ஏம்ப்பா, என்ன வேலை பாக்குறவே? துரத்தும் IT தலைவலி


வினோத், இன்றைய தேதியில் வெளியில் பெருமையாக சொல்லிக் கொள்ளும்படியான வேலை எதுவும் பார்க்கவில்லை. இவனாக கர்வப்பட்டு சொன்ன காலம் எல்லாம் மலையேறி விட்டது. யாராவது கேட்டாலும், ஏதாவது சொல்லி சமாளித்து விடுவான்.

ஏதாவது தூரத்து சொந்தங்கள், கண்ணாடியைத் தூக்கிவிட்டுக் கொண்டு, "ஏம்ப்பா, என்ன வேலை பாக்குறவே?" என்று கேட்டால், வேறு வழியின்றி "சாஃப்ட்வேர் கம்பெனியிலே HR Manager ஆக இருக்கிறேன்" என்பான். இதற்கு அப்புறம் என்ன நடக்கும் என்று யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதற்கு அந்த பெரியவர்களின் பரிகாசம், "என்னவே, பெரிய வேலை. எல்லாதையும் சேக்குறது மாதிரி சேத்துபுட்டு, நீயே ஒரு நாள் கழுத்த புடிச்சி வெளிய தள்ளுவே. இதெல்லாம் ஒரு வேலையா? எல்லாதுடைய வயித்தெரிச்சலையும், சாபத்தையும் வாங்கி நாம கஞ்சி குடிக்கணுமா? எல்லாதையும் உன்ன மாதிரி HR ஆளுங்க தூக்குறீங்க. ஆனா உங்கள மாதிரி HR ஆளுங்கள மட்டும் தூக்க மாட்டேங்குறாளே, ஏன்?? நீயே வேலைய விட்டுடுவே. ஊருபக்கம் வந்து விவசாயம் பாரு" என்ற ரேஞ்ச்சில் தொடரும். இதையும் கல்யாண மண்டப்த்திலோ, உறவினர்களின் வீட்டிலோ எல்லா சொந்தக்காரர்களின் முன்னாலும் கேட்டு தொலைந்து விடுவார்கள். மானம் போகும். வினோத்துக்கு இதெல்லாம கடந்த ஆறு மாதமாக பழகி விட்டது. அவன் காதல் மனைவி தான் அவனுக்கு பெரும் ஆதரவாகவும் ஆறுதலாகவும் இருப்பாள்.

வழக்கம்போல் ஆஃபிஸில் இந்த வாரமும் லிஸ்ட் ரெடி பண்ணிக் கொண்டிருந்தார்கள். முதன் முதலில் சிலரை இவன் பேசி துரத்தியபின் இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை. மிகவும் குற்ற உணர்ச்சியுடன் depressed ஆக இருந்தான். நாளாக நாளாக அவன் இதயமும் இறுகி போய், பழக்கப்பட்டு விட்டது. போன வாரம் மட்டும் ஒரே நாளில் 150 பேருக்கு Pink Slip ல் Sign பண்ணினான். இந்த வாரம் 20 பேர் மட்டுமே. லிஸ்டில் ஒவ்வொரு பெயராக பார்த்தான். ரவி, ஸ்ரீதர் என ஒவ்வொருவருக்கும் கால் பண்ண வரச் சொல்லி, பேப்பரில் கையெழுத்து வாங்கிவிட்டு, அப்பொழுதே ஆக்சஸ் கார்டையும் பிடுங்கிவிட்டு வீட்டுக்கு அனுப்பிவிட்டான்.

அவர்கள் தொங்கி போன முகத்தோடு, அடுத்து என்ன செய்வது? என தெரியாமல் நிர்க்கதியாய், நிராதரவாய் நிற்கும்போது, "இதெல்லாம் ஒரு பிழைப்பா?" என்று அவனே நினைத்துக் கொள்வான். சில பெண்களெல்லாம், அழுது ஆர்ப்பாட்டம் செய்து "போக மாட்டேன்" என்று அடம்பிடிக்கும்போது செக்யூரிட்டி மூலம் அனுப்பி வைத்த சோக வரலாறு எல்லாம் உண்டு. கைதிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் வேளையில் அங்கு நிற்கும் சிறை அதிகாரிகளை நினைத்து, இவன் ஓரளவுக்கு நிம்மதியடைவான். அவர்களோடு கம்பேர் பண்ணும்போது, "நான் ஒன்றும் அவ்வளவு கொடிய வேலை செய்யவில்லை" என்று சமாதானப்பட்டுக் கொள்வான்.

