கணேஷ்-சியாமளா.. 1 2 3 4 5 6 7 8 9 10
நடப்பது எதுவுமே கணேஷுக்கு புரியவில்லை.எல்லாவற்றையும் கடவுள் மேலே போட்டுவிட்டு, கொஞ்சம் கொஞ்சமாக நார்மல் லைஃபுக்கு மாறினான். திங்கள்கிழமை காலையில் வழக்கம்போல ஆஃபிஸ் வந்திருந்தான்.
கணேஷ், அவன் க்யூபிக்கிளை சுற்றி ஒரு நோட்டம் விட்டான். சியாமளா கேபினில் அவள் இல்லை. ஓரளவுக்கு நிம்மதியாக இருந்தது. மெஷின் ஆன் பண்ணி, இமெயில் செக் பண்ணிக் கொண்டு ரிலாக்ஸ் மூடில் இருந்தான்.
திடீரென்று நாலைந்து பெண்கள், கணேஷை சுற்றி வந்து கொண்டனர்.
"ஹேய் கணேஷ், கங்கிராட்ஸ்! சொல்லவே இல்ல" என்று சொல்லிக் கொண்டே அவன் கையை வலுக்கட்டாயமாக பிடித்து வாழ்த்து சொன்னாள் ஒரு பாப் கட் தலை.
"???"
"புதுமாப்பிள்ளை முறுக்கு இப்பவே வந்திருச்சி?" சிறுவாணி தண்ணியில வளர்த்த லாங் ஹேர் கேர்ள்
"கல்யாணம் எப்போ?" இன்னொரு சைஸ் ஸீரோ சுரிதார் பெண்.
இப்படி மாறி மாறி கேள்வி கேட்டதும், கணேஷ் துடுக்குற்றான், "ஆஹா, அந்த சனியன் ஊர் ஃபுல்லா சொல்லிருச்சா? புது ஆஃபிஸ்ல வந்த சகுனமே சரியில்லை" என தனக்குத் தானே பேசிக் கொண்டான். "எப்ப அந்த பேரழகிய பார்த்தேனோ அன்னைலர்ந்து என் மைண்ட் வாய்ஸ் மட்டும் தான் பேசுது. வாயிலிருந்து ஒரு வார்த்தையும் வரமாட்டேங்குது. எப்படி இருந்த நான், இப்படி ஆ...கிட்டேன்" என்று விட்டத்தை வெறித்தான்.
"என்ன பாஸ், இப்பவே ட்ரீம்க்கு போயிட்டீங்களா? சொல்லு எங்க போகலாம் மேரேஜ் ட்ரீட்?"
கணேஷ் "எனக்கு சென்னைல நிறைய பார், பப் எல்லாம் தெரியாது? நீங்களே சொல்லுங்க"
பாப்கட், "ஹலோ, திஸ் இஸ் டூ மச். ட்ரீட் அங்கல்லாம் வேணாம். கல்யாணத்துக்கு வரும்போது ஹோட்டல்ல அரேஞ்ச் பண்ணா மட்டும் போதும்?"
"அடிப்பா.....வி" மென்மையாக புலம்பினான்
"தி.நகர் Barbeque Nation, இல்லைன்னா GRT Kebab Factory போகலாம் OR Residency Towers???" சைஸ் ஸீரோ கேட்டது
"எது ஓ.கே கணேஷ்?" சிறுவாணி கேட்டது.
ஆறடியில் வளர்ந்த மதுரைக்காரி கரகரப்பான குரலில் கேட்டாள், "அதெல்லாம் அப்புறம் டிசைட் பண்ணலாம். கல்யாண பொண்ணு யாரு கணேஷ்? லவ் மேரேஜா, அரேஞ்ச்டு மேரேஜா??
"அடிப்பாவி சியாமளா, எல்லா மேட்டரையும் சொன்ன.. உன் பேரையும் சேர்த்து சொல்லி இருக்க வேண்டியது தானே? இப்படி கோர்த்து விட்டாளே? என்று அவளைத் தேடும்போது ஒரு பாடல் அவள் கேபின் சைடில் இருந்து வந்தது.
