ஏன்டா, இப்படி பசங்க மானத்த வாங்குறே?

சரவணனும், ருக்குவும் இன்ஞ்சினிய‌ரிங் காலேஜில் இருந்து ஒன்றாக படித்தவர்கள். இப்போது பெரிய சாஃப்ட்வேர் நிறுவனத்தில் சென்னையில் ஆளுக்கு ஒரு மூலையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ரொம்ப ரொம்ப திக் ஃப்ரெண்ட்ஸ். வாரத்தில் குறைந்தது ஐந்து தடவையாவது பார்த்துக் கொள்வார்கள். காலேஜில் இருந்தே ஏகப்பட்ட வதந்திகள். பார்ப்பதற்கும் இரண்டு பேருக்கும் இடையே அட்டகாசமான கெமிஸ்ட்ரி பொருந்தி இருக்கும்.

கல்லூரி காலத்தில் இருந்தே குறைந்தது 50 பேராவது ரெண்டு பேரிடம் பெர்சனலாக, "நீங்க லவ் பண்றீங்களா?" என்ற கேள்வியை கேட்டு இருப்பார்கள். சொல்லி வைத்தது போல, "ஏன் ஒரு பையனும் பொண்ணும் நல்ல ஃப்ரெண்ட்ஸிப்போடு பழகக்கூடாதா? நாங்க நல்ல ஃப்ரெண்ட்ஸ்" என்று பதில் சொல்லி இருப்பார்கள். இவர்கள் ஏன், டிபார்மெண்ட் HOD கூட ஒரு தடவை கேட்டுவிட்டார். இத்தனை பேர் கேட்டு இருந்தாலும், இவர்கள் எந்த சஞ்சலமும் இல்லாமல் பழகிக் கொண்டிருந்தார்கள். கேட்டவர்களும் ஒரு நிமிடம் "நாம் தான் தப்பாக நினைத்துவிட்டோமோ?" என்று ஏதாவது ஒரு தருணத்தில் யோசித்து இருப்பார்கள்.

அவளுடைய ஹாஸ்டல், நுங்கம்பாக்கத்தில். இவன் ரூம், அடையாறில். ஒழுங்காக தூங்கி, சாப்பிட்டு, ஆஃபிஸில் வேலை பார்க்கிறார்களோ இல்லையோ, எப்படியாவது அடித்து பிடித்து பார்த்து விடுவார்கள். தினமும் காலையில் இவள் ஃபோன் கால் அவனை எழுப்பிவிடும். அவன் அசந்து தூங்கும் சமயங்களில் இவளுடைய ஃபோன் கால்ஸ். ரெண்டு பேரும் சேர்ந்து பார்க்காத படம் இல்லை. தி.நகர், மெரீனா பீச், பிரார்த்தனா டிரைவ் இன், பொன்னுசாமி ஹோட்டல், கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் என எங்கிலும் ஜோடியாகத் தான் பைக்கில் சுற்றுவார்கள். இவளை(னை)யோ, எங்கேயாவது தனியாக பார்த்தால், கண்டிப்பாக கண்ணை மூடிக் கொண்டு சொல்லலாம், அவள்(ன்) சொந்த ஊருக்கு போய் இருக்கிறாள்(ன்) என்று.

சரவணன், "ஹேய் ருக்கு, இன்னிக்கு சிவா மனசுல சக்தி ரிலீஸ். அபிராமியில் டிக்கெட் போடட்டுமா?" என்று கேட்டான். "ஹலோ சார், வெள்ளிக்கிழமை நைட் உங்க அருமை ஃப்ரெண்ட் முத்துவேலோடு சேர்ந்து பார்ட்டிக்கு போகலியா?" என்றாள்.

"பாத்தியா, கிண்டல் பண்றேளே? நான் தான் இப்ப அதிகமா தண்ணி அடிக்கிறது இல்லைல. மறுபடியும் மறுபடியும் ஏன் அதை சொல்லிக் காட்டுற?"

"அப்படியா, இப்பவும் தம் அடிக்கிறத நீ குறைக்காம தான் திரியுற? எத்தனை வருஷமா சொல்லிக்கிட்டு இருக்கேன். திருந்தவே மாட்ட. சரி டிக்கெட் போடு. எனக்கு இப்ப க்ளையண்ட் கால். பை"

காலேஜ் நாட்களில் இருந்து ருக்கு, சரவணனை திட்டுவது என்றால், அது இந்த காரணத்திற்கு மட்டும் தான். கொஞ்ச நாட்களாக, சரவணனுக்கு ருக்கு மேல் ஏதோ ஒன்று சொல்ல தெரியாத ஃபீலிங். போன தடவை, பஸ்ஸில் ஒன்றாக ஊருக்கு போன தருணத்தில் அவள் இவன் தோளில் சாய்ந்து தூங்கியதில் இருந்து தான், சரவணன் மனதில் அரக்கன் புகுந்து விட்டான். அவளிடம் எப்படி சொல்வது என்று சத்தியமாக தெரியவில்லை. ஆனாலும் சீக்கிரம் சொல்லி விடுவது என தீர்மானத்துடன் இருந்தான்.

