கண்களுக்கு எனைக் காண
தடை போட்டேன் என்று
பதில் சொல்கிறாய்
வெட்கத்தை விட்டு !
பாவாடை தாவணியில்
குத்துவிளக்காய் ஜொலிக்கும் நீ
மினி ஸ்கர்ட் ஸ்லீவ்லெஸ்ஸில்
தெருவிளக்காய் தூதுவிடுகிறாய்
கண்சிமிட்டி!
முத்தத்தின் போதையை விட
'டாடி பக்கத்தில்' என்று
கிசுகிசுக்கும் வேளைகளின்
ஹஸ்கி வாய்ஸின் பதற்றத்தில்
பன்மடங்கு ஏற்றுகிறாய்
பாதி குவார்ட்டரின் போதை!
'டாடி வீட்டில் இல்லை'
'ரூம்மேட் ரூமில் இல்லை'
'தியேட்டரில் கூட்டமே இல்லை'
என்ற உன் உற்சாக குரல்களுக்கு
'தேமே' வென்று 'பயமா இருக்காடா'
என கை பிடித்து ஆறுதல்
சொன்ன தருணங்களில்
'சரியான லூசுடா' என்ற உன் பார்வைகளின்
அர்த்தம் புரியவில்லை
கரணட் போன தெருவின் முனையில்
கன்னத்தில் நீ முத்தமிடும் வரை!
பர்த்டேக்கு நீயே செய்து
எடுத்து வந்த குளோப் ஜாமூனைவிட
தேனாய் இனித்தது
செல்லும்போது கன்னத்தில் நீ இட்ட முத்தம்!
சரி அதே ஸ்வீட் உன் பர்த்டேக்கு
தரலாமென்று நான் நினைத்தால்
திளைக்க திளைக்க இதழ்முத்தம்
தந்து யோசிக்க வைத்தாய்
கிஃப்ட் எனக்கா? உனக்கா?
இல்லை நமக்கு.
மூச்சுமுட்ட முத்தம்
முடியுமா?
முடியாது, கஷ்டம் என்றாய்
சரி செக் பண்ணலாம் என்றேன்
"திருடா" என்று நெஞ்சில் குத்த ஓங்கினாய்,
"மெதுவாக, உன் இதயத்திற்கு வலிக்கும்" என்றேன்
வலிக்கும் என் இதயத்திற்கு
ஒத்தடம் வேண்டாம் உன்
இதழ் தடம் மட்டும் போதும் என்றாய்!
மூச்சுமுட்டவா என்றேன்.
நீ என்னை அடிக்க துரத்துவதை
மேகத்தில் இருந்து தேவதைகள்
ஆசிர்வதிக்கிறார்கள் மலர் தூவி!
ஹார்ட்பீட் செக்பண்ணும் டாக்டர்க்கு
சுத்தமாக புரியவில்லை
"ஏன் இப்படி அநியாயத்துக்கு ஏறுது இறங்குதுன்னு"
அவருக்கு எப்படி தெரியும்
வெளியில் உட்கார்ந்திருந்த உன்னுடைய
சுரிதாரின் துப்பட்டா காற்றில்
பறப்பதும் நீ சரிசெய்வதும்!
***********************************
பி.கு: என்னுடைய சொந்த கவிதை. முதன்முதலில் எழுத ட்ரை பண்ணி இருக்கிறேன். பிழைகள் இருந்தாலோ, உரைநடை வடிவில் இருந்தாலோ பொறுத்தருள்க ப்ளீஸ்.
டிஸ்கி: நான் யாரையும் காதலிக்கவில்லை! இது என்னுடைய சொந்த அனுபவமா போன்ற கேள்விகளை வெறுக்கிறேன் :(
************************************
இளம்காதல் ஜோடிகள் வாழ்க!
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
Naan endha kelviyum kekkalappa..
Kavidhaigal arumainu mattum inga sollikaren :)
அருமை
//திளைக்க திளைக்க இதழ்முத்தம்
தந்து யோசிக்க வைத்தாய்
கிஃப்ட் எனக்கா? உனக்கா?
இல்லை நமக்கு.//
அருமையான வரிகள்
//டிஸ்கி: நான் யாரையும் காதலிக்கவில்லை! இது என்னுடைய சொந்த அனுபவமா போன்ற கேள்விகளை வெறுக்கிறேன் :( //
இப்பதான் சந்தேகம் வருது........
[B]ராம் சுரேஷ்
இதுதான் ஆரம்பம். கவிதைகள் எழுத காதல் ஒரு நல்ல தளம். முதலில் கவிதை எழுதியதற்கு எனது பாராட்டுக்கள்...
இப்போ உங்க கவிதையை அலசலாம்[/B]
[B]கவிதைகளைப் பொறுத்தவரையில் அநாவசிய ஆங்கில வார்த்தைகள் தவிருங்கள். தூய தமிழ் நல்ல கவிஞனுக்கு ஒரு பாதை அமைத்துக் கொடுக்கும்.[/B]
[B]ஒவ்வொரு பத்தியும் அடுத்த பத்திக்கு தொடர் இணைப்பை நேர்முகமாகவோ மறைமுகமாகவோ கொடுக்கவேண்டும்.[/B]
[I]கண்களுக்கு எனைக் காண
தடை போட்டேன் என்று
பதில் சொல்கிறாய்
வெட்கத்தை விட்டு !
[/I]
[B]இந்த பத்தியிலிருந்து அடுத்த பத்தி எதன் தொடர்ச்சி என்பதை சரியாக விளக்காமல் தொக்கி நிற்கிறது.. இதை நீங்கள் களைக்கலாம். [/B]
[B]ஒரு காதலின் அனுபவங்கள் கொஞ்சும் பொழுது கற்பனைகள் மிதந்திருக்கவேண்டும். ஆனால் ஆரம்பக் கவிதை என்பதால் நீங்கள் எழுதிய கவிதை வரை, ஓகே!! சபாஷ்[/B]
[B]1. வெறும் வார்த்தை உரையாடல்களாக எப்பொழுதும் கவிதையை நகர்த்தாதீர்கள். அல்லது அதை கதை வடிவத்திற்குள் கொண்டு சென்றுவிடுங்கள்..[/B]
[B]2. கடைசி பந்தியின் தரம் மற்ற எப்பந்தியையும் தூக்கி சாப்பிடுகிறது.. பெரும்பாலும் அத்தகைய கவிதைகள்தான் காதல் களத்தில் முன்னின்று நிற்கின்றன.[/B]
[B]தொடர்ந்து எழுதுங்கள்.. பிறந்த எல்லோரும் கவிஞன் ஆகிவிடுவதில்லை... நீங்கள் எப்பொழுது அடியெடுத்து வைக்கிறீர்களோ அப்பொழுதிலிருந்து உங்களுக்கான நொடி ஆரம்பமாகிவிட்டது...[/B]
[B]அன்புடன்[/B]
[B]ஆதவன்[/B]
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.
நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்
உணர்வுகள் நன்று.
ஆகட்டும் ஆகட்டும்.. வெறுக்கிற மாதிரி கேள்வி கேக்கவான்னு நெனச்சேன்.. பரவாயில்ல விடுங்க...
அட, இதுக்கும் யூத்ஃபுல் விகடன்ல லிங்க் கொடுத்து இருக்காங்க..
Post a Comment