நான் தான் தியேட்டர் சீட்!நகரில் தங்க இடம் ஏதுமின்றி புதிதாக‌ தஞ்சம் புகுந்தவர்களை தாங்கி ஆறுதல் அளிக்கிறான் சில மணித்துளிகள்!

விடாது பேயும் பேய்மழைக்கு புகலிடம் சில பிளாட்பார நல்லுள்ளங்களுக்கு!

தார்ச்சாலை கொதிக்கும் கத்திரி வெயிலுக்கு, ஏ.ஸியில் சுகமான கனவுடன் தூங்கும் தலையணை ஆட்டோ நண்பனுக்கு!

படம் பார்க்கிறேன் என்று முகத்தில் புணரும் ஜோடிகளை தினம்தினம் அருவருப்புடன் ஏந்திக் கொள்ளும் புண்ணியவான்கள்!

தோளில் கைபோட்டு இருக்கும் பாய்ஃப்ரெண்ட் மேல் சாய்ந்துகொண்டு, வுட் பியுடன் இரைச்சலில் ரகசியம் பேசும் மாடர்ன் கண்ணகிகளை தினமும் எண்ணிக்கொண்டு இருப்பவன்!

லோ ஹிப் ஜீன்ஸும், ஷார்ட் டீ-ஷர்ட்டுடன் வரும் நுனிநாக்கு தமிழ் காஸ்மோபாலிடன் கேர்ள்ஸை ஜொள்ளுடன் தாங்கும் இதயம்!

நேற்று இவன் அவளுடன் வந்தான்; இன்று வேறொருத்தியுடன் வருகிறான் என்று சொல்ல முடியாமல் வருந்தும் மௌன சாட்சிகள்!

மல்லிகைப்பூவுடன், வளையல் சலசலக்க வந்தால் புதுமனைவியுடன் வருகிறான் புதுகணவன் என்று கண்ணை மூடிக் கொண்டு சொல்வான்!

தொடர்ந்து உட்கார வைத்து சூடாக்கும் நல்ல இயக்குநர்களை எதிர்ப்பவன் அமைதியாக!

பேரரசு, சிம்பு, டி.இமான், ஸ்ரீகாந்த் தேவா தயவால் அடிக்கடி இளைப்பாறும் நல்லவன்!

ஜே.கே.ரித்திஷ் புண்ணியத்தால் காலியாகவே ஓடும் 150 நாட்கள் ச‌ம்மர் வெகேஷன்!

அழுது கண்ணீர் ஆறாய் ஓட காரணமான சேரன்களும், பாலாஜி ஷக்திவேல்களும் எதிரிகள்!

கண்ட கண்ட ஸ்டார்களின், தளபதிகளின் புதுப்பட ரிலீஸ் நாட்களில் மிதி வாங்குகிறான் வெறும் காலாலும், கிழிந்துபோன செருப்பாலும்!

அதே கூட்டத்தை திரையில் எவனாவது தலையில் தட்டினாலோ இல்லை மூக்கின் நுனியில் மட்டும் ரத்தம் வர அடித்தாலோ, எறியப்படுகிறான் உடைக்கப்பட்டு!

குத்துப்பாட்டின்போது 80லிருந்து 120கிலோ சதை பிண்டங்கள் குலுங்குவதை தாங்குகிறான் நாலு காலில் கஷ்டப்பட்டு!

குடித்துவிட்டு வந்தாலும், வாந்தி எடுத்து அசிங்கப்படுத்தினாலும் மூக்கை மூடிக் கொண்டு நிற்பவன் அசராமல்!

முட்டை போண்டாவும், பாப்கார்னும் ஒரு நாளைக்கு நான்கு முறை ஷிஃப்ட் போட்டு வந்து போனாலும், இவனுக்கு அதே சூடு தான் வாழ்நாள் முழுவதும்!

*******************

10 comments:

ஆளவந்தான் said...

வாவ்.. நச் பதிவு சுரேஷ்.

ராம்சுரேஷ் said...

யாருமே கண்டுக்கவே இல்லையே பாஸ்! சரி ரைட் ஃப்ரீயா விட வேண்டியது. தேங்க்ஸ் ஆளவந்தான்!

Kamal said...

ராம் சுரேஷ்!!! என்னமோ டிரை பண்ணிருக்கீங்க.....
நல்லாத்தான் இருக்கு...வித்தியாசமா :))))))))))))))))))

Kamal said...

///யாருமே கண்டுக்கவே இல்லையே பாஸ்! சரி ரைட் ஃப்ரீயா விட வேண்டியது. தேங்க்ஸ் ஆளவந்தான்!///
இத எல்லாம் பாத்தா நாங்கல்லாம் எப்படி எழுதறது????
அரசியல்ல இதெல்லாம் சாதாரணம் பாஸ் :))))))))

ராம்சுரேஷ் said...

//ராம் சுரேஷ்!!! என்னமோ டிரை பண்ணிருக்கீங்க.....
நல்லாத்தான் இருக்கு...வித்தியாசமா :)//

Thanks Kamal :)

ராம்சுரேஷ் said...

//இத எல்லாம் பாத்தா நாங்கல்லாம் எப்படி எழுதறது????
அரசியல்ல இதெல்லாம் சாதாரணம் பாஸ் :)))//

:(

சரவணகுமரன் said...

சூப்பர்...

ராம்சுரேஷ் said...

//சரவணகுமரன் said...
சூப்பர்...//

நன்றி சரவணகுமரன்!

முரளிகண்ணன் said...

super ram suresh. nice one.

ராம்சுரேஷ் said...

//முரளிகண்ணன் said...
super ram suresh. nice one. //

Thanks முரளிகண்ணன்!

Related Posts with Thumbnails