போ க‌ல்யாண‌ம்?


காதலின் குறுகுறுப்பை ஒருமாதிரியாக‌
உன்னிட‌ம் வெளிப்ப‌டுத்திய‌போதும்,

அதை சின்ன சின்ன‌ த‌லைய‌சைத்த‌லில்
நீ ஏற்றுக் கொண்ட‌போதும்,

பேருந்தில் நில‌வு வ‌ழித்துணையில் என்
தோளில் ஆழ்ந்து தூங்கிய‌போதும்,

நெருக்கிய‌டித்த‌ பேருந்தில் உன்பின்னால் நின்று
ப‌ய‌ண‌ம் செய்த நாட்களின் கூந்த‌ல்வாச‌மும்,

சில்லென்று காற்றுவீசும் க‌ட‌ற்க‌ரையில்
உன் நுனிவிரல்கள் கோர்த்து ந‌ட‌க்கும்போதும்,

துணிக்க‌டையில் புத்தாடையை தோளில் மாட்டி
எப்ப‌டி என புருவத்தை உயர்த்தி கேட்ட‌போதும்,

வேக‌த்த‌டையில் வ‌ண்டி வேக‌த்தை குறைத்து நீ
என் இத‌ய‌த்துடிப்பின் வேக‌த்தை பதற வைத்த‌ போதும்,

இவைதான் நீ என்னிடம் வெட்கப்பட்ட தருணங்கள்
அவைதான் நீ பெண் என்ற‌ நினைவை
என்னுள் நிறுத்தி வைக்கும் ந‌ங்கூர‌ங்க‌ள்.
அவைதவிர நீ என் சுரிதார் அணிந்த தோழன்!
இதுவும் போரடிக்கிறது என்று நாம் அலுக்கும்
நிமிடங்களில் நீ என்னிடம் கேட்கும் ஒரு
கேள்வி, அதேபோல் நானும் உன்னிடம்
"எப்போ க‌ல்யாண‌ம்? "
காத்துக் கொண்டிருக்கிறேன் என்னை
உன்னில் பாதியாக்கும் நொடிக்காக!

***************

கொஞ்சம் ஹாட்!!

இனிமேல் எனக்கு காய்ச்ச‌ல் என்றால்
க‌ழுத்தில் கைவைத்து பார்க்காதே?
சூட்டில் கொதித்துக் கொண்டிருக்கும்
உட‌ம்பு இன்னும் கொதித்து
உருகிவிட‌ப் போகிற‌து?

***************

டிஸ்கி: இனிமேல் எந்த கவிதைக்கும் டிஸ்கி போட‌ மாட்டேன். நான் என்ன‌ சொன்னாலும், இந்த‌ உல‌க‌ம் ந‌ம்ப‌ ம‌றுக்கிற‌து. :(

***************

காத‌ல‌ன் காத‌லியிட‌ம் கேட்க‌ விரும்பும் ப‌த்து கேள்விக‌ள்!


இந்த‌ ப‌திவு எழுதுவ‌த‌ற்கு கார‌ண‌மாக‌ இருந்த‌ ந‌ண்ப‌ர் ப‌ரிச‌லுக்கு ந‌ன்றி!

1. நைட் 12 மணிக்கு தூக்கம் கண்ணை சுழற்றி சுழற்றி அடிக்கும்போதும், நீங்க சொல்லும் மொக்கை கதையையும்(ஆஃபிஸ்ல காஃபி மெஷின் வேலை செய்யல வரைக்கும்) ஆச்சரியமா கேட்கணும்னு எதிர்பார்க்குறீங்களே, என்ன நியாயம்?

2. ஏர்செல்ல ஒவ்வொரு 32 நிமிஷத்துக்கும் ஆட்டோமேடிகா கால் கட்டாகும். அதுக்கும் நான் தான் உன் மொக்கை தாங்கமா கட் பண்ணிட்டேன்னு சொல்லி சண்ட போடுறீயே. கட் பண்றதா இருந்த நான் எதுக்கு கால் பண்ணியிருப்பேன்னு என்னைக்காவது யோசிச்சி இருக்கியா? அப்படியே நான் கட் பண்றதா நீ நெனச்சாலும், தினமுமா கட் பண்ணுவேன்?

