டாக்ஸி-புலம்பல், ஏ.ஆர்.ரகுமான்-ப‌ரவசம்

நேற்று இரவில் இருந்தே எதிர்பார்ப்பு. நைட் படத்துக்கு எதுக்கும் போக வேண்டாம், லைவ்வாக பார்க்கலாம் என்று ரூம்மேட் ஐடியா கொடுத்தான். எப்படியும் 22 ஆம் தேதி அமெரிக்காவில் இரவு நேரத்தில் விருது வழங்குகிறார்கள். ஸோ, எப்படியும் நம் காலை நேரத்தில் தான்டா அவார்டு ஃபங்ஷன் என்று திடீர் ஐடியாவைக் கொடுக்கவும், எல்லாரும் நைட் படத்துக்கு போகலாம் என்று கோரஸாக முடிவு பண்ணினோம். உதயத்தில் டிக்கெட் கெடைக்காது என்ற எங்களின் எதிபார்ப்பில், எதிர்பாராமல் அடி விழுந்தது. 9 மணிக்கு செல்லும்போதும் கவுண்டரில் கூப்பிட்டு கூப்பிட்டு டிக்கெட் கொடுத்தனர். உதயத்தின், பிளாக் டிக்கெட் கல்ச்சர் பத்தி தான் தெரியுமே!!! ஒருவேளை, பிளாக்கில் விற்பவர்கள் தான், கவுண்டரில் சாவகாசமாக துணிச்சலுடன் உட்கார்ந்து விற்கிறார்களோ என்ற பயம், டிக்கெட் விலையைக் கொடுத்தே டிக்கெட் வாங்கும் வரை இருந்தது.

நாங்கள் பார்த்த படம், சத்தியமாக என் நினைவில் இல்லை. நாங்கள் டிக்கெட் வாங்கும்போதும், "டாக்ஸி" என்று சொல்லி தான் வாங்கினோம். படத்தின் பெயர், "தநா 01 அல 4777" ஆக இருக்கும் என்று நினைக்கிறேன். நல்ல தமிழில் பெயர் வைக்கிறேன் பேர்வழிகள் என்று சொல்லி வாயில் நுழையாமல் இப்படியா பேர் வைக்க வேண்டும். ஆக நான் இந்த படம் பார்த்துவிட்டேன். ஸோ, விமர்சனம்.. பசுபதிக்காக இந்த படத்தை பார்க்கலாம். ஆத்திச்சூடி ரீமிக்ஸ்(என்ன கொடுமை சார் இது?) பாட்டில் இவர் ஆடும் குத்தாட்டத்தை பார்க்கும்போது, இன்னும் ஏன் எந்த புண்ணியவான் டைரக்டரும் ஏதாவது ஒரு பாட்டில் இவரை ஆடவைக்கவில்லை என்று தெரியவில்லை.

12 மணிநேரத்தில் நடக்கும் கதை தான். பசுபதியைத் தவிர வேற எந்த கேரக்டரும் டிரெஸ் சேஞ்ச் கூட பண்ணவில்லை. :( க்ளைமேக்சில், பசுபதி, அஜ்மலின் மனமாற்றம் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்று எனக்கு தோன்றுகிறது. சில இடங்களில் கொட்டாவியும், அட போங்கடா என்றும் சொல்ல வைக்கிறார்கள். நடுநடுவில் பசுபதியின் அக்மார்க் நடிப்பும், டைமிங் காமெடியும் ரசிக்க வைக்கிறது. சிம்ரன், நோ கமெண்ட்ஸ். 4 வருஷத்துக்கு முன்னால், எப்படி எல்லாம் ரசித்த ஃபிகர். பெருமூச்சு மட்டும் இப்போது.

