இடம்: மதுரை, திருமங்கலம்.
நேரம்: மாலை 5 மணி, ஒரு நாள்
"அப்பா, ஒரு முக்கியமான விஷயம்"
காலையில் வந்த தினமணியின் கட்டுரையில் மூழ்கியிருந்தவர், மூக்குக் கண்ணாடியை சரிசெய்து கொண்டே தலையை நிமிர்த்தினார்
"என்னப்பா?"
"நான் ஒரு பொண்ணை காதலிக்குறேன்"
"ம்ம்ம், எத்தனை நாளா?"
"மூணு வருஷமா"
"மூணு வருஷமா பண்ணிக்கிட்டு இருக்குறத இப்ப மட்டும் சொல்றதுக்கு என்ன காரணம்?"
"அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு ஆசைப்படுறேன்"
"ம்ம்ம், அந்த பொண்ணு எந்த ஊரு, எப்படிப்பட்ட குடும்பம்"
"கோயம்புத்தூர். அப்பா, ஆர்.டி.ஓ. அவங்க ஃபேமிலில மொத்தமே மூணு பேர் தான்"
"ம்ம்ம்.. பெரிய இடம் மாதிரி தெரியுது"
தினமணியை மடித்துவைத்து விட்டு, கண்ணாடியையும் கழற்றினார். 25 வருடங்களுக்கும் மேலாக ஓடிக் கொண்டிருக்கும் ஆசிரியர் பணியில், ரிட்டையர்டு ஆகும் நாளை நோக்கிக் காத்துக் கொண்டிருக்கிறார். ஒரு வித அயர்ச்சி, ஆயாசம் முகத்தில் இழையோடியது
"இந்த செந்தில்குமார் வாத்தியாருக்கு உங்களையும் தவிர, ஒரு பொண்ணு இருக்கா. அவளுக்கு ஒரு நல்ல இடத்துல கல்யாணம் பண்ணிக் கொடுக்காம, குடும்பத்துல மூத்த வாரிசு நீ இப்படி பேசுறது......"
"இல்லப்பா. நான் தங்கச்சி கல்யாணத்தை பத்தி பேசுறதுக்கும் தான் வந்திருக்கேன்"
" " நரைத்த புருவ முடிகளை ஆச்சர்யக்குறிகளாக்கி அவனை ஏறெடுத்து பார்த்தார்.
"ஆமாப்பா........"
இடம்: தேனி, சின்னமனூர்
நேரம்: மாலை 6 மணி, அதே நாள்
களத்துமேட்டில் ஒரு சேரில் உட்கார்ந்து மேற்பார்வையிடும் அப்பாவிடம், பையன்
"அய்யா, நைட் ட்ரெயினுக்கு நான் ஊருக்கு கெளம்புறேன்"
"நல்லது தம்பி. இனிமே மீசைய மழிச்சிட்டு ஊருப்பக்கம் வராதீங்க. இந்த பிரசிடென்ட் சின்னச்சாமிக்கு ஊரு மக்க கொடுக்கிற மரியாதைய உங்களுக்கும் கொடுக்கணும்"
"ஆகட்டும்யா.. அய்யா.. வந்து.. அய்யா... நம்ம கற்பகம் கல்யாணம் விசயமா?"
"இப்பயே அந்த சின்ன கழுதை கல்யாணத்துக்கு என்ன அவசரம்?"
"இல்லைய்யா. அவ ஒரு பையன விரும்புறா.. விசாரிச்சி பார்த்தேன்.. தஞ்சாவூர்ல பெரிய அரிசி மண்டியும், 50 ஏக்கர் வயக்காடும் இருக்கு. பையனும் சென்னையில ஆட்டோமொபைல் கம்பெனில வேல பாக்குறான்"
"ம்ம்ம்.. இவ்வளவு விசாரிப்புகளை பண்ணிப்புட்டு வந்து தான் நிக்குறீங்களாக்கும். நல்லது. இப்பவே திடீர்ன்னு தங்கச்சி கல்யாணத்தை பத்தி நீ அக்கறப்படுறது சந்தோஷமத்தான் இருக்கு"
"இல்லைய்யா....அது வந்து.."
"என்ன இன்னும் இழுக்கிறீங்க"
"நானும் ஒரு பொண்ண விரும்புறேன்"
"அப்படிப் போடு அருவாளை"
"நல்ல இடம் தான். என்கூட தான் வேலை பாக்குறா. மதுரை திருமங்கலம் வாத்தியார்.......... "
"சந்தோசம். எனக்கு வேலையே இல்லாம பண்ணிப்புட்டீங்க ரெண்டு பேரும். ரொம்ப சந்தோசம்"
இடம் 3: தஞ்சாவூர் பெரிய தெரு.
நேரம்:இரவு 7 மணி, அதே நாள்
தன் ஒரே மகனின் கல்யாணத்துக்காக ப்ரோக்கரிடம் வாங்கிய ஃபோட்டோக்களை, பையனிடம் நீட்டினார் அம்மா.
ஃபோட்டோக்கள் கவரை பிரித்துக் கூட பார்க்காமல், "அம்மா, நான் ஒரு பொண்ணை லவ் பண்றேன். பொண்ணோட அப்பா தேனி, சின்னமனூர்ல ப்ரசிடெண்டா இருக்கார்"
"அப்பாடா, வேலை மிச்சம். அடுத்த வாரமே, பொண்ணு பார்க்க கெளம்பிடலாம்"
"வேணாம்மா"
"ஏன்?"
"நாளைக்கே கெளம்பலாம்"
************************************
காதல் டூ கல்யாணம் - பட்டர்ஃப்ளை எஃபெக்ட்!
சியாமளா-4: ஜீன்ஸ் போட்ட மஹாலெட்சுமி!
