நியூசிலாந்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் இந்திய அணியைப் பார்த்தால் கொஞ்சம் மெர்சலாகத் தான் இருக்கிறது. 391 ரன் அடித்தும், கடைசி நேரத்தில் வழக்கமான எக்குதப்பான ப்ரஸ்ஸரில் மேட்சைக் கொண்டு போன போது தோன்றியது, "இவனுங்க எவ்வளவு நல்ல ஃபார்முல இருந்தாலும், டென்ஷல் இல்லாம விளையாட மாட்டானுங்க". கடைசியில் முனாஃப் படேல் வீசிய பீமர் எல்லாம், கோமாளித்தனம், போங்கு ஆட்டம். அம்பயர் கொயர்ட்ஷன்னின் துல்லியமான அம்பயரிங் ரசிக்க முடிந்தது. சச்சினுக்கு மட்டும் வயிற்று தசைப்பிடிப்பு வராமல் இருந்து இருந்தால்.....? 50வது சதம் பக்கத்தில் தான் இருக்கு மாஸ்டர்!
காஸ்ட்யூமை மாத்துங்கப்பா. பழைய ஸ்ரீலங்கன் கிரிக்கெட் டீம் மாதிரி, யார் முகத்தையும் ஒழுங்காக பார்க்க முடியாமல் கறுப்பாக, டல் லுக்கில் இருக்கிறது. சச்சினுக்கும் மட்டும் கச்சிதமாக பொருந்தி உள்ளது.
()
நேற்று சன் டி.வியில் ஒளிபரப்பிய ஏ.ஆர்.ரகுமானுக்கு இசை உலகத்தின் பாராட்டு விழாவை, கிரிக்கெட் மேட்ச்சுடன் ரொம்ப சரியாக பேலன்ஸ் பண்ணி இரண்டையும் பார்த்தோம். இளையராஜா பேசிய பாராட்டு உரையை கேட்கும்போது, ஒரு நிமிடம் இவர் பாராட்டுறாரா, இல்லை திட்டுறாரா என்றே புரியவில்லை. இதுவரை ஏன் இவர் ஏ.ஆர்.ரகுமானை சந்த்திக்கவில்லை மற்றும் சந்திக்க மறுத்தார் என்பதற்கு குட்டிக் கதை வேறு. இவர் பாலமுரளிகிருஷ்ணாவை தான் வார்த்தைக்கு வார்த்தைக்கு பாராட்டினார். கடைசியில் கொஞ்சம் மோனோ ஆக்டிங் கலந்து மேடையில், ரஹூமானை பாராட்டி பேசியது, சூப்பர்.
வழக்கம்போல் ஏ.ஆர்.ரகுமான் முகத்தில் சாந்தம், சாந்தம், சாந்தம். அடிக்கடி எம்.எஸ்.வி வாஞ்சையுடன் கன்னத்தை தடவிக் கொடுக்கும்போது மட்டும் நெளிந்தார். இதற்கெல்லாம் உச்சகட்டம், கன்னத்தில் கொடுத்த முத்தம். பாடகி ஜானகி அவர் அப்பா சேகரை பற்றிய அனுபவங்களை சொல்லிக் கொண்டிருக்கும்போது ஏ.ஆர்.ஆர் கண்களோரம் துளிர்த்த கண்ணீரை அவர் துடைத்துவிட்டுக் கொண்ட போது நான் நெகிழ்வாக உணர்நதேன்.
("நானும் கோடீஸ்வரன்" என்ற தமிழ் டப்பிங்கிற்காக, போலீஸ்காரர் இர்ஃபானுக்கு ராதாரவியை தேர்ந்தெடுத்தவர்களை ஓட ஓட விரட்டி அடிக்க வேண்டும். வேறு யாருமே கிடைக்கவில்லையா?)
()
என் நண்பன் "யாவரும் நலம்" படம் பார்த்துவிட்டு, "ஆஹோ ஓஹோ" என்று "தமிழில் இதுவரை த்ரில்லர் படங்களிலே இது தான் பெஸ்ட்" என்றும் சர்டிபிகேட் கொடுக்கிறான். இனிமேல் தான் பார்க்கவேண்டும். நான் சினிமா எதுவும் பார்க்காமல் வீக் எண்ட் போனது, ஆச்சரியம் ஆனால் உண்மை.
