கணேஷ்-சியாமளா.. 1 2 3 4 5 6 7 8 9 10
(ஃப்ளாஷ்பேக் முடித்துவிட்டு வரும்போது)
கதவைத் திறந்தால் சியாமளா நின்று கொண்டிருந்தாள். ப்ளாக் கலர் டஃப் ஜீன்ஸ், காலர் வைத்த லாங்க் ஆரஞ்ச் டாப். போன தடவை மாதிரி எந்த வஸ்துவும் கழுத்தை சுற்றி போட்டு இருக்கவில்லை.
"முத்துவேல், நீ எப்படி இங்க?" சியாமளாவின் முதல் கேள்வி முத்துவேலை நோக்கி
அதிர்ந்தான். "இல்ல, ச்சும்மா தான். கணேஷ், நான் கெளம்புறேன்டா" என்று வாசலை நோக்கி நடந்தான், ரெண்டு கன்னங்களையும் தடவிக் கொண்டே
"ஓ.. முத்துவேல் ஸார், நீங்க கணேஷோட ஃப்ரெண்டா?. ஐ ஸீ.. மைண்ட்ல வச்சிக்கிறேன்" என்றாள் எகத்தாளமாக
"இல்ல.. ஆமா.. இல்ல.. எனக்கு ஆஃபிஸ்ல வேல இருக்கு.. பை" வீட்டை விட்டு ஓடாத குறையாக எஸ்கேப் ஆனான் முத்துவேல்
"ம்ம்.. அப்புறம் கணேஷ்?" அவனிடம் திரும்பியபடியே
பியரில் இருந்த தண்ணீர் எல்லாம் வியர்வை அருவியாக கொட்டியது. இவளை கொஞ்சம் கூட எதிர்பார்க்காததால் வெலவெலத்து போனான் என்பது உண்மை.
திக்கித் திணறி, "உன்னை யாரு இங்க எல்லாம் வரச் சொன்னது? இது பேச்சிலர்ஸ் ரூம்" என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போது வீட்டை சியாமளா நோட்டம் விட்டுக் கொண்டிருந்தாள்.
கட்டிலின் அடியில் காலி பியர் பாட்டில்கள் ஒளிந்து இருப்பதை பார்த்துவிட்டு, அவள் கணேஷை பார்த்த பார்வையில் உஷ்ணம் அதிகமாக கொதித்தது.
நேரே போய், ஃபிரிட்ஜை திறந்து பார்த்தாள்.
"ஓ.. இன்னும் ரெண்டு கிங்க்ஃபிஷர் பீர் இருக்கா? ஸோ, நான்தான் தண்ணிபூஜையில கரடியா?"
"இல்ல.. ஆமா.. இல்ல"
"ஸேம் ரியாக்சன், வெரி பேட்.. சரி வா நாம ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு பியர் அடிக்கலாம்"
"வாட்? உன்னை யாரு இங்க எல்லாம் வரச் சொன்னா? மேல் வீட்டு மாமிக்கு மட்டும் தெரிஞ்சது, அகோரி ஆட்டம் தான்?" என்று கணேஷ் சொல்லி முடிப்பதற்குள் காலிங் பெல், "டிங் டாங் டிங் டாங்" என விடாமல் அடித்தது.
"நான் சொன்னேன்ல" என்று சியாமளாவிடம் புலம்பிக் கொண்டே திறந்தான். திறந்தால்,
மா....மீமீமீமீ
வியர்வை அருவியாகக் கொட்டியது கணேஷுக்கு.
முன்னால் நின்றிருந்த அவனை இடித்து தள்ளிவிட்டு, சியாமளாவிடம் போனாள் மாமி. அப்படியே கன்னத்தை மொத்தமாக வாஞ்சையாக தடவி நெட்டி முறித்து சொன்னாள்.
"கணேஷ், நீ நொம்ப கொடுத்து வச்சவன்டா.. அப்படியே மஹாலெட்சுமி மாதிரி இருக்கா? என் கண்ணே பட்டுடும் போல இருக்கு"
"மஹாலெட்சுமி எந்த ஊர்ல ஜீன்ஸ் போட்டு வந்துச்சி. மாமி, நீங்க என்ன லூஸா?" கணேஷின் மைண்ட் வாய்ஸ் மட்டும் எக்கோவுடன் பேசியது.
"என்னடா நீ எதுவும் பேச மாட்டேங்குற? நான் சொல்றது கரெக்ட் தான. மஹாலெட்சுமியே வீட்டுக்கு வரப்போறா?" மறுபடியும் மாமி சிரிக்காமல் புளுகினாள்.
