கணேஷ்க்கு வீட்டில் பெண் பார்த்துவிட்டார்கள். அந்த பெண் பெயர் சியாமளா அவனுடன் ஒன்றாக வேலை பார்க்கிறாள். சியாமளா, திமிர் பிடித்த பெண் என்று கேள்விப்பட்டால் கூட பரவாயில்லை. நேராக பார்த்து பேசி, டென்ஷன் டரியல் ஆகியிருந்தான். (எவ்வளவு டென்ஷன் என்றால் இங்கே போய் பார்க்கவும்)
இப்போது அவன் நம்பிக்கை எல்லாம் அப்பா, அம்மாவிடம் பேசி இந்த சம்மந்தத்தை இத்தோடு நிறுத்துவதில் தான் உள்ளது. தனியாக கிச்சனில் இருந்த அம்மாவிடம், அஸ்திரத்தை ஆரம்பித்தான்.
"ம்மா, இந்த பொண்ணு வேணாம்மா. ரொம்ப குண்டா இருக்கா? நான் தான் சொன்னேன்ல, எனக்கு ஒல்லியான பொண்ணுதான் வேணும்"
ஃபோட்டோவை வாங்கி பார்த்துவிட்டு,"இவ குண்டா? ஆடிக்காத்துல பறந்துபோற மாதிரி இருக்குறவ தான் வேணுமா? லூசாடா நீ. பரிமளா சித்திய பார்த்தது இல்லையா?"
"யாரு அவங்க?"
"அதான்டா, திருமங்கலம் குண்டு சித்தி"
"ஆமா"
"அவ சின்ன வயசுல எப்படி இருந்தா தெரியுமா? முருங்கைக் காய் மாதிரி ஒல்லியா இருந்தா? இப்ப பாரு, அவ பேரே குண்டு சித்தின்னு சொல்றோம். கல்யாணத்துக்கு அப்புறம் எல்லா பொண்ணுங்களும் கண்டிப்பா குண்டு ஆயிடுவாங்க. ஒல்லியான பொண்ணுங்க தான் ரொம்ப ஃபாஸ்ட்டா குண்டு ஆவாங்க. மனசை போட்டு குழப்பிக்காதடா"
"அம்மா, நான் சொல்றது ஸ்லிம்மா, ஸ்ட்ரக்சர்டா... ம்மா ப்ளீஸ் அதெல்லாம் உங்களுக்கு சொன்னா புரியாது. அதுவும் இல்லாம இவ ரவுடிமா. என்கூட தான் வேலை பாக்குறா"
"ஓ.. அப்படியா.. ரொம்ப நல்லதா போச்சி. கண்ணா,சொல்றத கேளு ரொம்ப நல்ல இடம், நல்ல் குடும்பம்டா. வீணா மனசைப் போட்டு குழப்பிக்காத. போ, ஈவ்னிங் போறதுக்கு கெளம்பு"
அம்மாவிடம் திட்டம் பலிக்காது. வேற வழி இல்லை, அப்பா காலிலாவது விழுந்து இதை நிறுத்த வேண்டும்.
ஹாலில் உட்கார்ந்து டி.வி. பார்த்துக் கொண்டிருந்தவரிடம்,
"அப்பா, இந்த பொண்ணு சம்மந்தம் வேணாம்ப்பா ப்ளீஸ்!"
"ஏன்டா, இப்ப போய் சொல்ற?"
