யாவரும் நலம். சத்யம் தியேட்டரின் குளிரிலும் கொஞ்சம் வேர்த்தது உண்மை. தியேட்டர்க்கு உள்ளே செல்லும் போதே நம் ஆறாவது அறிவை டோர்ஸ்டெப்ஸில் வாங்கிக் கொண்டு தான் உள்ளே செல்ல அனுமதிக்கிறார்கள். ஆனால் யாரையும் ஏமாற்றவில்லை என்று தான் சொல்ல வேண்டும். பார்க்கும் நம் கண்கள் தான் நம்மை ஏமாற்றிவிட்டது. டாக்டரை காட்டும் எல்லா சீனிலும், அவருடைய செத்துப் போன தம்பியுடைய ஃபோட்டோ பேக்டிராப்பிலும், ஆஸ்பிட்டலில் பெரிய சைஸ் சிலையும் வைத்து இருந்த போதிலும், அந்தந்த சமயங்களில் வேறெதிலும் நம் கான்சென்ட்ரேஷன் போகவிடாமல் கொண்டு போனது தான் படத்தின் மெகாசைஸ் ப்ளஸ்.
போதாக்குறைக்கு, நம்முடைய வீக்கான ஹார்ட்டை இன்னும் வீக்காக்கிறது பி.சி.ஸ்ரீராமின் கேமரா. நாய் வீட்டுக்குள் வராமல் அடம்பிடிக்கும் காட்சியில், நம்முடைய டென்ஷனையும் மீறி, கேமராவை பென்டுலம் மாதிரி ஆட்டுவதிலேயே பாதி கிலி பிடிக்கிறது. சவுண்ட் சில இடங்களில் ஓவர் நாய்ஸ் என்று தான் சொல்ல வேண்டும். டி.வி சீரியலின் க்ளைமேக்ஸில் மாதவனைக் காட்டும்போது, ஆன்ஸ்க்ரீன் மாதவனை விட நமக்கு தான் ஷாக் அதிகம். போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு, சீரியல் கேரக்டர் என்ன ஆச்சி என வரும் டென்ஷன் ரசிக்க முடிகிறது.
ஆனால் படத்தின் க்ளைமேக்சில், டி.வி லைவ்வாக டாக்டருடன் பேசிக் கொள்ளும்போது டென்ஷனையும் மீறி வாய்விட்டு சிரிக்க முடிகிறது. ஸாரி, அந்த இடத்தில் அவர்கள் பயமுறுத்த தவறிவிட்டார்கள்.
சிக்கன் தந்தூரி, சிக்கன் 69 என்று காமசூத்ராவின் கோட் வேர்ட்ஸ் யாருக்கும் புரியவில்லை என்றால் டாக்டர் மாத்ரூபூதத்தின் தம்பி டாக்டர் நாராயணரெட்டியிடம் சென்று செக் பண்ணிக் கொள்ளவும்.
சில கொஸ்டின்ஸ்:
1. டி.வி.சீரியலில் வருபவர்கள் அனைவரும் செத்துப் போனவர்கள் தான் என்றால், அதில் உயிருள்ள மாதவன் வருவது எப்படி?
2. அந்த மனநிலை பாதிக்கப்பட்டவன், தெளிவாக டாக்டரைக் குறிப்பதற்கு ஹாஸ்பிட்டல் மார்க்கை + சுவரெங்கும் பூசும் அளவிற்கு அறிவாளி என்றால் அதை யாரிடமாவது அட்லீஸ்ட் சைகையிலாவது தெரிவித்து இருக்கலாமே?
3. ஹிண்டு பேப்பரில் தமிழில் நிகழ்ச்சி நிரல், வீட்டில் யாரும் டி.வி. சீரியலின் காட்சிகள் வீட்டோடு ஒத்துப்போவதை கண்டுகொள்ளாதது, மாதவனைத் தவிர என்பதை அனைவரும் சொல்லிவிட்டார்கள்.
()
ரெண்டு நாளாக சென்னையில் பெரும்பாலான இடங்களில், கிங்க்ஸ் கிடைக்கவில்லை. அப்படியே கிடைத்தாலும் ஒரு சிகரெட் 4 ரூபாய் 50 பைசா. அடுத்த வாரத்தில் இருந்து விலையை கூட்டப் போவதால், இப்போது இருந்தே செயற்கை பற்றாக்குறையை சேட்டுக்கள் ஏற்படுத்துவதாக ஒரு கடைக்காரர் ரொம்ப ஃபீல் பண்ணினார்.
