சமூகத்தால் விரும்பப்படாத, நிராகரிக்கப்பட்ட, அந்த இடத்தில் தன்னை வைத்து நினைத்து கூட பார்க்க விரும்பாத இரு வேறுபட்ட மக்களின் வாழ்க்கையை பாலா, இளையராஜாவுடன் சேர்ந்து செதுக்கி இருக்கும் படம்.
எல்லாரும் சொல்வதுபோல் ஆர்யாவுக்கு சேது, பிதாமகனில் விக்ரமுக்கு கிடைத்த மாதிரியோ, நந்தா, பிதாமகனில் சூரியாவுக்கு அமைந்த மாதிரியோ நடிப்பின் உச்சத்தை தொடும் அளவுக்கு வேலையில்லை. உண்மை தான். ஆனால் இந்த படத்தில், காசியில் வாழ்ந்த அகோரிக்கு பெரிதாக நடிப்பதற்கு என்ன ஸ்கோப் இருக்க முடியும்? சொந்த பந்தங்கள், சாதாரண மனிதன், கோபக்காரன் போன்ற கேரக்டருக்கு வாழ்வின் ஏதாவது ஒரு சமயத்தில் உணர்வை கொட்டி நடிக்க வேண்டி இருக்கும். வாழ்வில் பற்றற்ற சந்நியாசி, தன் மனதில் கடவுள் என்று நினைத்துக் கொண்டிருக்கும் ஒருவனுக்கு வேறு என்ன நடிப்பில் வேரியேஷன் காட்டி நடிக்க முடியும்?
பாலாவுடைய இந்த படத்தின் பெஞ்ச் மார்க், அவரின் முந்தைய படங்கள் தான். இவரின் முந்தைய படங்களின் பெரிய ப்ளஸ், க்ளைமேக்ஸ் சீன் லாஜிக் ஜஸ்டிஃபிகேஷன். ஆனால் இந்த படத்தில் எல்லாரும் சொல்வது போல் அது மிஸ்ஸிங். அப்புறம் சொல்வது ஸ்கிரீன்ப்ளேயின் தொய்வு. இதில் எனக்கும் சிறிது ஏமாற்றமே. இரண்டாம் பாதியில் ஒரு மாதிரி Non-Linear ஆக இருக்கிறது. ஒரு படபடப்பு மிஸ்ஸிங்.
ஜெயமோகன் பற்றியும், அவர் எழுத்துக்களும் எனக்கு அவ்வளவாக பரிச்சயம் இல்லாததால் நுண்ணரசியல், பின்நவீனத்துவம் என்று எதுவும் நினைவுக்கு வராமல், வசனங்களை ரசித்தேன். அந்த குட்டிப்பையனின் டைமிங் பஞ்ச், சான்ஸே இல்லை.
பூஜாவுக்கு, லைஃப் டைம் அச்சீவ்மென்ட் ரோல். ஆரம்பகாட்சிகளில் அவருக்கு டப்பிங்(அவரோட வாய்ஸ் தான்) பொருந்தவில்லை. ஆனால் போக போக பின்னியிருக்கிறார். அதிலும் அந்த க்ளைமேக்ஸ், பின்னீட்டாங்க. அருமையான ஸ்கோர். இவர் பாட்டு பாடும் போது, பின்ணணியில் ஒரிஜினல் ட்ராக்கை விட்டது நெருடல். அதிலும் "தாயிற் சிறந்ததோர் கோயிலுமில்லை" என்ற சுந்தரம்பாள் பாட்டிற்கு அவர் வாயசைப்பது கெட்ட காமெடி. கவனித்து இருக்கலாம்.
படம் முழுவதும் இழையோடும் காமெடி, படத்தின் பெரிய ப்ளஸ். இங்க்லீஷ் படங்களில் கிராஃபிக்ஸ் முகத்தோடு வரும் வில்லன்கள் மாதிரி, ஒருவரை தேடிப் பிடித்து இருக்கிறார்கள். பாதி உடைந்து போன மூக்கும், வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் கண்களும், கோணிக் கொண்டிருக்கும் வாயும், மொத்தத்தில் சகிக்கவே இல்லை. நல்லவேளை, ஒரு தடவை கூட அவர் முகத்தை முழுமையாக காட்டவில்லை. பாதி பார்த்ததற்கே இன்னும் ஒரு மாதிரி இருக்கிறது.
இளையராஜாவை பற்றி புகழ்ந்து சொல்லிக் கொண்டே இருக்கலாம். அவரின் இரு பாடல்களை படத்தில் பார்க்கமுடியாமல் போனது வருத்தமே. பேக்ரவுண்ட் ஸ்கோர் பெரும் அதிர்வைக் கொடுத்தது.
எனக்கு இந்த படம் மிகவும் பிடித்து இருந்தது. இரண்டு நாட்கள் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் எல்லாரும் விரும்பி பார்க்கக்கூடிய படமா என்று கேட்டால் எனக்கு தெரியவில்லை. யார் யாருக்கெல்லாம் "சகிப்புத்தன்மை" அதிகமாக இருக்கிறதோ, அவர்கள் தாராளமாக பார்க்கலாம். அதேபோல் பாலா ஸ்டைல் ஃபிலிம் மேக்கிங் பிடித்தவர்கள், கன்னாபின்னாவென்று ரசிக்கலாம். ஆச்சரியமாக, நான் இந்த ரெண்டு கேட்டகிரியிலும் இருப்பதால் எனக்கு பிடித்து இருந்தது. மற்றவர்கள் ஒதுங்கிக் கொள்ளலாம். (அப்புறம் குத்துதே, குடையுதேன்னு சொல்றது யூஸ்லெஸ்!)