"ஒரு வாரம் முன்னால நீங்க அனுப்பினத, நேத்து தான் நேர்ல பாத்தேன். என் புது ஆஃபிஸ்ல தான் வேலை பாக்குறா. சரியான திமிர் புடிச்ச பொண்ணுன்னு கேள்விப்பட்டேன். ப்ளீஸ் வேணாம்ப்பா"
"ஓ.. ரொம்ப நல்லதா போச்சி"
(ஏன் சொல்லி வச்சதுபோல ரெண்டு பேரும் ஒரே மாதிரி ரியாக்ட் பண்றீங்க)
"அதெப்படிடா, ரெண்டே நாள்ல ஒரு பொண்ணைப் பத்தி இம்ரெஸ்ஷன் டெவலப் பண்ணுவ"
"அப்பா... அவ நான் தான் மாப்பிள்ளைன்னு தெரிஞ்சதும், என்னை லஞ்ச் கூப்பிட்டுப் போய் செமத்தியா கலாசிட்டா.. பெண்ணுரிமை, ஆண்கள் அதிகாரம்ன்னு விட்டு விளாசிட்டு கடைசில நான் தான் கல்யாண பொண்ணுன்னு சொல்றா. எனக்கு பேச்சு மூச்சே நின்னு போச்சி"
"ஹா ஹா.. ரொம்ப தெளிவான பொண்ணு தான். கல்யாணத்துக்கு முன்னாடி உங்க அம்மாவோடா இன்னோசன்ட் முகத்த வச்சி தான் கட்டிக்கிட்டேன். ஆனா அதுக்கு அப்புறம் உரிமை, அதிகாரம்,ராஜ்யம் எல்லாம் அம்மா தான். எல்லாமே என்கிட்ட ஒரு ஃபார்மலிட்டிக்கு தான் கேட்பா. அந்த வகைல நீ கொடுத்து வச்சவன்டா. சியாமளா ரொம்ப தெளிவா முன்னாடியே உன்கூட வெளில வந்து பேசி இருக்கா, என்ஜாய்"
"நீங்க காமெடி பண்றதுக்கு இது தான் டைமா? இது என் வாழ்க்கை பிரச்சினைப்பா. கல்யாணத்துக்கு அப்புறம் ஆஃபிஸ்ல இருந்தே லேட்டா பதினோரு மணிக்கு வந்தா சாப்பாடு கூட போட மாட்டா. 'நீங்க வர்ற வரைக்கும் நான் ஏன் வெயிட் பண்ணனும், உங்களுக்கு நான் ஏன் சாப்பாடு போடணும். இது கூட காலங்காலமா ஆண்கள் மனைவி மீது நடத்தும் அடக்குமுறைகளில் ஒன்னு'ன்னுனு மேடைல பேசுற மாதிரி பேசுவா"
"ஒண்ணும் கவலைப்படாதடா. கல்யாணத்துக்கு அப்புறம் உன்னைய பட்டினியா தூங்கவிட மாட்டா"
"வாட்? ஏதோ டபுள்மீனிங்ல பேசுற மாதிரி இருக்கே" முனகினான். பின் சத்தமாக "அப்பா, நான் சொல்றது உங்களுக்கு புரியவே இல்லையா?"
"நீ போய் கெளம்பு. கல்யாணத்துக்கு அப்புறம் சியாமளா ஆஃபிஸ் போகமாட்டாள்ன்னு சொல்லிட்டாங்க"
"ஐயய்யோ.. 24 மணிநேரமும் வீட்ல தான் இருப்பாளா? நான் செத்தேன்" என்று அயர்ச்சியாய் நடந்தான்.
பெண் பார்க்கும் படலம் நடந்து கொண்டிருந்தது. தலையைக் கீழே குனிந்தவன், அரைமணிநேரமாய் நிமிர்ந்துகூட பார்க்கவில்லை. பெரியவர்கள் தான் பேசிக்கொண்டிருந்தனர்.
சியாமளா அப்பா, "கணேஷ், பொண்ணுகூட தனியா 5 நிமிஷம் பேசுறீங்களா?"
(அய்யோ, தனியா பேசி நானே எனக்கு சூனியம் வச்சிக்கவா, நான் மாட்டேன்) "இல்லங்க, பரவால்ல" குனிந்த தலையை நிமிரவே இல்லை.
"அட, கூச்சப்படாதீங்க மாப்ள, போய் பேசுங்க, நாங்க எதுவும் சொல்ல மாட்டோம்" சொல்லி அவரே சிரித்துக்கொண்டார்.
(மாப்ளயா???? ஆஹா முடிவே பண்ணிட்டாய்ங்களா?)எழுந்து போனான்.
மொட்டைமாடிக்கு அனுப்புனா கூட அப்படியே கீழே குதிச்சி எஸ்கேப் ஆகலாம். இவிங்க என்ன பெட்ரூமுக்கு அனுப்புறாய்ங்க. சம்திங் ஃபிஷ்ஷி, குழம்பினான் கணேஷ்.