()
இந்த வீக் எண்டில் உருப்படியான படம் பார்த்தாச்சு. அப்படியே "அருந்ததீ"யும் பார்த்துவிடலாம் என்று நேற்று போனோம். நான் பார்த்தது மட்டும் என்னுடைய சொந்த தியேட்டராக இருந்தால், தியேட்டர் ஸ்கிரீனைக் கிழித்து இருப்பேன். ஆனால் பார்த்தது ஆராதனா தியேட்டரில். எப்படி தான் இந்த படத்தை ஆந்திரா மக்கள் 100 நாளுக்கு மேல் ஓட்டினார்களோ. சத்தியாமாக புரியவில்லை.
ரத்தம், ரத்தம், ரத்தம். படம் முழுவதும் ரத்த ஆறு ஓடுகிறது. ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும், வில்லன் ஆவி அடித் தொண்டையில் இருந்து "அடியே அருந்ததீதீதீதீதீ...." என்று கத்தித் தொலைக்கிறது. ஒரே ஆறுதல், அனுஷ்கா. முதல் பாடலில் கேமரா, அப்படியே இடுப்பில் இருந்து கழுத்துவரை ஊர்ந்து செல்கிறது. இடையிடையே கேமராவை ஃபிரீஸ் பண்ணினார்கள்.
லாஜிக் அப்படின்னா என்ன என்று கேட்பார்கள் போல? ஸ்டாப். இந்த படத்தை பற்றி இவ்வளவு எழுதியதே, ஓவர். இந்த படத்தை நினைத்தாலே, எனக்கு பி.பீ எகிறுகிறது. இதில் படம் ஆரம்பிக்கும் முன் இராமநாராயணின் டிஸ்கி வேறு, "மூடநம்பிக்கை உண்டு என்ற கருத்தில் எங்களுக்கு உடன்பாடில்லை".
அடப்போங்கப்பா..
()
இன்டியன்வெல்ஸ் ATP டென்னிஸில் ஃபெடரர், அன்டி முர்ரேவிடம் செமிஃபைனலில் தோற்றுவிட்டார். நடால் வழக்கம்போல் ஃபைனலுக்கு முன்னேறிவிட்டார். நடால் தான் நெக்ஸ்ட் சாம்பியன், யாராலும் தோற்கடிக்கமுடியதவர். எப்படியாவது இன்னும் ஒரு கிராண்ட்ஸ்லாம் வாங்கி பீட் சாம்ப்ராஸ் சாதனையை பீட் பண்ணலாம் என்று இருந்த ஃபெடரருக்கு மறுபடியும் ஆப்பு. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.
()
சானியா மிர்சா வரும் போர்ன்விட்டா விளம்பரம் பார்த்து இருக்கிறீர்களா? என்ன கொடுமை சார் இது? சானியா மிர்சாவை ஸ்கூல் யூனிஃபார்மில் பார்க்க இரண்டு கண்கள் போதாது. பேசாமல், அவருடன் நானும் ஸ்கூல் யூனிஃபார்மில் ஸ்கூலுக்கு போகவேண்டும் என்று ஆசை வந்துவிட்டது. நல்ல ஆசை.
()
பார்.ரசி. யாவரும் நலம், அருந்ததீ, கிங்க்ஸ், சானியா
Labels:
பார்த்ததும் ரசித்ததும்
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
நல்ல வேளை நண்பா.. அருந்ததீ.. பார்க்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.. காப்பாற்றி விட்டீர்கள்
Nanum arunthathi parkalam nu nenachan kappathitinga
உங்க பதிவுகள் அருமை
வாங்க வாங்க என்னோட சக்கரை http://sakkarai.blogspot.com/
படித்து பிடித்தல் சுவைத்ததை சொல்லிவிட்டு போங்க
//சீரியல் கேரக்டர் என்ன ஆச்சி என வரும் டென்ஷன் ரசிக்க முடிகிறது.//
:-))) ஆமாம்
//இப்போது இருந்தே செயற்கை பற்றாக்குறையை சேட்டுக்கள் ஏற்படுத்துவதாக ஒரு கடைக்காரர் ரொம்ப ஃபீல் பண்ணினார்.//
புகை எனக்கு பகை
//இந்த படத்தை நினைத்தாலே, எனக்கு பி.பீ எகிறுகிறது//
:-) இந்த வாரம் பார்க்கலாம் என்று இருக்கிறேன்
//சானியா மிர்சாவை ஸ்கூல் யூனிஃபார்மில் பார்க்க இரண்டு கண்கள் போதாது//
;-)
Post a Comment