நாளொரு PizzaHut-டும் பொழுதொரு MaryBrown-னுமாக!

காதலிக்கும் பெண்களின் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு அர்த்தம் உண்டு என்ற நம்ம டாபிக்கில், இன்னைக்கு இரண்டாவது மேட்டர்.

1. ஸ்நாக்ஸ் சாப்பிடுறீயா/என்ன சாப்பிடுற?:

2. "ஹாய், ஹலோ" என அறிமுகபடலத்தில், உஷார்:

இதை உங்கள் காதல் வாழ்க்கையின், தினசரி நடக்கும் ஒரு துயர சம்பவம். உங்க ஆள் கூட எங்கேயாவது வெளியில சுத்திக்கிட்டு இருக்கும்போது, திடீர்ன்னு அவங்க கூட காலேஜ்ல படிச்சவங்களோ இல்லை ஆஃபிஸ்ல வொர்க் பண்றவங்களோ பாத்துட்டாங்கன்னா, நாம தான் டென்ஷன் ஆவோம். ஆனா அவங்க கூலா இருப்பாங்க. நல்லா பழகினவங்கன்னா, நேரா அவங்ககிட்ட போய், "ஹாய், திஸ் இஸ் மை ஃபிரண்ட் *****" (ஃப்ரண்டா, என்ன கொடுமை சார் இது? இருடி உனக்கு "HotDog" கெடையாது.) அப்படின்னு அறிமுகப்படுத்துவாங்க. ஓரளவுக்கு பழக்கம் இல்லைன்னா, அவங்க அதை கண்டுக்க மாட்டாங்க‌. நீங்களும் தான். என்னடா ஒழுங்கா தான போய்கிட்டு இருக்கு? இங்க என்ன பிரச்சினைன்னு கேட்குறீங்களா?
இங்க தான் பிரச்சினையே பாஸ். கொஞ்சம் நல்லா பழகினவங்கன்னா, உங்க ஆளு அவங்கள பத்தி இன்ட்ரோ கொடுப்பாங்க.. லைக்.. என்கூட ஃபைனல் இயர் ப்ராஜெக்ட் ஒண்ணா பண்ணோம் இல்லை ஒரே ப்ராஜெக்ட்ல வொர்க் பண்றோம் மாதிரி. அவங்க ஒரு நிமிஷம் என்ன பேசுறதுன்னு தெரியாம முழிச்சிட்டு, கெளம்பலாம்ன்னு இருக்கும்போது, நம்ம பசங்க வேலையக் காட்ட ஆரம்பிச்சிடுவோம். அவங்க ஒரு பொண்ணா இருந்து, பார்க்க கொஞ்சம்(உங்க ஆள விட)லட்சணமா இருந்துட்டா, நம்ம வழக்கம்போல "ஓ அப்படியா, உங்கள பத்தி அடிக்கடி சொல்லுவா.. BTW நீங்க அங்க தான் வொர்க் பண்றீங்க?" ஹி ஹின்னு ஜொள்ளுவிட ஆரம்பிப்போம். அதுக்குள்ள அங்க இருந்து ஒரு கோபமான, கேவலமான, வார்த்தைகளில் விவரிக்க முடியாத அளவுக்கு லுக் விடுவாங்க. ஆற்காட்டார் மட்டும் அவங்கள மாதிரியான ஆளுங்கள பார்த்து, அவங்க காதுல இருந்து வர்ற கோபப்புகையை பயன்படுத்தி மின்சாரம் எடுத்தார்னா, தமிழ்நாட்டுக்கு காதலர்கள் இருக்கிறவரை மின்சார தட்டுப்பாடே வராது.

ஒருவேளை நம்ம கெட்டநேரம், ஃப்ரண்ட் ரொம்ப நச் ஃபிகரா இருந்தா, நாம ஆள் இருக்கிறதையே மறந்துட்டு, அப்படியே கடலை போட்டுகிட்டு வானத்தில பறந்துகிட்டு இருப்போம். தப்பி தவறி, இந்த மாதிரி சூழ்நிலையில மட்டும் மாட்டிகிட்டீங்கன்னா, அவ்வளவு தான் உங்கள ரெண்டு பேர சமாளிக்கிற முருகன்(கடவுள்ங்க) வந்தா கூட காப்பாத்த முடியாது. அதுக்கப்புறம் ஒரு வயசான பாட்டிக்கிட்ட கூட பேசாம, பெண்கள் காற்று உங்க பக்கம் கொஞ்சம் கூட‌ அடிக்காம, ஒரு சாமியார் மாதிரி(போலி சாமியார்னா, சங்கு தான்டி.. ஸ்ட்ரெய்ட் டிக்கெட் டூ நரகம்) இருந்தீங்கன்னா, ரெண்டு வாரம் கழிச்சி அவங்க உங்க பக்கம் ஆறுதல் பார்வை திரும்ப வாய்ப்பு இருக்கு. நாளொரு PizzaHut டும் பொழுதொரு MaryBrown னுமாக காதலை மீண்டும் வளர்க்கவேண்டும்.