கணேஷ்-சியாமளா.. 1 2 3 4 5 6 7 8 9 10
(ஃப்ளாஷ்பேக் முடித்துவிட்டு வரும்போது)
கதவைத் திறந்தால் சியாமளா நின்று கொண்டிருந்தாள். ப்ளாக் கலர் டஃப் ஜீன்ஸ், காலர் வைத்த லாங்க் ஆரஞ்ச் டாப். போன தடவை மாதிரி எந்த வஸ்துவும் கழுத்தை சுற்றி போட்டு இருக்கவில்லை.
"முத்துவேல், நீ எப்படி இங்க?" சியாமளாவின் முதல் கேள்வி முத்துவேலை நோக்கி
அதிர்ந்தான். "இல்ல, ச்சும்மா தான். கணேஷ், நான் கெளம்புறேன்டா" என்று வாசலை நோக்கி நடந்தான், ரெண்டு கன்னங்களையும் தடவிக் கொண்டே
"ஓ.. முத்துவேல் ஸார், நீங்க கணேஷோட ஃப்ரெண்டா?. ஐ ஸீ.. மைண்ட்ல வச்சிக்கிறேன்" என்றாள் எகத்தாளமாக
"இல்ல.. ஆமா.. இல்ல.. எனக்கு ஆஃபிஸ்ல வேல இருக்கு.. பை" வீட்டை விட்டு ஓடாத குறையாக எஸ்கேப் ஆனான் முத்துவேல்
"ம்ம்.. அப்புறம் கணேஷ்?" அவனிடம் திரும்பியபடியே
பியரில் இருந்த தண்ணீர் எல்லாம் வியர்வை அருவியாக கொட்டியது. இவளை கொஞ்சம் கூட எதிர்பார்க்காததால் வெலவெலத்து போனான் என்பது உண்மை.
திக்கித் திணறி, "உன்னை யாரு இங்க எல்லாம் வரச் சொன்னது? இது பேச்சிலர்ஸ் ரூம்" என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போது வீட்டை சியாமளா நோட்டம் விட்டுக் கொண்டிருந்தாள்.
கட்டிலின் அடியில் காலி பியர் பாட்டில்கள் ஒளிந்து இருப்பதை பார்த்துவிட்டு, அவள் கணேஷை பார்த்த பார்வையில் உஷ்ணம் அதிகமாக கொதித்தது.
நேரே போய், ஃபிரிட்ஜை திறந்து பார்த்தாள்.
"ஓ.. இன்னும் ரெண்டு கிங்க்ஃபிஷர் பீர் இருக்கா? ஸோ, நான்தான் தண்ணிபூஜையில கரடியா?"
"இல்ல.. ஆமா.. இல்ல"
"ஸேம் ரியாக்சன், வெரி பேட்.. சரி வா நாம ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு பியர் அடிக்கலாம்"
"வாட்? உன்னை யாரு இங்க எல்லாம் வரச் சொன்னா? மேல் வீட்டு மாமிக்கு மட்டும் தெரிஞ்சது, அகோரி ஆட்டம் தான்?" என்று கணேஷ் சொல்லி முடிப்பதற்குள் காலிங் பெல், "டிங் டாங் டிங் டாங்" என விடாமல் அடித்தது.
"நான் சொன்னேன்ல" என்று சியாமளாவிடம் புலம்பிக் கொண்டே திறந்தான். திறந்தால்,
மா....மீமீமீமீ
வியர்வை அருவியாகக் கொட்டியது கணேஷுக்கு.
முன்னால் நின்றிருந்த அவனை இடித்து தள்ளிவிட்டு, சியாமளாவிடம் போனாள் மாமி. அப்படியே கன்னத்தை மொத்தமாக வாஞ்சையாக தடவி நெட்டி முறித்து சொன்னாள்.
"கணேஷ், நீ நொம்ப கொடுத்து வச்சவன்டா.. அப்படியே மஹாலெட்சுமி மாதிரி இருக்கா? என் கண்ணே பட்டுடும் போல இருக்கு"
"மஹாலெட்சுமி எந்த ஊர்ல ஜீன்ஸ் போட்டு வந்துச்சி. மாமி, நீங்க என்ன லூஸா?" கணேஷின் மைண்ட் வாய்ஸ் மட்டும் எக்கோவுடன் பேசியது.
"என்னடா நீ எதுவும் பேச மாட்டேங்குற? நான் சொல்றது கரெக்ட் தான. மஹாலெட்சுமியே வீட்டுக்கு வரப்போறா?" மறுபடியும் மாமி சிரிக்காமல் புளுகினாள்.
"இவ மஹாலெட்சுமி இல்ல, பீர்லெட்சுமி. அடிக்கிற பீர்ல பாதி கேட்குறா, இவளா மஹாலெட்சுமி? படுபாதகி.. இவள எங்கிருந்து தான் பிடிச்சாய்ங்களோ?" மறுபடியும் மெதுவாக புலம்பினான் அவன் காதுக்குள்ளேயே
"சரி சின்னஞ்சிறுசுக பேசிக்கிட்டு இருங்க. நான் போய் ஃபில்டர் காஃபி போட்டிண்டு எடுத்திட்டு வர்றேன்" மாமி எஸ் ஆனாள்.
கணேஷிடம் திரும்பி, "ரைட், மாமி ப்ராப்ளம் ஸால்வ்டு. இப்ப சொல்லு, ஆளுக்கு ஒரு பியர். ஓ.கேவா?"
நிஜமாகவே டென்ஷன் ஆனான் கணேஷ், "ஹேய், நீ என்ன பொண்ணா, இல்ல பொண்ணு மாதிரியா? இப்படி பசங்களுக்கு ஈக்வெலா போட்டி போடுறீயே? வெட்கமா இல்ல?" கத்தியே விட்டான்.
"நான் எதுக்கு வெட்கப்படணும். எந்த பியர்ல இது பசங்க மட்டும்தான் சாப்பிடணும்னு போட்டு இருக்கு? இல்ல விஜய் மல்லையா உன்கிட்ட மட்டும் சொன்னாரா?"