"இவ மஹாலெட்சுமி இல்ல, பீர்லெட்சுமி. அடிக்கிற பீர்ல பாதி கேட்குறா, இவளா மஹாலெட்சுமி? படுபாதகி.. இவள எங்கிருந்து தான் பிடிச்சாய்ங்களோ?" மறுபடியும் மெதுவாக புலம்பினான் அவன் காதுக்குள்ளேயே
"சரி சின்னஞ்சிறுசுக பேசிக்கிட்டு இருங்க. நான் போய் ஃபில்டர் காஃபி போட்டிண்டு எடுத்திட்டு வர்றேன்" மாமி எஸ் ஆனாள்.
கணேஷிடம் திரும்பி, "ரைட், மாமி ப்ராப்ளம் ஸால்வ்டு. இப்ப சொல்லு, ஆளுக்கு ஒரு பியர். ஓ.கேவா?"
நிஜமாகவே டென்ஷன் ஆனான் கணேஷ், "ஹேய், நீ என்ன பொண்ணா, இல்ல பொண்ணு மாதிரியா? இப்படி பசங்களுக்கு ஈக்வெலா போட்டி போடுறீயே? வெட்கமா இல்ல?" கத்தியே விட்டான்.
"நான் எதுக்கு வெட்கப்படணும். எந்த பியர்ல இது பசங்க மட்டும்தான் சாப்பிடணும்னு போட்டு இருக்கு? இல்ல விஜய் மல்லையா உன்கிட்ட மட்டும் சொன்னாரா?"
"இல்ல..அது வந்து.. ரைட்.. அப்படியா?" தைரியத்துடன், "பல்ஸர் பைக் விளம்பரத்துல கூட தான், இது பசங்களுக்கு மட்டும் தான்ன்னு சொல்லல.. ஆனா பசங்க மட்டும் தான ஓட்டுறாங்க.. எல்லா விஷயத்துலயும் போட்டி போடுற நீ பல்ஸர் ஓட்ட ரெடியா?" மடக்கி விட்ட திருப்தியுடன் சியாமளாவைப் பார்த்தான்.
அவள் முகத்தில் சலனமே இல்லாமல், கையை நீட்டி சொன்னாள், "வெளியே போய் பாரு, நான் எதுல வந்தேன்னு"
பார்த்தான். தூக்கி வாரி போட்டது. Bajaj Pulsar DTS 135i ல் வந்திருந்தாள்.
"சத்தியமாக இவ பொண்ணே இல்ல" ஹார்ட் பீட் 150ல் அ(து)டித்தது. "சரி சரி, ஏன் நீ ஏன் வளவளன்னு பேசிட்டு இருக்க? இப்ப எதுக்கு நீ இங்க வந்த?" அவனுக்கு மீசையில் மண் ஒட்டவில்லை.
"ஏன் நான் உன்ன பாக்க வரக்கூடாதா?" புருவத்தை ஆட்டி ஆட்டி அவள் கேட்ட போது "இவ பொண்ணுதான் போலயே" என்று கணேஷுக்கு சந்தேகம் வந்தது.
இருந்தாலும் ஆண்பிள்ளை முறுக்கு என்னாவது? "இங்க பாரு? உனக்கு நான் சரியான ஆள் கெடையாது. எனக்கும் என் பழைய ஆஃபிஸ் ஹரிணிக்கும் நெக்ஸ்ட் மன்த் மேரேஜ். வீ ஆர் ட்ரூ லவ்வர்ஸ். ஓடிப் போக போறோம். ஸோ, இனிமே இப்படியெல்லாம் பண்ணாத. போ, நான் எங்க அப்பாகிட்ட பேசி கல்யாணத்த நிறுத்திடுறேன்" அரைமணி நேரம் முன்னால் ப்ளான் பண்ணியத்தை ஒப்பித்தான் கணேஷ்.
"சரி முடிச்சிட்டியா?"
"ம்" என்றான். ஆனால் "எதையோ சுத்தி வளைச்சி மடக்க போறது போல கேக்குறாளே? என்று அவன் மைண்ட் வாய்ஸ் சொல்லி முடிக்க வில்லை,
சியாமளா ஆரம்பித்தாள், "ஓடிப் போகப் போறீங்க.. ஆனா இத உங்க அப்பாக்கிட்ட பேசி நம்ம கல்யாணத்த நிறுத்தப் போறீங்க?"
