வாழ‌வைக்கும் காதலுக்கு ஜே! வாலிப‌த்தின் ஊட‌லுக்கும் ஜே!


"ஆஃபிஸ்ல இருந்து ஏன் லேட்டு?"

"அதான் சொன்னேன்ல‌.. க்ளைய‌ண்ட் கால் 11 ம‌ணிவ‌ரைக்கும் இழுத்துட்டாங்க‌.. இன்னைக்கு ஒரு மாட்யூல் லைவ் போகுது.. அதான் டென்ஷ‌ன்."

"த‌ண்ணி அடிச்சிட்டு வ‌ந்திருக்கியா?"

"இல்லைமா. அதான் கொஞ்ச நாள் முன்னாடியே ப்ராமிஸ் ப‌ண்ணேன்ல‌.
இனிமே ரெண்டு மாச‌த்துக்கு ஒரு த‌ட‌வை தான் அடிப்பேன். அதுவும் வீட்ல‌ உட்கார்ந்து. ப்ளீஸ் பிளீவ் மீ"

"என‌க்கு ந‌ம்பிக்கை இல்ல‌. கிங்க்ஃபிஷ‌ர் பீர் ஸ்மெல் அடிக்குது"

"உன்னோட‌ ஒரே தொந்த‌ர‌வா போச்சே. த‌ண்ணி அடிக்கிற‌தா இருந்தா, நைட் ஷிஃப்ட்ன்னு சொல்லிட்டு ஃப்ரெண்டு வீட்டுல‌ அடிச்சிட்டு காலைல‌ வ‌ர‌ மாட்டனா?" என்று சொல்லி கண்ணடித்துவிட்டு அவ‌ளைக் க‌ட்டிபிடிக்க‌ ட்ரை ப‌ண்ணினான்.

"இதுக்கு ஒண்ணும் கொற‌ச்ச‌ல் இல்ல.." என்று சிணுங்கிக் கொண்டே அனுமதித்துவிட்டு திடீரென்று கோபம் வந்தவளாக, அவனை தள்ளிவிட்டு "நான் இப்படி பண்றது தொந்தரவு இல்ல.. டே, உன‌க்கு லைஃப்ல‌ எதுவுமே சீரிய‌ஸ் இல்லியா? உருகி உருகி லவ் பண்ணி தான நாம கல்யாணம் பண்ணிகிட்டோம். நான் சொல்றத எதையுமே சீரியஸா எடுத்துக்க மாட்டியா?" என்றாள் ஹைடெசிபலில்.

"உன்ன‌ க‌ல்யாண‌ம் ப‌ண்ணிகிட்டேனே.. அதுவே லைஃப்ல‌ நான் ப‌ண்ண‌ ரொம்ப‌ சீரிய‌ஸான‌ விஷ‌ய‌ம்.." என்று டையை கடுப்புடன் க‌ழ‌ற்றினான்.

"ல‌வ் ப‌ண்ற‌ பொண்ணை க‌ல்யாண‌ம் ப‌ண்ற‌து சீரிய‌ஸான‌ விஷ‌யமா?"

"ஹ‌லோ மேட‌ம். எந்த‌ செஞ்சுரில‌ இருக்க‌ நீ.. இன்விடேஷ‌ன் கொடுக்கும்போது ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் எப்படி கலாய்ச்சாங்க தெரியுமா.. ல‌வ் ப‌ண்ற‌ பொண்ணையே க‌ல்யாண‌ம் ப‌ண்ற‌ மொத‌ ஆள் நீதான்டான்னு சொல்லி எல்லாரும் அசிங்க‌ப்ப‌டுத்திட்டாங்க‌.."

"அப்புற‌ம் எதுக்குதான்டா ல‌வ் ப‌ண்றீங்க?"

(டியூப் லைட் டியூப் லைட் என்று மனதுக்குள் முனங்கிக் கொண்டே)"உன‌க்குத் தான் சுத்த‌மா தெரிய‌ல‌.. ஊரு உல‌க‌த்த‌ பாரு.. பொண்ணுங்க‌ளே, க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்கிறேன்னு சொன்னா க‌ட் ப‌ண்ணிவிட்றாங்க‌.. ஒண்ணா சேர்ந்து ஊர் சுத்த‌ற‌துக்கும்,....... ச‌ரி விடு.. இதெல்லாம் உன‌க்கு தெரியாது. க‌ல்யாண‌த்துக்கு முன்னால‌ உன் கைய‌ பீச்ல‌ பிடிச்சு ந‌ட‌ந்து வ‌ந்த‌துக்கே, ஒரு வார‌ம் பேசாத ஆளுக்கெல்லாம் சுட்டாலும் புரியாது" சொல்லிக் கொண்டே ஷார்ட்ஸ்க்கு மாறியிருந்தான்.