கடைசியாக நித்யா, இதற்கு முன்னால் இவள் வேலை செய்த ப்ராஜெக்ட்டில் டீம் லீடாக இருந்தவள். அதே டீமுக்கு இவன் HR Incharge ஆக இருந்தான், ஒரு காலத்தில். நல்ல பழக்கம். இவளிடம் எப்படி சொல்வது என்று ஒரு நிமிடம் அவனுக்கு தெரியவில்லை. ஒரு வழியாக தயங்கி தயங்கி அவளை அழைத்து, விஷயத்தை சொன்னான்.
"I'm Sorry to tell you. You're fired. Please understand I'm helpless", என்றான்.

நித்யா, "I want to know the solid reasons for being fired. This was my last time score card and appraisal ratings" என்று ஃபைலைக் கொடுத்து கேள்வி கேட்டாள்.

அதற்கு வினோத், இத்துப்போன டேப் ரிக்கார்டர் போல எல்லாரிடமும் சொன்ன அதே காரணத்தை, "This is the Management decision and since our this quarter revenue is not enough to manage the non-billable resources" 250 ஆவது முறையாக இவளிடமும் சொல்லி, PinkSlip ஐக் கொடுத்துவிட்டான். நித்யா, பொறுமையாக தன்னுடைய தலைவிதியை நொந்து கொண்டு வெளியேறினாள்.

ஒரு வழியாக எல்லாத்தையும் முடித்துவிட்டு, ரிலாக்ஸ்டாக வீட்டுக்கு வந்தான். காலிங்பெல் அடித்தான். அடித்தான். மூன்றாவது முறை பலமாக அடித்தான். வினோத்தின் அம்மா வந்து கதவை திறந்தாள். "தூங்கிட்டீங்களா? அவளும் தூங்கிட்டாளா?" என்றான். "இல்லடா, கிச்சன்ல இருந்தேன். சாப்பிட்டீயா?" என்றாள் வினோத் அம்மா. "இல்லம்மா. எடுத்துவைங்க வரேன்." என்று சொல்லிவிட்டு முகம் கழுவி விட்டு, உடை மாற்றி வந்தான்.
"அவள் சாப்பிட்டாளா?" என்று கேட்டான். "இல்லடா, தலை வலிக்குதுன்னு சொல்லி அப்பவே படுத்தா, கூப்பிடு" என்று தட்டில் இட்லி வைத்தாள். வினோத் சத்தமாக, "நித்யா, நித்யா, வா சாப்பிடலாம்"

**************************

33 comments:

Anonymous said...

நல்ல கதை நண்பரே...தியேட்டர் சீட் கவுத்தினாலும் இதில் பாஸ் ஆகிவிட்டீர்...

Cable Sankar said...

நைஸ் ராம் சுரேஷ்.. ரொம்ப நல்லாருக்கு

G3 said...

:)) Nice twist at the end.. avan wifekku vela poyirukkumnu thonuchu.. but adhu nithyannu guess pannalai :)

HR-oda point of viewla irundhu solli irundheenga.. nice to see a different point of view :)

Anonymous said...

nice story.

Anonymous said...

//"நித்யா, நித்யா, வா சாப்பிடலாம்"//

இவரு கடம வீரராம். சொந்த மனைவிக்கே பிங் ஸ்லிப் கொடுப்பாராம். ஜாலியன் வாலா பாக்குல சுட்டுக் கொன்னவன் கூட இப்படி பரிதாபமாத்தான் தன்ன பதிவு பன்னிருக்கான்.

ராம்சுரேஷ் said...

// Cable Sankar said...
நைஸ் ராம் சுரேஷ்.. ரொம்ப நல்லாருக்கு//

ரொம்ப தேங்க்ஸ் கேபிள் ஷங்கர்! உங்கள மாதிரி பெரியவங்க நம்ம ஏரியா பக்கம் வர்றது ரொம்ப சந்தோஷம்!