"கங்கைக்கரை தோட்டம்
கன்னிப்பெண்கள் கூட்டம்ம்ம்
கண்ணன் நடுவினிலே.. ஓ..ஓ..ஓ"
டைமிங்காக கேட்டது. எட்டிப்பார்த்தான், சியாமளா எழுந்தாள். "மவனே, பேரச்சொன்ன, தொலைச்சிடுவேன்" என்பது போல் மிரட்டிக் கொண்டே கணேஷை நோக்கி வந்தாள். மற்ற பெண்கள் கவனிக்கவே இல்லை.
வந்தவள், "என்னங்க ஸார், முகமெல்லாம் வீங்கி இருக்கு. நைட் என்ன ஓவர் மப்பா? ஃப்ரெண்ட்ஸ்க்கு பேச்சிலர் பார்ட்டி கொடுத்தீங்களா?" சம்பந்தமில்லாமல் கேட்டு சிரித்துக் கொண்டாள். சுற்றியுள்ளவர்களும் சிரித்த பெரும் சிரிப்பில் அந்த ஏரியாவே அதிர்ந்தது.
"க்ர்ர்ர்க் க்ர்ர்ர்ர்ர்க்" ஆத்திரத்தில் கணேஷ் பல்லைக் கடித்துக் கொண்டிருந்தான்.
"ஓ.கே கேர்ள்ஸ். நாம இதப்பத்தி லஞ்ச் ப்ரேக்கில கணேஷ்கிட்ட கேட்டுக்கலாம்" என்று சொல்லி சியாமளாவே சபையைக் கலைத்தாள்.
கணேஷ் இன்னும் அவளை முறைத்துக் கொண்டிருந்தான். சடாரென சியாமளா திரும்பி கணேஷிடம் வந்தாள்.
"என்னடா, என் பேர சொல்லலியேன்னு பாக்குறீயா? அதான் நீ தான் ஹரிணியோ, ஷாலினியோ.. ஏதோ ஒரு பொண்ணுகூட ஓடிப்போக போறேன்னு சொன்னேல. அதான் சொல்லல.." என்று சொல்லிக் கொண்டே கண்ணடித்தாள். கெளம்பி இடத்துக்கு போய்விட்டாள்.
மறுபடியும் பல்லைக் கடித்தான் கணேஷ். "அடிக்கடி கண்ணடிக்கிறாளே, இவளுக்கு எதுவும் ஒண்ணரைக் கண் வியாதி இருக்குமோ" என்று அடுத்த செகண்டே கொலைவெறியுடன் யோசித்தான்.
லஞ்ச் செல்வதற்கு கெளம்பும்முன், ப்ராஜெக்ட் மேனஜரிடம் இருந்து இமெயில். உடனே டீம் மீட்டிங்கிற்கு கான்ஃப்ரன்ஸ் ரூமுக்கு வரச்சொல்லி எல்லாருக்கும் வந்திருந்தது.
லைட்டாக கனைத்துக் கொண்டு பி.எம் ஆரம்பித்தார், "உங்க எல்லாரையும் இங்க வரச் சொன்னதுக்கு காரணம், புதுசா ஒருத்தர் நம்ம டீமுக்கு வந்திருக்காங்க. ஸோ, introduce பண்றதுக்காக வர சொன்னேன்"
ஒருத்தி ஓரமாக நின்றிருந்தாள். அருமையான ஸ்ட்ரக்சருடன், ரொம்ப அழகாக இருந்தாள். அவள் போட்டிருந்த ட்ரெஸ் நல்ல கலர் காம்பினேஷனில் நிறைய சிந்தெடிக் வொர்க்ஸ் பண்ணப்பட்டு நீட்டாக இருந்தது.
"நச் ஃபிகர் நம்ம டீம்ல. இவ வர்ற நேரம் பார்த்து எனக்கு பொண்ணு பார்த்து என் கைய கட்டிப் போட்டுட்டாங்களே கணேஷ்" என்று ஃபீல் பண்ணினான்.
