வீட்டு டைனிங் ஹாலில் ராதிகாவும், ச.ம.க தலைவர் சரத்குமாரும்
ராதிகா: என்னங்க.. இது லோக்சபா எலெக்சன்.. 40 தொகுதி தான். ரெண்டு தொகுதில நாம நின்னுடலாம். மிச்சம் 38 தொகுதிக்கும் எப்படியாவது ஆள பிடிச்சிடலாம்னு வச்சிக்கோங்க, இன்னும் ரெண்டு வருஷத்துல ஸ்டேட் எலெக்சனுக்கு 234 பேரப் பிடிக்கணுமே, என்ன பண்ண போறீங்க..
சரத்: அதை வேற நீ ஏன்மா நியாபகப்படுத்துற.. யாராவது மாட்டுவாங்க.. ஒண்ணு பண்ணலாம்.. வேணும்னா, நம்ம பொண்ணையும் ஏதாவது ஒரு தொகுதில நிப்பாட்டிடலாமா..
ராதிகா: அவளுக்கு இன்னும் ஓட்டு போடுற வயசே வரலைங்க..
சரத்: ஓ.. ஆமாம்ல.. ஒண்ணு பண்ணலாம்,.. உன்னோட 'முன்னாள்'களை கூப்பிட்டு வா.. நான், என்னோட 'முன்னாள்'களையும் கூப்பிட்டு வர்றேன். எப்படியாவது இந்த எலெக்சனை சமாளிச்சிடலாம்.
ராதிகா: நல்ல ஐடியாங்க.. டோட்டலா, எப்படியும் 40 தேறும்.
சரத்: ஆமா, ஆமா.. அப்படியே நக்மாவும் சீட்டுக்காக ரொம்ப ஆசைப்படுது.. காங்கிரஸ்காரங்க வேற அசிங்கபடுத்திட்டாங்க.. கொடுத்திடலாம்.
ராதிகா: (அப்படியே சீட்டுக்கு கீழே குனிந்து கால்களைப் பார்க்கிறார்.)
**************
(பிரஸ் மீட் வீடியோ, நெட்டில் உலாவுவதை நினைத்து குப்புறப் படுத்து குமுறிகொண்டிருந்தார், இளைய தளபதி)
ஃபோன் அடிக்கிறது. அவர் மனைவி சங்கீதா எடுக்கிறார்.
விஜய்: யார் பேசுறது?
சங்கீதா: விகடன்ல இருந்து கால் பண்ராங்க.. அந்த வீடியோ பத்தி பேட்டி எடுக்கணுமா? வர சொல்லட்டுமா?
விஜய்: (டென்ஷனாகி) நான் அமெரிக்கா போயிட்டேன்னு சொல்லிடு.
மறுபடியும் ஃபோன்.
சங்கீதா: டைரக்டர் தரணி கால் பண்ணியிருக்கார். நெக்ஸ்ட் மூவி பத்தி நல்ல ஸ்டோரி வச்சிருக்காராம். டைட்டில் கூட சிட்டுக்குருவியாம்.
விஜய்: (மெர்சலாகி, ஒரு குருவியே தாங்கலை, இப்ப இன்னொண்ணா?) நான் அடுத்த படம் பண்ண இன்னும் நாள் ஆகும். இப்ப வரவேணாம்னு சொல்லிடு.
சிறிதுநேரம் கழித்து மறுபடியும் ஃபோன்.
சங்கீதா: வில்லு படத்தோட 100வது நாள் விழாவுக்கு நீங்க வரணுமாம். ஐங்கரன்ல இருந்து கால்.
விஜய்: ஓ.. படம் வந்து 100 நாள் ஆச்சா... சரி.. லைன்லயே இருக்க சொல்லு.. நான் வர்றேன்.
சங்கீதா: என்னங்க.. அதுக்கு முன்னால, நீங்களும் டைரக்டர் பிரபுதேவாவும் சேர்ந்து ஒரு பிரஸ்மீட் அரேஞ்ச் பண்ணனுமாம்.
விஜய்: என்னது? பிரஸ் மீட்டிங்கா....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... நான் ஊர்லயே இல்லைனு சொல்லு..
விஜய் அழுதுவடிந்து கொண்டு, இமயமலை போகலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் டாடி எஸ்.ஏ.சி கால் பண்ணுகிறார்.