ராம்சுரேஷ் said...

//G3 said...
:)) Nice twist at the end..

Romba thanks :))

//avan wifekku vela poyirukkumnu thonuchu.. but adhu nithyannu guess pannalai :)

appa nan correct ta than eluthi iruken!

//HR-oda point of viewla irundhu solli irundheenga.. nice to see a different point of view :)

Thank you! Thank you!

ராம்சுரேஷ் said...

//Anonymous said...
நல்ல கதை நண்பரே...தியேட்டர் சீட் கவுத்தினாலும் இதில் பாஸ் ஆகிவிட்டீர்..//

// Anonymous said...
nice story.//

//Anonymous said...
//"நித்யா, நித்யா, வா சாப்பிடலாம்"//

இவரு கடம வீரராம். சொந்த மனைவிக்கே பிங் ஸ்லிப் கொடுப்பாராம். ஜாலியன் வாலா பாக்குல சுட்டுக் கொன்னவன் கூட இப்படி பரிதாபமாத்தான் தன்ன பதிவு பன்னிருக்கான்//


ஹலோ, நான் என்ன இட்லிவடை மாதிரி என்ன கான்ட்ரோவர்சியாவா எழுதிட்டு வர்றேன். ஏன எல்லாரும் முகமூடி போட்டு திட்டுறீங்க.. ஓபனா உங்க ஐ.டில வந்தே திட்டி இருக்கலாம்.

ச்சின்னப் பையன் said...

நல்லாயிருக்கு கதை..

ஆளவந்தான் said...

//
:)) Nice twist at the end.. avan wifekku vela poyirukkumnu thonuchu.. but adhu nithyannu guess pannalai :)
//
naan guess pannuneen.. amma kathavu thirakkum pothe guess pannen :)

kalakkunga ramprasath

Raji said...

Hi Ram Suresh,

எதிர் பார்க்காத முடிவு... நன்றாக இருக்கிறது

முரளிகண்ணன் said...

good one ram suresh. continue,

RAMASUBRAMANIA SHARMA said...

H.R. என்ற பிரிவில் இதைத்தான் செய்வார்களா....!!! Software companies dosen't have Trade Unions...!!! நாங்கள்ளாம் வேலை பார்த்த Pharma Industry H.R.ல் எல்லாருமே நல்லவஙக தான்....!!! On the controry...H.R. people will come and ask us(the Supervisors in the Front & Second Line) in all the conferences, the reasons for people leaving the organization. We also get negative points, for each person, leaving and if it exceeds 6 persons, in a single year, then, we will get a letter about our leadership qualities. If proper answers not given as reply, then we will be called for a special training programme(here also no exit pool interviews), and we will be equipped as per the requirements of the organisation, in the management cader... Now also the same situation continues....I think, the term, "You are Fired"...is being used only in Private Sectors, where there is no strong Unions functioning....The points expressed here, are purely from my experience only...However, there is always possibility of "CHANGES"...which is only "CONSTANT"...

RAMASUBRAMANIA SHARMA said...

y.p.

ssk said...

good narration. But does the HR use the word "fire" while giving pinkslips ??!!

SUREஷ் said...

இனிமேல் இட்லி சரியான நேரத்தில் கிடைக்கும்

ஷண்முகப்ரியன் said...

ஆழமான சோகத்தை மெல்லிய குரலில் சொல்லும் கதை.நன்றாக இருக்கிறது.

ராம்சுரேஷ் said...

ஹேய் மனசுக்குள் ஒரே டான்ஸ் தான். இந்த பதிவை யூத்ஃபுல் விகடனின் இணையபக்கத்திற்கு இணைப்பு கொடுத்து இருக்கிறார்கள்.

G3 said...

//ஹேய் மனசுக்குள் ஒரே டான்ஸ் தான். இந்த பதிவை யூத்ஃபுல் விகடனின் இணையபக்கத்திற்கு இணைப்பு கொடுத்து இருக்கிறார்கள்.//

Congrats :)))

ராம்சுரேஷ் said...

