கவுதம்-சிம்பு ஷூட்டிங்கில் தகராறு - ‍ஜாலி கூத்து


"விண்ணைத் தாண்டி வருவாயா" பட ஷீட்டிங்கில் டைரக்டர் கவுதம் மேனனுக்கும், சிம்புவுக்கும் நடுவே பிரச்சினை ஆகி விடுகிறது. அதை தீர்க்க நடிகர் சங்கத்தில் சிம்பு புகார் செய்கிறார். இந்த பிரச்சினையை தீர்க்க நடுவராக சாலமன் பாப்பையா வந்துள்ளார்.

சாலமன் பாப்பையா: வணக்கம் அன்பு மக்களே! நல்லா இருக்கீங்களா? வீட்டுல எல்லாரும் சவுக்கியம் தானே!

(அசிஸ்டென்ட் ஓடோடி வந்து காதில் கிசுகிசுக்கிறார்.)

அசிஸ்டென்ட்: அய்யா, இது சன்டிவி பட்டிமன்றம் இல்ல.. உங்கள நீதிபதியா உக்கார வச்சிருக்காய்ங்க.. நியாபகம் இருக்கட்டும்..

சா.பா: (சரிப்பா சரிப்பா) என்னய்யா, ஆகாவளி பசங்க ரெண்டு பேரும் கூட்டு சேரும்போது அப்பையே நெனச்சேன்.. ஏதாவது முட்டிகிடுவீகன்னு.. என்னதான்ய்யா பிரச்சினை..

கவுதம்: ஆக்சுவலி, இது வந்து ரொம்பான்டிக் மெல்ட்டிங் லவ் ஸ்டோரி.. அப்படியே ஐஸ்கீரீமா உருகுற மாதிரி ஷேப் பண்ணி வச்சிருக்கேன்.. அப்புறம் அப்புறம் (மறந்து போச்சே).. யெஸ்... ஐ லவ் மை டாடி ஸார்..

சா.பா: ஆஹாஹா..இதுவும் உங்க அப்பாவ பத்தின படமா.. (பயந்துபோய், வழுக்கை தலையை கர்ச்சீப்பால் துடைத்துக் கொள்கிறார்) அதுல என்ன பிரச்சினை?

கவுதம்: ஸோ.. நாங்க ஒரு ப்ரோக்கன் போட்ல ஒரு லாங் ஷாட்ல, ஏரியல் வியூவ்ல ஷாங் ஷூட் பண்ணிக்கிட்டு இருந்தோம். அப்ப வந்து.....

(நடுவே சாலமன் பாப்பையா குறுக்கிடுகிறார்)

சா.பா: தம்பீ, நான் 30 வருசமா நான் தமிழ் பேராசிரியரா வேலை பாக்குறேன்ப்பா.. ஆனா நீ பேசுற தமிழ் எனக்கு புரிய மாட்டேங்குது.. கொஞ்சம் புரியிற மாதிரி பேசுப்பா... ஏரில்ல‌ என்ன‌ ஆச்சு? யாரும் விழுந்துட்டாங்க‌ளா???

க‌வுத‌ம்:(ஷிட் என்று முன‌கிக் கொண்டே)அதெல்லாம் ஒண்ணும் இல்ல‌ சார்... அத‌ விட்ர‌லாம்.. அப்ப‌ தான் நான் நோட்டீஸ் ச்சே.. க‌வ‌னிச்சேன்.. இவ‌ரு நான் கொடுத்த‌ காஸ்ட்யூம் போடாம இவ‌ர் இஷ்ட‌த்துக்கு போட்டு வ‌ந்திருக்கார்..

சா.பா: அப்ப‌டியா.. த‌ப்புதான‌ய்யா.. டைர‌க்ட‌ர் சொல்ற‌த‌ கேட்க‌ணுமில்லையா.. நான் கூட‌ இப்ப‌டித்தேன் 'சிவாஜி' ஷீட்டிங்க்ல‌.. ச‌ரி வேண‌ம்..பேச‌க்கூடாதுன்னு சொல்றாங்க‌.. ஏம்பா சிம்பு.. நீ ப‌ண்ணது த‌ப்பு தானேய்யா.. என்ன‌ சொல்ற நீ..

சிம்பு:(விட்ட‌த்தை வெறித்து பார்த்த‌ப‌டி) ரெண்ட‌ரை வ‌ருஷ‌மா த‌னியா தான் இருக்கேன் ஸார்... வேல‌ன்டைன்ஸ் டே கொண்டாட‌வே இல்ல‌.. நான் ரொம்ப‌ ந‌ல்ல‌வ‌ன் ஸார்..

சா.பா: அட‌ கிறுக்குப்பைய‌ புள்ள‌.. எந்நேர‌மும் ம‌ந்திரிச்சி விட்ட‌ கோழி மாதிரியே திரியுறீயேய‌ப்பா.. என்ன‌ ஆச்சி.. யாரும் ப‌த்திரிக்கைக்கார‌ங்க‌ வ‌ர‌ல‌.. நீ ப‌ண்ண‌து த‌ப்பு தான‌...

சிம்பு: ஐயா, நீங்க‌ சொல்ற‌து உண்மைன்னு வ‌ச்சிக்கிட்டா கூட‌, பைய‌ன் முன்னால‌ அப்பாவ‌ கிறுக்க‌ன்ன்னு திட்டுற‌து க‌ஷ்ட‌மா இருக்கு... ப்ளீஸ் இனிமே சொல்லாதீங்க‌..

