நாளொரு PizzaHut-டும் பொழுதொரு MaryBrown-னுமாக!

காதலிக்கும் பெண்களின் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு அர்த்தம் உண்டு என்ற நம்ம டாபிக்கில், இன்னைக்கு இரண்டாவது மேட்டர்.

1. ஸ்நாக்ஸ் சாப்பிடுறீயா/என்ன சாப்பிடுற?:

2. "ஹாய், ஹலோ" என அறிமுகபடலத்தில், உஷார்:

இதை உங்கள் காதல் வாழ்க்கையின், தினசரி நடக்கும் ஒரு துயர சம்பவம். உங்க ஆள் கூட எங்கேயாவது வெளியில சுத்திக்கிட்டு இருக்கும்போது, திடீர்ன்னு அவங்க கூட காலேஜ்ல படிச்சவங்களோ இல்லை ஆஃபிஸ்ல வொர்க் பண்றவங்களோ பாத்துட்டாங்கன்னா, நாம தான் டென்ஷன் ஆவோம். ஆனா அவங்க கூலா இருப்பாங்க. நல்லா பழகினவங்கன்னா, நேரா அவங்ககிட்ட போய், "ஹாய், திஸ் இஸ் மை ஃபிரண்ட் *****" (ஃப்ரண்டா, என்ன கொடுமை சார் இது? இருடி உனக்கு "HotDog" கெடையாது.) அப்படின்னு அறிமுகப்படுத்துவாங்க. ஓரளவுக்கு பழக்கம் இல்லைன்னா, அவங்க அதை கண்டுக்க மாட்டாங்க‌. நீங்களும் தான். என்னடா ஒழுங்கா தான போய்கிட்டு இருக்கு? இங்க என்ன பிரச்சினைன்னு கேட்குறீங்களா?
இங்க தான் பிரச்சினையே பாஸ். கொஞ்சம் நல்லா பழகினவங்கன்னா, உங்க ஆளு அவங்கள பத்தி இன்ட்ரோ கொடுப்பாங்க.. லைக்.. என்கூட ஃபைனல் இயர் ப்ராஜெக்ட் ஒண்ணா பண்ணோம் இல்லை ஒரே ப்ராஜெக்ட்ல வொர்க் பண்றோம் மாதிரி. அவங்க ஒரு நிமிஷம் என்ன பேசுறதுன்னு தெரியாம முழிச்சிட்டு, கெளம்பலாம்ன்னு இருக்கும்போது, நம்ம பசங்க வேலையக் காட்ட ஆரம்பிச்சிடுவோம். அவங்க ஒரு பொண்ணா இருந்து, பார்க்க கொஞ்சம்(உங்க ஆள விட)லட்சணமா இருந்துட்டா, நம்ம வழக்கம்போல "ஓ அப்படியா, உங்கள பத்தி அடிக்கடி சொல்லுவா.. BTW நீங்க அங்க தான் வொர்க் பண்றீங்க?" ஹி ஹின்னு ஜொள்ளுவிட ஆரம்பிப்போம். அதுக்குள்ள அங்க இருந்து ஒரு கோபமான, கேவலமான, வார்த்தைகளில் விவரிக்க முடியாத அளவுக்கு லுக் விடுவாங்க. ஆற்காட்டார் மட்டும் அவங்கள மாதிரியான ஆளுங்கள பார்த்து, அவங்க காதுல இருந்து வர்ற கோபப்புகையை பயன்படுத்தி மின்சாரம் எடுத்தார்னா, தமிழ்நாட்டுக்கு காதலர்கள் இருக்கிறவரை மின்சார தட்டுப்பாடே வராது.

ஒருவேளை நம்ம கெட்டநேரம், ஃப்ரண்ட் ரொம்ப நச் ஃபிகரா இருந்தா, நாம ஆள் இருக்கிறதையே மறந்துட்டு, அப்படியே கடலை போட்டுகிட்டு வானத்தில பறந்துகிட்டு இருப்போம். தப்பி தவறி, இந்த மாதிரி சூழ்நிலையில மட்டும் மாட்டிகிட்டீங்கன்னா, அவ்வளவு தான் உங்கள ரெண்டு பேர சமாளிக்கிற முருகன்(கடவுள்ங்க) வந்தா கூட காப்பாத்த முடியாது. அதுக்கப்புறம் ஒரு வயசான பாட்டிக்கிட்ட கூட பேசாம, பெண்கள் காற்று உங்க பக்கம் கொஞ்சம் கூட‌ அடிக்காம, ஒரு சாமியார் மாதிரி(போலி சாமியார்னா, சங்கு தான்டி.. ஸ்ட்ரெய்ட் டிக்கெட் டூ நரகம்) இருந்தீங்கன்னா, ரெண்டு வாரம் கழிச்சி அவங்க உங்க பக்கம் ஆறுதல் பார்வை திரும்ப வாய்ப்பு இருக்கு. நாளொரு PizzaHut டும் பொழுதொரு MaryBrown னுமாக காதலை மீண்டும் வளர்க்கவேண்டும்.