3. போன தடவை தான் உன் பர்த்டேக்கு நான் வாங்கி கொடுத்தது பிடிக்கலைன்னு சொன்னியேன்னு, உன்னையவே இந்த தடவை போத்தீஸ்க்கு கூப்பிட்டு போயி 1000 ரூபாய் சுரிதார் ஏரியாவ‌ காட்டுனா, ரொம்ப கரெக்ட்டா 6000 ரூபாய்க்கு சிந்தெடிக் வொர்க்ஸ் உள்ளதா பாத்து செலக்ட் பண்றீயே, உனக்கெல்லாம் மனசாட்சியே கெடையாதா?

4. டூவீலர் பின்னால உட்கார்ந்திட்டு, உன்னால வாய மூடிக்கிட்டு வரவே முடியாதா? வேகமா போனா ஸ்லோவா போங்கிறது.. ஸ்லோவா போனா ஃபாஸ்ட்டா போன்னு சொல்றது. நான் என்ன தான் பண்றது? உன்னை வ‌ண்டில‌ கூப்பிட்டு போன‌து தான் என் த‌ப்பா?

5. பொண்ணுங்க க்ரூப்பா போனா கையேந்தி பவன்ல, இல்ல சிம்பிளா ஒரு மெஸ்ஸிலோ சாப்பிட்டு முடிச்சுடுவீங்க‌. ஆனா என் கூட வரும்போதும் மட்டும் தான் காரைக்குடியும், அஞ்சப்பரும் கண்ணுல தெரியுமா? இல்ல என்கூட போய்தான் அந்த மாதிரி இடத்தில் எல்லாம் சாப்பிடுறீயா?

6. கடைசி 5 ஓவர், 20-20 மேட்ச் பார்க்கும்போது மட்டும், கரெக்ட்டா கால் பண்ணி "ஃபோன் லைன்ன‌ கட் பண்ணா, இனிமே நான் உன்கூட பேசவே மாட்டேன்"னு பிளாக்மெயில் பண்றீயே, அதுல உனக்கு அப்படி என்ன சந்தோஷம்?

7. சரி நீ 10 மணிக்கெல்லாம் தூங்கிடுவேன்னு, டாஸ்மாக்ல இருந்து பதுக்கி வச்ச சரக்க, நிதானமா 11 மணிக்கு மேல ஆரம்பிச்சி ரெண்டாவது ரவுண்ட் ஓடிட்டு இருக்கும்போது திடீர்ன்னு கால் பண்ணி முக்கால் மணிநேரம் பேசி, அடிச்ச சரக்கெல்லாம் இறக்கிடுறீயே... நான் டாஸ்மாக்ல சரக்கு வாங்கினத ஒளிஞ்சி இருந்து பார்த்தீயா?

8. நிம்ம‌தியா தூங்குற‌தே வீக் எண்ட் தான். அன்னைக்கும் காலைல 6 ம‌ணிக்கெல்லாம் எழுப்பி கபாலீஸ்வ‌ர‌ர் கோவில் கூப்பிட்டு போய் பிரகாரத்தை மூணு சுத்து சுத்த விடுறீயே, அது எப்ப‌டி வீக் எண்ட்ல ம‌ட்டும் உன‌க்கு க‌ட‌வுள் ப‌க்தி கூடிடுது?

9. ஆஃபிஸ் ஆணி அதிக‌ம்ன்னு கால் ப‌ண்ணாம இருக்கும்போது, "நீ என்னை ம‌ற‌ந்துட்டா, I Miss you da"ன்னு நைட் அழுது ஆர்ப்பாட்ட‌ம் ப‌ண்ணுற‌ நீ, ஊருக்கு போனா ம‌ட்டும் எப்படி நாள்க‌ண‌க்குல என்கூட பேசாம‌ இருக்க‌ முடியுது? சென்னையில‌ இருந்தா ம‌ட்டும் தான் என்னை மிஸ் ப‌ண்ணுவீயா?

