புதிய ஆஃபிஸில் முதல் நாள். கணேஷ்க்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சுற்றியும் ஆந்திரா, கர்நாடகா, ராஜஸ்தான், தமிழ்நாடு, கேரளா என மாநிலம் வாரியாக லட்டு மாதிரியான பெண்கள் கூட்டம். எந்த பொண்ணைப் பார்க்க, என்ற ஏகக் குழப்பத்தில் இருந்தவனின் செல்ஃபோன் சிணுங்கியது.
"மச்சி, என்ன ஆஃபிஸ்டா இது? ஒரே பொண்ணுங்க கூட்டம். அம்பி மாதிரி இருக்கிற என்னை ரெமோ மாதிரி ஆக்குறாளுங்கடா..?" செயற்கையாக வெட்கப்பட்டான்.
"உனக்கு மச்சம் தான்டா. 'கணேஷ்'ங்கிற பேரைவிட 'கிருஷ்ணன்'னு சிச்சூவேனலா பேர் வச்சிருந்தா நல்லா இருந்திருக்கும். என் ப்ராஜ்க்ட்லயும் இருக்காங்களே. ஹூம்ம் ஒரே ஆன்ட்டிஸ்"
"சரி புலம்பாத. அதுக்கெல்லாம் லக் வேணும். சரி லஞ்ச்க்கு ஃபோன் பண்றேன். வை. டிஸ்டர்ப் பண்ணாத..பை"
ஒரு மாதிரியாக செட்டில் ஆகியிருக்கும்போது லஞ்ச் டைம் வந்தது. கெளம்பலாம் என்று இருந்தவனின் முதுகின் பின்னால் ஒரு கீச்சுக் குரல்.
"எக்ஸ்கியூஸ் மீ"
ஜீன்ஸ், டாப்பில் பின்னால் ஒரு பெண். துப்பட்டா மாதிரி இருக்கும் வஸ்துவை தோளில் துண்டு போடுவது மாதிரி போட்டு இருந்தாள். தெளிவான திருத்தமான முகம். டாப்ஸில் ஏதோ எழுதியிருந்தது.
என்ன என பார்த்தவன் கணநேரத்தில் தெளிந்து "யெஸ்" என்றான்.
"ஐயாம் சியாமளா, இந்த ப்ராஜெக்ட்ல தான் நானும் வொர்க் பண்றேன். வெளில லஞ்ச் போகலாமா?" மென்மையாக கேட்டாள்.
"ஷ்யூர்" என்றான் தன்னிச்சையாக. அவள் பின்னாலேயே சென்றான்.
"யார் இவள்,நான் ஏன் இவள் பின்னால் போகிறேன்" என்ற உண்மை லேட்டாக மனதில் உறைத்தது.
பார்க்கிங்கில் கணேஷ், அவன் வண்டி அருகே சென்றான். அப்போது, "என் வண்டியில போயிடலாமே?" என்றாள்.
"ஓ.. ஷ்யூர்"
அப்போதும் ஏன் அப்படி சொன்னான் என்று அவனுக்கே தெரியவில்லை.
பின்னால் அநாயசமாக உணர்ந்தவன், அவள் விரித்து போட்டிருந்த கூந்தல் வண்டி வேகத்தில் முகத்தில் மோத, "என்ன ஷாம்பூவாக இருக்கும்?" என்ற ஆராய்ச்சியில் இறங்கினான்.
எதிரெதிர் டேபிளில் இருவர். சிக்கன் பிரியாணி, பட்டர் சிக்கன் ஆர்டர் பண்ணிவிட்டு எனக்கு தேவையானதை ஆர்டர் பண்ண சொல்லிவிட்டு, ஹேண்ட் வாஷ் பண்ண போயிருந்தாள்.
மனதிற்குள் ஐன்ஸ்டீன் பிஸிக்ஸ் க்ளாஸ் எடுப்பதுபோல் ஒன்றும்புரியாமல் உட்கார்ந்திருந்தான். வந்தாள்.
"எனக்கு ஆண்கள் சுத்தமாகப் பிடிக்காது. சுயநலவாதிகள். பெண்களிடம் மட்டும் அதிகாரத்தைக் காட்டும் வீரர்கள்" என்று சியாமளா ஆரம்பித்தாள்.
"ஙே!"
"எல்லா விஷயத்திலும் பெண்கள் தங்களுக்கு கட்டுப்பட்டு போகவேண்டும் என்று யோசிக்கும் narrow minded peoples" என்றாள் கடுப்பாக.
மனதிற்குள், "இவளுக்கு என்ன பிரச்சினை? சம்பந்தமே இல்லாமல் என்கிட்ட புலம்பிக்கிட்டு இருக்கா?" என்று எண்ணினான்.
"என்ன? எதுவும் பேசாம இருக்கீங்க?"
"இல்லங்க, அதெல்லாம் ஒண்ணும் இல்ல. எனக்கு ஜீன்ஸ் போட்ட பொண்ணுங்கன்னா அலர்ஜி"
"இதுகூட ஆண்களின் வறட்டு அதிகாரம். பெண்கள் ஆண்களுக்கு சமமாக ஜீன்ஸ் போடுறாங்களேன்கிற கோபத்தின் வெளிப்பாடு தான்."