வருகை புரிந்த அனைவருக்கும், நன்றி.

//ச்சின்னப் பையன் said...
நல்லாயிருக்கு கதை..//

தேங்க்ஸ் ச்சின்னப்பையன்!

//ஆளவந்தான் said...
kalakkunga ramprasath//

தேங்க்ஸ் ஆளவந்தான்! பேர் தெரிஞ்ச நீங்களே ஒவ்வொருமுறையும் மாத்தி மாத்தி சொல்லலாமா!

//Raji said..
எதிர் பார்க்காத முடிவு... நன்றாக இருக்கிறது//

தேங்க்ஸ் Raji..

//முரளிகண்ணன் said...
good one ram suresh. continue,//

தேங்க்ஸ் முரளிகண்ணன்!

ராம்சுரேஷ் said...

Thanks for your visit RAMASUBRAMANIA SHARMA!

//ssk said...
good narration. But does the HR use the word "fire" while giving pinkslips ??!!//

I'm not sure ssk.. It was just my imagination and am not HR person either :). Thanks for your visit.

// SUREஷ் said...
இனிமேல் இட்லி சரியான நேரத்தில் கிடைக்கும்//

இந்த முழுக்கதையும் படிச்சதுல இட்லி டைமுக்கு கிடைக்கலங்கறது தான் உங்களுக்கு பிரச்சினையா தெரியுதா :) :) ???
தேங்க்ஸ் SUREஷ்

//ஷண்முகப்ரியன் said...
ஆழமான சோகத்தை மெல்லிய குரலில் சொல்லும் கதை.நன்றாக இருக்கிறது.//

உங்களிடம் வாங்கிய பாராட்டு உண்மையில் மனதுக்கு நிறைவாக இருக்கிறது.
ரொம்ப தேங்க்ஸ் சார்!

ராம்சுரேஷ் said...

// G3 said...
Congrats :)))//

Thanks for your wishes! I have one question. What is the meaning of G3?

கிரி said...

ராம் சுரேஷ் நல்லா எழுதி இருக்கீங்க..

இது கதை என்றாலும் இதில் நடக்கும் சம்பவங்கள் உண்மை தான்.. (கடைசி முடிவை தவிர)

சந்தனமுல்லை said...

ரொம்ப நல்லா இருக்கு! ஃப்ளோ சூப்பர்!
அப்புறம் ட்விஸ்ட்-உம்!

அமுதா said...

நல்ல கதை. நல்ல ட்விஸ்ட்...

ASSOCIATE said...

அருமையான கதை ,, தற்போதைய நிகழ்வுகளின் அசல் பதிவு -நல்லா எழுதி இருக்கீங்க..! ! !

ராம்சுரேஷ் said...

வருகைக்கு நன்றி கிரி, சந்தனமுல்லை, அமுதா, ASSOCIATE!

PRK said...

'Fired' is a wrong word to use during RIFs. People are let go and not fired. Normally people get fired for under-performance or wrong doing.

ஜீவா said...

உங்க பதிவு விகடனில் பிரசுரமாகியுள்ளது

http://youthful.vikatan.com/youth/bcorner.asp

வாழ்த்துக்கள்

மங்களூர் சிவா said...

/
ராம்சுரேஷ் said...

ஹேய் மனசுக்குள் ஒரே டான்ஸ் தான். இந்த பதிவை யூத்ஃபுல் விகடனின் இணையபக்கத்திற்கு இணைப்பு கொடுத்து இருக்கிறார்கள்.
/

அங்கிருந்து தொடுப்பு புடிச்சி வந்தேனுங்கண்ணா கதை நல்லா இருக்கு.

YUVA said...

Sathiyama Solren Ganesh, Pinnite.. Konjam enakum solli kuden, My writings are serious, unable to comprehend to others views too.

Kamal said...

நல்ல கதை கணேஷ்!!!!
முடிவு எனக்கு முன்னாடியே தெரிஞ்சுடுச்சு :)))))))))))

Anand - Ivan oru mokkai samy alla!!! said...

Climax-la oru touch. Nalla irunthuchu Ganesh!

Related Posts with Thumbnails