கேட்ககூடாதவர்களிடம் கேட்க விரும்பும் ஏடாகூடாமான கேள்வி!


கலைஞரிடம் ஜெ : எதுக்கெடுத்தாலும் உண்ணாவிரதம் உண்ணாவிரதம்ன்னு அறிவிச்சுடுறீங்களே? எப்படி உங்களால மட்டும் முடியுது? ஒரு நாள் இருந்ததுக்கே நான் 5 கிலோ கொறஞ்சிட்டேன்?

ராமதாசிடம், வேலையாள்: அய்யா, தோட்டத்தில இருந்து போயஸ் கார்டனுக்கு ஒரு கூடை மாம்பழம் பார்சல் அனுப்பிடலாம்ங்களா?

வைகோவிடம் ம‌.தி.மு.க தொண்டன் : தலிவரே, நமக்கு ஓட்டு போடுறதுக்கு தான் ஆள் இல்லைன்னு நெனச்சிகிட்டு இருந்தேன். இப்ப வர்ற எலெக்சன்ல வேட்பாளரை நிக்க வைக்கறத்துக்கு கூட கட்சியில ஆள் இல்லைன்னு சொல்லிக்கிறாங்களே, நெஜமா?

விஜயகாந்திடம், ஒருவர்: சார், கூட்டணி வைக்க போறீங்களா? உங்க மரியாதை என்னாச்சு? ஸாரி.. ஐ மீன் உங்க மரியாதை சூட்டிங் என்னாச்சு?

கலாநிதியிடம், தினகரன் வாசகன் : சார், எலெக்சன் வேற வரப் போகுது? தி.மு.க பத்தி சும்மா ஒரு சர்வே எடுத்து போடுங்களேன்? கொஞ்சம் சூடா இருக்கும்?

மன்மோகன்சிங்கிடம், ஒரு இந்தியன்: "வேணாம், வலிக்குது அழுதுடுவேன்"ன்னு இத்தனை நாளா புலம்பிக்கிட்டு இருந்த நீங்க, "அப்பாடா, எலெக்சன் வந்துடுச்சி"ன்னு பெருமூச்சு விடுறது தமிழ்நாடு வரைக்கும் கேட்குதாமே, உண்மையா?

டீ.ஆரிடம், கொலைவெறி டீ.ஆர் ஃபேன் கிளப் மெம்பர் : சார், உங்க‌ க‌ட்சியோட‌ பேர் என்ன‌? அது இந்த‌ எலெக்ச‌ன்ல‌ போட்டியிடுதா?

பீட்ட‌ர்ச‌ன் ம‌ற்றும் ஜெய‌வ‌ர்த்த‌னேவிடம் வெட்டோரி: எப்ப‌டி போட்டாலும் அடிக்கிறானுங்க‌? என்னாலயும் முடிய‌ல‌? ஷேவாக், யுவ‌ராஜ் எல்லாம் பார்த்தா என‌க்கு அழுகை, அழுகையா வ‌ருது. நானும் ரிசைன் ப‌ண்ண‌ப் போறேன்.

ர‌ஜினியிட‌ம், சில‌ இய‌க்குந‌ர்க‌ள்: சார், க‌லெக்ச‌ன் ரொம்ப‌ க‌ம்மியாயிடுச்சு. சும்மா எங்க‌ளோட‌ சேர்ந்து ஃபோட்டோவுக்கு போஸ் கொடுக்க முடியுமா? ப‌ப்ளிசிட்டி ப‌ண்ண‌ வ‌ச‌தியாய் இருக்கும்.

இயக்குநர் பாலாவிட‌ம், ர‌சிக‌ன்: சார், அடுத்த‌ ப‌ட‌ம் 2015 ல‌யா ரிலீஸ்?

சுப்ரமணியசாமியிட‌ம், ஒரு ஆள்: சார், நாளைக்கு ந‌ம்ம‌ கேஸ் கோர்ட்டுக்கு வ‌ருது. சும்மா ஒரு ர‌வுண்ட் போயிட்டு வ‌ந்துட‌லாமா?

'சோ'விடம், ஒரு ஆள் : சார், அ.தி.மு.க சார்பா இந்த எலெக்சன்ல போட்டியிடுறதுக்கு உங்கள நாமினேட் பண்ணி இருக்காங்களாமே?

அஜீத்திடம் விஜய் : வரிசையா மூணு படம் ஃப்ளாப் கொடுத்ததுக்கே, என்னைய போட்டு இப்படி கும்முறாய்ங்களே? நீங்க மட்டும் எப்படிண்ணா வரிசையா 7 படம் ஃப்ளாப் கொடுத்துட்டு அசராம மறுபடியும் ஃபார்முக்கு வந்தீங்க?

பிரியாம‌ணியிட‌ம், ஒரு ஜொள்ளு ர‌சிகன்(டிஸ்கி: நான் இல்லை): மேட‌ம், உங்க‌ளுக்கு த‌மிழ்சினிமா மேல‌ ஏன் இவ்வ‌ள‌வு கோப‌ம்? அதே ட்ர‌ஸ்ஸோட‌ இந்த‌ ப‌க்க‌ம் வ‌ந்துட்டு போக‌க் கூடாதா?