10. எல்லாத்துக்கும் மேல‌, ஒவ்வொரு நாளும் உன்னை பாக்கும்போது "உன் டிரெஸ் நல்லா இருக்கு"ன்னு சொல்ல‌ணும்னு எதிர்பாக்குற. சரி.. ஓ.கே. வேலிட். ஆனா ரோட்டுல‌ போற வ‌ர்ற அட்டகாசமான ஸ்ட்ரக்சருடன் வரும் ம‌ல்லு ஃபிக‌ரையும், கொல்ட்டி ஃபிக‌ரையும் சைட் அடிக்க‌க் கூடாதுன்னு, கேவ‌ல‌மா திட்டுறீயே? என்ன‌ கொடுமை ********* இது டிய‌ர்?


சாய்ஸில் விட்ட‌ கேள்விக‌ள்!

1. காரைக்குடியில‌யும், அஞ்ச‌ப்ப‌ர்ல‌யும் சாப்பிடும்போதோ இல்லை சத்யம் டிக்கெட் புக்கிங்கிற்கோ என்னைக்காவ‌து பில் பே ப‌ண்ணி இருக்கியா? ஆனா கிரெடிட் கார்டு ம‌ட்டும் வ‌ச்சிருக்க‌.. அதை வ‌ச்சி என்ன‌ சாமி கும்பிடுறீயா?

2. நைட், "I love you honey! Good night dear!"ன்னு SMS அனுப்பாம‌ல் தூங்கி விட்டால், என் ல‌வ் மீதே சந்தேக‌ம் வ‌ருதே ஏன்? இர‌ண்டு மூன்று நாட்க‌ள் பேசாம‌ல் இருந்து கொல்லுவ‌து ஏன்? அதே கோப‌ம் "BlackForest" ஐஸ்கிரீமில் க‌ன்வின்ஸ் ஆவ‌து எப்ப‌டி?

டிஸ்கி: மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்கிறேன். நான் யாரையும் ல‌வ் ப‌ண்ண‌வில்லை. க‌ற்ப‌னையுட‌ன் க‌ல‌ந்து க‌ட்டி அடித்த‌ ப‌திவு இது.

********************

ஏன்டா, இப்படி பசங்க மானத்த வாங்குறே?

சரவணனும், ருக்குவும் இன்ஞ்சினிய‌ரிங் காலேஜில் இருந்து ஒன்றாக படித்தவர்கள். இப்போது பெரிய சாஃப்ட்வேர் நிறுவனத்தில் சென்னையில் ஆளுக்கு ஒரு மூலையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ரொம்ப ரொம்ப திக் ஃப்ரெண்ட்ஸ். வாரத்தில் குறைந்தது ஐந்து தடவையாவது பார்த்துக் கொள்வார்கள். காலேஜில் இருந்தே ஏகப்பட்ட வதந்திகள். பார்ப்பதற்கும் இரண்டு பேருக்கும் இடையே அட்டகாசமான கெமிஸ்ட்ரி பொருந்தி இருக்கும்.

கல்லூரி காலத்தில் இருந்தே குறைந்தது 50 பேராவது ரெண்டு பேரிடம் பெர்சனலாக, "நீங்க லவ் பண்றீங்களா?" என்ற கேள்வியை கேட்டு இருப்பார்கள். சொல்லி வைத்தது போல, "ஏன் ஒரு பையனும் பொண்ணும் நல்ல ஃப்ரெண்ட்ஸிப்போடு பழகக்கூடாதா? நாங்க நல்ல ஃப்ரெண்ட்ஸ்" என்று பதில் சொல்லி இருப்பார்கள். இவர்கள் ஏன், டிபார்மெண்ட் HOD கூட ஒரு தடவை கேட்டுவிட்டார். இத்தனை பேர் கேட்டு இருந்தாலும், இவர்கள் எந்த சஞ்சலமும் இல்லாமல் பழகிக் கொண்டிருந்தார்கள். கேட்டவர்களும் ஒரு நிமிடம் "நாம் தான் தப்பாக நினைத்துவிட்டோமோ?" என்று ஏதாவது ஒரு தருணத்தில் யோசித்து இருப்பார்கள்.