"இல்ல..அது வந்து.. ரைட்.. அப்படியா?" தைரியத்துடன், "பல்ஸர் பைக் விளம்பரத்துல கூட தான், இது பசங்களுக்கு மட்டும் தான்ன்னு சொல்லல.. ஆனா பசங்க மட்டும் தான ஓட்டுறாங்க.. எல்லா விஷயத்துலயும் போட்டி போடுற நீ பல்ஸர் ஓட்ட ரெடியா?" மடக்கி விட்ட திருப்தியுடன் சியாமளாவைப் பார்த்தான்.
அவள் முகத்தில் சலனமே இல்லாமல், கையை நீட்டி சொன்னாள், "வெளியே போய் பாரு, நான் எதுல வந்தேன்னு"
பார்த்தான். தூக்கி வாரி போட்டது. Bajaj Pulsar DTS 135i ல் வந்திருந்தாள்.
"சத்தியமாக இவ பொண்ணே இல்ல" ஹார்ட் பீட் 150ல் அ(து)டித்தது. "சரி சரி, ஏன் நீ ஏன் வளவளன்னு பேசிட்டு இருக்க? இப்ப எதுக்கு நீ இங்க வந்த?" அவனுக்கு மீசையில் மண் ஒட்டவில்லை.
"ஏன் நான் உன்ன பாக்க வரக்கூடாதா?" புருவத்தை ஆட்டி ஆட்டி அவள் கேட்ட போது "இவ பொண்ணுதான் போலயே" என்று கணேஷுக்கு சந்தேகம் வந்தது.
இருந்தாலும் ஆண்பிள்ளை முறுக்கு என்னாவது? "இங்க பாரு? உனக்கு நான் சரியான ஆள் கெடையாது. எனக்கும் என் பழைய ஆஃபிஸ் ஹரிணிக்கும் நெக்ஸ்ட் மன்த் மேரேஜ். வீ ஆர் ட்ரூ லவ்வர்ஸ். ஓடிப் போக போறோம். ஸோ, இனிமே இப்படியெல்லாம் பண்ணாத. போ, நான் எங்க அப்பாகிட்ட பேசி கல்யாணத்த நிறுத்திடுறேன்" அரைமணி நேரம் முன்னால் ப்ளான் பண்ணியத்தை ஒப்பித்தான் கணேஷ்.
"சரி முடிச்சிட்டியா?"
"ம்" என்றான். ஆனால் "எதையோ சுத்தி வளைச்சி மடக்க போறது போல கேக்குறாளே? என்று அவன் மைண்ட் வாய்ஸ் சொல்லி முடிக்க வில்லை,
சியாமளா ஆரம்பித்தாள், "ஓடிப் போகப் போறீங்க.. ஆனா இத உங்க அப்பாக்கிட்ட பேசி நம்ம கல்யாணத்த நிறுத்தப் போறீங்க?"
"இல்ல.. ஆமா.. இல்ல.. " தெளிவாக குழம்பிவிட்டு பின்" சரி விடு, எனக்கு தான் உன்னை பிடிக்கலைன்னு தெரியுதுல்ல? அப்புறம் ஏன் இப்படி டார்ச்சர் பண்ற?"
"ஓ.கே இது டார்ச்சராவே இருக்கட்டும். இப்ப நான் இங்க வந்தேன்னா.......?" முடிப்பதற்குள்
கணேஷ், "அத தான் நான் வந்தததுல இருந்து கேக்குறேன். சொல்லு ஏன் வந்த?"
அவன் கையில் எதையோ திணித்தாள். அவன் பிரித்து என்னவென்று பார்த்துக் கொண்டிருக்கும்போது சொன்னாள்.
"நம்ம மேரேஜ் இன்விடேஷன் ஃபர்ஸ்ட் காப்பி. ப்ரூஃப் பார்த்துட்டு என்னென்ன சேஞ்ச் பண்ணனும்ன்னு சொல்லு. மாத்திடலாம்?" சொல்லிவிட்டு கெளம்பிவிட்டாள். பல்ஸரை ஓர் உதை விட்டு ஸ்டார்ட் பண்ணிக்கொண்டே திரும்பி, கணேஷை பார்த்து வெட்கத்துடன் கண்ணடித்தாள் சியாமளா.
"??????????????????????????????????"
*************************************
சியாமளா-1: அடாவடி பொண்ணும், அப்பாவி பையனும்!
புதிய ஆஃபிஸில் முதல் நாள். கணேஷ்க்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சுற்றியும் ஆந்திரா, கர்நாடகா, ராஜஸ்தான், தமிழ்நாடு, கேரளா என மாநிலம் வாரியாக லட்டு மாதிரியான பெண்கள் கூட்டம். எந்த பொண்ணைப் பார்க்க, என்ற ஏகக் குழப்பத்தில் இருந்தவனின் செல்ஃபோன் சிணுங்கியது.
"மச்சி, என்ன ஆஃபிஸ்டா இது? ஒரே பொண்ணுங்க கூட்டம். அம்பி மாதிரி இருக்கிற என்னை ரெமோ மாதிரி ஆக்குறாளுங்கடா..?" செயற்கையாக வெட்கப்பட்டான்.
"உனக்கு மச்சம் தான்டா. 'கணேஷ்'ங்கிற பேரைவிட 'கிருஷ்ணன்'னு சிச்சூவேனலா பேர் வச்சிருந்தா நல்லா இருந்திருக்கும். என் ப்ராஜ்க்ட்லயும் இருக்காங்களே. ஹூம்ம் ஒரே ஆன்ட்டிஸ்"
"சரி புலம்பாத. அதுக்கெல்லாம் லக் வேணும். சரி லஞ்ச்க்கு ஃபோன் பண்றேன். வை. டிஸ்டர்ப் பண்ணாத..பை"
ஒரு மாதிரியாக செட்டில் ஆகியிருக்கும்போது லஞ்ச் டைம் வந்தது. கெளம்பலாம் என்று இருந்தவனின் முதுகின் பின்னால் ஒரு கீச்சுக் குரல்.