உள்ளே போனான். வந்த வேகத்தில் கதவு மூடிக் கொண்டது. கதவில், ஒரு ச்சின்னக் குழந்தை, வாயில் விரல் வைத்து மூடி "Oh My GOD!" என்று சொன்ன வால்பேப்பர் கண்ணுக்குப் பட்டது.
"ஆஹா சகுனமே சரியில்லையே" மைண்ட் வாய்ஸ்
சியாமளாவைப் பார்த்தான். இவனுக்கு பிடித்த ஃப்ளூ கல்ரில் டார்க் பார்டர் வைத்த பட்டுபுடவையில் ஜெகஜோதியாக இருந்தாள். தலையைக் கீழே குனிந்து இருந்தாள். கால் விரல்களை புடவை மூடியிருந்தது.
"ஓ. வெட்கப்படுறா போல கள்ளி, எமகாதகி. கணேஷ் உஷார். புடிக்கலைன்னு நேரா சொல்லிட்டு எஸ்கேப் ஆகிடு" தீர்மானித்தான்.
தொண்டையை செருமிக் கொண்டே, "இங்க பாருங்க, உங்களுக்கும் எனக்கும் செட் ஆகாது. நீங்க உங்க ரேஞ்சுக்கு ஏத்த நல்ல மாப்பிள்ளையா பாத்து செட்டில் ஆகிக்கோங்க. என்னை விட்ருங்க. நீங்களே உங்க அப்பா, அம்மாகிட்ட 'என்ன பிடிக்கலை'ன்னு சொல்லி நிறுத்திடுங்க" தம் பிடித்து விடாமல் பேசினான்.
""
"என்னங்க எதுவும் பேச மாட்டேங்குறீங்க"
"ம்ம் சரி"
"ரியல்ல்ல்லீ. தேங்க்ஸ்ங்க. Thanks a Lot" என்று சொல்லிவிட்டு திரும்பி பார்க்காமல் கதவை நோக்கி ஓடினான்.
"ஒரு நிமிஷம்"
("ஆஹா, விடமாட்டேங்கிறாளே") திரும்பாமல் கதவைப் பார்த்து நின்றான்.
"I Love You!"
கதவில் அந்த குழந்தை இவனையே பார்த்துக் கொண்டிருந்தது.
************************
கணேஷ்-சியாமளா.. 1 2 3 4 5 6 7 8 9 10
************************
சியாமளா-2: கணேஷ்க்கு கல்யாணம்!
Labels:
கணேஷ்-சியாமளா,
காதல்,
சிறுகதை,
புலம்பல்
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
aiyoooo
ஆகா இது இன்னும் முடியலையா..
//"I Love You!"
கதவில் அந்த குழந்தை இவனையே பார்த்துக் கொண்டிருந்தது.//
இன்னும் இருக்கு போல :)
ஆனாலும் நல்லா தான் சிறுகதைன்னு கூட எடுத்துகலாம். தொடர்கதைன்னு கூட எடுத்துகலாம். கலக்கல் :)
Ganesh,
Super....
ஆகா வந்திட்டாங்கய்யா!
கணேஷ் நீங்க சியாமளாவ விடற மாதிரி இல்லையா? யாருப்பா அந்த சியாமளா?
kadhai nallathan irukku...mind la vachukirane...
கலக்கல் மன்னா,
அருமையான கற்பனை!
விரைவில் திமிர் பிடித்த ஷ்யமளா உங்களுக்கு கிடைக்க எனது வாழ்த்துகள்!
கலக்கல் மன்னா,
அருமையான கற்பனை!
விரைவில் திமிர் பிடித்த ஷ்யமளா உங்களுக்கு கிடைக்க எனது வாழ்த்துகள்!
வாங்க Rajalakshmi Pakkirisamy
//aiyoooo
ஏன் இந்த கொலைவெறி?
***
வாங்க ☀நான் ஆதவன்☀
//ஆகா இது இன்னும் முடியலையா..
ஹா ஹா.. இல்ல
//இன்னும் இருக்கு போல :)
கண்டிப்பா :)
//ஆனாலும் நல்லா தான் சிறுகதைன்னு கூட எடுத்துகலாம். தொடர்கதைன்னு கூட எடுத்துகலாம். கலக்கல் :)
ரொம்ப நன்றி ஆதவன்! உங்க வருகைக்கும் ஆதரவுக்கும்
***
வாங்க சரவணகுமரன்!