ஹாலிவுட் பட ரேஞ்சில், இந்த படம் சரியாக 1 மணிநேரம் 51 நிமிடம் மட்டுமே. இடைவேளையும் சேர்த்தால் இரண்டு மணிநேரம். இப்படி படம் எடுத்து, டூவீலர் பார்க்கிங்கில் என் வண்டியை எடுக்க விடாமல் அரை மணிநேரம் வெயிட் பண்ண வைத்து சதி பண்ணிவிட்டார்கள். :(

*******

படம் பார்த்து விட்டு வந்தும் CNN டி.வியை பார்த்தால் மறுநாள் காலை 7 மணியில் இருந்து லைவ் கவரேஜ் என்று சொல்லி அவர்கள் கடையை மூடி கல்லா கட்டி விட்டார்கள். காலையில் சாவகாசமாக 9 மணிக்கு எழுந்து, விழுந்து அடித்துக் கொண்டு டி.வியை ஆன் பண்ணினால், Slumdog க்கு 2 விருதுகள் மட்டும் என்று ஃப்ளாஷ் ஓடிக் கொண்டிருந்தது. எதில் லைவ்வாக போடுகிறார்கள் என்று தேடிய போது StarMovies ல் ஓடிக் கொண்டிருந்தது.

ஏ.ஆர்.ரகுமான் பெயரை சொல்லும்போது, சொன்னால் நம்ப மாட்டீர்கள்.. ரூமில் தூங்கி எழுந்து பார்த்த அனைவரும் கைதட்டி மகிழ்ந்தோம். அதுவும் தமிழில், "எல்லா புகழும் இறைவனுக்கே" என்று சொல்லும்போது, ஓவென்று கத்தி விட்டோம். அந்த அரங்கில் இருக்கும் யாருக்கும், ஏன் Slumdog டீமுக்கே அதற்கு என்ன அர்த்தம் என்று தெரியாது. டீமையும் விடுங்கள். இந்தியாவில் இருக்கும் யாருக்கும் தெரியாது, தமிழ் தெரியும் 6 (7?) கோடி தமிழர்களுக்கும், வெளிநாட்டில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் மட்டும் புரிந்த, தெரிந்த வார்த்தை. அது தான் ஏ.ஆர்.ஆர். தமிழர்களுக்கு கிஃப்ட்டாக கொடுத்த பரவசம். பின்னர் வழக்கம்போல "ஜெய் ஹோ" பாடலை அவர் குரலில் அங்கு ஒலிக்க, நாம் கேட்பதும் இனிமையான பரவச நிமிடங்கள்.

தமிழ்நாட்டில் ஏதாவது சினிமா விழாக்களில், இங்க்லீஷில் பேசுவதை ஸ்டைலாகவும், பெருமையாகவும் நினைக்கும் ஸ்ரேயாக்களுக்கும், த்ரிஷாக்களுக்கும் கொடுத்த மூக்குடைப்பு. கீழே உள்ள ஃபோட்டாவில் ஸ்டைலாக போஸ் கொடுக்கும் ஏ.ஆர்.ஆரை பார்க்கும்போது எனக்கு தோன்றிய கமெண்ட். இவருக்கு ஏன் ரெண்டு கை இருக்கிறது? இரண்டுக்கு பதிலாக மூன்றோ, நான்கோ இருந்தால் அதிலும் ஆஸ்கரை வென்று ஸ்டைலாக போஸ் கொடுத்திருக்கலாமே?(என்ன ஒரு முட்டாள்தனமான கமெண்ட்?)


*******

ஆஃபிஸில் எங்க மேனஜரின் புண்ணியத்தில், அதிர்ஷ்ட குலுக்கலில்(Raffle, கரெக்ட் தான?) 500 ரூபாய்க்கான லேண்ட் மார்க்கில் பர்சேஸ் பண்ணுவதற்கான‌ கிஃப்ட் கூப்பன் கிடைத்துள்ளது. நல்ல புக்ஸ் வாங்குவதற்கு ஐடியாக்களும், பரிந்துரைகளும் வரவேற்கப்படுகின்றன. இல்லை, கூப்பன் தான் வேண்டும் என்று யாராவது அடம்பிடித்தால், அவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். ***Conditions Apply.