இந்த டைம்ல பொண்ணுங்க நோட் பண்றதுக்கு ஒரு மேட்டர் இருக்கு. ஒருவேளை நீங்க இன்ட்ரோ கொடுக்கிற ஆள் மட்டும் பையனா இருந்தா, அவன் உங்க நல்ல ஃப்ரண்டா இருந்தா, தலைவர் "ஒரு ஹாய்" மட்டும் சொல்லிட்டு அங்கே இருந்து எஸ்ஸாகி விடுவார். மனசுக்குள் அவன அசிங்கம் அசிங்கமா திட்டுவார். ரெண்டு நிமிஷம் பார்ப்பார். அப்படியும் நீங்க வரலைன்னா, டீசன்டா உள்ளே புகுந்து "அப்புறம் போன வாரம் உங்களை அடையார் டிப்போ பக்கத்துல் இருக்க பார் பக்கம் பார்த்தேன்" அப்படின்னு உங்க ஃப்ரண்ட ஓட ஓட துரத்துற மாதிரி நோஸ்கட் பண்ணி அனுப்பி வச்சிடுவார். இது தாங்க பசங்க திறமை. மைண்ட்ல வச்சிக்கோங்க.

பேக் டூ பாய்ஸ்: உங்க காதலிக்கு தங்கச்சி இல்லாமல் இருந்தால், உங்கள் காதல் லைஃப், ஃப்ளைட்ல‌ போற மாதிரி ஸ்மூத்தா, ட்ராவல் பண்றதே தெரியாத மாதிரி போய்கிட்டே இருக்கும். ஒரு வேளை இருந்தால், கொஞ்சம் அழகாகவும் இருந்தால், உங்க ஆளை விட ரெண்டு வயசு கம்மியாக இருந்தால், இத்தனை 'இருந்தால்' இருந்த்தும் "நீங்க நல்லவர், ராமன்(இவரும் கடவுள்ங்க) மாதிரி நல்ல பழமாக இருந்தால்" மட்டும் தொடருங்கள். உங்க காதல் லைஃப் கெட்டி. இல்லையென்றால், மனசாட்சியை கொஞ்ச நாள் கழற்றி டாஸ்மாக்கில் தொங்கவிட்டு விட்டு, இந்த காதலை கட் பண்ணிவிடுங்கள். ஏன் தெரியுமா? "தெரியும்டா, கொஞ்சம் சின்னபொண்ணா, என்னவிட அழகா இருக்கிறதுனால‌, ஜொள்ளு விட்டு அவளுக்கு தெனமும் SMS பண்ண ஆரம்பிச்சிட்ட. ஒருநாளாவது எனக்கு நீ குட் மார்னிங் SMS அனுப்பி இருக்கியா?" இந்த மாதிரி எதுக்கெடுத்தாலும் சண்டை போட்டு, ஒரு நாளும் நிம்மதியாக இருக்க விடமாட்டார்கள். நீங்க மறந்தாலும், அவங்களே நியாபகப்படுத்தி சண்டை போடுவார்கள். நாளடைவில் உங்க ஆளுக்கு, இதுவே ஒருவித காம்ப்ளக்ஸாக மாறி விடக்கூடிய ஆபத்தும் இருக்கிறது. உஷார்.
முழிச்சிக்கோ, ஃபிகர கரெக்டா மெயின்டெயின் பண்ணி பொழச்சிக்கோ!

(டிப்ஸ் இன்னும் வரும்)

**********************

9 comments:

ஆளவந்தான் said...

naan than mothala???

ஆளவந்தான் said...

disci missing :)))

ஆளவந்தான் said...

//
நாளொரு PizzaHut டும் பொழுதொரு MaryBrown னுமாக காதலை மீண்டும் வளர்க்கவேண்டும்
//
satyam theater ellam miss aaguthu :)

SUREஷ் said...

எனக்கும் இந்த மாதிரி ஒரு ஆள் டிப்ஸ் கொடுக்க இருந்திருந்தால்.......

தராசு said...

//முழிச்சிக்கோ, ஃபிகர கரெக்டா மெயின்டெயின் பண்ணி பொழச்சிக்கோ//

நல்ல தத்துவம் மக்கா,

உங்கள மாதிரி தத்துவ ஞானிகள் இந்த நாட்டுக்கு அவசியம் வேணும்.

கணேஷ் said...

\\ஆளவந்தான் said...
naan than mothala???

ஆமா நீங்க தான் மொதல்ல..

\\disci missing :)))

டிஸ்கி எழுதி எழுதி டையர்டு ஆகிட்டேன்.

\\satyam theater ellam miss aaguthu :)

சாப்பாடு போட்டு தான சமாதானப்படுத்த முடியும். அதான் சத்யம் தியேட்டர் மிஸ்ஸிங்.

\\SUREஷ் said...
எனக்கும் இந்த மாதிரி ஒரு ஆள் டிப்ஸ் கொடுக்க இருந்திருந்தால்.......

ந‌ல்ல‌வேளை யாருமில்லை. இருந்திருந்தால், க‌ஷ்ட‌ம். உங்க‌ளுக்கு இல்லை. அந்த‌ பொண்ணுக்கு..ஹி ஹி ஹி...

\\தராசு said...
உங்கள மாதிரி தத்துவ ஞானிகள் இந்த நாட்டுக்கு அவசியம் வேணும்..

அதையே தான் நானும் சொல்றேன். யாரும் வ‌ர‌மாட்டேங்குறாங்க‌ளே!!!!! ஹி ஹி..

Anbu said...

கலக்கிறிங்க அண்ணா

பட்டாம்பூச்சி said...

:)))

newspaanai said...

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php நன்றி.

Related Posts with Thumbnails