"இல்ல.. ஆமா.. இல்ல.. " தெளிவாக குழம்பிவிட்டு பின்" சரி விடு, எனக்கு தான் உன்னை பிடிக்கலைன்னு தெரியுதுல்ல? அப்புறம் ஏன் இப்படி டார்ச்சர் பண்ற?"
"ஓ.கே இது டார்ச்சராவே இருக்கட்டும். இப்ப நான் இங்க வந்தேன்னா.......?" முடிப்பதற்குள்
கணேஷ், "அத தான் நான் வந்தததுல இருந்து கேக்குறேன். சொல்லு ஏன் வந்த?"
அவன் கையில் எதையோ திணித்தாள். அவன் பிரித்து என்னவென்று பார்த்துக் கொண்டிருக்கும்போது சொன்னாள்.
"நம்ம மேரேஜ் இன்விடேஷன் ஃபர்ஸ்ட் காப்பி. ப்ரூஃப் பார்த்துட்டு என்னென்ன சேஞ்ச் பண்ணனும்ன்னு சொல்லு. மாத்திடலாம்?" சொல்லிவிட்டு கெளம்பிவிட்டாள். பல்ஸரை ஓர் உதை விட்டு ஸ்டார்ட் பண்ணிக்கொண்டே திரும்பி, கணேஷை பார்த்து வெட்கத்துடன் கண்ணடித்தாள் சியாமளா.
"??????????????????????????????????"
*************************************
சியாமளா-4: ஜீன்ஸ் போட்ட மஹாலெட்சுமி!
Labels:
கணேஷ்-சியாமளா,
சிறுகதை,
புலம்பல்
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
This story is really good.
Regards
Harini
Shalini thaan Hariniya?
//கணேஷ், "அத தான் நான் வந்தததுல இருந்து கேக்குறேன். சொல்லு ஏன் வந்த?" //
adappaavi..... kathai kadaisiyil nalla touch. nallayirukku....
//"இல்ல.. ஆமா.. இல்ல"
Ganesh ku adicha beer ellam erangidicha!!!
//சரி வா நாம ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு பியர் அடிக்கலாம்
Shyamala namma aal pola theriyuthe!!!
கதை தொடர் முழுசும் படிச்சேன். நல்ல நடை. நிறைய எழுதுங்க :)
ஹ ஹ ஹ .....பட்டாசா போகுதுங்க கதை...!
//"இவ மஹாலெட்சுமி இல்ல, பீர்லெட்சுமி. அடிக்கிற பீர்ல பாதி கேட்குறா, இவளா மஹாலெட்சுமி?
கணேஷ்க்கு, ஒரு பொண்ணு beer அடிக்கிறாங்க்றது பிரச்சனையா, இல்ல நம்ம beer-ல பங்கு போடுறலேங்கறது பிரச்சனையா???
//எனக்கும் என் பழைய ஆஃபிஸ் ஹரிணிக்கும் நெக்ஸ்ட் மன்த் மேரேஜ்
இந்த BIT- எல்லாம் வேலைக்கு ஆகாது கணேஷ்.
கணேஷ், நீங்க சரியான சந்தேக பேர்வழி மாதிரி தெரயுதே! Anyway என்னோட email-ID யும் சேர்த்து அனுப்பியிருக்கேன்.
நன்றி Harini
This story is really good.
Regards
Harini
ஆஹா.. ஹரிணியா? உங்க கூட தான் நான் ஓடிப் போக போறேனா? சியாமளா கொன்று விடுவாள் பரவாயில்லையா?
********
நன்றீ Rajalakshmi Pakkirisamy
Shalini thaan Hariniya? //
எனக்கும் அந்த டவுட் இருக்குங்க :( :( :(. என் கூட விளையாடுறவங்களுக்கு என்ன தான் வேணும்? :(
**********
நன்றி க.பாலாசி
adappaavi..... kathai kadaisiyil nalla touch. nallayirukku....//
எச்சூஸ்மீ, எதுக்கு அந்த அடப்பாவி? நான் என்ன பாவம் பண்ணேன்?
**********
நன்றிடா Shankar
Ganesh ku adicha beer ellam erangidicha!!! //
ஆமா.. நீயெல்லாம் ப்ளாக் பக்கம் வந்து கமெண்ட் போட்டதே பெரிய விஷயம் :)
Shyamala namma aal pola theriyuthe!!! //
நம்ம ஆள் இல்ல :( கணேஷ் ஆளு :)
***********
நன்றி சின்ன அம்மிணி!