புதிதாக வந்தவள் வாயைத் திறக்காமல், இதழ்கள் மட்டும் அசைந்து இன்ட்ரோ கொடுத்தாள், "நான் ABC கம்பெனில இதுக்கு முன்னால வொர்க் பண்ணேன்..."
"அட நம்ம பழைய ஆஃபிஸ், எப்படி மிஸ் பண்ணோம்?" என்று வடிவேல் ரேஞ்சில் திங்க் பண்ணினான் கணேஷ்.
"ஐ'யாம் ஹரிணி" என்று சிரித்துக் கொண்டே தொடர்ந்தாள்.
கணேஷ் ஜொள்ளுடன் கேட்டுக் கொண்டிருக்கும்போதே, ஏதோ ஒரு ஜோடிக் கண்கள் தன்னை பார்ப்பது போல் தோன்றவே, சுற்றியும் பார்த்தான். "ஆ.. சியாமளா"
சியாமளா பார்வையில் உக்கிரம் தெறித்தது. கோபத்தில், ஆத்திரத்தில், முகம் சிவந்தது. கணேஷுக்கும் அவள் பார்வையின் முதலில் புரியாமல் பின்னர் அர்த்தம் புரிந்தது. ("கணேஷ் ஓடிப்போக போவதாக சியாமளாவிடம் பொய் சொன்ன பழைய ஆஃபிஸ் பெண் பெயர் ஹரிணி")
சியாமளா, "எக்ஸ்க்யூஸ் மீ" என்று சொல்லிக் கொண்டே கான்ஃபரன்ஸ் ரூமை விட்டு வெளியேறினாள்.
"What the HELL is happening?" அநியாய டென்ஷனில் கணேஷ்.
***********************
சியாமளா-5: ஆஃபிஸிற்கு புதிதாக வந்த நச் ஃபிகர்!
Labels:
கணேஷ்-சியாமளா
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
Yaarupa intha kathaiya continue panna sonnathu...
Shyamala, Harini nu thaangala...
But nice story..Good flow..
ரைட்டு... அப்பாலிக்கா என்ன ஆச்சு?
வில்லன்/வில்லி இல்லாட்டி சுவாரஸ்யம் இருக்காதே. சீக்கிரம் அடுத்தது என்னன்னு சொல்லுங்க
தூள் தொடருங்கள்
நன்றி Rajalakshmi Pakkirisamy!
Yaarupa intha kathaiya continue panna sonnathu...
Shyamala, Harini nu thaangala...
But nice story..Good flow..//
நீங்க பாராட்டுறீங்களா இல்ல ஓட்டுறீங்களா - 'பசங்க' சோப்பிக்கண்ணு!
********
நன்றி ☀நான் ஆதவன்☀
ரைட்டு... அப்பாலிக்கா என்ன ஆச்சு? //
தெரியல பாஸ்! ஒரே மர்மதேசமா இருக்கு :)
*********
நன்றி சின்ன அம்மிணி!
வில்லன்/வில்லி இல்லாட்டி சுவாரஸ்யம் இருக்காதே. சீக்கிரம் அடுத்தது என்னன்னு சொல்லுங்க//
எனக்கே தெரியலீங்க! தெரியாத்தனமா ஆரம்பிச்சிட்டு முழிக்கிறேன்.
**********
நன்றி Anonymous
தூள் தொடருங்கள்//
இது யாருன்னு தெரியுமே. எனிவே தேங்க்ஸ் ஹரிணி ச்சே ஷாலினி.. மறுபடியும் ச்சே ச்சே, அனானி.. ஆங் :) :) :)
***********
பாஸு, கதை சூப்பரா போகுது...
ganesh character is so interesting.you visualise the situation.very nice.
Ganesh.. Really superb... siyamala character, nachunu irunthuchu.. Keep goin!!! :)
hello... we need update within 2 days... cant wait for next update.... aama solliputtom..