நான் கடவுள் - சாட்டையடி
Labels:
சினிமா,
திரை விமர்சனம்
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
\\எனக்கு இந்த படம் மிகவும் பிடித்து இருந்தது. இரண்டு நாட்கள் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் எல்லாரும் விரும்பி பார்க்கக்கூடிய படமா என்று கேட்டால் எனக்கு தெரியவில்லை. யார் யாருக்கெல்லாம் "சகிப்புத்தன்மை" அதிகமாக இருக்கிறதோ, அவர்கள் தாராளமாக பார்க்கலாம். அதேபோல் பாலா ஸ்டைல் ஃபிலிம் மேக்கிங் பிடித்தவர்கள், கன்னாபின்னாவென்று ரசிக்கலாம். ஆச்சரியமாக, நான் இந்த ரெண்டு கேட்டகிரியிலும் இருப்பதால் எனக்கு பிடித்து இருந்தது. மற்றவர்கள் ஒதுங்கிக் கொள்ளலாம்\\
nice
என்ன இன்னும் உங்க விமர்சனம் காணோமே என்று பார்த்தேன் :-)
நல்லா இருக்கு உங்க விமர்சனம்
பரீட்சை எப்படி எழுதுனீங்க?
//சரவணகுமரன் said...
பரீட்சை எப்படி எழுதுனீங்க?
//
கெட்ட காமெடிங்க.. ரெண்டு மணி நேர எக்ஸாம, 45 மினிட்ஸ்லயே முடிச்சிட்டேன். பாஸ் ஆகிடுவேன்னு நெனைக்கிறேன்.. பிரச்சினை இல்ல..
நல்ல விமர்சனம் ராம்சுரேஷ்.. எனக்கு படம் பிடிக்காதுன்னு நெனக்கிறேன்.. :(
சாட்டையடி யாருக்குனு சொல்லவே இல்ல :)
//மற்றவர்கள் ஒதுங்கிக் கொள்ளலாம். (அப்புறம் குத்துதே, குடையுதேன்னு சொல்றது யூஸ்லெஸ்!)//
இதுதான் நச்...
//யார் யாருக்கெல்லாம் "சகிப்புத்தன்மை" அதிகமாக இருக்கிறதோ, அவர்கள் தாராளமாக பார்க்கலாம்.//
:):):)
இந்த படத்துக்கு இவ்வளவு விமர்சன பதிவா....
// அதிலும் "அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே" என்ற சுந்தரம்பாள் பாட்டிற்கு அவர் வாயசைப்பது கெட்ட காமெடி. கவனித்து இருக்கலாம். //
அது தாயிற் "சிறந்ததோர் கோயிலுமில்லை" என்ற சுந்தராம்பாள் பாடல் நண்பா...
//நான் இந்த ரெண்டு கேட்டகிரியிலும் இருப்பதால் எனக்கு பிடித்து இருந்தது. மற்றவர்கள் ஒதுங்கிக் கொள்ளலாம். (அப்புறம் குத்துதே, குடையுதேன்னு சொல்றது யூஸ்லெஸ்!)//
Me too...
FInal comment was superb...
//Sriram said...
அது தாயிற் "சிறந்ததோர் கோயிலுமில்லை" என்ற சுந்தராம்பாள் பாடல் நண்பா...//
மிக்க நன்றி! திருத்தி விட்டேன் நண்பா!
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.
நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்
வருகைபுரிந்த அனைவருக்கும் நன்றி.
// ஆளவந்தான் said...
சாட்டையடி யாருக்குனு சொல்லவே இல்ல :)//
யாருக்கும் இல்லீங்க. எடுத்து இருந்த சப்ஜெக்ட்ட ரொம்ப காட்டமா சொல்லியிருக்கிறார்ன்னு அப்படிங்கறதுக்காக சாட்டையடின்னு சொன்னேன்
சரியான விமர்சனம் ராம் சுரேஷ்..பாடல்கள் எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது.
// "தாயிற் சிறந்ததோர் கோயிலுமில்லை" என்ற சுந்தரம்பாள் பாட்டிற்கு அவர் வாயசைப்பது கெட்ட காமெடி. கவனித்து இருக்கலாம்//
அது பகடி. சினிமாவில் இருந்து கொண்டே சினிமாவை கிண்டலடிப்பது. இதுவரை சொல்லிக்கொடுத்த சென்டிமென்ட்டை இடது காலால் உதைப்பது ....
மற்றபடி உங்கள் விமர்சனம் நன்றாக வுள்ளது.. இன்னொருமுறை படம் பார்த்தீர்கள் என்றால் வேறு ஒரு பிரதி கிடைக்கும்
தாயிற் சிறந்ததோர் கோயிலுமில்லை padal paadiahu S. Varalahshmi Entru ninnaikkiaraen Padam Agathiyar. (Sorry Ennidam Tamil Fonts Illai)
grsdass
Post a Comment