அழுக்கு சகோதரி
*********************
போக்குவரத்து நெரிசலில்
எதிர் வாகன பெண்ணின்
மடியில் சிரிக்கும்
குட்டிகவுன் அழகியின்
பொக்கைவாய்க்கு
ஓரக்கண் சிமிட்டல்களும்
பறக்கும் முத்தமும்
பழிப்பு சிரிப்பும்
பரிசளிக்கும்போது
கண்ணாடியைத் தட்டி தட்டி
கவனம் கலைக்கிறாள்
அவளின் ஒன்றுவிட்ட
அழுக்கு சகோதரி
மாமனாரின் மகள்
*********************
நான் எப்போதும்
தூதுவிடும் சுரிதார் பெண்
ஒவ்வொரு முறையும்
கண்டுகொள்ளாமல் புறம்
ஒதுக்கிவிடும் பொழுதெல்லாம்
யோசிக்க வைக்கிறாள்
ஊரில் இருக்கும்
மாமன் மகனை
மனதில் வைத்திருக்கிறாளோ?
வேறு வழியில்லாமல்
எதிர்ப்படும்
ஒவ்வொரு பெண்ணின்
முகத்திலும் தேடுகின்றேன்
முகமறியா
மாமனாரின் மகளை
முத்தமிடத் தெரியுமா?
************************
வெட்கப்படத் தெரியுமா
என் கேள்விக்கு
வெட்கத்தில் சிவந்து கொண்டே
வெட்கத்தைப் பதிலாக
தரும் உன்னிடம்
ஈர உதடுகளை
ஈரப்படுத்திக் கொண்டு
கேட்கத் துடிக்கிறேன்
முத்தமிடத் தெரியுமா?
*********************************
முத்தமிடத் தெரியுமா?
Labels:
அய்யோ கவிதை,
கவிதை,
காதல்
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
//வெட்கத்தைப் பதிலாக
தரும் உன்னிடம்
ஈர உதடுகளை
ஈரப்படுத்திக் கொண்டு
கேட்கத் துடிக்கிறேன்
முத்தமிடத் தெரியுமா?//
Very Nice Wordings...........
அழுக்கு சகோதரி - யும் அழகாக இருக்கிறாள். :-)
அழுக்கு சகோதரி நெஞ்சை தொற்றுச்சு கணேஷ்....!
மாமனாரின் மகள் மற்றும் முத்தமிடத் தெரியுமா?
காதலும் குறும்பு தனமும் தூக்கலா இருக்கு....!
என் காதலி கொடுத்த
முதல் முத்தம்
ஓசை இல்லாது -ஆனால்
அதன் சப்தமோ இன்றும்
என் இதயத்தில் கேட்கிறது
very good
முதல் கவிதை முற்றிலும் வித்யாசமாய் இருந்தது. நல்ல கவிதை...
நன்றி Sangkavi!
Very Nice Wordings...........// :)
நன்றி ரோஸ்விக்!
அழுக்கு சகோதரி - யும் அழகாக இருக்கிறாள். :-)// :)
************
நன்றி லெமூரியன்.
அழுக்கு சகோதரி நெஞ்சை தொற்றுச்சு கணேஷ்....!// ரியலி :)
மாமனாரின் மகள் மற்றும் முத்தமிடத் தெரியுமா?
காதலும் குறும்பு தனமும் தூக்கலா இருக்கு....!//
வாலிப வயசு :)
************
நன்றீ ♠புதுவை சிவா♠
என் காதலி கொடுத்த
முதல் முத்தம்
ஓசை இல்லாது -ஆனால்
அதன் சப்தமோ இன்றும்
என் இதயத்தில் கேட்கிறது//
இது கூட நல்லா இருக்கே :)
************
நன்றி negamam!
நன்றி உமா!
முதல் கவிதை முற்றிலும் வித்யாசமாய் இருந்தது. நல்ல கவிதை...// :)
************
nice
Post a Comment