"வெல், இது முத்திப் போன கேஸ். ரொம்ப அடிபட்டு இருக்கா" என்று நினைத்துக் கொண்டிருந்த போது, அவனுடைய ஃபோன் அடித்தது.
"எக்ஸ்கியூஸ் மீ" என்று கடுப்புடன் கத்தரித்துவிட்டு, "என்னம்மா இந்த நேரத்துல?"
"இல்லடா, இந்த வாரம் ஊருக்கு வர்றேல்ல?"
"ஏன்மா, எதுவும் முக்கியமான விஷயமா?"
"எல்லாம் நல்ல விஷயம் தான்"
"சரி சரி நான் நைட் கூப்பிடுறேன்" என்றான் சியாமளா மீது இருந்த கடுப்பில்.
உள்ளே லெக்பீஸை கடித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
மூடை மாற்றலாம் என யோசித்துக் கொண்டு, "இந்த ப்ராஜெக்ட்ல உங்களுக்கு என்ன ரோல்?" என சாஃப்டாக கேட்டான் கணேஷ்.
"இதுவும் ஒரு வகையான ட்ரீட்மெண்ட். உங்க லெவல்ல விட கீழே டெவலப்பராக இருந்தால் அதிகாரமாக பேசலாம் என்கிற மனப்பான்மையின் வெளிப்பாடு" என்றாள் சூடு கொஞ்சமும் குறையாமல்.
கணேஷ் கடுப்பின் உச்சிக்கே போனான். "பாவம் உங்கள கட்டிக்க போறவன் நெலமை" என்று சத்தமாகவே முனகினான்.
"வாட்? என்ன சொன்னீங்க?"
"இதெல்லாம் எதுக்கு என்கிட்ட புலம்பிக்கிட்டு இருக்கீங்க. வாட்ஸ் யுவர் ப்ராப்ளம்?" கத்தியே விட்டான்.
"'பாவம் உங்கள கட்டிக்க போறவன் நெலமை'ன்னு நீங்க முனகினது எனக்கு கேட்டுருச்சி. இருந்தாலும் உங்களுக்கு self-sympathy அதிகம்" என்று சொல்லிக் கொண்டே ஹேண்ட் பேகில் இருந்து அவள் எதையோ எடுப்பதற்கும்,
"வாட்?" என அதிர்ச்சியின் உச்சியில் கத்துவறகும் சரியாக இருந்தது.
அவள் கையில் அவனுடைய லேண்ட்ஸ்கேப் கலர் ஃபோட்டோ.
"ஹலோ, இது எப்படி உங்க கையில..? என்று அதிர்ச்சியில் உறைந்தான்.
"இந்த சன்டே, நீங்க பொண்ணு பார்க்க போகும் முருகேசன் வாத்தியார் வீட்டுப் பொண்ணு நான் தான்" என்றாள் முதல் முறையாக வெட்கப்பட்டுக் கொண்டே.
அவள் டாப்ஸில் எழுதியிருந்த வாசகம், "SAY SOMETHING!"
*****************************
கணேஷ்-சியாமளா.. 1 2 3 4 5 6 7 8 9 10
*****************************
சியாமளா-1: அடாவடி பொண்ணும், அப்பாவி பையனும்!
Labels:
கணேஷ்-சியாமளா,
காதல்,
சிறுகதை
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
அட்டகாசம் கணேஷ்! அது என்ன அழகான் பொன்னுங்கன்னா கணேஷே நாயகனா?
அருமையான நடைங்க.....நல்ல இருந்தது.
நல்லாயிருக்கு ...surprise
வாங்க தமிழ்நாடன்! ஹி ஹி ஹி. அதெல்லாம் கண்டுக்க கூடாது.
வாங்க lemurya! ரொம்ப தேங்க்ஸ்!
வாங்க நிலாமதி! தேங்க்ஸ்! உங்க பேரு செம க்யூட்
//அட்டகாசம் கணேஷ்! அது என்ன அழகான் பொன்னுங்கன்னா கணேஷே நாயகனா?
//
atleast ingayavathu azhagana ponnunga kidaikatum
// "SAY SOMETHING!"//
Good one :)
வாங்க இராஜலெட்சுமி!
//atleast ingayavathu azhagana ponnunga kidaikatum
:(
//Good one :)
Thanks a lot :)
செல்லாது செல்லாது.. கதாநாயகன் பேரை ’ஆதவன்’னு மாத்துங்க :)
// ☀நான் ஆதவன்☀ said...
செல்லாது செல்லாது.. கதாநாயகன் பேரை ’ஆதவன்’னு மாத்துங்க :)//
நாட்டாம....தீர்ப்ப மாத்தி சொல்லு......
உங்களின் இயல்பான எழுத்துநடையில் அழகான இடுகை....
வாங்க நான் ஆதவன்!
//செல்லாது செல்லாது.. கதாநாயகன் பேரை ’ஆதவன்’னு மாத்துங்க :)//
செல்லாது செல்லாது.. ஹி ஹி ஹி :)
வாங்க க.பாலாசி!
//இயல்பான எழுத்துநடையில் அழகான இடுகை//
Thanks a lot :)
Boss, I think u copied my story....:)
நல்லா இருந்துச்சு. அருமை! :)
Nice one, Lolz!
:))
Could you please write the story little fast. The story is killing me.
Good start Ganesh
Post a Comment