()
குமுதமும், சுஜாதாவின் புகழ்பெற்ற மெக்ஸிகோவின் சலவைக்காரி ஜோக்கை "அரசு கேள்வி பதில்" பகுதியில் வெளியிட்டு புண்ணியம் தேடிக் கொண்டது. (இந்த வார புக். டோண்ட் மிஸ் இட்)
()
பெசன்ட் நகர் பீச்சில் ஞாயிற்றுக்கிழமை ஈவினிங் செல்லுவது, ரொம்ப சுவாரசியமாக இருக்கும். பீச் பக்கத்தில் கொஞ்ச நேரம் கூட உட்கார முடியாமல் வரிசை கட்டிக் கொண்டு கடையை திறந்து வைத்திருப்பது, கடுப்பான விஷயம். அதிலும் கடையை தாண்டி உட்காரலாம் என்று போனால் மக்காசோளம் சுட வைத்திருக்கும் அடுப்பில் இருந்த்து, சும்மா தக தகவென்று தீக்கணுக்கள் பறந்து வந்து மேலே விழுகிறது. இதையெல்லாம் கூட ஏதோ ஒரு விதத்தில் சகித்துக் கொள்ளலாம்.
ஆனால் பிச்சைக்காரர்கள், குட்டிகுரங்குக்கு டிரஸ் எல்லாம் போட்டு, கையோடு கூட்டிக் கொண்டு வருகிறார்கள். பிச்சையெடுக்கும்போது, அந்த குரங்கை நம் மேல் ஏறவிட்டு ஒருவிதமான அசௌகரியத்தை(பயம்?) ஏற்படுத்தி எல்லாரையும் அந்த விட்டு கெளப்பி விடுகிறார்கள். க்ரூப்பாக உட்கார்ந்த்திருந்த பொண்ணுங்க, பக்கத்தில் வந்ததும் கூச்சலுடன் தலைதெறிக்க ஓடிவிட்டார்கள். நாங்கள் தூரத்தில் அவர்கள் வருவதை பார்த்தவிடன் எஸ்ஸாகி விட்டோம். இதையெல்லாம் சம்பந்தப்பட்டவர்கள் கவனிக்க மாட்டார்களா?
()
டிஸ்கி: லைட்டாக சுஜாதாவின் "கற்றதும் பெற்றதும்" டெம்ப்ளேட்டில் எழுதலாம் என்று டிரை பண்ணி இருக்கிறேன். கொஞ்சம் பொறுத்தருளவும். வாரம் வாரம் வர்ரும். டைட்டில் காப்பிரைட் ரிஜிஸ்டர்டு. (இதெல்லாம் ஓவர் மவனே!, அடங்குடா)
....
பார்த்ததும், ரசித்ததும் - 09/03/2009
Labels:
பார்த்ததும் ரசித்ததும்
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
//கொஞ்சம் பொறுத்தருளவும். வாரம் வாரம் வர்ரும்.//
ஐய்யகோ...வாரா வாரம் வேற வருமா
//டைட்டில் காப்பிரைட் ரிஜிஸ்டர்டு.//
இது வேறயா???
Jokes Apart, பதிவு ரொம்ப நல்லா வந்திருக்கு, Start the music :))
Good!
நல்ல பதிவு நண்பா.. தொடருங்கள்..
இல்லையே இளையராஜா அடிக்கடி ரகுமானுடன் பேசிக்கொண்டுதான் இருந்தார். அவர் சங்கீதத்தை வைத்து ரகுமானை உயர்த்திப்பேசினார். சபையில் பலத்த கைதட்டல் இசைஞானியின் பேச்சுக்குத்தான் இருந்தது. கிரிக்கெட் மேட்ச் பார்த்த சுவாரஸ்யத்தில் இதனைக் கவனிக்கவில்லையா? கங்கைஅமரன் தான் தேசியவிருது பெறும் ரகுமானுக்கு வாழ்த்துக்கள் எனக் கூறி தன் அறியாமையைக் காட்டினார்(மேடையில் அல்ல சன் டிவி மைக் பிடித்த பெண்ணின் முன்னர்).
ரகுமானே தன்னைப் போற்றும்போது இன்னொருவரை இகழவேண்டாம் எனக் கூறியும் சிலர் திருந்துவதாகக் காணவில்லை.
//டைட்டில் காப்பிரைட் ரிஜிஸ்டர்டு. //
he he he
Post a Comment