இந்த டைம்ல பொண்ணுங்க நோட் பண்றதுக்கு ஒரு மேட்டர் இருக்கு. ஒருவேளை நீங்க இன்ட்ரோ கொடுக்கிற ஆள் மட்டும் பையனா இருந்தா, அவன் உங்க நல்ல ஃப்ரண்டா இருந்தா, தலைவர் "ஒரு ஹாய்" மட்டும் சொல்லிட்டு அங்கே இருந்து எஸ்ஸாகி விடுவார். மனசுக்குள் அவன அசிங்கம் அசிங்கமா திட்டுவார். ரெண்டு நிமிஷம் பார்ப்பார். அப்படியும் நீங்க வரலைன்னா, டீசன்டா உள்ளே புகுந்து "அப்புறம் போன வாரம் உங்களை அடையார் டிப்போ பக்கத்துல் இருக்க பார் பக்கம் பார்த்தேன்" அப்படின்னு உங்க ஃப்ரண்ட ஓட ஓட துரத்துற மாதிரி நோஸ்கட் பண்ணி அனுப்பி வச்சிடுவார். இது தாங்க பசங்க திறமை. மைண்ட்ல வச்சிக்கோங்க.

பேக் டூ பாய்ஸ்: உங்க காதலிக்கு தங்கச்சி இல்லாமல் இருந்தால், உங்கள் காதல் லைஃப், ஃப்ளைட்ல‌ போற மாதிரி ஸ்மூத்தா, ட்ராவல் பண்றதே தெரியாத மாதிரி போய்கிட்டே இருக்கும். ஒரு வேளை இருந்தால், கொஞ்சம் அழகாகவும் இருந்தால், உங்க ஆளை விட ரெண்டு வயசு கம்மியாக இருந்தால், இத்தனை 'இருந்தால்' இருந்த்தும் "நீங்க நல்லவர், ராமன்(இவரும் கடவுள்ங்க) மாதிரி நல்ல பழமாக இருந்தால்" மட்டும் தொடருங்கள். உங்க காதல் லைஃப் கெட்டி. இல்லையென்றால், மனசாட்சியை கொஞ்ச நாள் கழற்றி டாஸ்மாக்கில் தொங்கவிட்டு விட்டு, இந்த காதலை கட் பண்ணிவிடுங்கள். ஏன் தெரியுமா? "தெரியும்டா, கொஞ்சம் சின்னபொண்ணா, என்னவிட அழகா இருக்கிறதுனால‌, ஜொள்ளு விட்டு அவளுக்கு தெனமும் SMS பண்ண ஆரம்பிச்சிட்ட. ஒருநாளாவது எனக்கு நீ குட் மார்னிங் SMS அனுப்பி இருக்கியா?" இந்த மாதிரி எதுக்கெடுத்தாலும் சண்டை போட்டு, ஒரு நாளும் நிம்மதியாக இருக்க விடமாட்டார்கள். நீங்க மறந்தாலும், அவங்களே நியாபகப்படுத்தி சண்டை போடுவார்கள். நாளடைவில் உங்க ஆளுக்கு, இதுவே ஒருவித காம்ப்ளக்ஸாக மாறி விடக்கூடிய ஆபத்தும் இருக்கிறது. உஷார்.
முழிச்சிக்கோ, ஃபிகர கரெக்டா மெயின்டெயின் பண்ணி பொழச்சிக்கோ!

(டிப்ஸ் இன்னும் வரும்)

**********************

(காதலிக்கும்)பெண்கள் பேசும் வார்த்தைகளின் அர்த்த‌மே வேற‌!