சா.பா: (அலறியடித்துக் கொண்டு) அட‌ ஏம்பா நீ வேற.. அவர கோர்த்து விடுற..உன்னைய‌வே ச‌மாளிக்க‌ முடிய‌ல‌.. இதுல‌ உங்க‌ப்பாவ‌ வேற‌ய‌.. தெரியாம‌ சொல்லிட்டேன்.. பிர‌ச்சினைக்கு வா.. நீ ப‌ண்ண‌து த‌ப்பு தான‌...

சிம்பு: ஐயா, ப்ளீஸ்.. ஷீட்டிங்க்கு வ‌ந்த‌ உட‌னேயே என் வாயில‌ பிளாஸ்திரி போட்டு ஒட்டிடுறாரு.. டையலாக் பேச மட்டும் ஓபன் பண்றாரு.. எந்த‌ டைர‌க்ட‌ரும் என்னை இப்ப‌டி ட்ரீட் ப‌ண்ண‌தில்லை.. ஓ.கேன்னு நான் பொறுத்துக்கிட்டாலும், நேத்து இவ‌ர் ப‌ண்ண‌து கொடுமையின் உச்ச‌க‌ட்ட‌ம் ஐயா.. ப்ளீஸ்.. அப்படி என்ன ட்ரெஸ் போட்டேன்னு அவரையே கேளுங்க.. நான் அழுதுக்குறேன்.. அழுகை அழுகையா வ‌ருது..(ம் ம் என்று தேம்பி தேம்பி அழுகிறார்)

சா.பா: என்ன‌ய்யா நீ குட்டி ஒண்ணாவ‌து கொழ‌ந்த‌ க‌ண‌க்கா அழுற‌.. ஏம்பா க‌வுத‌ம், சிம்பு அப்ப‌டி என்ன‌ தான் நீ சொன்ன‌ ட்ரெஸ் போடாம‌ வேற‌ போட்டு வ‌ந்தாரு..

க‌வுத‌ம்: வெல்ல்... நான் கிரீன் க‌ல‌ர்ல‌ இன்ன‌ர்ஸ் போட்டு வர‌ச்சொன்னேன்.. ஆனா இவ‌ர்..

சா.பா: பட்டாப்பெட்டி டவுசர தான சொல்ற.. யோவ்.. அதையெல்லாம நீ எப்ப பாத்த‌.. அது எங்கேயா கேம‌ராவுல‌ வ‌ர‌ப்போகுது?

சிம்பு: (தேம்பிக் கொண்டே) நான் அப்ப‌வே சொன்னேன்ல‌..

க‌வுத‌ம்: நோ ஸார்... ஆர்ட்டிஸ்ட் என்னை கேட்காம‌ எந்த‌ ட்ரெஸ்ஸூம் போட‌க்கூடாது. இப்ப‌டி தான் போன‌ ப‌ட‌த்துல‌ சூர்யா கூட‌ ஒரு சீன்ல‌..

சா.பா: போதும் போதும் நிறுத்துயா.. இந்த‌ சின்ன‌ப்புள்ளைங்க‌ விவ‌கார‌த்துல‌ த‌லையிடுறீங்க‌ளே, பாத்து சூதான‌மா போயிட்டு வாங்க‌ன்னு என் பொண்டாட்டி சொன்னா.. அப்ப‌வே நென‌ச்சேன்யா.. உங்க‌ளுக்கெல்லாம் நான் ஒண்ணும் சொல்ல‌ முடியாது.. (என்று அல‌றிய‌டித்துக் கொண்டு ஓடுகிறார்)

**********************

11 comments:

டக்ளஸ்....... said...

கலக்கலான கற்பனை பாசு...
மதுரக் காரவுகளா நீங்க.... நானுந்தேன்
அம்ம வூட்டுப் பக்கமும் வந்து போங்க!

ஸ்ரீமதி said...

:)))))))Super.. :)))

கடைக்குட்டி said...

// உன்னயே சமாளிக்க முடியல.. இதுல உங்ன அப்பா வேறயா///

ஹா ஹா... நல்ல இருக்கு.. இன்னும் அழகா.. சின்னதா எழுதுங்க தலீவா.. சார்ட் அண்ட் சுவீட்...

ஒரு பர்சனல் கொஸ்டீன்.. |”எப்பிடி தலீவா adds போட்றது?? பிளாக் மூலயமா ஏதாவது சம்பரிக்கமுடியுமா??

Anbu said...

:)))))))Super.. :)))


கலக்கல் அண்ணா

சென்ஷி said...

ஹா ஹா ஹா

கலக்கிட்டீங்க :-)

VIKNESHWARAN said...

கலக்கல் பாஸூ....

சரவணகுமரன் said...

:-)) சூப்பரு...

SUREஷ் said...

//அட‌ கிறுக்குப்பைய‌ புள்ள‌.. //


பாருங்க தல சின்ன வார்த்தை எவ்வளவு பெரிய பிரச்சனை

Syed Ahamed Navasudeen said...

நல்ல நகைச்சுவையுடன், கற்பனை அருமை நண்பரே

நட்புடன் ஜமால் said...

நல்ல காமெடி

சூதான‌மா இருக்கனும் போல

புதுகைத் தென்றல் said...

சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது.
லிங்க் கொடுத்த ஜமாலுக்கு நாளைக்காலேல இருக்கு கச்சேரி
:)))))))))

Related Posts with Thumbnails