"எக்ஸ்கியூஸ் மீ"
ஜீன்ஸ், டாப்பில் பின்னால் ஒரு பெண். துப்பட்டா மாதிரி இருக்கும் வஸ்துவை தோளில் துண்டு போடுவது மாதிரி போட்டு இருந்தாள். தெளிவான திருத்தமான முகம். டாப்ஸில் ஏதோ எழுதியிருந்தது.
என்ன என பார்த்தவன் கணநேரத்தில் தெளிந்து "யெஸ்" என்றான்.
"ஐயாம் சியாமளா, இந்த ப்ராஜெக்ட்ல தான் நானும் வொர்க் பண்றேன். வெளில லஞ்ச் போகலாமா?" மென்மையாக கேட்டாள்.
"ஷ்யூர்" என்றான் தன்னிச்சையாக. அவள் பின்னாலேயே சென்றான்.
"யார் இவள்,நான் ஏன் இவள் பின்னால் போகிறேன்" என்ற உண்மை லேட்டாக மனதில் உறைத்தது.
பார்க்கிங்கில் கணேஷ், அவன் வண்டி அருகே சென்றான். அப்போது, "என் வண்டியில போயிடலாமே?" என்றாள்.
"ஓ.. ஷ்யூர்"
அப்போதும் ஏன் அப்படி சொன்னான் என்று அவனுக்கே தெரியவில்லை.
பின்னால் அநாயசமாக உணர்ந்தவன், அவள் விரித்து போட்டிருந்த கூந்தல் வண்டி வேகத்தில் முகத்தில் மோத, "என்ன ஷாம்பூவாக இருக்கும்?" என்ற ஆராய்ச்சியில் இறங்கினான்.
எதிரெதிர் டேபிளில் இருவர். சிக்கன் பிரியாணி, பட்டர் சிக்கன் ஆர்டர் பண்ணிவிட்டு எனக்கு தேவையானதை ஆர்டர் பண்ண சொல்லிவிட்டு, ஹேண்ட் வாஷ் பண்ண போயிருந்தாள்.
மனதிற்குள் ஐன்ஸ்டீன் பிஸிக்ஸ் க்ளாஸ் எடுப்பதுபோல் ஒன்றும்புரியாமல் உட்கார்ந்திருந்தான். வந்தாள்.
"எனக்கு ஆண்கள் சுத்தமாகப் பிடிக்காது. சுயநலவாதிகள். பெண்களிடம் மட்டும் அதிகாரத்தைக் காட்டும் வீரர்கள்" என்று சியாமளா ஆரம்பித்தாள்.
"ஙே!"
"எல்லா விஷயத்திலும் பெண்கள் தங்களுக்கு கட்டுப்பட்டு போகவேண்டும் என்று யோசிக்கும் narrow minded peoples" என்றாள் கடுப்பாக.
மனதிற்குள், "இவளுக்கு என்ன பிரச்சினை? சம்பந்தமே இல்லாமல் என்கிட்ட புலம்பிக்கிட்டு இருக்கா?" என்று எண்ணினான்.
"என்ன? எதுவும் பேசாம இருக்கீங்க?"
"இல்லங்க, அதெல்லாம் ஒண்ணும் இல்ல. எனக்கு ஜீன்ஸ் போட்ட பொண்ணுங்கன்னா அலர்ஜி"
"இதுகூட ஆண்களின் வறட்டு அதிகாரம். பெண்கள் ஆண்களுக்கு சமமாக ஜீன்ஸ் போடுறாங்களேன்கிற கோபத்தின் வெளிப்பாடு தான்."
"வெல், இது முத்திப் போன கேஸ். ரொம்ப அடிபட்டு இருக்கா" என்று நினைத்துக் கொண்டிருந்த போது, அவனுடைய ஃபோன் அடித்தது.
"எக்ஸ்கியூஸ் மீ" என்று கடுப்புடன் கத்தரித்துவிட்டு, "என்னம்மா இந்த நேரத்துல?"
"இல்லடா, இந்த வாரம் ஊருக்கு வர்றேல்ல?"
"ஏன்மா, எதுவும் முக்கியமான விஷயமா?"
"எல்லாம் நல்ல விஷயம் தான்"
"சரி சரி நான் நைட் கூப்பிடுறேன்" என்றான் சியாமளா மீது இருந்த கடுப்பில்.
உள்ளே லெக்பீஸை கடித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
மூடை மாற்றலாம் என யோசித்துக் கொண்டு, "இந்த ப்ராஜெக்ட்ல உங்களுக்கு என்ன ரோல்?" என சாஃப்டாக கேட்டான் கணேஷ்.
"இதுவும் ஒரு வகையான ட்ரீட்மெண்ட். உங்க லெவல்ல விட கீழே டெவலப்பராக இருந்தால் அதிகாரமாக பேசலாம் என்கிற மனப்பான்மையின் வெளிப்பாடு" என்றாள் சூடு கொஞ்சமும் குறையாமல்.
கணேஷ் கடுப்பின் உச்சிக்கே போனான். "பாவம் உங்கள கட்டிக்க போறவன் நெலமை" என்று சத்தமாகவே முனகினான்.
"வாட்? என்ன சொன்னீங்க?"
"இதெல்லாம் எதுக்கு என்கிட்ட புலம்பிக்கிட்டு இருக்கீங்க. வாட்ஸ் யுவர் ப்ராப்ளம்?" கத்தியே விட்டான்.
"'பாவம் உங்கள கட்டிக்க போறவன் நெலமை'ன்னு நீங்க முனகினது எனக்கு கேட்டுருச்சி. இருந்தாலும் உங்களுக்கு self-sympathy அதிகம்" என்று சொல்லிக் கொண்டே ஹேண்ட் பேகில் இருந்து அவள் எதையோ எடுப்பதற்கும்,
"வாட்?" என அதிர்ச்சியின் உச்சியில் கத்துவறகும் சரியாக இருந்தது.
