சத்தியமாக புரியவில்லை
கல்லூரி இறுதிநாள் விழாவில்
எனக்கு காதல் கல்யாணம் தான்
என்று நீ சொன்ன போது,
சத்தியமாக புரியவில்லை
உனக்கு வேலை கிடைத்ததை
நீ என்னிடம் தான் முதலில்
சொன்னாய் என்று
அந்தி மங்கிய மாலையில்
என்னிடம் நீ சொன்ன போதும்,
சத்தியமாக புரியவில்லை
வேலை மும்பைக்கு மாற்றம்
என கண்ணை கசக்கி
வருந்தி சொன்ன போதும்,
சத்தியமாக புரியவில்லை
உன் தோழியுடன் டூவீலரில்
சென்ற நாட்களில்
என்னிடம் சிடுசிடுத்தபோதும்,
சத்தியமாக புரியவில்லை
வழியனுப்ப பின்னிரவில்
ஏர்போர்ட்டுக்கு நீ தனியொரு
பெண்ணாக வந்த போதும்,
சத்தியமாக புரியவில்லை
என்னுடைய பிறந்தநாளுக்கு
புடவையை சுமந்து
சிவக்க சிவக்க வெட்கத்தை
உடுத்தி வந்த போதும்,
சத்தியமாக புரியவில்லை
ஏதோ ஒரு விவாதத்தில்
தலையில் குட்டி
"இது கூடவா பொண்ணுங்க
வெட்கத்தை விட்டு சொல்லுவாங்க"
என சொல்லி வெட்கச்சிரிப்பு
உதிர்த்த போதும்,
வாகனங்களின் இரைச்சலின் ஊடே,
பாஸ்பரஸ் விளக்கின்
வெளிர் மஞ்சள் வெளிச்சத்தில்,
"உன்னை லவ் பண்றேன்டா, இடியட்"
என்று ஒற்றை ரோஜாவுடன்,
விரும்புகிறேன்
என்று நீ சொல்லும்வரை!
ஒரு ஹைக்கூ
நீ கடித்து கொடுத்த கட்லெட்
நீ: "எப்படியிருக்கு"
நான்: "சாக்லெட் சூப்பர்"
...
சத்தியமாக புரியவில்லை!
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
இன்னும்கூட இது போன்ற கவிதைகளைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு எங்களுக்கு வயது வரவில்லை..
அவ்ளோ யூத்...
:-) nice
Waaw.............What a Wonderful lines...i can't believe it...
It a wonderful kavithai..
write more brother....appadiye en life la nadanthathu maathiriye irukku... sema feeling machi...
//
ஏர்போர்ட்டுக்கு நீ தனியொரு
பெண்ணாக வந்த போதும்,
//
ஓ.. போன முறை வந்தாங்களா?..
@மஹாராஜா
//
appadiye en life la nadanthathu maathiriye irukku
//
heheeh... Same blood :))
பொறுமையாய் இருங்க பாஸ். எங்களுக்கும் காலம் வரும். அப்ப நாங்களும் இதே மாதிரி கவிதை எல்லாம் எழுதுவோம்.
Nice.. :))
Post a Comment