(காதலிக்கும்)பெண்கள் பேசும் வார்த்தைகளின் அர்த்த‌மே வேற‌!

கணவன் மனைவியை அடக்கி ஆள்வதும், மனைவி கணவனை மிரட்டி வாழ்வதும், கட்டுபெட்டித்தனமான வாழ்க்கையின் ரெண்டு எக்ஸ்ட்ரீம் கேட்டகிரிஸ். ஆனால் ரெண்டுக்கும் இடைப்பட்டு எதற்கெடுத்தாலும் முறைக்கும், சிணுங்கும் மனைவி, தொட்டதற்கெல்லாம் மனைவிக்கு பயந்து நடுங்கும் அல்லது பயந்தது மாதிரி நடிக்கும், செல்லமாக கோபப்படும், சண்டைபோடும் கணவன். இவர்கள் இருவர் என்றுமே இளமையாக இருக்கும் திருமண பந்தத்தின் உயிர்நாடி.

அதேபோல் தான் காதலும், காதலர்களும். சண்டைக்கோழிகளாக எந்நேரம் அடித்துக் கொண்டு திரியும் ஈகோ மோதல்கள், நைட் தூங்கபோறதுக்கு முன்னால "ஐ லவ் யூ"ன்னு காதல் SMSல முடியும். 'உன்னாலே உன்னாலே' படத்தில் வரும் ஃபேமஸ் டையலாக். பொண்ணுங்க, "Thanks"னு சொன்னா, "நீ பண்ண இந்த மொக்கை வேலைக்கு இது ஒண்ணு தான் கொறச்சல்"ன்னு அர்த்தம். இது மாதிரி போகும். பொண்ணுங்களோட ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கும். அது புரியாம பேக்கு மாதிரி இருந்தா பையனோட மூக்கு உடைஞ்சிடும். இந்த பதிவு, அந்த மாதிரி பசங்களுக்கு ஹெல்ப் பண்ணும் நோக்கத்துடன் பதிவு செய்யப்படுகிறது. மே பி, ஃப்யூச்சர்ல எனக்கு கூட யூஸ் ஆகலாம். Girls, please excuse me.
1) ஸ்நாக்ஸ் வாங்கிட்டு வ‌ர‌ட்டுமா/என்ன‌ சாப்பிடுற‌?

பாஸ், நீங்க‌ ரெகுல‌ரா சினிமாவுக்கு ஜோடியா போகின்ற ஆளா? அப்ப‌டின்னா, க‌ண்டிப்பா இந்த‌ கேள்வியை உங்க‌ ஆளிட‌ம் இர‌ண்டு மூன்று த‌ட‌வையாவ‌து கேட்டு நோஸ்க‌ட் வாங்கி இருப்பீர்க‌ள். ந‌ல்ல‌ ப‌ட‌மோ, மொக்கை ப‌ட‌மோ இன்டெர்வெல்லில் ம‌ட்டும் சீட்டில் ஒரு நிமிஷ‌ம் கூட‌ ந‌ம்ம‌ ப‌ச‌ங்க‌ளால் உட்கார‌ முடியாது. ஃபிகரோட போயிருப்பதால் தம்மும் அடிக்க முடியாது. ஆனால் பொண்ணுங்க‌, பிடித்து வைத்த‌ பிள்ளையார் மாதிரி உட்கார்ந்து செல்போனை எடுத்து நோண்டிக் கொண்டிருப்பார்கள்(ஏழாம் உலகம்?). ஓ.கே அது வேற‌ டாபிக். ந‌ம்ம‌ மேட்ட‌ருக்கு வ‌ருவோம்.

ரொம்ப‌ ஜென்டிலாக‌, நீங்க‌ வெளியே போகும்போது "நீ ஏதாவ‌து சாப்பிடுறீயாம்மா?" என்று கேட்பீர்க‌ள். உட‌னே அவ‌ங்க‌ உங்க‌ள ஒரு முறை முறைச்சிட்டு, "ஒண்ணும் வேணாம்" என்று சொல்வார். நீங்க‌ளும், ஒண்ணும் வேணாம்ன்னுட்டாளே, ந‌ம்ம‌ளும் எதுவும் ஸ்நாக்ஸ் வாங்க‌ வேணாம்ன்னு ச்சும்மா வெளில‌ போயி ம‌த்த‌ ஃபிக‌ர்ஸ‌ சைட் அடிச்சிட்டு, ப‌ட‌ம் போட்ட‌வுட‌னே உள்ளே வ‌ந்துடுவீங்க‌. அதுக்கு அப்புற‌ம் மேட‌ம், ப‌ட‌ம் முடிஞ்சி வெளியே வ‌ந்த‌தில் இருந்து, அன்னைக்கு நைட் தூங்குற‌து வ‌ரைக்கும் உங்க‌கூட சரியாவே பேச‌வே மாட்டாங்க‌.

அவ‌ங்க‌ ச‌ரியா பேச‌லைன்னு, உங்க‌ளுக்கு அடுத்த‌ நாள் ஆஃபிஸ்ல‌ உட்கார்ந்து இருக்கும்போது தான் புரியும். உட‌னே ஃபோன் ப‌ண்ணி, என்ன‌ ஏது என்று விசாரித்தால், "நான் கோபமாக இருக்கேன்"ன்னு கண்டுபிடிக்க உனக்கு இவ்வளவு நேரம் ஆச்சான்னு 15 நிமிஷம் கன்னாபின்னான்னு திட்டிட்டு, மறுபடியும் பழைய பிரச்சினைக்கு வந்து அர்ச்சனையை ஆரம்பிப்பாங்க.