அவள் கையில் அவனுடைய லேண்ட்ஸ்கேப் கலர் ஃபோட்டோ.
"ஹலோ, இது எப்படி உங்க கையில..? என்று அதிர்ச்சியில் உறைந்தான்.
"இந்த சன்டே, நீங்க பொண்ணு பார்க்க போகும் முருகேசன் வாத்தியார் வீட்டுப் பொண்ணு நான் தான்" என்றாள் முதல் முறையாக வெட்கப்பட்டுக் கொண்டே.
அவள் டாப்ஸில் எழுதியிருந்த வாசகம், "SAY SOMETHING!"
*****************************
கணேஷ்-சியாமளா.. 1 2 3 4 5 6 7 8 9 10
*****************************
ஜிலீர் காதல் சடுகுடுகுடு!
"அனு, காஃபி" "அனு, காஃபி" என்று பெட்டில் இழுத்துபோர்த்திய போர்வைக்குள் இருந்து ஹை டெசிபலில் கத்தினான் வினு என்கிற வினோத்.
"காஃபி எல்லாம் கெடையாது. சீக்கிரம் எந்திரிச்சி ரெடியாகு" என்று அனு என்கிற அனிதாவின் குரல் எதிரொலித்தது. பெட்ரூமில் உள்ள அட்டாச்ட் பாத்ரூமில் இருந்து வந்தது.
"ஏன்?"
"இன்னிக்கி என்ன நாள்னு மறந்து போச்சா?"
""
எந்த பதிலும் வரவில்லை.
வெளியே வந்தவள், அவன் போர்வையை துகிலுரித்தாள். தலைகீழ் y ஷேப்பில் குப்புறப்படுத்திருந்தான்.
"சீக்கிரம் கெளம்புன்னு சொன்னேன்ல? டைம் இப்பவே 11.30. 2 மணிக்கு அங்க இருக்கணும்"
"எதுக்குடி?" இன்னும் கண்களை மூடி தூங்கிக் கொண்டு தான் இருந்தான்.
கண்ணாடி முன் மேக்கப் பண்ணிக் கொண்டிருந்தாள் அனு.
"உங்க அக்கா வீட்டுக்கு விருந்துக்கு வர்றோம்ன்னு ப்ராமிஸ் பண்ணி இருந்தோம்ல. மறந்து போச்சா?"
"ஓ.. என் அக்காவுக்கு அறிவே இல்ல. மூணு வாரமா எல்லார் வீட்டுக்கும் கல்யாண விருந்துக்கு போய் டயர்டாகி இங்க வந்தா, இங்கேயும் இவ டார்ச்சர் பண்றா? "
"உன் அக்கா தான உன்னை மாதிரி தான் இருப்பாங்க..? முணுமுணுத்தாள்.
அவள் அடித்த யார்ட்லியின் மணம் அவன் மூக்கினுள் நுழைந்து நாளமில்லா மற்றும் நாளமுள்ள சுரப்பிகளை நாலாவது கியரில் இயங்க வைத்தது. திரும்பி அனுவை பார்த்த்த்... துக் கொண்டிருந்தான். அனுவின் காஸ்ட்யூம் ப்ளஸ் மேக்கப் வொர்க் அரையும் குறையுமாக தொடர்ந்து கொண்டிருந்தது.
"அனு........" வாய்ஸ் மாடுலேஷனில் லைட்டாக எஸ்.ஜே.சூர்யா எட்டிப் பார்க்க, கட்டில் ஓரம் புரண்டு படுத்துக் கொண்டே அவள் அருகில் வந்தான்.
திரும்பி பார்த்தவள் ஷாக்காகி, "ஹேய், கிட்ட வராதே. கொன்னுடுவேன்."
"ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்"
"ஹேய் லுக், நான் இப்ப கெளம்புறதுக்கே 8 மணிக்கே எழுந்திரிச்சி ரெடி ஆகிட்டு இருக்கேன். இனிமே மறுபடியும் நான் குளிச்சி கெளம்புனா, நாம லஞ்சுக்கு போக மாட்டோம். டின்னருக்கு தான் போவோம். "
"ஸோ வாட்.. அவகிட்ட நான் பேசிக்குறேன்.." முன்னேறினான்.
அவள் துள்ளிக் குதித்து ஓடுகிறாள். இவனும் பின்னாலேயே..
மாறி மாறி கபடி ஆட்டம் தொடர, "ஹேய் இங்க பாரு, கிட்ட வராதே.. இல்லைன்னா நான் கத்தி ஊரைக் கூட்டிடுவேன்"
"இந்த கோலத்துலயா..?" அதிர அதிர சிரித்துக் கொண்டே விரட்டினான்.
அந்த நேரத்தில் ஒரு ஃபோன் கால்.
"ஹலோ"
"டேய் வினோத், நான் அக்கா பேசுறேன்..........."
"என்ன சொல்ற.. சரியா கேட்கலை.. சத்தமா பேசு." சொல்லிவிட்டு தவுசண்ட்ஸ் வால்ட்ஸ் பல்பு பிரகாசத்துடன் ஃபோனில் ஸ்பீக்கரை ஆன் பண்ணினான்.
"டேய், என் கொலீக் சித்ராவோட அப்பா இறந்துட்டாரு. நாங்க அவசரமா கெளம்பி போறோம். நெக்ஸ்ட் வீக் விருந்துக்கு வாங்கடா.. ஸாரி.. அனுகிட்டயும் சொல்லிடு.. சரியா?"
"ஓ.கே. ஒண்ணும் ப்ராப்ளம் இல்ல. நான் அப்புறம் கூப்பிடுறேன்." ரிசீவரை வைத்துவிட்டு, மூலையில் இருந்த அனுவை பார்த்து கண்ணடித்தான்.
அவள் கண்ணடித்துக் கொண்டே வெட்கத்துடன், வினுவை நோக்கி ஓடிவந்தாள்.
