என்னுடைய பெயரிலேயே!

இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால், இதுவரை "ராம் சுரேஷ்" என்று என் நண்பன் பெயரில் எழுதிவந்த நான், இன்று முதல் கூச்சத்தையெல்லாம் தூக்கி எறிந்து விட்டு என்னுடைய பெயரிலேயே எழுதலாம் என்று முடிவு பண்ணிவிட்டேன். இதனால் சொல்ல விரும்புவது என்னவென்றால், இந்த இரண்டு மாதமாக எனக்கு அளித்து வந்த ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

ஏதோ புதிதாக வந்தவன் என்று என்னை ஒதுக்க வேண்டாம் என்றும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

டிஸ்கி: இது நேற்று இரவில் என் நண்பன் "ராம் சுரேஷ்", "SIGNATURE" வாங்கித் தராததால் எடுத்த முடிவல்ல.

*****************

14 comments:

கிரி said...

வாங்கோ! வாங்கோ! கலக்குங்கோ :-)

சரவணகுமரன் said...

ஆஹா! இதென்ன கொடுமை?

ஆக்சுவலா, அவரு வாங்கி கொடுக்காட்டி தானே நீங்க அவரு பேருல எழுதணும்?

கோவி.கண்ணன் said...

இரண்டு மாதமாக உங்கள் நண்பருக்கு பெயர் வாங்கிக் கொடுத்து இருக்கிங்கன்னு சொல்லுங்க

தமிழன்-கறுப்பி... said...

\\
"ராம் சுரேஷ்", "SIGNATURE" வாங்கித் தராததால் எடுத்த முடிவல்ல.
\\

:)

விஜி சுந்தரராஜன் said...

வருக வருக !

வெண்பூ said...

மீண்டும் நல்வரவு கணேஷ்...

//
டிஸ்கி: இது நேற்று இரவில் என் நண்பன் "ராம் சுரேஷ்", "SIGNATURE" வாங்கித் தராததால் எடுத்த முடிவல்ல.
//
நம்பிட்டோம்..நம்பிட்டோம்.. அப்புறம் என்ன பண்ணினீங்க? நீங்களே வாங்குனீங்களா? :)))

ஆளவந்தான் said...

//
மதுரைக்காரன். இப்போ சென்னையில ரொம்ப சீரியஸா வேலை பாத்துக்கிட்டு இருக்கேன்.
//

//
இந்த இரண்டு மாதமாக எனக்கு அளித்து வந்த ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
//

என்ன இப்படி சொல்லீட்டிங்க கணேஷ் ( கரெக்டா சேஞ்ச் பண்ணேனா? ) நம்ம ஊர்க்கார பயபுள்ளைக்கு இல்லாத சப்போட்டா (இது பழமில்ல)..

அட்சு தூள் கெளப்பு மாமூ :))))


//
ரொம்ப சீரியஸ், ரொம்ப மொக்கை எல்லாம் பிடிக்காது. மானே, தேனே என்று இலக்கிய நடையோடு பேசுவதும் சுத்தமா பிடிக்காது.
//
இந்த மாதிரி விளக்கம் எல்லாம் தர தேவையில்லேனு தான்.. என் பேரை ஆளவந்தானு வச்சிருக்கேன் .. கடவுள் பாதி, மிருகம் பாதி கலந்து செய்த கலவை தான் என்னோட பதிவு எல்லாம் ..ஹி..ஹி.. ஹி.. சுய புராணம் போதும்’னு நெனக்கிறேன்

ஊர் சுற்றி said...

வாங்க வாங்க...
இப்படியே எல்லாரும் முடிவெடுத்தா என்னங்க ஆகறது...!!!!

//இரண்டு மாதமா// உங்களுக்கு அளித்து வந்த ஆதரவாஆஆஆ?

நீங்க எந்த கூட்டணியில இருக்கீங்க?!!!

vinoth gowtham said...

கணேஷ் செந்தில்குமரன் நல்ல பெயர் தானே..இதில் என்ன கூச்சம்..

கார்க்கி said...

வழக்கம்போல அடிச்சு ஆடுங்க.. சச்சின் அடித்தாலும் சவுரவ் அடித்தாலும் பவுண்டரிக்கு நாலு ரன்தானே

கணேஷ் said...

நன்றி கிரி

//சரவணகுமரன் said...
ஆஹா! இதென்ன கொடுமை?

ஆக்சுவலா, அவரு வாங்கி கொடுக்காட்டி தானே நீங்க அவரு பேருல எழுதணும்?//

வேணாம் நான் அழுதுடுவேன்..

கணேஷ் said...

வருகைபுரிந்து தொடர்ந்து ஆதரவு அளிக்கும் அனைவருக்கும் நன்றி..

//வெண்பூ said...
நம்பிட்டோம்..நம்பிட்டோம்.. அப்புறம் என்ன பண்ணினீங்க? நீங்களே வாங்குனீங்களா? :)))//

என்ன‌ ப‌ன்ற‌து நானே வாங்கித்தான் அடிச்சேன். 200 ரூபாய் கையை க‌டிச்சிடுச்சி :(

ஆள‌வ‌ந்தான்,

நீங்க‌ இருக்கிற‌ தைரிய‌த்துல‌ தான், நான் தொட‌ர்ந்து எழுத‌லாம்னு இருக்கேன்.

//ஊர் சுற்றி said...
நீங்க எந்த கூட்டணியில இருக்கீங்க//

ந‌ல்ல‌ கேள்வி. க‌ல்யாண‌மாகாத‌ பேச்சில‌ர்ஸ், டாஸ்மாக் ஃப்ரெண்ட்ஸ் என‌ நெறைய‌ கூட்ட‌ணியில‌ இருக்கேன்.

//vinoth gowtham said...
கணேஷ் செந்தில்குமரன் நல்ல பெயர் தானே..இதில் என்ன கூச்சம்..//

வேணாம் நான் அழுதுடுவேன்.

தேனியார் said...

மதுரக்காரத் தம்பியா? வாங்க வாங்க.
தூள் கிளப்புங்க கணேஷ்.

Subbu said...

//"SIGNATURE" வாங்கித் தராததால் எடுத்த முடிவல்ல.;// :)))))

Related Posts with Thumbnails