பார்த்ததும் ர‌சித்த‌தும் - 16/03/2009

என்னுடன் கல்லூரியில் படித்த நண்பனின் அண்ணன் திருமணம் விருத்தாச்சலம் கொளஞ்சியப்பர் கோவிலில் நேற்று நடைபெற்றது. 3 வருட இடைவெளிக்கு பிறகு நண்பர்களை சந்திப்பது மிகுந்த சந்தோஷம் அளித்தது. தலையில் வழுக்கை விழுந்த நண்பன், நன்றாக சதை போட்ட இன்னொருவன், கொஞ்சமும் மாறாமல் நேற்று பார்த்தது போல இருக்கும் சிலர். மிகுந்த ஆச்சரியமான, ஆரவாரமான சந்திப்பு. நான் அப்படியே தான் இருப்பதாக ஒருவன் சொன்னான். இதற்கு நான் சந்தோஷப்படுவதா, வருத்தப்படுவதா?

கொளஞ்சியப்பர் என்பது முருகப்பெருமானின் ஒரு பெயராம். அங்கே இளங்கன்றை பாதி பிரசவித்த நிலையில், அப்படியே வயிற்றில் தங்கிவிட்ட ஒரு பசு மாட்டை, கோவிலில் கட்டிப்போட்டு வழிபட்டுக் கொண்டிருந்தார்கள். பார்த்தது, மனதை பிசைந்தது. உருக்கமாக இருந்தது.

****

விருத்தாச்சல மைந்தன் விஜயகாந்துக்கு, தமிழக அரசியலில் அடிபிடி சண்டை போல. நேற்று இவ்வார நக்கீரனின் வால்போஸ்டரில் ஒரு வாசகம். 100 கோடி ரூபாய். இரண்டு திராவிட கட்சிகளும் வலைவீச்சு. 'குடிகாரன்' என்று சொன்ன அம்மையாரும், 'அரைவேக்காடு' என்று சொன்ன கலைஞரும் இப்படி, அடித்து பிடித்துக் கொண்டு அவரை இழுக்க முயற்சி செய்வதை பார்க்கும்போது, 'வாக்காளன் எவனுக்கும் ஞாபக சக்தி எதுவும் இருக்கக் கூடாது' என்று தான் தோன்றியது.

இருந்தாலும் 100கோடி. எவ்வளவு பெரிய தொகை? விஜயகாந்தின் மனம் சஞ்சலப்படுவதில் ஆச்சரியம் இல்லை. பின்னே, அரசியலுக்கு வந்த‌து மக்களுக்கு சேவை செய்வதற்காகவா?
****

தற்போது ஒரு ஃபார்வர்டு இமெயில் ரொம்ப ஃபேமஸ். விஜயும், பிரபுதேவாவும் ஒரு பிரஸ் மீட்டிங்கில் பேசிக் கொண்டிருப்பது போல. திடீரென்று செம கடுப்பாகி, விஜய் கத்தி "சைலன்ஸ்" என்கிறார். இது உண்மையா? பொய்யா? என்று தெரியவில்லை. ஆனால் ரசிக்க முடிகிறது. வீடியோ கீழே. எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்?****

நேற்று செக‌ண்ட் ஷோ, காசி தியேட்ட‌ரில், "FLASHBACKS OF A FOOL" ஜேம்ஸ்பாண்ட் ந‌டித்த‌ ப‌ட‌ம் பார்த்தோம்(இந்த முறை ஆக்சிடென்ட் எதுவும் நடக்கவில்லை). முத‌ல் சீனிலேயே, டேனிய‌ல் கிரெய்க், ட்ர‌ஸ் எதுவும் இல்லாம‌ல் (முதல் நாள் நைட் ரெண்டு பேருடன் கில்மா) ந‌ட‌ந்து போய் குளிக்கிறார். அவருடைய ஃப்ரண்ட் இறந்துபோய் விட்டார் என்று அம்மா கால் பண்ணி சொல்லும்போது, ரொம்ப ஃபீல் பண்ணி அவர் டீன் ஏஜ் வயதை யோசிக்கிறார், நடுக்கடலில் மிதந்து கொண்டே. அவர் டீன் ஏஜ் ஃபுல்லா ஒரே கில்மா தான். பக்கத்து வீட்டில் இருக்கும் ஒரு அஜால் குஜால் ஆன்ட்டி, 'அதுக்காக' ரொம்ப டார்ச்சர் பண்ணுகிறார். நடுவில் ஒரு ஃபிகருடன் காதல். அந்த காதலுக்காக, தன் ஃப்ரெண்டையே கிளப்பில் வைத்து அடிக்கிறார். இந்த மாதிரி ஒரே கில்மா தான் படம் முழுவதும்.
ஜேம்ஸ்பாண்ட் படம், ஒரே ஃபைட்டா இருக்கும் என்று நினைத்து போன என் நினைவில் மண் விழுந்தது. மொக்கை, அசுரத்தனமான மொக்கை. நடுவில் அந்த ஆன்ட்டி மேட்டர் மட்டும் இல்லை என்றால், நான் பாதி படத்திலேயே எழுந்து வந்திருப்பேன்.

ப‌ர‌ங்கிம‌லை ஜோதியில் ரிலீஸ் ப‌ண்ண‌வேண்டிய‌ ப‌ட‌த்திற்கெல்லாம், ஜேம்ஸ்பாண்ட் ஹீரோவை ந‌டிக்க‌ வைத்து, என்னை மாதிரி ப‌ட‌ம் பார்க்க‌ வ‌ரும் டீன் ஏஜ் ப‌ச‌ங்க‌ளோட‌ ஃபீலிங்ஸையெல்லாம் பாடாய்ப‌டுத்துகிறார்க‌ள். இதன் த‌மிழ் ட‌ப்பிங் பெய‌ர்: ம‌ன்ம‌த‌ன் நினைவுக‌ள். ச‌ரியாத் தான் வ‌ச்சிருக்காய்ங்க‌ளோ? (ஆனா நான் பார்த்த‌து இங்கிலீஷ் வெர்ஷ‌ன்)

****

1 comments:

SUREஷ் said...

//இதன் த‌மிழ் ட‌ப்பிங் பெய‌ர்: ம‌ன்ம‌த‌ன் நினைவுக‌ள். ச‌ரியாத் தான் வ‌ச்சிருக்காய்ங்க‌ளோ? (ஆனா நான் பார்த்த‌து இங்கிலீஷ் வெர்ஷ‌ன்)//


தமிழ்மேல நம்பிக்கை வைங்க தல

Related Posts with Thumbnails