***********************
ஒரே ஒரு வாட்டிமா, ப்ளீஸ். என் செல்லம்ல.

"ஜானு, ம்க்கும்.. ம்ஹூம்.. ஜானு.. ப்ளீஸ்மா.. ஒரே ஒரு வாட்டிமா.. என் செல்லம்ல.."
"சான்ஸே இல்ல."
"ப்ளீஸ்மா... மை ஸ்வீட் ஹார்ட் இல்ல... ஒரே ஒரு வாட்டி ஓ.கே. சொல்லேன். சீக்கிரமா முடிச்சிட்டு சமர்த்தா தூங்கிடுவேன். ப்ளீஸ்டா"
"டே.. லூசா நீ.. ஒரு வாரத்துல எத்தன வாட்டி.. உடம்பு என்னத்துக்கு ஆகும். உனக்கு அறிவே இல்லியா.."
"இன்னிக்கு மட்டும் அல்லவ் பண்ணேன். என்னால கன்ட்ரோல் பண்ண முடியல"
"ஸாரி மை டியர். என்னால முடியாது.. நோ வே.."
"போன மாசம் கூட, உங்க அம்மா இங்க வந்தப்ப கூட , பெட்ரூம்ல எல்லாரும் தூங்குனப்புறம்..."
"ஸ்டாப் இட். லூஸாப்பா நீ."
"நான் உண்மையத் தான சொன்னேன். ஏன் இப்ப டென்ஷன் ஆகுற."
"...."
"ஓ,கே. ஒண்ணும் வேணாம். நான் போய் தூங்குறேன்."
"டேய்.. டேய்.. சிவா.."
"என்ன?"
"உனக்கு தான் உடம்பு சரியில்லன்னு சொல்லிக்கிட்டு இருந்தேல்ல.. அதான் நான் வேணாம்னு சொன்னேன். என்னைக்காவாது நான் நோ சொல்லி இருக்கேனா?"
"......"(இதுக்கு ஒண்ணும் கொறச்சல் இல்ல)
"கோவிச்சுக்காதடா.. ப்ளீஸ்."
"எனக்கு ஒண்ணும் இல்ல. ஐயாம் பெர்ஃபெக்ட்லி ஆல்ரைட். இன்னிக்கு மார்னிங் கூட நான் ஜாகிங் போனேன்."
"ம்ம்ம்ம்... எனக்கு உன்னை அல்லவ் பண்றதுக்கும் பயமா இருக்கு... அதேநேரம் உன்ன disappoint பண்ணவும் இஷ்டம் இல்ல.."
"ஹை ஜாலி.. நான் கன்டினியூ பண்ணவா", இறுக்க அவளைக் கட்டி அணைத்தபடி
"ம்ம்ம்ம்.. ஓ...... கே.......... பட் ஒன் கன்டிஷன்"
"ரியலி..... ச்சோ ஸ்வீவீவீட்.... என்ன கன்டிஷன்"
"உனக்கு 15 மினிட்ஸ் தான் டைம். சீக்கிரம் முடிச்சிட்டு சீக்கிரம் தூங்கிடணும். உன்னை விட்டா நைட் ஃபுல்லா கன்டினியூ பண்ணுவ.. நாளைக்கு ஆஃபிஸ் போகணும்."
"நீ சொல்லிட்டல்ல.. இதுக்கு மேல நோ அப்ஜெக்சன்.. ஸ்டார்ட் பண்ணட்டுமா "
"ஒவ்வொருவாட்டியும் இப்படி பேசி பேசியே கால்ல விழுந்தடறீயே. இந்த அல்ப விஷயத்துக்கு எல்லாம் கெஞ்சுறீயே வெக்கமா இல்ல.."
"ஹே, ஹே.. இதெல்லாம் பார்த்தா லைஃப் என் ஜாய் பண்ண முடியுமா. என் செல்லத்துக்கிட்ட தான கெஞ்சுறேன்.. கொஞ்சுறேன்."
"ம்ம்ம்ம்ம்..போதும்
10 நிமிடம் கழித்து,
"ஜானு, ஐ லவ் யூ.."
"லவ் யூ டூ டா"
"எனக்கு ஒரே ஒரு ஆஃப் பாயில் போட்டு தாயேன்.. ஊறுகாயும், சிப்ஸும் போர் அடிக்குது.. ப்ளீஸ்."
"நெனச்சேன், நீ ரொமான்டிக்கா ஐ லவ் யூ சொல்லும்போதே.. உனக்கு ஒண்ணும் கெடையாது.. எதாவது பேசிக்கிட்டு இருந்த, அப்புறம் நீ லைவ் ஃபுல்லா தண்ணி அடிக்க முடியாது.. "
அதற்கப்புறம் அவன் மூச்சு கூட சத்தமாக விடவில்லை. படக் படக் என்று குடித்து முடித்துவிட்டு சைலன்ட்டாக போதையுடன் தூங்கினான் சிவா.
டிஸ்கி: எஸ்.ஜே.சூர்யா மாதிரி, யாராவது ஏடாகூடாமா திங்க் பண்ணியிருந்தா, ஐயாம் ஸாரி. எனக்கு அப்படியெல்லாம் எழுதத் தெரியாது. யூ நோ... நான் ரொம்ப ச்சின்னப்பையன்.
வாழவைக்கும் காதலுக்கு ஜே! வாலிபத்தின் ஊடலுக்கும் ஜே!

"ஆஃபிஸ்ல இருந்து ஏன் லேட்டு?"
"அதான் சொன்னேன்ல.. க்ளையண்ட் கால் 11 மணிவரைக்கும் இழுத்துட்டாங்க.. இன்னைக்கு ஒரு மாட்யூல் லைவ் போகுது.. அதான் டென்ஷன்."
"தண்ணி அடிச்சிட்டு வந்திருக்கியா?"