அவளுடைய ஹாஸ்டல், நுங்கம்பாக்கத்தில். இவன் ரூம், அடையாறில். ஒழுங்காக தூங்கி, சாப்பிட்டு, ஆஃபிஸில் வேலை பார்க்கிறார்களோ இல்லையோ, எப்படியாவது அடித்து பிடித்து பார்த்து விடுவார்கள். தினமும் காலையில் இவள் ஃபோன் கால் அவனை எழுப்பிவிடும். அவன் அசந்து தூங்கும் சமயங்களில் இவளுடைய ஃபோன் கால்ஸ். ரெண்டு பேரும் சேர்ந்து பார்க்காத படம் இல்லை. தி.நகர், மெரீனா பீச், பிரார்த்தனா டிரைவ் இன், பொன்னுசாமி ஹோட்டல், கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் என எங்கிலும் ஜோடியாகத் தான் பைக்கில் சுற்றுவார்கள். இவளை(னை)யோ, எங்கேயாவது தனியாக பார்த்தால், கண்டிப்பாக கண்ணை மூடிக் கொண்டு சொல்லலாம், அவள்(ன்) சொந்த ஊருக்கு போய் இருக்கிறாள்(ன்) என்று.

சரவணன், "ஹேய் ருக்கு, இன்னிக்கு சிவா மனசுல சக்தி ரிலீஸ். அபிராமியில் டிக்கெட் போடட்டுமா?" என்று கேட்டான். "ஹலோ சார், வெள்ளிக்கிழமை நைட் உங்க அருமை ஃப்ரெண்ட் முத்துவேலோடு சேர்ந்து பார்ட்டிக்கு போகலியா?" என்றாள்.

"பாத்தியா, கிண்டல் பண்றேளே? நான் தான் இப்ப அதிகமா தண்ணி அடிக்கிறது இல்லைல. மறுபடியும் மறுபடியும் ஏன் அதை சொல்லிக் காட்டுற?"

"அப்படியா, இப்பவும் தம் அடிக்கிறத நீ குறைக்காம தான் திரியுற? எத்தனை வருஷமா சொல்லிக்கிட்டு இருக்கேன். திருந்தவே மாட்ட. சரி டிக்கெட் போடு. எனக்கு இப்ப க்ளையண்ட் கால். பை"

காலேஜ் நாட்களில் இருந்து ருக்கு, சரவணனை திட்டுவது என்றால், அது இந்த காரணத்திற்கு மட்டும் தான். கொஞ்ச நாட்களாக, சரவணனுக்கு ருக்கு மேல் ஏதோ ஒன்று சொல்ல தெரியாத ஃபீலிங். போன தடவை, பஸ்ஸில் ஒன்றாக ஊருக்கு போன தருணத்தில் அவள் இவன் தோளில் சாய்ந்து தூங்கியதில் இருந்து தான், சரவணன் மனதில் அரக்கன் புகுந்து விட்டான். அவளிடம் எப்படி சொல்வது என்று சத்தியமாக தெரியவில்லை. ஆனாலும் சீக்கிரம் சொல்லி விடுவது என தீர்மானத்துடன் இருந்தான்.

ஒரு சனிக்கிழமை அதிகாலையில், மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு, பிரகாரத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது சொல்லிவிடலாம் என்று சரவணன் முடிவு பண்ணினான். ருக்கு ஆரம்பித்தாள். "சரா, இன்னிக்கி நைட் நான் ஊருக்கு போறேன். என்னை பொண்ணு பார்க்க வர்றாங்க. சிங்கப்பூர் மாப்பிள்ளையாம். ஈவ்னிங் ஹாஸ்டல் வந்து என்னை கூப்பிட்டு போறீயா?"

மனதைப் பிழியும் சோகத்துடன் ஒரு நிமிடம் என்ன சொல்வது என்று தெரியாமல், "சரி. என்ன திடீர்னு? என்கிட்ட சொல்லவே இல்ல."

"எனக்கே நேத்து நைட் தான் தெரியும். சீக்கிரம் செட்டில் ஆகணும்ல. இவனை பார்த்து நாட் ஓ.கேன்னு சொல்லிட்டு, எனக்கு பிடிச்ச மாதிரி பையன் குவாலிட்டிஸ்ஸ அப்பாக்கிட்ட சொல்லிட்டு, நைட் டிரெயின் பிடிச்சு கிளம்ப வேண்டியது தான்!" என்று தெளிவாக உடைத்து சிதறும் கோவில் தேங்காய் போல உடைத்தாள்.