"அப்புற‌ம் எதுக்குதான்டா என்ன‌ ல‌வ் ப‌ண்ணே?"

சிரித்துக்கொண்டே "டூ லேட். லைஃப் சென்ட‌ன்ஸ். இனிமே நோ யூஸ்? என்ன‌ டின்னர்?"

ரொம்ப‌ க‌டுப்பாகி, "அப்ப‌வே சொல்லி இருக்க‌லாம்ல‌.. டின்னரும் கிடையாது. ஒண்ணும் கிடையாது. என‌க்கு தெரிஞ்சாக‌ணும்?.. இப்ப‌வே.."

"உன் க‌ல‌ரை பாத்தும், மீட்டிங்க்ல ரொம்ப‌ க‌ரேஜா த‌ஸ் புஸ்ஸுனு பேசுற‌த‌ பாத்தும் தான், இப்ப‌ அது எதுக்கு.. பசிக்குதுடி..ப்ளீஸ்டி.. என் செல்ல‌ம்ல?" என்று கொஞ்சினான்.

"ஓ, இவ‌ளே க‌ருப்பா இருந்தா திரும்பி பாத்து இருக்க‌ மாட்டேளே? அப்ப‌டி என்ன‌டா இருக்கு இந்த‌ க‌ல‌ர் தோல்ல.. அது ஏன் ஒருத்தனுக்கும் க‌றுப்பா இருக்கிற‌ எவ‌ளையும் பிடிக்க‌ மாட்டீங்குதுன்னு தெரிய‌ல‌?"

"இப்ப‌ உன‌க்கு என்ன‌ பிர‌ச்சினை? நான் லேட்டா வ‌ந்த‌தா? த‌ண்ணி அடிச்சேன்ங்கிற‌ ச‌ந்தேக‌மா? உன்ன‌ லவ் & கல்யாணம் ப‌ண்ண‌தா? இல்ல‌ ஊர்ல‌ இருக்கிற‌வன் எவனும் க‌றுப்பா இருக்கிற‌ பொண்ண‌ ல‌வ் ப‌ண்ணாத‌தா?"

"என்ன‌ பாத்தா ப்ராப்ள‌ம் மேக்க‌ர் மாதிரி தெரியுதா யூ பெக்கர்? ஓ.கே. லீவ் இட்.. க‌ல்யாண‌த்துக்கு முன்னால‌ வ‌ரைக்கும் நிலா, இத‌ழ், முத்த‌ம்ன்னு க‌விதையா கொட்டுனீயே. இப்ப‌ ஏன் எல்லாம் DRY ஆயிடுச்சா?"

"கூல் ஹனீ.. பை தி வே.. குட் கொஸ்டின்" அப்ப‌டியே அவ‌ளை தோளை பிடித்து டைனிங் ஹாலில் உட்கார‌ வைத்துவிட்டு, "அப்பா காசுல டாஸ்மாக் பார்ல‌ போய் ச‌ண்டை போட்டு பிடிச்ச‌ பிராண்ட் பீர் ச்சில்ன்னு கூலிங்கா வாங்கி அடிக்கிற‌துக்கும், 20 பீர் பாட்டில்ல‌ வீட்டு ஃப்ரிட்ஜ்ல‌ வ‌ச்சி தோணும்போதெல்லாம் அடிக்கிற‌துக்கும் வித்தியாச‌ம் இல்லீயா?" என்றான் ஹாட்பாக்ஸில் எடுத்த சப்பாத்தியை மென்று கொண்டே..

"நான் என்ன கேட்டேன்? நீ என்ன‌ சொல்ற...." சில விநாடிக‌ளுக்கு பிற‌கு.. மாரிய‌ம்மான் கோவில் பூஜையில் சாமி வ‌ந்த‌வ‌ளாக‌, "அப்ப அதுக்கு தான் லவ் பண்ணீயா? செக்ஸ் தான் லைஃபா? இப்ப‌ எல்லாம் முடிஞ்சிடுச்சா?" என்று க‌த்திக் கொண்டு மேஜையில் இருந்த‌ எல்லாத்தையும் த‌ட்டி விட்டாள்.