"இல்லைமா. அதான் கொஞ்ச நாள் முன்னாடியே ப்ராமிஸ் பண்ணேன்ல.
இனிமே ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை தான் அடிப்பேன். அதுவும் வீட்ல உட்கார்ந்து. ப்ளீஸ் பிளீவ் மீ"
"எனக்கு நம்பிக்கை இல்ல. கிங்க்ஃபிஷர் பீர் ஸ்மெல் அடிக்குது"
"உன்னோட ஒரே தொந்தரவா போச்சே. தண்ணி அடிக்கிறதா இருந்தா, நைட் ஷிஃப்ட்ன்னு சொல்லிட்டு ஃப்ரெண்டு வீட்டுல அடிச்சிட்டு காலைல வர மாட்டனா?" என்று சொல்லி கண்ணடித்துவிட்டு அவளைக் கட்டிபிடிக்க ட்ரை பண்ணினான்.
"இதுக்கு ஒண்ணும் கொறச்சல் இல்ல.." என்று சிணுங்கிக் கொண்டே அனுமதித்துவிட்டு திடீரென்று கோபம் வந்தவளாக, அவனை தள்ளிவிட்டு "நான் இப்படி பண்றது தொந்தரவு இல்ல.. டே, உனக்கு லைஃப்ல எதுவுமே சீரியஸ் இல்லியா? உருகி உருகி லவ் பண்ணி தான நாம கல்யாணம் பண்ணிகிட்டோம். நான் சொல்றத எதையுமே சீரியஸா எடுத்துக்க மாட்டியா?" என்றாள் ஹைடெசிபலில்.
"உன்ன கல்யாணம் பண்ணிகிட்டேனே.. அதுவே லைஃப்ல நான் பண்ண ரொம்ப சீரியஸான விஷயம்.." என்று டையை கடுப்புடன் கழற்றினான்.
"லவ் பண்ற பொண்ணை கல்யாணம் பண்றது சீரியஸான விஷயமா?"
"ஹலோ மேடம். எந்த செஞ்சுரில இருக்க நீ.. இன்விடேஷன் கொடுக்கும்போது ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் எப்படி கலாய்ச்சாங்க தெரியுமா.. லவ் பண்ற பொண்ணையே கல்யாணம் பண்ற மொத ஆள் நீதான்டான்னு சொல்லி எல்லாரும் அசிங்கப்படுத்திட்டாங்க.."
"அப்புறம் எதுக்குதான்டா லவ் பண்றீங்க?"
(டியூப் லைட் டியூப் லைட் என்று மனதுக்குள் முனங்கிக் கொண்டே)"உனக்குத் தான் சுத்தமா தெரியல.. ஊரு உலகத்த பாரு.. பொண்ணுங்களே, கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னா கட் பண்ணிவிட்றாங்க.. ஒண்ணா சேர்ந்து ஊர் சுத்தறதுக்கும்,....... சரி விடு.. இதெல்லாம் உனக்கு தெரியாது. கல்யாணத்துக்கு முன்னால உன் கைய பீச்ல பிடிச்சு நடந்து வந்ததுக்கே, ஒரு வாரம் பேசாத ஆளுக்கெல்லாம் சுட்டாலும் புரியாது" சொல்லிக் கொண்டே ஷார்ட்ஸ்க்கு மாறியிருந்தான்.
"அப்புறம் எதுக்குதான்டா என்ன லவ் பண்ணே?"
சிரித்துக்கொண்டே "டூ லேட். லைஃப் சென்டன்ஸ். இனிமே நோ யூஸ்? என்ன டின்னர்?"
ரொம்ப கடுப்பாகி, "அப்பவே சொல்லி இருக்கலாம்ல.. டின்னரும் கிடையாது. ஒண்ணும் கிடையாது. எனக்கு தெரிஞ்சாகணும்?.. இப்பவே.."
"உன் கலரை பாத்தும், மீட்டிங்க்ல ரொம்ப கரேஜா தஸ் புஸ்ஸுனு பேசுறத பாத்தும் தான், இப்ப அது எதுக்கு.. பசிக்குதுடி..ப்ளீஸ்டி.. என் செல்லம்ல?" என்று கொஞ்சினான்.
"ஓ, இவளே கருப்பா இருந்தா திரும்பி பாத்து இருக்க மாட்டேளே? அப்படி என்னடா இருக்கு இந்த கலர் தோல்ல.. அது ஏன் ஒருத்தனுக்கும் கறுப்பா இருக்கிற எவளையும் பிடிக்க மாட்டீங்குதுன்னு தெரியல?"
"இப்ப உனக்கு என்ன பிரச்சினை? நான் லேட்டா வந்ததா? தண்ணி அடிச்சேன்ங்கிற சந்தேகமா? உன்ன லவ் & கல்யாணம் பண்ணதா? இல்ல ஊர்ல இருக்கிறவன் எவனும் கறுப்பா இருக்கிற பொண்ண லவ் பண்ணாததா?"
"என்ன பாத்தா ப்ராப்ளம் மேக்கர் மாதிரி தெரியுதா யூ பெக்கர்? ஓ.கே. லீவ் இட்.. கல்யாணத்துக்கு முன்னால வரைக்கும் நிலா, இதழ், முத்தம்ன்னு கவிதையா கொட்டுனீயே. இப்ப ஏன் எல்லாம் DRY ஆயிடுச்சா?"
"கூல் ஹனீ.. பை தி வே.. குட் கொஸ்டின்" அப்படியே அவளை தோளை பிடித்து டைனிங் ஹாலில் உட்கார வைத்துவிட்டு, "அப்பா காசுல டாஸ்மாக் பார்ல போய் சண்டை போட்டு பிடிச்ச பிராண்ட் பீர் ச்சில்ன்னு கூலிங்கா வாங்கி அடிக்கிறதுக்கும், 20 பீர் பாட்டில்ல வீட்டு ஃப்ரிட்ஜ்ல வச்சி தோணும்போதெல்லாம் அடிக்கிறதுக்கும் வித்தியாசம் இல்லீயா?" என்றான் ஹாட்பாக்ஸில் எடுத்த சப்பாத்தியை மென்று கொண்டே..
