முத்தம்..முத்தம்..முத்தம்..


என்மேல் ஏன் கோபம்?
கடந்த முறை விட்டு சென்ற‌
காயங்கள் இன்னும் ஆறவில்லை
என் உதடுகளில்!

காதலின் வடு,
ஆறிவிட வேண்டாம்
என துடிக்கிறது என் இதயம்!
மீண்டும் முயற்சிக்கலாம்,
ஆறிவிட வேண்டும்
என துடிக்கிறது உன் இதயம்!

போன இரவு வரை
உன் வன்மம் தெரியவில்லை
ஈர உதடுகளில் தான்
முத்தமாக மொத்தமாக‌
தேங்கியுள்ளது என!

நெருப்பு கக்கும் உதடுகளை
நாவால் அடிக்கடி ஈரப்படுத்திக்
'கொள்'
நான் வ‌ரும் வரை
பின்னர் என்னைக்
'கொல்'!

மறந்துவிட்டோம்
மீண்டும் முத்தமிடலாம்
என் உதடுகளில் தேங்கிய‌
உன் உயிரையும்
உன் உதடுகளில் தேங்கியுள்ள‌
என் உயிரையும் மீட்க!

எமதர்மா, என் உயிரை
எடுக்க பாசக்கயிறு
தேவையில்லை
ஒரே ஒரு முறை
இவளை
முத்தமிடச் சொல்!
கவனம் தேவை தர்மா,
மீண்டும் இவளை
முத்தமிட அனுமதித்தால்
மீட்டு விடுவாள் என் உயிரை!

துடிப்பதை மறந்த இதயம்
முதலுதவி தேவை
அடக் கடவுளே,
அப்போதும்
அவள் இதழால் தானே
மூச்சு அளிப்பாள்!

முத்தத் தீவிரவாதி நீ,
காயமின்றி முத்தமிடலாம்
என்பது தானே
முத்த உடன்படிக்கை,
நீ மீறிவிட்டாய்
நான் முத்தம் இடுகிறேன்
நீ முத்தம் எடுக்கிறாய்!

கண்களின் கோளங்கள்
கன்னாபின்னாவென சுழல்வதும்
இதயத்தை சுத்தியலில்
யாரோ அடிப்பதும்
கை, கால்களின்
எலும்புகள் உதறுவதும்
நுரையீரல் காற்றுக்காக
துடிப்பது வெளியே
கேட்பதும் போதும்
நான் செத்துவிடுவேன்!
தயவுசெய்து
நீ முத்தமிடுவதை நிறுத்து.

சண்டையிட்டுக் கொள்ளலாம்
என்று இருந்தால்
மூன்றாம் உலகப் போரே
ஆரம்பித்து இருக்கும்,
உதடுகளின் மீது மற்ற பாகங்கள்!

****************
டிஸ்கி: மொத்த‌ம் எத்த‌னை முத்த‌ம் என்று சொல்ப‌வ‌ர்க‌ளுக்கு, இந்த‌ க‌விதையை(இது கவிதையா? என்று யாரும் கேட்காதீர்கள், ப்ளீஸ்) காப்பிரைட் எடுத்துக் கொண்டு காத‌லியிட‌ம் சீன் போடுவ‌த‌ற்கு அனும‌தி வ‌ழ‌ங்க‌ப்ப‌டும்.

**************

3 comments:

மந்திரன் said...

முத்தத்தில் பித்தம் பிடித்து அலைபவருக்கு கவிதை அருமையாக வருகிறது .
அனுபவம் கை கொடுக்கிறது என்கிறேன் நான் ...
மறுக்க வேண்டாம் ..

ஆளவந்தான் said...

//
எமதர்மா, என் உயிரை
எடுக்க பாசக்கயிறு
தேவையில்லை
ஒரே ஒரு முறை
இவளை
முத்தமிடச் சொல்!
கவனம் தேவை தர்மா,
மீண்டும் இவளை
முத்தமிட அனுமதித்தால்
மீட்டு விடுவாள் என் உயிரை!
//
சான்ஸே இல்ல :)) சூப்பரு :)

SUREஷ் said...

//உதடுகளின் மீது மற்ற பாகங்கள்!
//


மாத்தி யோசிக்கறீங்க

Related Posts with Thumbnails