டிஸ்கி: ச்சே, Cash ஆக கொடுத்து இருந்தால், நைட் "SIGNATURE"க்கும் சைட் டிஷ்க்கும் பயன்பட்டிற்கும். ஆஃபிஸ் புண்ணியவான்கள் கெடுத்து விட்டார்கள்.

(யாருக்காவது இலவசமாக வேண்டும் என்று என்னிடம் கேட்க நினைப்பவர்கள், டிஸ்கியையும், Conditions Apply யையும் பார்த்துவிட்டு, யோசித்து கேட்கவும்.)

*******

9 comments:

சரவணகுமரன் said...

ரஹ்மான் - சேம் பீலிங்...

Anonymous said...

proud moments.rahman is great.

raffle - thats right.

Anonymous said...

proud moments.rahman is great.

raffle - thats right.

G3 said...

:))))))

enakku kudutheengannalum ok dhaan..

Conditionum disci-yum padichitten..

Kaiyezhuthu dhaane.. pottu kudutha pochu.. side dish.. ada main dishae namma aalavandhan selavula vaangi kuduthudalaam.. sambar sadham podhumla :P

கிரி said...

நல்லா எழுதி இருக்கீங்க :-)

SUREஷ்(பழனியிலிருந்து) said...

பெயரில் என்ன பாஸ் இருக்கிறது..?

ஷண்முகப்ரியன் said...

கணேஷ்,உங்கள் உற்சாகத் துள்ளலையும் லேண்ட்மார்க் ஸ்டாலையும் இணைத்துப் பார்த்தால் 500 ரூபாய்க்கு எனது சிபாரிசுகள்.
புத்தகமாக இருந்தால் LEE CHILD ACTION THRILLERS,
CDயாக இருந்தால் YANNI அல்லது ஏ.ஆர்.ரஹ்மான்,
அல்லது ஒரு கலைப் பொருள் வாங்கி உங்களுக்குப் பிடித்த பெண்ணுக்கு.

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்ல பதிவு.. ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள்..

கணேஷ் said...

வருகைக்கு நன்றி சரவணகுமரன், அனானி.

//G3 said...
Kaiyezhuthu dhaane.. pottu kudutha .. side dish.. ada main dishae namma aalavandhan selavula vaangi kuduthudalaam.. sambar sadham podhumla :P//

அவ்வ்வ்.. நீங்க அவ்வளவு நல்லவங்களா? சத்தியமா நான் என்ன சொல்ல வர்றேன்னு உங்களுக்கு புரியலையா? சரி ரைட் விடுங்க.. ஆளவந்தான்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு சொல்லுங்க..

வருகைக்கு நன்றி கிரி, SUREஷ்!

//ஷண்முகப்ரியன் said...
கணேஷ்,உங்கள் உற்சாகத் துள்ளலையும் லேண்ட்மார்க் ஸ்டாலையும் இணைத்துப் பார்த்தால் 500 ரூபாய்க்கு எனது சிபாரிசுகள்.
புத்தகமாக இருந்தால் LEE CHILD ACTION THRILLERS,
CDயாக இருந்தால் YANNI அல்லது ஏ.ஆர்.ரஹ்மான்,//

உங்க‌ள் சிபாரிசுக்கு ரொம்ப‌ ந‌ன்றி சார்.

//ஒரு கலைப் பொருள் வாங்கி உங்களுக்குப் பிடித்த பெண்ணுக்கு.//

சார், இது ஃப்ரீயா லைட்டர் கெடைச்சதுங்கிறதுக்காக, தம் அடிக்க தெரியாதவன் சிகரெட் வாங்கி பத்த வைக்கிறது மாதிரி. இதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேணும் சார்... எனக்கு இன்னும் அமையல :((

வருகைக்கு நன்றி கார்த்திகைப் பாண்டியன்

Related Posts with Thumbnails