"நான் என்ன கேட்டேன்? நீ என்ன சொல்ற...." சில விநாடிகளுக்கு பிறகு.. மாரியம்மான் கோவில் பூஜையில் சாமி வந்தவளாக, "அப்ப அதுக்கு தான் லவ் பண்ணீயா? செக்ஸ் தான் லைஃபா? இப்ப எல்லாம் முடிஞ்சிடுச்சா?" என்று கத்திக் கொண்டு மேஜையில் இருந்த எல்லாத்தையும் தட்டி விட்டாள்.
அவன் செல்லில் SMS 'பீப் பீப்' என அடித்தது.
அவள் எடுத்து பார்த்தாள். "Have you safely reached home? No hangover right?" அவன் உயிர்த்தோழனிடம் இருந்து.
"பொய், பொய், வாயை தொறந்தாலே பொய். தண்ணி அடிக்கலைன்னு பொய். இப்ப நானும் தேவையில்லை. இனிமே நான் உன்கூட ஒண்ணா வாழ்ந்தா, அது அசிங்கம். " என்று அழுதுகொண்டே மொபைலை அவன் மூஞ்சியில் தூக்கி எறிந்தாள். பெட்ரூம் போய், மூட்டையைக் கட்டிக் கொண்டிருந்தாள்.
அவனுக்கு ஒண்ணும் புரியவில்லை. செல்போனைப் பார்த்தான். உயிர்நண்பன், எட்டப்பன் ஆனான். அடித்தது எல்லாம் இறங்கிவிட்டது. அவளை கன்வின்ஸ் பண்ணி தோற்றுப் போய்விட்டான். கோயம்புத்தூர் போய்விட்டாள்.
()
அவள் வீட்டிற்கு கால் பண்ணினான். காலில் விழாத குறையாக கெஞ்சினான். சனிக்கிழமைக்குள் வரவில்லையென்றால், மார்னிங் அங்கே இருப்பேன் என்று காலில் விழுந்து விட்டான்.
()
வெள்ளிக்கிழமை ஈவினிங் ஆஃபிஸ் முடிந்து வீட்டுக்கு வந்து சேர்ந்தான். ஹால் க்ளீனாக இருந்தது.
அட்டகாசமான சேலையில், தலை நிறைய மல்லிகைப்பூவுடன் அவள் நேரே வந்தாள்.
"ஹேய் டார்லிங்.." என்று ஓடிப்போய் கட்டிபிடித்து மேலே தூக்கினான்.
"என்ன திடீர் சர்ப்ரைஸ்? உங்கப்பா தொரத்தி விட்டுட்டாரா?"
லேசாக முறைத்துக் கொண்டு, "எல்லாமே காமெடி தான் உனக்கு. ஐ ஹேவ் டூ குட் நியூஸ்!"
"நம்ம கல்யாண நாளா? இல்லையே அதுக்கு இன்னும் மூணு மாசம் இருக்கு. என் பர்த்டே இல்ல.. உன் பர்த்டே, நான் மறந்து இருந்தா செருப்பால அடிப்ப?.. பின்ன. ம்ம்ம்... யா.. நான் உன்கிட்ட லவ் ப்ரோப்பஸ் பண்ன டேட் தான?"
"நோ. இன்னிக்கு நான் கொடுத்த ப்ராமிஸ்படி, நீ தண்ணி அடிக்கவேண்டிய டியூ டேட்"
"ஹேய் கமான். ஸாரி டியர். நான் இன்னிக்கு அடிக்கல.. நான்தான் பொய் சொல்லி அன்னைக்கே அடிச்சிட்டேன்ல. ப்ளீஸ்."
"பரவாயில்ல. இன்னிக்கி நீ அடிக்கலாம். எங்கப்பாகிட்ட சண்டை போட்டு கேன்டீன்ல இருந்து ஹை குவாலிட்டி மிலிட்டரி சரக்கு வாங்கிட்டு வந்திருக்கேன்."
"என்ன ஹர்ட் பண்றே. நோ. ஐ கான்ட்." என்றான் வீராப்புடன்
"இல்ல. நீ அடிச்சா தான், அடுத்த குட் நியூஸ சொல்வேன்.."
இதுல ஏதோ உள்குத்து மாதிரி தெரியுதே என தாடையை தடவிக் கொண்டே, "அடிக்கும்போது, இது தான் லாஸ்ட் டைம்னு சொல்ல மாட்டியே"
"குடிகாரன் புத்தி உன்னைவிட்டு போகுதான்னு, பாரு" என்று சொல்லிக் கொண்டே முதல் லார்ஜை ஊற்றிக் கொடுத்தாள்.
தலைவர் ஒரே கல்ப்பில் அடித்துவிட்டு, "இப்ப சொல்லுமா, செல்லம்?"
அநியாயத்துக்கு வெட்கப்பட்டாள். தலையைக் குனிந்து கொண்டாள். "நவ், ஐயாம் டூ"
"வாட்?"
"மை டியர், டியூப்லைட் புருஷா! நீ அப்பா ஆயிட்டே" என்று காதைக் கடித்தாள்.
"ஹேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.. ரியலிலிலிலிலி....." என்று சந்தோஷத்தில் கத்திக் கொண்டு, அவளை அலேக்காக தூக்கிக் கொண்டு பெட்ரூமுக்கு ஓடினான்.
(இன்னும் அவங்க என்ன பண்றாங்கன்னு சொல்லலாம். டிஸ்கரைப் பண்றது கொஞ்சம் கஷ்டமான டாஸ்க் தான். பட் அடுத்தவங்க பெட்ரூமை எட்டி பார்க்கிறது, இன்டீசன்ட்.. ஸோ, கெட் லாஸ்ட்)
*********************