காதல் எனும் மன்மதன்!
அவள் வரும் முன்பு
அடுக்கி வைக்கப்பட்டு சீராக
அழகாக இருந்த அலமாரிகள்
வந்து சென்ற பின்பு
அங்கொன்றும் இங்கொன்றுமாக
சாய்ந்து நிமிர்ந்து
சரிந்து கிடக்கும் மது கோப்பைகளுடன்
முன்பும் பின்பும்
அதே ஆள்
அழகிய முள்தாடிகள் மட்டும்
அந்நியன்
செத்தவன் மீண்டும்
மண்ணில் எழுவதைப் போல்
பன்மடங்கு அபூர்வம்
ஒதுக்கிய காதலி
கரம் மீண்டும் பற்றி
கண்ணீரால் நனைக்கும்
காதல் வாழ்க்கை
*************************
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
ரொம்ப நல்லா இருக்கு புலம்பல். :)
என்னாச்சு கணேஷ். கவிஜைக்கு கூட்டம் வரவேயில்லை. இந்தக்கவிதையை மூட்டை கட்டிப்போட்டு கணேஷ்-சியாமளாவுக்கு போங்க :)
(எல்லாரும் கணேஷ்-சியாமளாவுக்கு என்ன ஆச்சோன்னு கவலைப்பட்டுக்கிட்டு இருக்காங்க. நீங்க கவிதையைல்லாம் போட்டீங்கன்னா யாரும் கண்டுக்கமாட்டாங்க.)
நன்றி சின்ன அம்மிணி!
ஃப்ரீயா விடுங்க மேடம். நாளைக்கு வருகிறாள் சியாமளா!
Post a Comment