இவ‌ளிட‌ம் சொல்லி புரிய‌ வைப்ப‌து, ரொம்ப‌ க‌ஷ்ட‌மான‌ விஷ‌ய‌ம் என்று ம‌ட்டும் ச‌ர‌வ‌ண‌ன் ம‌ண்டையில் உறைத்த‌து. ஏற்கெனவே குவாலிட்டிஸ் அது எதுன்னு பெரிசா பேசுறா? தம், தண்ணி, "மவனே, சரவணா நீ செத்த" என்று புலம்பிக் கொண்டான். எக்மோர் ஸ்டேஷனில் வெயிட் பண்ணிக் கொண்டிருந்தான். அவள் இறங்கியவுடன்,"என்ன‌ ஆச்சு?" என்றான். "நான் நென‌ச்ச‌ மாதிரி தான் ந‌ட‌ந்த‌து" என்றாள் க‌ண்ணை சிமிட்டியப‌டி. பின் அவ‌ளை ஹாஸ்ட‌லில் விடும்வ‌ரையில் அவ‌ன் ஒரு வார்த்தை கூட‌ பேசவில்லை. "ஈவினிங், பெச‌ன்ட் ந‌க‌ர் பீச் போக‌லாமா?" என்று கேட்டாள் ல‌ஞ்ச் பிரேக்கில். அவள் ரொம்ப கேஷுவலாக பீச் மணலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை ரசித்துக் கொண்டிருந்தாள். ரொம்ப‌ நேர‌ம் மௌன‌த்திற்கு பிறகு, "என்ன மாதிரி குவாலீட்டிஸ்னு உங்க அப்பாகிட்ட சொன்ன" என்று கேட்டான்.

"ம்ம்ம். நல்ல ஹைட்ல, மனசுக்கு பிடிச்ச மாதிரி, நான் பண்ணுற தப்புகளை ரசிக்கிற மாதிரி கியூட்டான‌ பையனா..." என்றாள். அவள் முடிக்கும்முன் பொறுமையில்லாமல் "இப்ப நான் சொல்றத கொஞ்சம் பொறுமையா கேளு. தப்புன்னு தெரியும். ஆனா என்னால தாங்கிக்க முடியல. நான் உன்ன லவ் பண்றேன் ருக்கு. ப்ளீஸ் என்னை இக்னோர் பண்ணாத" என்றான் கொஞ்சம் விட்டால் அழுதுவிடும் குரலில். ருக்கு,அவனை ஏற இறங்க ஒரு முறை பார்த்தாள். அடக்க முடியாத கோபத்துடன், "ஏன்டா, இப்படி பசங்க மானத்த வாங்குறே?. ஒரு பொண்ணு மனசுல என்ன நினைக்கிறான்னு கூட தெரியாத லூசா நீ. இதைப் பத்தியெல்லாம் பேசுற டைமா இது?

நான் எங்கப்பாகிட்ட பேசி சம்மதம் வாங்கிட்டு, கல்யாணத்துக்கு தேதியும் குறிச்சுட்டு வந்திட்டேன். ஆனா, ஹீரோ சார் இப்ப தான் ப்ரோப்பஸே பண்றார்." என்றாள். "அப்ப என்னை பத்தி ஒரு நிமிஷம் கூட நீ யோசிக்கலையா?" என்றான் ஹஸ்கி வாய்ஸில் சோகத்தை டன் டன்னாக டோஸ்ட் பண்ணி. "உன்னை வச்சிட்டு என்னடா பண்ணுறது. சரியான டியூப்லைட். நீ தான்டா மாப்பிள்ளை. உன்னை பத்தி தான்டா அப்பாகிட்ட பேசுனேன்." என்றாள் முதல் முறையாக சரவணனிடம் வெட்கத்துடன்..

ஒரு பஞ்ச்:: சம வயதில் உள்ள ஒரு பையனும் பொண்ணும் நல்ல ஃப்ரெண்ட்ஸா ரொம்ப நாள் இருக்கவே முடியாது. கண்டிப்பாக அது காதலில் முடியும்; இல்லையென்றால் ஃப்ரெண்ட்ஸிப் பிரேக் ஆகிவிடும்.

************************

Related Posts with Thumbnails