காத‌ல‌ன் காத‌லியிட‌ம் கேட்க‌ விரும்பும் ப‌த்து கேள்விக‌ள்!


இந்த‌ ப‌திவு எழுதுவ‌த‌ற்கு கார‌ண‌மாக‌ இருந்த‌ ந‌ண்ப‌ர் ப‌ரிச‌லுக்கு ந‌ன்றி!

1. நைட் 12 மணிக்கு தூக்கம் கண்ணை சுழற்றி சுழற்றி அடிக்கும்போதும், நீங்க சொல்லும் மொக்கை கதையையும்(ஆஃபிஸ்ல காஃபி மெஷின் வேலை செய்யல வரைக்கும்) ஆச்சரியமா கேட்கணும்னு எதிர்பார்க்குறீங்களே, என்ன நியாயம்?

2. ஏர்செல்ல ஒவ்வொரு 32 நிமிஷத்துக்கும் ஆட்டோமேடிகா கால் கட்டாகும். அதுக்கும் நான் தான் உன் மொக்கை தாங்கமா கட் பண்ணிட்டேன்னு சொல்லி சண்ட போடுறீயே. கட் பண்றதா இருந்த நான் எதுக்கு கால் பண்ணியிருப்பேன்னு என்னைக்காவது யோசிச்சி இருக்கியா? அப்படியே நான் கட் பண்றதா நீ நெனச்சாலும், தினமுமா கட் பண்ணுவேன்?

3. போன தடவை தான் உன் பர்த்டேக்கு நான் வாங்கி கொடுத்தது பிடிக்கலைன்னு சொன்னியேன்னு, உன்னையவே இந்த தடவை போத்தீஸ்க்கு கூப்பிட்டு போயி 1000 ரூபாய் சுரிதார் ஏரியாவ‌ காட்டுனா, ரொம்ப கரெக்ட்டா 6000 ரூபாய்க்கு சிந்தெடிக் வொர்க்ஸ் உள்ளதா பாத்து செலக்ட் பண்றீயே, உனக்கெல்லாம் மனசாட்சியே கெடையாதா?

4. டூவீலர் பின்னால உட்கார்ந்திட்டு, உன்னால வாய மூடிக்கிட்டு வரவே முடியாதா? வேகமா போனா ஸ்லோவா போங்கிறது.. ஸ்லோவா போனா ஃபாஸ்ட்டா போன்னு சொல்றது. நான் என்ன தான் பண்றது? உன்னை வ‌ண்டில‌ கூப்பிட்டு போன‌து தான் என் த‌ப்பா?

5. பொண்ணுங்க க்ரூப்பா போனா கையேந்தி பவன்ல, இல்ல சிம்பிளா ஒரு மெஸ்ஸிலோ சாப்பிட்டு முடிச்சுடுவீங்க‌. ஆனா என் கூட வரும்போதும் மட்டும் தான் காரைக்குடியும், அஞ்சப்பரும் கண்ணுல தெரியுமா? இல்ல என்கூட போய்தான் அந்த மாதிரி இடத்தில் எல்லாம் சாப்பிடுறீயா?

6. கடைசி 5 ஓவர், 20-20 மேட்ச் பார்க்கும்போது மட்டும், கரெக்ட்டா கால் பண்ணி "ஃபோன் லைன்ன‌ கட் பண்ணா, இனிமே நான் உன்கூட பேசவே மாட்டேன்"னு பிளாக்மெயில் பண்றீயே, அதுல உனக்கு அப்படி என்ன சந்தோஷம்?

7. சரி நீ 10 மணிக்கெல்லாம் தூங்கிடுவேன்னு, டாஸ்மாக்ல இருந்து பதுக்கி வச்ச சரக்க, நிதானமா 11 மணிக்கு மேல ஆரம்பிச்சி ரெண்டாவது ரவுண்ட் ஓடிட்டு இருக்கும்போது திடீர்ன்னு கால் பண்ணி முக்கால் மணிநேரம் பேசி, அடிச்ச சரக்கெல்லாம் இறக்கிடுறீயே... நான் டாஸ்மாக்ல சரக்கு வாங்கினத ஒளிஞ்சி இருந்து பார்த்தீயா?

8. நிம்ம‌தியா தூங்குற‌தே வீக் எண்ட் தான். அன்னைக்கும் காலைல 6 ம‌ணிக்கெல்லாம் எழுப்பி கபாலீஸ்வ‌ர‌ர் கோவில் கூப்பிட்டு போய் பிரகாரத்தை மூணு சுத்து சுத்த விடுறீயே, அது எப்ப‌டி வீக் எண்ட்ல ம‌ட்டும் உன‌க்கு க‌ட‌வுள் ப‌க்தி கூடிடுது?

9. ஆஃபிஸ் ஆணி அதிக‌ம்ன்னு கால் ப‌ண்ணாம இருக்கும்போது, "நீ என்னை ம‌ற‌ந்துட்டா, I Miss you da"ன்னு நைட் அழுது ஆர்ப்பாட்ட‌ம் ப‌ண்ணுற‌ நீ, ஊருக்கு போனா ம‌ட்டும் எப்படி நாள்க‌ண‌க்குல என்கூட பேசாம‌ இருக்க‌ முடியுது? சென்னையில‌ இருந்தா ம‌ட்டும் தான் என்னை மிஸ் ப‌ண்ணுவீயா?