அவ‌ன் செல்லில் SMS 'பீப் பீப்' என‌ அடித்த‌து.

அவ‌ள் எடுத்து பார்த்தாள். "Have you safely reached home? No hangover right?" அவ‌ன் உயிர்த்தோழ‌னிட‌ம் இருந்து.

"பொய், பொய், வாயை தொற‌ந்தாலே பொய். த‌ண்ணி அடிக்க‌லைன்னு பொய். இப்ப‌ நானும் தேவையில்லை. இனிமே நான் உன்கூட‌ ஒண்ணா வாழ்ந்தா, அது அசிங்க‌ம். " என்று அழுதுகொண்டே மொபைலை அவன் மூஞ்சியில் தூக்கி எறிந்தாள். பெட்ரூம் போய், மூட்டையைக் க‌ட்டிக் கொண்டிருந்தாள்.

அவ‌னுக்கு ஒண்ணும் புரிய‌வில்லை. செல்போனைப் பார்த்தான். உயிர்ந‌ண்ப‌ன், எட்ட‌ப்பன் ஆனான். அடித்த‌து எல்லாம் இற‌ங்கிவிட்ட‌து. அவ‌ளை க‌ன்வின்ஸ் ப‌ண்ணி தோற்றுப் போய்விட்டான். கோய‌ம்புத்தூர் போய்விட்டாள்.

()

அவ‌ள் வீட்டிற்கு கால் ப‌ண்ணினான். காலில் விழாத‌ குறையாக‌ கெஞ்சினான். ச‌னிக்கிழ‌மைக்குள் வ‌ர‌வில்லையென்றால், மார்னிங் அங்கே இருப்பேன் என்று காலில் விழுந்து விட்டான்.

()

வெள்ளிக்கிழ‌மை ஈவினிங் ஆஃபிஸ் முடிந்து வீட்டுக்கு வ‌ந்து சேர்ந்தான். ஹால் க்ளீனாக‌ இருந்த‌து.

அட்டகாச‌மான‌ சேலையில், த‌லை நிறைய‌ ம‌ல்லிகைப்பூவுட‌ன் அவ‌ள் நேரே வ‌ந்தாள்.

"ஹேய் டார்லிங்.." என்று ஓடிப்போய் க‌ட்டிபிடித்து மேலே தூக்கினான்.

"என்ன‌ திடீர் ச‌ர்ப்ரைஸ்? உங்க‌ப்பா தொர‌த்தி விட்டுட்டாரா?"

லேசாக‌ முறைத்துக் கொண்டு, "எல்லாமே காமெடி தான் உன‌க்கு. ஐ ஹேவ் டூ குட் நியூஸ்!"

"ந‌ம்ம‌ க‌ல்யாண‌ நாளா? இல்லையே அதுக்கு இன்னும் மூணு மாச‌ம் இருக்கு. என் ப‌ர்த்டே இல்ல‌.. உன் ப‌ர்த்டே, நான் ம‌ற‌ந்து இருந்தா செருப்பால‌ அடிப்ப‌?.. பின்ன‌. ம்ம்ம்... யா.. நான் உன்கிட்ட‌ ல‌வ் ப்ரோப்ப‌ஸ் ப‌ண்ன‌ டேட் தான‌?"

"நோ. இன்னிக்கு‌ நான் கொடுத்த‌ ப்ராமிஸ்ப‌டி, நீ த‌ண்ணி அடிக்க‌வேண்டிய‌ டியூ டேட்"

"ஹேய் கமான். ஸாரி டியர். நான் இன்னிக்கு அடிக்க‌ல‌.. நான்தான் பொய் சொல்லி அன்னைக்கே அடிச்சிட்டேன்ல‌. ப்ளீஸ்."

"ப‌ர‌வாயில்ல‌. இன்னிக்கி நீ அடிக்க‌லாம். எங்க‌ப்பாகிட்ட‌ ச‌ண்டை போட்டு கேன்டீன்ல இருந்து ஹை குவாலிட்டி மிலிட்ட‌ரி ச‌ர‌க்கு வாங்கிட்டு வந்திருக்கேன்."