"இங்க‌ பாரு, ந‌ம்ம எங்கே ப‌ட‌த்துக்கு போயிருக்கோம்? க‌ம‌லா தியேட்ட‌ருக்கு. அங்க‌ எத்த‌னை த‌ட‌வ‌ நாம‌ போயிருக்கோம். அங்க‌ கெடைக்கும் ஜிகீர்த‌ண்டா என‌க்கு ரொம்ப‌ பிடிக்கும்ன்னு தெரியாதா? இல்லை தெரிஞ்சிட்டே தான் என்ன சாப்பிடுறேன்னு ந‌க்க‌லா கேட்டீயா? நீ கேட்டு இருப்ப‌டா?" என்று 15 நிமிட‌ம் மூச்சி விடாமல் உங்க‌ளை தாளித்து எடுத்து விடுவார்க‌ள். உங்க‌ளை, "என்ன‌ கொடுமைடா இது? கேட்காம‌ இருந்தா தான் த‌ப்பு? நான் கேட்டேன். கேட்டும் திட்டும் வாங்குறேனே?" அப்ப‌டின்னு ஃபீல் ப‌ண்ணுவீர்க‌ள். ம‌ற‌ந்தும் வாயை திற‌ந்து ஆர்கியூ ப‌ண்ணாதீர்க‌ள். அது உங்க‌ள் உட‌ல்ந‌ல‌த்துக்கும், ப‌ர்ஸ்ந‌ல‌த்துக்கும் ந‌ல்ல‌து. இல்லையென்றால் ச‌ண்டை பெரிதாகி மோக்காவில் 75 ரூபாய்க்கு ஐஸ் காஃபி வாங்கி கொடுத்து க‌ன்வின்ஸ் ப‌ண்ண‌ வேண்டி இருக்கும்.

பாஸ், உங்க‌ளுக்கு ஒரு அட்வைஸ். உங்க‌ ஆளுட‌ன் ரெகுல‌ரா ப‌ட‌த்துக்கு போறீங்க‌ன்னா, ஒவ்வொரு தியேட்ட‌ர்ல‌யும் என்ன‌ ஸ்பெஷ‌ல், அது உங்க‌ ஆளுக்கு பிடிக்குதா, அப்ப‌டி இப்ப‌டின்னு மொக்க‌யான‌ டேட்டாவை எல்லாம் க‌லெக்ட் ப‌ண்ணி டேட்டாபேஸ்ல‌ ஸ்டோர் ப‌ண்ணி வ‌ச்சிக்கோங்க‌. ஆனா "த‌னியாவோ, ப‌ச‌ங்க‌ளோடோ போனால் 4 ரூபாய்க்கு கிங்க்ஸோடு முடிஞ்சிருக்கும்" டேட்டாபேஸ் கிரியேட் பண்ணும்போது இந்த‌ மாதிரியான‌ தாட்ஸ் வ‌ராம‌ல் பார்த்துக் கொள்ளுங்க‌ள்.

முழிச்சிக்கோ, ஃபிக‌ர‌ க‌ரெக்டா மெயின்டெயின் ப‌ண்ணி பொழ‌ச்சிக்கோ!

எச்சரிக்கை: ஒரு கேள்வியே பெரிய பதிவாக‌ போன‌தால், இதே போல் ப‌திவுக‌ள் எதிர்கால‌த்தில் தொட‌ர்ந்து வ‌ரும் என்று அனைவ‌ருக்கும் அறிவுறுத்த‌ப்ப‌டுகிற‌து.

**********************

6 comments:

தராசு said...

கலக்கற கணேசு,

சும்மா அனுபவத்தை தான் எழுதறேன்னு சொல்லேன், எதுக்கு இந்த எதிர் காலத்துக்கு உதவும்ங்கற கதையெல்லாம்

இராகவன் நைஜிரியா said...

// ம‌ற‌ந்தும் வாயை திற‌ந்து ஆர்கியூ ப‌ண்ணாதீர்க‌ள். அது உங்க‌ள் உட‌ல்ந‌ல‌த்துக்கும், ப‌ர்ஸ்ந‌ல‌த்துக்கும் ந‌ல்ல‌து. இல்லையென்றால் ச‌ண்டை பெரிதாகி மோக்காவில் 75 ரூபாய்க்கு ஐஸ் காஃபி வாங்கி கொடுத்து க‌ன்வின்ஸ் ப‌ண்ண‌ வேண்டி இருக்கும். //

காதலிக்கும் போது ஆர்கியூ பண்ணால் பர்ஸ்க்குத்தான் கெடுதல். கல்யாணம் ஆன பின் ஆர்க்யூ பண்ணா பர்ச், உடல் நலம் இரண்டுக்கும் கெடுதல். இதில் பர்ஸ் நலம் அதிகம் பாதிக்கப்படும் அபயாம் அதிகம். அது தவிர மருத்துவ செலவு கூட உண்டு என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்க,,

babu said...

கண்டிப்பா அனுபவம்தான்...

பட்டாம்பூச்சி said...

ம்ம்ம்...நடத்துங்க நடத்துங்க.

Anonymous said...

same blood

ஸ்ரீமதி said...

Information is wealth? ;))

Related Posts with Thumbnails