10. எல்லாத்துக்கும் மேல‌, ஒவ்வொரு நாளும் உன்னை பாக்கும்போது "உன் டிரெஸ் நல்லா இருக்கு"ன்னு சொல்ல‌ணும்னு எதிர்பாக்குற. சரி.. ஓ.கே. வேலிட். ஆனா ரோட்டுல‌ போற வ‌ர்ற அட்டகாசமான ஸ்ட்ரக்சருடன் வரும் ம‌ல்லு ஃபிக‌ரையும், கொல்ட்டி ஃபிக‌ரையும் சைட் அடிக்க‌க் கூடாதுன்னு, கேவ‌ல‌மா திட்டுறீயே? என்ன‌ கொடுமை ********* இது டிய‌ர்?


சாய்ஸில் விட்ட‌ கேள்விக‌ள்!

1. காரைக்குடியில‌யும், அஞ்ச‌ப்ப‌ர்ல‌யும் சாப்பிடும்போதோ இல்லை சத்யம் டிக்கெட் புக்கிங்கிற்கோ என்னைக்காவ‌து பில் பே ப‌ண்ணி இருக்கியா? ஆனா கிரெடிட் கார்டு ம‌ட்டும் வ‌ச்சிருக்க‌.. அதை வ‌ச்சி என்ன‌ சாமி கும்பிடுறீயா?

2. நைட், "I love you honey! Good night dear!"ன்னு SMS அனுப்பாம‌ல் தூங்கி விட்டால், என் ல‌வ் மீதே சந்தேக‌ம் வ‌ருதே ஏன்? இர‌ண்டு மூன்று நாட்க‌ள் பேசாம‌ல் இருந்து கொல்லுவ‌து ஏன்? அதே கோப‌ம் "BlackForest" ஐஸ்கிரீமில் க‌ன்வின்ஸ் ஆவ‌து எப்ப‌டி?

டிஸ்கி: மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்கிறேன். நான் யாரையும் ல‌வ் ப‌ண்ண‌வில்லை. க‌ற்ப‌னையுட‌ன் க‌ல‌ந்து க‌ட்டி அடித்த‌ ப‌திவு இது.

********************

25 comments:

Anonymous said...

//டிஸ்கி: மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்கிறேன். நான் யாரையும் ல‌வ் ப‌ண்ண‌வில்லை. க‌ற்ப‌னையுட‌ன் க‌ல‌ந்து க‌ட்டி அடித்த‌ ப‌திவு இது.//

நீங்க இப்படி அடிக்கடி சொல்லுறது... இணையத்துல ஏதோ ஒரு பிகருக்கு ரூட்டு போடுற மாதிரி இருக்கே... ? நடத்துங்க

அரவிந்த் said...

\\சாய்ஸில் விட்ட‌ கேள்விக‌ள்!
\\

I like it...

\\ஏர்செல்ல ஒவ்வொரு 32 நிமிஷத்துக்கும் ஆட்டோமேடிகா கால் கட்டாகும்.\\

Experience???

Anonymous said...

//மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்கிறேன். நான் யாரையும் ல‌வ் ப‌ண்ண‌வில்லை. க‌ற்ப‌னையுட‌ன் க‌ல‌ந்து க‌ட்டி அடித்த‌ ப‌திவு இது.//

நம்பிட்டோங்ணா நம்பிட்டோம்!!!

-- பாண்டியன்

வெட்டிப்பயல் said...

//டிஸ்கி: மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்கிறேன். நான் யாரையும் ல‌வ் ப‌ண்ண‌வில்லை. க‌ற்ப‌னையுட‌ன் க‌ல‌ந்து க‌ட்டி அடித்த‌ ப‌திவு இது.

//

Nambitoam :)

Post Kalakal...

முரளிகண்ணன் said...

கணேஷ் அசத்தீட்டிங்க.

ஸ்ரீதர்கண்ணன் said...

நான் டாஸ்மாக்ல சரக்கு வாங்கினத ஒளிஞ்சி இருந்து பார்த்தீயா?

ஊருக்கு போனா ம‌ட்டும் எப்படி நாள்க‌ண‌க்குல என்கூட பேசாம‌ இருக்க‌ முடியுது? சென்னையில‌ இருந்தா ம‌ட்டும் தான் என்னை மிஸ் ப‌ண்ணுவீயா?

அப்புறம் இந்த சாய்ஸில் விட்ட‌ கேள்விக‌ள் இரண்டும் சூப்பர் :))))))))

தராசு said...

இதுல பாதி கேள்விகளைத்தான் இதுக்கு முன்னால எழுதுன கதையிலயே கேட்டுட்டீங்களே?? மறுபடியும் கேள்வி கேட்டு ஒரு மீள்பதிவா????