Ganesh,
Super....//
தேங்க்ஸ் சரவணகுமரன்!
***
வாங்க தமிழ் நாடன்!
ஆகா வந்திட்டாங்கய்யா!
கணேஷ் நீங்க சியாமளாவ விடற மாதிரி இல்லையா? யாருப்பா அந்த சியாமளா?//
மாட்டேன் சார். இன்னும் எவ்வளவு இருக்கு? :) :)
உங்களின் தொடர்ச்சியான வருகைக்கும், ஆதரவுக்கும் நன்றி!
***
வாடா kk
kadhai nallathan irukku...mind la vachukirane...//
மச்சி, வீட்ல போட்டுக் குடுத்துடாத.. நல்லா இருப்ப..
***
வாங்க ரவுடி ஷ்யமளா!
உங்க பேர் டெர்ரரா இருக்கு. ப்ளீஸ் வேற பேர்ல வந்து கமெண்ட் போடுங்க :(
//கலக்கல் மன்னா,
அருமையான கற்பனை!
விரைவில் திமிர் பிடித்த ஷ்யமளா உங்களுக்கு கிடைக்க எனது வாழ்த்துகள்!//
:( நல்ல வேளை, நான் பேய்ன்னு திட்டல :)
***
ungala kalyaanam pannikka pora ponnu paavam.,,
oru kelvi - ungalukku kalayaanam ayiducha?
//இவனுக்கு பிடித்த ஃப்ளூ கல்ரில் டார்க் பார்டர் வைத்த பட்டுபுடவையில் //
நோட் பண்ணியாச்சாம்.. :)
இதனுடைய அடுத்த தொடர் இடுகைக்காக வெயிட்டிங்கு.... :)
கணேஷ்..
இந்த தொடர் நல்லா இருக்கு.. சுவாரசியமா போகுது. ஆனா இது உண்மை கதையோன்னு கொஞ்சம் சந்தேகமாவும் இருக்கும்.. :)))
You have very good touch.... :) Keep it up... So, who is Shyamala??
வாங்க Anonymous
ungala kalyaanam pannikka pora ponnu paavam.,,//
ஹி ஹி ஹி.. இட்ஸ் ஆல் ரிட்டன்..
oru kelvi - ungalukku kalayaanam ayiducha? //
இன்னும் அந்த சம்பவம் நடக்கல :)
***
வாங்க SanjaiGandhi™
//இவனுக்கு பிடித்த ஃப்ளூ கல்ரில் டார்க் பார்டர் வைத்த பட்டுபுடவையில் //
நோட் பண்ணியாச்சாம்.. :)//
நீங்க ஒவ்வொருவாட்டியும் போடுற கமெண்ட் தான் எனக்கு பயமா இருக்கு சஞ்சய்! :(
****
வாங்க ஊர்சுற்றி!
இதனுடைய அடுத்த தொடர் இடுகைக்காக வெயிட்டிங்கு.... :) //
தேங்க் யூ:)
****
வாங்க வெண்பூ
கணேஷ்..
இந்த தொடர் நல்லா இருக்கு.. சுவாரசியமா போகுது.//
ரொம்ப சந்தோசம்! :)
ஆனா இது உண்மை கதையோன்னு கொஞ்சம் சந்தேகமாவும் இருக்கும்.. :))) //
ரொம்ப வருத்தம் :(
****
வாங்க Anonymous
You have very good touch.... :) Keep it up... So, who is Shyamala??
தெரியலேயப்பா, தெரியலையே.. இனிமேல் இது "சொந்த கதையல்ல, முழுக்க முழுக்க கற்பனை" என்று டிஸ்கி எழுதப்படும்.
****
அருமையா எழுதறீங்க.....இதன் தொடர்ச்சிக்காக காத்திற்றுக்கேன்
Nicely continued from the previous one, unga way of writing superb!
:)
Ithuve unmaya irunthaa evalo nalla irukkum.
athenna? //ஓ. வெட்கப்படுறா போல கள்ளி,
ava vendam aana avala mattum konjareenga ;-)
Post a Comment