கணவன் மனைவியை அடக்கி ஆள்வதும், மனைவி கணவனை மிரட்டி வாழ்வதும், கட்டுபெட்டித்தனமான வாழ்க்கையின் ரெண்டு எக்ஸ்ட்ரீம் கேட்டகிரிஸ். ஆனால் ரெண்டுக்கும் இடைப்பட்டு எதற்கெடுத்தாலும் முறைக்கும், சிணுங்கும் மனைவி, தொட்டதற்கெல்லாம் மனைவிக்கு பயந்து நடுங்கும் அல்லது பயந்தது மாதிரி நடிக்கும், செல்லமாக கோபப்படும், சண்டைபோடும் கணவன். இவர்கள் இருவர் என்றுமே இளமையாக இருக்கும் திருமண பந்தத்தின் உயிர்நாடி.

அதேபோல் தான் காதலும், காதலர்களும். சண்டைக்கோழிகளாக எந்நேரம் அடித்துக் கொண்டு திரியும் ஈகோ மோதல்கள், நைட் தூங்கபோறதுக்கு முன்னால "ஐ லவ் யூ"ன்னு காதல் SMSல முடியும். 'உன்னாலே உன்னாலே' படத்தில் வரும் ஃபேமஸ் டையலாக். பொண்ணுங்க, "Thanks"னு சொன்னா, "நீ பண்ண இந்த மொக்கை வேலைக்கு இது ஒண்ணு தான் கொறச்சல்"ன்னு அர்த்தம். இது மாதிரி போகும். பொண்ணுங்களோட ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கும். அது புரியாம பேக்கு மாதிரி இருந்தா பையனோட மூக்கு உடைஞ்சிடும். இந்த பதிவு, அந்த மாதிரி பசங்களுக்கு ஹெல்ப் பண்ணும் நோக்கத்துடன் பதிவு செய்யப்படுகிறது. மே பி, ஃப்யூச்சர்ல எனக்கு கூட யூஸ் ஆகலாம். Girls, please excuse me.
1) ஸ்நாக்ஸ் வாங்கிட்டு வ‌ர‌ட்டுமா/என்ன‌ சாப்பிடுற‌?

பாஸ், நீங்க‌ ரெகுல‌ரா சினிமாவுக்கு ஜோடியா போகின்ற ஆளா? அப்ப‌டின்னா, க‌ண்டிப்பா இந்த‌ கேள்வியை உங்க‌ ஆளிட‌ம் இர‌ண்டு மூன்று த‌ட‌வையாவ‌து கேட்டு நோஸ்க‌ட் வாங்கி இருப்பீர்க‌ள். ந‌ல்ல‌ ப‌ட‌மோ, மொக்கை ப‌ட‌மோ இன்டெர்வெல்லில் ம‌ட்டும் சீட்டில் ஒரு நிமிஷ‌ம் கூட‌ ந‌ம்ம‌ ப‌ச‌ங்க‌ளால் உட்கார‌ முடியாது. ஃபிகரோட போயிருப்பதால் தம்மும் அடிக்க முடியாது. ஆனால் பொண்ணுங்க‌, பிடித்து வைத்த‌ பிள்ளையார் மாதிரி உட்கார்ந்து செல்போனை எடுத்து நோண்டிக் கொண்டிருப்பார்கள்(ஏழாம் உலகம்?). ஓ.கே அது வேற‌ டாபிக். ந‌ம்ம‌ மேட்ட‌ருக்கு வ‌ருவோம்.

ரொம்ப‌ ஜென்டிலாக‌, நீங்க‌ வெளியே போகும்போது "நீ ஏதாவ‌து சாப்பிடுறீயாம்மா?" என்று கேட்பீர்க‌ள். உட‌னே அவ‌ங்க‌ உங்க‌ள ஒரு முறை முறைச்சிட்டு, "ஒண்ணும் வேணாம்" என்று சொல்வார். நீங்க‌ளும், ஒண்ணும் வேணாம்ன்னுட்டாளே, ந‌ம்ம‌ளும் எதுவும் ஸ்நாக்ஸ் வாங்க‌ வேணாம்ன்னு ச்சும்மா வெளில‌ போயி ம‌த்த‌ ஃபிக‌ர்ஸ‌ சைட் அடிச்சிட்டு, ப‌ட‌ம் போட்ட‌வுட‌னே உள்ளே வ‌ந்துடுவீங்க‌. அதுக்கு அப்புற‌ம் மேட‌ம், ப‌ட‌ம் முடிஞ்சி வெளியே வ‌ந்த‌தில் இருந்து, அன்னைக்கு நைட் தூங்குற‌து வ‌ரைக்கும் உங்க‌கூட சரியாவே பேச‌வே மாட்டாங்க‌.

