இனிமேல் ம்ம்ம்ம்ம்ம்ம்ம் தான்!

தோற்கும் காதல் கதைகள் காவியமாம்
எனக்கு பேராசையில்லை
உன்னுடன் வாழும் வாழ்க்கையே
எனக்கு காவியம் தான்!
ஆதலால் காவியம் படைப்போம்,
சீக்கிரம் வாடி!

உனக்கும் எனக்குமான இடைவெளிகள்
ஏன், உன் மேலுதடுக்கும்
கீழ் உதடுக்கும் இடையேயான
தூரமாக இருக்கக் கூடாது?
அன்பே, அடிக்காமல் கடிக்காமதில் சொல்லவே முடியாதா
இந்த கேள்விக்கு உன்னால்?

இந்த சுரிதார் அழகா என்று கேட்கிறாய்
மீன் விழிகளின் மூச்சுத் திணறலில்
அலுங்காமால் குலுங்காமல்
அழகாக இப்போது தான் தெரிகிறது,
உன்னால் இன்று சுரிதார் அழகானது.
நான் எப்போது?

இரவு முழுவதும் வேர்க்கிறது
பயமாக இருக்கிறது
மூச்சு திணறலும் வந்து போகிறது.
எழுந்திருக்கவும் மனதில்லை
நில்.
பிசாசே,ஒன்று கனவில் வா, இல்லை வராதே
வந்து வந்து போய் கொல்லாதே!

வெட்கம் ஒதுக்கு ஒதுக்கு, அது இடைஞ்சல்
சொன்னவன் முட்டாள் கவிஞன்
என்னால் சிவக்க சிவக்க வெட்கம்
உன்னிடம் பிறக்கும் தருணங்கள்
நான் செத்து செத்து மீண்டும்
பிறக்கும் அபூர்வ தருணங்கள்

கஷ்டமாக இருக்கிறது, ஏதோ ஒன்று குறைகிறது
தயவுசெய்து புலம்பாதே!
ஒன்றும் குழப்பிக்க வேண்டாம்
ஒரே ஒரு முறை முத்தமிடலாம்
எல்லாம் சரியாகிவிடும்!
சரிபார்த்து விடலாமா?
பொறுக்கி, என அடிக்க ஓடி வருகிறாய்
இப்போதும் குறைகிறதா?
அட ஆமா, எதுவும் குறையவில்லை
அதனால்,
அதனால்?
முத்தமிட ஆரம்பிக்கலாமா?
ம்ம் என்றாய், தலையைக் குனிந்து கொண்டு
தலையை நிமிர்த்தினேன்
இனிமேல் ம்ம்ம்ம்ம்ம்ம்ம் தான்!

************

7 comments:

dharshini said...

ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்..
கவிதை சூப்பர். :)

Anonymous said...

ரொம்ப நல்லாருக்கு கவிதை வரிகள்!

சுடிதார் வரிகள் ரசனை!

கண்ணா.. said...

\\உன்னால் இன்று சுரிதார் அழகானது.
நான் எப்போது? //

அருமை............மிகவும் ரசித்தேன்..... கலக்குறீங்க...........

கார்த்திகைப் பாண்டியன் said...

காதல் கவிதையெல்லாம் மழையாப் பொழியுது.. நடத்துங்க நண்பா.. நல்லா இருக்கு..

தராசு said...

கலக்கல்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

என்னாச்சு தல ரொம்ப நாளா ஆளையே காணல............,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//மீன் விழிகளின் மூச்சுத் திணறலில்
அலுங்காமால் குலுங்காமல்
அழகாக இப்போது தான் தெரிகிறது,//


விழி?

ஓ.கே... ஓ.கே...

Related Posts with Thumbnails