*******************

15 comments:

மந்திரன் said...

நான் தான் first ..

ஆளவந்தான் said...

மீ த ஃபர்ஸ்ட் :)

ஆளவந்தான் said...

//
பிரியாம‌ணியிட‌ம், ஒரு ஜொள்ளு ர‌சிகன்(டிஸ்கி: நான் இல்லை): மேட‌ம், உங்க‌ளுக்கு த‌மிழ்சினிமா மேல‌ ஏன் இவ்வ‌ள‌வு கோப‌ம்? அதே ட்ர‌ஸ்ஸோட‌ இந்த‌ ப‌க்க‌ம் வ‌ந்துட்டு போக‌க் கூடாதா?
//
அந்த ரசிகன் நாந்தேன்.. அது நானே தான் :)))

ஆளவந்தான் said...

//
மந்திரன் said...
நான் தான் first ..
//
ஜஸ்ட் மிஸ்ஸாகிடுச்சு தல :))

மந்திரன் said...

//எலெக்சன்ல வேட்பாளரை நிக்க வைக்கறத்துக்கு கூட கட்சியில ஆள் இல்லை//
க.க. போ
//சார், உங்க‌ க‌ட்சியோட‌ பேர் என்ன‌//
எங்கோயோ போய்டீங்க ...
//அதே ட்ர‌ஸ்ஸோட‌ இந்த‌ ப‌க்க‌ம் வ‌ந்துட்டு போக‌க் //
அய்யோ கடவுளே ஏன் இந்த கொலை வெறி .. நான் நல்ல தூங்கி ரொம்ப காலம் ஆச்சு

வந்தியத்தேவன் said...

கணேசிடம் ஒருவர் : எப்படிங்க உங்களுக்கு மட்டும் இப்படி கற்பனை வருகின்றது. அந்த உண்மையை எங்களுக்கும் சொல்லுங்கள்.

கவனம் வீட்டுக்கு ஓட்டோ வரும் அறிகுறிகள் தென்படுகின்றது.

கார்த்திகைப் பாண்டியன் said...

//அஜீத்திடம் விஜய் : வரிசையா மூணு படம் ஃப்ளாப் கொடுத்ததுக்கே, என்னைய போட்டு இப்படி கும்முறாய்ங்களே? நீங்க மட்டும் எப்படிண்ணா வரிசையா 7 படம் ஃப்ளாப் கொடுத்துட்டு அசராம மறுபடியும் ஃபார்முக்கு வந்தீங்க?//

ஏன் இந்தக் கொலைவெறி? அதெல்லாம் பார்த்தா தொழில் பண்ண முடியுமா..

Anonymous said...

என்னடா, இவர் ரொம்ப சீரியஸா பதிவு போட்டு இருக்கார்னு பாத்தேன். கடைசி கேள்வியில உங்க ஜொள்ளு ஆறா ஓடுது? திருந்த மாட்டீங்க.

karmegaraja said...

///அஜீத்திடம் விஜய் : வரிசையா மூணு படம் ஃப்ளாப் கொடுத்ததுக்கே, என்னைய போட்டு இப்படி கும்முறாய்ங்களே? நீங்க மட்டும் எப்படிண்ணா வரிசையா 7 படம் ஃப்ளாப் கொடுத்துட்டு அசராம மறுபடியும் ஃபார்முக்கு வந்தீங்க?///

எங்க தலய விமர்சித்த காரணத்தால நாளை உங்கள் வீட்டுக்கு ‘ஆழ்வார்’ பட CD வந்து சேரும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொல்கிறேன். (ல் குறித்துக்கொள்ளவும்).

Karthik said...

ரஜினி கமெண்ட் சூப்பர்ப்..! எல்லாமே கலக்கல்ஸ்..! :))))

//கார்த்திகைப் பாண்டியன் said...
ஏன் இந்தக் கொலைவெறி? அதெல்லாம் பார்த்தா தொழில் பண்ண முடியுமா..

ரிப்பீட்டு. :))

ஸ்ரீமதி said...

:))))))))

ஸ்ரீமதி said...

//ரொம்ப சீரியஸ், ரொம்ப மொக்கை எல்லாம் பிடிக்காது. மானே, தேனே என்று இலக்கிய நடையோடு பேசுவதும் சுத்தமா பிடிக்காது. ஸோ, அதெல்லாம் இங்கே கிடையாது. ஒன் & ஒன்லி டைம்பாஸ். மதுரைக்காரன். இப்போ சென்னையில ரொம்ப சீரியஸா வேலை பாத்துக்கிட்டு இருக்கேன்.//

கொஞ்சம் பயமா தான் இருக்கு... ;))

Anbu said...

மிகவும் நன்றாக இருக்கிறது அண்ணா

SUREஷ் said...

உங்களிடமும் ஒரு கேள்வி:-

எப்படி ஃபோட்டோவைப் போட்டுவிட்டு இப்படி கேள்விகள் கேட்கும் தைரியம் வந்தது?

nTamil said...

Hi,

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
nTamil குழுவிநர்

Related Posts with Thumbnails