ஒரு சனிக்கிழமை அதிகாலையில், மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு, பிரகாரத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது சொல்லிவிடலாம் என்று சரவணன் முடிவு பண்ணினான். ருக்கு ஆரம்பித்தாள். "சரா, இன்னிக்கி நைட் நான் ஊருக்கு போறேன். என்னை பொண்ணு பார்க்க வர்றாங்க. சிங்கப்பூர் மாப்பிள்ளையாம். ஈவ்னிங் ஹாஸ்டல் வந்து என்னை கூப்பிட்டு போறீயா?"

மனதைப் பிழியும் சோகத்துடன் ஒரு நிமிடம் என்ன சொல்வது என்று தெரியாமல், "சரி. என்ன திடீர்னு? என்கிட்ட சொல்லவே இல்ல."

"எனக்கே நேத்து நைட் தான் தெரியும். சீக்கிரம் செட்டில் ஆகணும்ல. இவனை பார்த்து நாட் ஓ.கேன்னு சொல்லிட்டு, எனக்கு பிடிச்ச மாதிரி பையன் குவாலிட்டிஸ்ஸ அப்பாக்கிட்ட சொல்லிட்டு, நைட் டிரெயின் பிடிச்சு கிளம்ப வேண்டியது தான்!" என்று தெளிவாக உடைத்து சிதறும் கோவில் தேங்காய் போல உடைத்தாள்.

இவ‌ளிட‌ம் சொல்லி புரிய‌ வைப்ப‌து, ரொம்ப‌ க‌ஷ்ட‌மான‌ விஷ‌ய‌ம் என்று ம‌ட்டும் ச‌ர‌வ‌ண‌ன் ம‌ண்டையில் உறைத்த‌து. ஏற்கெனவே குவாலிட்டிஸ் அது எதுன்னு பெரிசா பேசுறா? தம், தண்ணி, "மவனே, சரவணா நீ செத்த" என்று புலம்பிக் கொண்டான். எக்மோர் ஸ்டேஷனில் வெயிட் பண்ணிக் கொண்டிருந்தான். அவள் இறங்கியவுடன்,"என்ன‌ ஆச்சு?" என்றான். "நான் நென‌ச்ச‌ மாதிரி தான் ந‌ட‌ந்த‌து" என்றாள் க‌ண்ணை சிமிட்டியப‌டி. பின் அவ‌ளை ஹாஸ்ட‌லில் விடும்வ‌ரையில் அவ‌ன் ஒரு வார்த்தை கூட‌ பேசவில்லை. "ஈவினிங், பெச‌ன்ட் ந‌க‌ர் பீச் போக‌லாமா?" என்று கேட்டாள் ல‌ஞ்ச் பிரேக்கில். அவள் ரொம்ப கேஷுவலாக பீச் மணலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை ரசித்துக் கொண்டிருந்தாள். ரொம்ப‌ நேர‌ம் மௌன‌த்திற்கு பிறகு, "என்ன மாதிரி குவாலீட்டிஸ்னு உங்க அப்பாகிட்ட சொன்ன" என்று கேட்டான்.

"ம்ம்ம். நல்ல ஹைட்ல, மனசுக்கு பிடிச்ச மாதிரி, நான் பண்ணுற தப்புகளை ரசிக்கிற மாதிரி கியூட்டான‌ பையனா..." என்றாள். அவள் முடிக்கும்முன் பொறுமையில்லாமல் "இப்ப நான் சொல்றத கொஞ்சம் பொறுமையா கேளு. தப்புன்னு தெரியும். ஆனா என்னால தாங்கிக்க முடியல. நான் உன்ன லவ் பண்றேன் ருக்கு. ப்ளீஸ் என்னை இக்னோர் பண்ணாத" என்றான் கொஞ்சம் விட்டால் அழுதுவிடும் குரலில். ருக்கு,அவனை ஏற இறங்க ஒரு முறை பார்த்தாள். அடக்க முடியாத கோபத்துடன், "ஏன்டா, இப்படி பசங்க மானத்த வாங்குறே?. ஒரு பொண்ணு மனசுல என்ன நினைக்கிறான்னு கூட தெரியாத லூசா நீ. இதைப் பத்தியெல்லாம் பேசுற டைமா இது?