அவ‌ங்க‌ ச‌ரியா பேச‌லைன்னு, உங்க‌ளுக்கு அடுத்த‌ நாள் ஆஃபிஸ்ல‌ உட்கார்ந்து இருக்கும்போது தான் புரியும். உட‌னே ஃபோன் ப‌ண்ணி, என்ன‌ ஏது என்று விசாரித்தால், "நான் கோபமாக இருக்கேன்"ன்னு கண்டுபிடிக்க உனக்கு இவ்வளவு நேரம் ஆச்சான்னு 15 நிமிஷம் கன்னாபின்னான்னு திட்டிட்டு, மறுபடியும் பழைய பிரச்சினைக்கு வந்து அர்ச்சனையை ஆரம்பிப்பாங்க.

"இங்க‌ பாரு, ந‌ம்ம எங்கே ப‌ட‌த்துக்கு போயிருக்கோம்? க‌ம‌லா தியேட்ட‌ருக்கு. அங்க‌ எத்த‌னை த‌ட‌வ‌ நாம‌ போயிருக்கோம். அங்க‌ கெடைக்கும் ஜிகீர்த‌ண்டா என‌க்கு ரொம்ப‌ பிடிக்கும்ன்னு தெரியாதா? இல்லை தெரிஞ்சிட்டே தான் என்ன சாப்பிடுறேன்னு ந‌க்க‌லா கேட்டீயா? நீ கேட்டு இருப்ப‌டா?" என்று 15 நிமிட‌ம் மூச்சி விடாமல் உங்க‌ளை தாளித்து எடுத்து விடுவார்க‌ள். உங்க‌ளை, "என்ன‌ கொடுமைடா இது? கேட்காம‌ இருந்தா தான் த‌ப்பு? நான் கேட்டேன். கேட்டும் திட்டும் வாங்குறேனே?" அப்ப‌டின்னு ஃபீல் ப‌ண்ணுவீர்க‌ள். ம‌ற‌ந்தும் வாயை திற‌ந்து ஆர்கியூ ப‌ண்ணாதீர்க‌ள். அது உங்க‌ள் உட‌ல்ந‌ல‌த்துக்கும், ப‌ர்ஸ்ந‌ல‌த்துக்கும் ந‌ல்ல‌து. இல்லையென்றால் ச‌ண்டை பெரிதாகி மோக்காவில் 75 ரூபாய்க்கு ஐஸ் காஃபி வாங்கி கொடுத்து க‌ன்வின்ஸ் ப‌ண்ண‌ வேண்டி இருக்கும்.

பாஸ், உங்க‌ளுக்கு ஒரு அட்வைஸ். உங்க‌ ஆளுட‌ன் ரெகுல‌ரா ப‌ட‌த்துக்கு போறீங்க‌ன்னா, ஒவ்வொரு தியேட்ட‌ர்ல‌யும் என்ன‌ ஸ்பெஷ‌ல், அது உங்க‌ ஆளுக்கு பிடிக்குதா, அப்ப‌டி இப்ப‌டின்னு மொக்க‌யான‌ டேட்டாவை எல்லாம் க‌லெக்ட் ப‌ண்ணி டேட்டாபேஸ்ல‌ ஸ்டோர் ப‌ண்ணி வ‌ச்சிக்கோங்க‌. ஆனா "த‌னியாவோ, ப‌ச‌ங்க‌ளோடோ போனால் 4 ரூபாய்க்கு கிங்க்ஸோடு முடிஞ்சிருக்கும்" டேட்டாபேஸ் கிரியேட் பண்ணும்போது இந்த‌ மாதிரியான‌ தாட்ஸ் வ‌ராம‌ல் பார்த்துக் கொள்ளுங்க‌ள்.

முழிச்சிக்கோ, ஃபிக‌ர‌ க‌ரெக்டா மெயின்டெயின் ப‌ண்ணி பொழ‌ச்சிக்கோ!

எச்சரிக்கை: ஒரு கேள்வியே பெரிய பதிவாக‌ போன‌தால், இதே போல் ப‌திவுக‌ள் எதிர்கால‌த்தில் தொட‌ர்ந்து வ‌ரும் என்று அனைவ‌ருக்கும் அறிவுறுத்த‌ப்ப‌டுகிற‌து.

**********************

Related Posts with Thumbnails