கணேஷ் சத்தியமா அந்த Anonymous நான் இல்ல.
அதான் நீ தான் ஹரிணியோ, ஷாலினியோ.. ஏதோ ஒரு பொண்ணுகூட ஓடிப்போக போறேன்னு சொன்னேல.
//என்ன கணேஷ் ஒரு வார்த்தை எங்கிட்டகூட சொல்லவே இல்ல :)
very good
நன்றி சரவணகுமரன்!
பாஸு, கதை சூப்பரா போகுது...//
உண்மையத் தான் சொல்றீங்களா? தேங்க்ஸ் :)
**********
நன்றி kasbaby!
ganesh character is so interesting.you visualise the situation.very nice.//
Oh is it so! I can't believe this! Thanks:)
*********
நன்றி guru!
Ganesh.. Really superb... siyamala character, nachunu irunthuchu.. Keep goin!!! :)//
see above answer :) இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி... ரைட் பாக்கலாம் :)
*********
நன்றி nsrajesh!
hello... we need update within 2 days... cant wait for next update.... aama solliputtom..//
ஏன் இந்த கொலைவெறி! இப்படியெல்லாம் மிரட்டக்கூடாது ஆமாம்! :)
*********
நன்றி Shalini!
கணேஷ் சத்தியமா அந்த Anonymous நான் இல்ல.
அதான் நீ தான் ஹரிணியோ, ஷாலினியோ.. ஏதோ ஒரு பொண்ணுகூட ஓடிப்போக போறேன்னு சொன்னேல.
//என்ன கணேஷ் ஒரு வார்த்தை எங்கிட்டகூட சொல்லவே இல்ல :)//
ஹை.. அதான் இப்ப சொல்லிட்டேன்ல.. நீங்க ரெடின்ன்னு சொல்லுங்க, சியாமளாவ விட்டுட்டு உங்ககூட ஓடிவந்துர்றேன் :)
*********
நன்றீ Vetri!
very good//
தேங்க்ஸ்ண்ணா!
*********
கதை நல்ல விறுவிறுப்பைக் கொடுத்தது..
பொண்ணுங்களோட குணத்தையும் நல்லா தெளிவாக்குது..
நீங்க ரெடின்ன்னு சொல்லுங்க, சியாமளாவ விட்டுட்டு உங்ககூட ஓடிவந்துர்றேன் :)
//நான் சொல்றது இருக்கட்டும். அந்த ரௌடிய எப்படி சமாளிபீங்க???? நீங்க அவகிட்ட பயப்படறதா பார்த்த எனக்கு சுத்தமா நம்பிக்கையே இல்ல!
நன்றி மென்பொருள்.காம்!
பொண்ணுங்களோட குணத்தையும் நல்லா தெளிவாக்குது..//
இப்படி எல்லாம் சொல்லி, சண்டை போடுறவங்கள நீங்களும் உசுப்பேத்தாதீங்க தலைவா...
*********
நன்றீ ஷாலினி!ஆஹா.. நீங்க சொல்றத எல்லாம் பார்த்தா நீங்களும் பெரிய ரவுடி போல தெரியுதே..
ரவுடி எத்தனை ரவுடியடி?
//நீங்க அவகிட்ட பயப்படறதா பார்த்த//
பயமா.... ஹேய்ஹேய் யாரை பார்த்து... ம்ம்... லைட்டா இருக்கு..
********
"ஹா ஹா ஹா" அந்த அறையே அதிர அதிர சிரித்தாள், கதாநாயகி சியாமளா"
இதனை ஹரிணி தலமை ரசிகர் மன்றம் சார்பாக கண்டிக்கிறோம்.
:-))))))
கணேஷ் கதையில ஹரிணிக்கு ஒரு ட்விஸ்ட் தாங்க
ganesh ungalukku enna kanni raasi ya... athuva varuthu???
athu eppadi correct miss panninavalye inga paakareenga athuvum unga teamla...
Post a Comment