நான் எங்கப்பாகிட்ட பேசி சம்மதம் வாங்கிட்டு, கல்யாணத்துக்கு தேதியும் குறிச்சுட்டு வந்திட்டேன். ஆனா, ஹீரோ சார் இப்ப தான் ப்ரோப்பஸே பண்றார்." என்றாள். "அப்ப என்னை பத்தி ஒரு நிமிஷம் கூட நீ யோசிக்கலையா?" என்றான் ஹஸ்கி வாய்ஸில் சோகத்தை டன் டன்னாக டோஸ்ட் பண்ணி. "உன்னை வச்சிட்டு என்னடா பண்ணுறது. சரியான டியூப்லைட். நீ தான்டா மாப்பிள்ளை. உன்னை பத்தி தான்டா அப்பாகிட்ட பேசுனேன்." என்றாள் முதல் முறையாக சரவணனிடம் வெட்கத்துடன்..

ஒரு பஞ்ச்:: சம வயதில் உள்ள ஒரு பையனும் பொண்ணும் நல்ல ஃப்ரெண்ட்ஸா ரொம்ப நாள் இருக்கவே முடியாது. கண்டிப்பாக அது காதலில் முடியும்; இல்லையென்றால் ஃப்ரெண்ட்ஸிப் பிரேக் ஆகிவிடும்.

************************

16 comments:

Anonymous said...

nice story keep it up....

SUBBU said...

me the first :)

வினோத் கெளதம் said...
This comment has been removed by the author.
CA Venkatesh Krishnan said...

நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.

பஞ்ச் சரியா இருக்கலாம்.

வினோத் கெளதம் said...

நல்ல இருக்குங்க "உங்க" காதல் கதை..
உண்மை சம்பவம் மாதரி ஒரு Feel இருக்கே..

Anonymous said...

romba sorinchiteengale.

Rajalakshmi Pakkirisamy said...

Nice Story

கார்த்திகைப் பாண்டியன் said...

சாரி கணேஷ், உங்க பஞ்ச் ரொம்ப ரொம்பத் தப்பு.. இன்னைக்கு வரைக்கும் நண்பர்களா மட்டுமே வாழுற ஆணும் பெண்ணும் இருக்காங்க.. இவ்வளவு அழுத்தமா நான் சொல்லக் காரணம், எனக்கே அப்படி ஒரு தோழி இருக்குறதால தான்.. மற்றபடி கதை நல்லா இருக்கு..

ஷாஜி said...

super sir...

ஷாஜி said...

//சாரி கணேஷ், உங்க பஞ்ச் ரொம்ப ரொம்பத் தப்பு.. இன்னைக்கு வரைக்கும் நண்பர்களா மட்டுமே வாழுற ஆணும் பெண்ணும் இருக்காங்க.. இவ்வளவு அழுத்தமா நான் சொல்லக் காரணம், எனக்கே அப்படி ஒரு தோழி இருக்குறதால தான்.. மற்றபடி கதை நல்லா இருக்கு..//

உங்களுக்கு தொழ்ஹி இருக்கலாம்; ஆனால் இந்த கதையில் வருவது போல் இவ்வளவு நெருக்கமா இருக்கறவங்க தோழியா மட்டும் இருக்க முடியாது. அது நட்பையும் தாண்டிய காதல் என்பதுதான் நடைமுறை உண்மை.

வெற்றி said...

நல்ல கதை.

பட்டாம்பூச்சி said...

கதை எழுதறதுல பின்றீங்களே....கலக்குங்க :)))
உங்க வலைபூல பேரு மாறி இருந்தத பாத்துட்டு என்னன்னு கேக்கலாம்னு வந்தா அதையே ஒரு பதிவா போடறீங்க நீங்க? ;)

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைப்பூக்கள்‌/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

வெண்பூ said...

வாழ்த்துக்கள் சரவணன்..ச்சீ.. கணேஷ்.. :)))))

கணேஷ் said...

மக்கா, வந்த எல்லாருக்கும் நன்றி..

//வெண்பூ said...
வாழ்த்துக்கள் சரவணன்..ச்சீ.. கணேஷ்.. :))

பாஸ், Why இந்த கொலைவெறி?

Anonymous said...

Boss... It is very nice... :)

Related Posts with Thumbnails