"என்ன‌ ஹ‌ர்ட் ப‌ண்றே. நோ. ஐ கான்ட்." என்றான் வீராப்புடன்

"இல்ல‌. நீ அடிச்சா தான், அடுத்த‌ குட் நியூஸ‌ சொல்வேன்.."

இதுல ஏதோ உள்குத்து மாதிரி தெரியுதே என‌ தாடையை த‌ட‌விக் கொண்டே, "அடிக்கும்போது, இது தான் லாஸ்ட் டைம்னு சொல்ல‌ மாட்டியே"

"குடிகார‌ன் புத்தி உன்னைவிட்டு போகுதான்னு, பாரு" என்று சொல்லிக் கொண்டே முத‌ல் லார்ஜை ஊற்றிக் கொடுத்தாள்.

த‌லைவ‌ர் ஒரே கல்ப்பில் அடித்துவிட்டு, "இப்ப‌ சொல்லுமா, செல்ல‌ம்?"

அநியாய‌த்துக்கு வெட்க‌ப்ப‌ட்டாள். த‌லையைக் குனிந்து கொண்டாள். "ந‌வ், ஐயாம் டூ"

"வாட்?"

"மை டியர், டியூப்லைட் புருஷா! நீ அப்பா ஆயிட்டே" என்று காதைக் க‌டித்தாள்.

"ஹேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.. ரிய‌லிலிலிலிலி....." என்று ச‌ந்தோஷ‌த்தில் க‌த்திக் கொண்டு, அவ‌ளை அலேக்காக‌ தூக்கிக் கொண்டு பெட்ரூமுக்கு ஓடினான்.

(இன்னும் அவ‌ங்க‌ என்ன‌ ப‌ண்றாங்க‌ன்னு சொல்ல‌லாம். டிஸ்கரைப் பண்றது கொஞ்சம் கஷ்டமான டாஸ்க் தான். ப‌ட் அடுத்த‌வ‌ங்க‌ பெட்ரூமை எட்டி பார்க்கிற‌து, இன்டீச‌ன்ட்.. ஸோ, கெட் லாஸ்ட்)

*********************

12 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

சான்ஸே இல்ல கணேஷ்.. சூப்பர்.. ரெண்டு காதலர்கள கிட்டக்க இருந்து பார்த்த மாதிரி.. அம்சமா எழுதி இருக்கீங்க.. வாழ்த்துக்கள்.. கொஞ்சம் தண்ணி மேட்டர மட்டும் கம்மி பண்ணுங்கப்பா..

Anbu said...

அண்ணா ரொம்ப ரொம்ப அழகாக இருக்கிறது...

newspaanai said...

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php#blogger நன்றி.

Sendha said...

super story

மந்திரன் said...

சும்மா பூந்து விளயாடுரேல் .....
ரொம்ப ஜாலியா படிச்சேன் ...
work pressure கொஞ்சம் குறைஞ்ச மாதிரி ஒரு feel ..

இராகவன் நைஜிரியா said...

கதையை முடித்த விதம் ரொம்ப பிடித்து இருந்தது.

அழகான நடை. நிறைய எழுத வாழ்த்துக்கள்.

ஆளவந்தான் said...

செம கலக்கல் :)

ஆளவந்தான் said...

//
இன்னும் அவ‌ங்க‌ என்ன‌ ப‌ண்றாங்க‌ன்னு சொல்ல‌லாம். டிஸ்கரைப் பண்றது கொஞ்சம் கஷ்டமான டாஸ்க் தான். ப‌ட் அடுத்த‌வ‌ங்க‌ பெட்ரூமை எட்டி பார்க்கிற‌து, இன்டீச‌ன்ட்.. ஸோ, கெட் லாஸ்ட்
//

ஹஹஹா :))

ஷண்முகப்ரியன் said...

இனிமை.

nTamil said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
nTamil குழுவிநர்

ரமேஷ் வைத்யா said...

அய்யா, என்ன ராசா இது..?

ஸ்ரீமதி said...

:))Super.. :P

//கொஞ்சம் தண்ணி மேட்டர மட்டும் கம்மி பண்ணுங்கப்பா..//

Mmmm.. ;))

Related Posts with Thumbnails