எப்போ க‌ல்யாண‌ம்?


காதலின் குறுகுறுப்பை ஒருமாதிரியாக‌
உன்னிட‌ம் வெளிப்ப‌டுத்திய‌போதும்,

அதை சின்ன சின்ன‌ த‌லைய‌சைத்த‌லில்
நீ ஏற்றுக் கொண்ட‌போதும்,

பேருந்தில் நில‌வு வ‌ழித்துணையில் என்
தோளில் ஆழ்ந்து தூங்கிய‌போதும்,

நெருக்கிய‌டித்த‌ பேருந்தில் உன்பின்னால் நின்று
ப‌ய‌ண‌ம் செய்த நாட்களின் கூந்த‌ல்வாச‌மும்,

சில்லென்று காற்றுவீசும் க‌ட‌ற்க‌ரையில்
உன் நுனிவிரல்கள் கோர்த்து ந‌ட‌க்கும்போதும்,

துணிக்க‌டையில் புத்தாடையை தோளில் மாட்டி
எப்ப‌டி என புருவத்தை உயர்த்தி கேட்ட‌போதும்,

வேக‌த்த‌டையில் வ‌ண்டி வேக‌த்தை குறைத்து நீ
என் இத‌ய‌த்துடிப்பின் வேக‌த்தை பதற வைத்த‌ போதும்,

இவைதான் நீ என்னிடம் வெட்கப்பட்ட தருணங்கள்
அவைதான் நீ பெண் என்ற‌ நினைவை
என்னுள் நிறுத்தி வைக்கும் ந‌ங்கூர‌ங்க‌ள்.
அவைதவிர நீ என் சுரிதார் அணிந்த தோழன்!
இதுவும் போரடிக்கிறது என்று நாம் அலுக்கும்
நிமிடங்களில் நீ என்னிடம் கேட்கும் ஒரு
கேள்வி, அதேபோல் நானும் உன்னிடம்
"எப்போ க‌ல்யாண‌ம்? "
காத்துக் கொண்டிருக்கிறேன் என்னை
உன்னில் பாதியாக்கும் நொடிக்காக!

***************

கொஞ்சம் ஹாட்!!

இனிமேல் எனக்கு காய்ச்ச‌ல் என்றால்
க‌ழுத்தில் கைவைத்து பார்க்காதே?
சூட்டில் கொதித்துக் கொண்டிருக்கும்
உட‌ம்பு இன்னும் கொதித்து
உருகிவிட‌ப் போகிற‌து?

***************

டிஸ்கி: இனிமேல் எந்த கவிதைக்கும் டிஸ்கி போட‌ மாட்டேன். நான் என்ன‌ சொன்னாலும், இந்த‌ உல‌க‌ம் ந‌ம்ப‌ ம‌றுக்கிற‌து. :(

***************

7 comments:

சரவணகுமரன் said...

நம்புற மாதிரி இருந்தாதானே நம்புறது? :-)

SUREஷ் said...

முக்காடு போட்டுக் கொண்டு காதல்...?

நல்லாயிருந்தா சரி...

கார்த்திகைப் பாண்டியன் said...

கவிதை உண்மையிலேயே அருமை.. வாழ்த்துக்கள் நண்பா..

இராகவன் நைஜிரியா said...

// கொஞ்சம் ஹாட்!!

இனிமேல் எனக்கு காய்ச்ச‌ல் என்றால்
க‌ழுத்தில் கைவைத்து பார்க்காதே?
சூட்டில் கொதித்துக் கொண்டிருக்கும்
உட‌ம்பு இன்னும் கொதித்து
உருகிவிட‌ப் போகிற‌து? //

ரொம்ப ஹாட்டா?

பட்டாம்பூச்சி said...

Nice :))))

பட்டாம்பூச்சி said...

Nice :))))

ஆதவா said...

நல்லா இருக்குங்க... படமும் அருமை!!! சூப்பர்.

Related Posts with Thumbnails