கதை தொடர் முழுசும் படிச்சேன். நல்ல நடை. நிறைய எழுதுங்க :) //
தேங்க்ஸ்ங்க.. தொடர்ந்து வரவும் :)
***********
நன்றி லெமூரியன்!
ஹ ஹ ஹ .....பட்டாசா போகுதுங்க கதை...!//
இன்னும் எத்தன நாளுக்கு தான் உசுப்பேத்திக்கிட்டே இருப்பீங்க :) நெக்ஸ்ட் தவுசண்ட் வாலா பட்டாசு காத்திட்டு இருக்கு :) :)
**********
நன்றி Shalini
கணேஷ்க்கு, ஒரு பொண்ணு beer அடிக்கிறாங்க்றது பிரச்சனையா, இல்ல நம்ம beer-ல பங்கு போடுறலேங்கறது பிரச்சனையா???//
எப்படிங்க இப்படிலாம் யோசிக்கிறீங்க.. மு டி ய ல..
இந்த BIT- எல்லாம் வேலைக்கு ஆகாது கணேஷ்.//
நம்ம ஹீரோ கணேஷுக்கு அந்த BIT வேலை செய்யவில்லை. சியாமளா அறிவாளி :) பை தி வே, கணேஷ்ன்னு நீங்க சொன்னது என்ன இல்லையே? :) :) ;)
கணேஷ், நீங்க சரியான சந்தேக பேர்வழி மாதிரி தெரயுதே! Anyway என்னோட email-ID யும் சேர்த்து அனுப்பியிருக்கேன்.//
சந்தேக பேர்வழி// It is hurting.
உங்க மெயில் ஐடி ஒண்ணும் கெடைக்கல.. எனிவே, தேங்க்ஸ் ஃபார் தி Sarcastic Comment.
**************
சந்தேக பேர்வழி// It is hurting.
Just for fun.
Shalini said...
Just for fun.//
Not a Problem :)
Both Shalini and Harini are sending comments. Are they heroines of your story??(Your real story??)
கலக்கல் கணேஷ்.
இதுல மாமி,பல்சர்,கல்யாண பத்திரிக்கைனு பல டுவிஸ்டு :)
அடுத்த பாகம் எப்போ?
ஹரிணி & ஷாலினி
என்னய்யா நடக்குது இங்க????? :))))))
கதை அருமையா போகுது கதையின் நாயகிகளும் கமெண்ட் போடுறாங்க போல வாழ்த்துகள் கணேஷ்
கலக்கல்.. எதேச்சையா வந்தேன்.. நாலு பாகமும் படிச்சேன்.. நல்லா எழுதிருக்கீங்க.. இந்த மாதிரி ஜாலியா.. ரசிக்கிற மாதிரி கதை படிக்க ரொம்ப நல்லாருக்கு.. மற்ற பதிவுகளையும் படிச்சுட்டு சொல்றேன்..
நன்றி Anonymous!
Both Shalini and Harini are sending comments. Are they heroines of your story??(Your real story??)//
Are you Shalini or Harini? :) :) :)
*********
நன்றி ☀நான் ஆதவன்☀!
கலக்கல் கணேஷ். இதுல மாமி,பல்சர்,கல்யாண பத்திரிக்கைனு பல டுவிஸ்டு :)//
நிஜமாவா? ரொம்ப சந்தோசம் :)
ஹரிணி & ஷாலினி என்னய்யா நடக்குது இங்க????? :))))))//
அது தான் எனக்கும் தெரியமாட்டேங்குது.. மர்மதேசமா இருக்கு :) :)
************
நன்றி மணி!
கதை அருமையா போகுது கதையின் நாயகிகளும் கமெண்ட் போடுறாங்க போல வாழ்த்துகள் கணேஷ்//
அய்யோ இந்த கொடுமையையெல்லாம், நான் எங்க போய் சொல்வேன். இதுல நீங்க வாழ்த்துகள் வேற சொல்றீங்க!
*************
நன்றி Raghav
கலக்கல்.. எதேச்சையா வந்தேன்.. நாலு பாகமும் படிச்சேன்.. நல்லா எழுதிருக்கீங்க.. இந்த மாதிரி ஜாலியா.. ரசிக்கிற மாதிரி கதை படிக்க ரொம்ப நல்லாருக்கு.. மற்ற பதிவுகளையும் படிச்சுட்டு சொல்றேன்..//
மிகுந்த மகிழ்ச்சியாக உணர்கிறேன். உங்க கமெண்ட்ஸ்'க்காக வெயிட்டிங்!
*************
Post a Comment