கேள்விகளைப் பாத்தா டிஸ்கியை கொஞ்சம் கூட நம்ப முடியல.

நடத்துங்க,,, நடத்துங்க....

இராகவன் நைஜிரியா said...

// டிஸ்கி: மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்கிறேன். நான் யாரையும் ல‌வ் ப‌ண்ண‌வில்லை. க‌ற்ப‌னையுட‌ன் க‌ல‌ந்து க‌ட்டி அடித்த‌ ப‌திவு இது.//

சரி.. சரி.. நம்பிட்டோம்...

Anonymous said...

சகோதரா கலக்குற சகோதரா...!!!! லவ் பண்ணாமலேயே இப்படின்னா, நீ லவ் பண்ண ஆரம்பிச்சிட்டா அந்த பொண்ணோட நிலைமையை நினைச்சி பார்த்தேன்... என்னால சிரிப்பை அடக்க முடியலைப்பா...!

ஷாஜி said...

//நான் டாஸ்மாக்ல சரக்கு வாங்கினத ஒளிஞ்சி இருந்து பார்த்தீயா?//

--கலக்கல் தல..

\\ஏர்செல்ல ஒவ்வொரு 32 நிமிஷத்துக்கும் ஆட்டோமேடிகா கால் கட்டாகும்.\\

--கட்டாயம் Experience தான் பேசுது..

அப்புறம் இந்த சாய்ஸில் விட்ட‌ கேள்விக‌ள் இரண்டும் சூப்பர் :))))))))

அத்திரி said...

// டிஸ்கி: மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்கிறேன். நான் யாரையும் ல‌வ் ப‌ண்ண‌வில்லை. க‌ற்ப‌னையுட‌ன் க‌ல‌ந்து க‌ட்டி அடித்த‌ ப‌திவு இது.//

சரி.. சரி.. நம்பிட்டோம்...//

நம்பிட்டோம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

Rajalakshmi Pakkirisamy said...

:( :(

ரமேஷ் வைத்யா said...

எல்லாம் கரெக்டா எழுதிட்டு டிஸ்கியில மட்டும் புளுகுறியே... பிச்சுப்புடுவேன் பிச்சு!

Subash said...

//கடைசி 5 ஓவர், 20-20 மேட்ச் பார்க்கும்போது மட்டும், ///

இந்த ஒரு பாயின்ட்டுக்காகவே உங்களுக்கு மனமார்ந்டத நன்றிகள்

ஹிஹி

Thamira said...

மிக ரசனையான பதிவு.. சுவாரசியமான கேள்விகள்.!

Deepa said...

//7. சரி நீ 10 மணிக்கெல்லாம் தூங்கிடுவேன்னு, டாஸ்மாக்ல இருந்து பதுக்கி வச்ச சரக்க, நிதானமா 11 மணிக்கு மேல ஆரம்பிச்சி ரெண்டாவது ரவுண்ட் ஓடிட்டு இருக்கும்போது திடீர்ன்னு கால் பண்ணி முக்கால் மணிநேரம் பேசி, அடிச்ச சரக்கெல்லாம் இறக்கிடுறீயே... நான் டாஸ்மாக்ல சரக்கு வாங்கினத ஒளிஞ்சி இருந்து பார்த்தீயா?//

:-)))))))))

Anonymous said...

சும்மா புகுந்து விளையாடி இருக்கீங்க கணேஷ்.

//சென்னையில‌ இருந்தா ம‌ட்டும் தான் என்னை மிஸ் ப‌ண்ணுவீயா?//

//அது எப்ப‌டி வீக் எண்ட்ல ம‌ட்டும் உன‌க்கு க‌ட‌வுள் ப‌க்தி கூடிடுது?//

//நான் டாஸ்மாக்ல சரக்கு வாங்கினத ஒளிஞ்சி இருந்து பார்த்தீயா?//

செமை கலக்கல்

கணேஷ் said...

மக்கா, வந்த எல்லாருக்கும் நன்றி.. வந்த கமெண்ட் போட்ட அனைவரும், ஏதோ ஒரு விதத்தில் ரொம்ப பாதிக்கபட்டிருக்கிற மாதிரி தெரியுதே..

vinoth said...

ha.... ha.....ke...ke.. thala ne adu innum puthusa sollunga love pathi oru katha sollunga romba feelinga irukkanum

vinoth said...

ha.... ha.....ke...ke.. thala ne adu innum puthusa sollunga love pathi oru katha sollunga romba feelinga irukkanum

vinoth said...

ha.... ha.....ke...ke.. thala ne adu innum puthusa sollunga love pathi oru katha sollunga romba feelinga irukkanum

Anonymous said...

ha.... ha.....ke...ke.. thala ne adu innum puthusa sollunga love pathi oru katha sollunga romba feelinga irukkanum

DHANS said...

i got your post by forward mail, it was really nice. just informed my friend that your blog address should be in the mail while forwarding

Anonymous said...

nice............but love pannelena epdi..........i cant believe

AnRockstar said...

Love pannalaenu poithanae soldringa:)

Related Posts with Thumbnails