விஜய்: டாடி, யாருமே சரியில்லை. எனக்கு இன்டஸ்ட்ரிய பாத்தாலே பயமா இருக்கு.
எஸ்.ஏ.சி: இதுக்கெல்லாம் கவலைப்படக்கூடாது விஜய். பேசாம என் டைரக்சன்ல ஒரு படத்துக்கு கால்ஷீட் கொடேன். நல்லா இருக்கும்..
டொக்.
விஜய், இமயமலைக்கு போக கிழிந்துபோன வேட்டி, சட்டையுடன், கூலிங்கிளாஸை பேக் பண்ணிக் கொண்டு இருந்தார்.
***********
பா.ம.க தலைவர் ராமதாஸ் வீட்டில், இரண்டு வேலையாட்கள். ஒருவன் புதிய ஆள். மற்றொருவன், பழைய ஆள்
பு.ஆள்: அண்ணே, ஏன்னே வெளில பச்சைக் கலர் குவாலிஸும், மஞ்சள் கலர் அம்பாசிடரும் நிக்குது..
ப.ஆள்: டே.. வேலையப் பாருடா..
சிறிது நேரம் கழித்து,
பு.ஆள்: அண்ணே, ஏன்னே, அய்யா ஷோபால மஞ்சள் கலர் பொன்னாடையும், பச்சைக் கலர் சால்வையும் பார்சல் பண்ணி இருக்கு?
ப.ஆள்: டே.. நீ அடி வாங்கித் தான் போக போற..
பு.ஆள்: எதுக்கு அண்ணே, பழுத்த மாம்பழம் ஒரு கூடையும், மாஸா ஒரு லிட்டர் பாட்டில் அஞ்சும் தனிதனி பார்சலா இருக்கு?
ப.ஆள்: (தனியா கூப்பிட்டுபோய்) டே.. கோமுட்டி தலையா..இன்னைக்குதான் அய்யா, கூட்டணி பத்தி முடிவெடுக்க போறாரு.. இன்னும் குழப்பமா இருக்குறார்னு நெனைக்கிறேன். நீ வேற என்கிட்ட கேட்ட மாதிரி வேற யார்கிட்டயும் கேட்டுடாத... அடிய போட்டுருவாய்ங்க..
ராமதாஸ்: தம்பி, இங்க வா.. ரெண்டு விரல்ல ஒண்ண தொடு..
பு.ஆள்: அய்யா.. எதுக்க்.. எதுக்குங்குய்யா..
ராமதாஸ்: ஒண்ணும் இல்லப்பா.. பரவாயில்ல.. ச்சும்மா தொடு..
பு.ஆள்: (ஆட்காட்டி விரலைத் தொட)
ராமதாஸ்: டேய்.. யாருடா அங்க.. பச்சைக்கலர் குவாலிஸ ரெடி பண்ணு..
பு.ஆள்: (அடக் கொடுமையே.. இதுக்கு தான் தொட சொன்னாரா.. என்ன கொடுமை சார் இது!!????)
****************
சில பிரபலங்களின் வீட்டில் - கற்பனை
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
nice one..
good sense of humour! Keep it up!!
SS
இஃகி... இஃகி..
நக்கல் :)))
Super :)
நல்ல நையாண்டி பாஸ்..
ஹா ஹா ஹா செம காமெடி
கணேஷ், கலக்கல்... பூந்து வெளையாடுறீங்க..
சக்க ஓட்டு ஓட்டியிருக்கீங்க நண்பா.. சூப்பரு..
உங்க வீட்டுக்கு எந்த கலர் கார் வந்துட்டு இருக்கோ.. பார்த்து சூதானமா இருங்க..
:)
VERY SUPER
இது காமெடி யா
ஓகே ஓகே
சிரிச்சிடுறோம் பாஸ் ...
ஹி ஹி ஹி
வாழ்த்துகள்
தொடருங்கள்
பிரமாதமா கலாச்சுட்டிங்க!
ரொம்ப நக்கல் ஜாஸ்திதான்
I received one of your post in an email forward. Then i checked your blog. your posts are really nice. Keep writing !
Super a eluthuringa, keep it up boss kalakung a... valthukkal
Good machi!
:)
Post a Comment