பதிவர் ப்ரியா அவர்கள் ஒரு கவிதை, அதாவது கணவனின் சிநேகிதி(?) என்ற பெயரில் பதிவிட்டார். உடனே, பதிவரும், நண்பருமான ராஜி என்கிற ராஜலட்சுமி உடனே பதில் எதிர் கவிதை எழுத வேண்டும் என்று கொலைவெறியுடன் யோசித்தார். ஆனால், அவரின் கவிப்புலமையுடன் கம்பேர் பண்ணினால் இது ஜூஜூபி அதாவது தூசி போல. அதனால் அந்த வேலையை என்னிடம் கொடுத்தார்.
ஏதோ என்னால் முடிந்த அளவு யோசித்ததில், இதோ கவிதை தயார். கூடவே, இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால், இது நான் குத்துமதிப்பாக எழுதியது. இன்னும் கல்யாணமே ஆகாத எலிஜிபிள் பேச்சிலர் நான்(எப்படியெல்லாம் மார்கெட்டிங் பண்ண வேண்டி இருக்கு. ச்சே). ஏதாவது தவறு இருந்தால், மன்னித்தருள்க. மேலும் மேலதிக தகவலுக்கு பதிவர் ப்ரியா அவர்களின் பதிவுக்கு செல்லவும்.
ஓவர் டூ கவிதை OR கவிதை மாதிரி ஒரு கிறுக்கல்!
புதிதாக வந்தவனின் ப்ளேசர்
திடீரென நினைவுபடுத்தியது
பரணில் போட்ட
வாழ்வின் முதல் நிச்சயதார்த்த ப்ளேசர்
ட்ரிம் மிலிட்டரி உடல்
தனியாக ட்ரெயினர் வைத்து
ஜிம்மில் எக்சர்ஸைஸ் செய்வானோ?
ஜாகிங் ஓடவேண்டும் ஹூம்ம்
வேற வழியில்லை
X Men Wolverine பற்றி
அவர்கள் பேசிக் கொண்டபோது
"போப்பா, Undertaker தெரியாதா?"
என மகன் கேட்டது
அவசரமாக நினைவில்
சானியா மிர்சா தாண்டி தெரியாத
டென்னிஸில் ஃபெடரரா, நடாலா என
பந்தயம் கட்டிக் கொண்டு அவர்கள்
பார்த்த போது பஞ்சர் ஆனது
எனது 20-20 மேட்ச் லைவ்
"இன்னிக்கி சன்டே டீம் லஞ்ச் வெளில"
அவன் காலையில்
கால் பண்ணி நினைவுபடுத்தும்போது
என் உப்புமாவுடன் நானும்
ஹாட்பாக்ஸில் சூடாக!
***********************************
மனைவியின் சிநேகிதன்(?)
Labels:
அய்யோ கவிதை,
கவிதை,
புலம்பல்
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
ஒரு முடிவோட தான் களத்துல குதிப்பீங்களா...
பட்டையை கிளப்பீடீங்க கணேசு...
\\ட்ரிம் மிலிட்டரி உடல்
தனியாக ட்ரெயினர் வைத்து
ஜிம்மில் எக்சர்ஸைஸ் செய்வானோ?
ஜாகிங் ஓடவேண்டும் ஹூம்ம்
வேற வழியில்லை...//
இதுதான் கொஞ்சம் யோசிக்க வைக்குது....இப்போ சார்க்கு மிலிட்ரி பாடியா :-) :-) ??????
Thanks Ganesh!
அதெல்லாம் சரி. கணேஷ்- சியாமளாவை அம்போன்னு விட்டுட்டீங்க. மெகா தொடர் மாதிரி வருஷக்கணக்குல தொடர்ற மாதிரி ஏதாவது ஐடியாவா? :)
கலக்கல்.
Nice one Ganesh.
Smiles,
Priya.
//சின்ன அம்மிணி said...
அதெல்லாம் சரி. கணேஷ்- சியாமளாவை அம்போன்னு விட்டுட்டீங்க. மெகா தொடர் மாதிரி வருஷக்கணக்குல தொடர்ற மாதிரி ஏதாவது ஐடியாவா? :)
//
ரிப்பீட்டே :)
என் சட்டைய வேற சியாமளா கேட்டாங்கன்னு சொல்லியிருக்கீங்க. எனக்கும் ஏதாவது ரோம் இருக்கா?
Nice da!
Really good.
கவிதை மாதிரி ஒரு கிறுக்கல்
//
Kirukkal kooda nalla than iruku.
Nice One
சியாமளா இத படிச்சா என்ன ஆகும் ??
நன்றி லெமூரியன்!
ஒரு முடிவோட தான் களத்துல குதிப்பீங்களா...// அப்படியா? சூப்பர்!
பட்டையை கிளப்பீடீங்க கணேசு...// தேங்க் யூ
இதுதான் கொஞ்சம் யோசிக்க வைக்குது....// பதிவை படிச்சா அனுபவிக்கணும், ஆராயக் கூடாது :)
இப்போ சார்க்கு மிலிட்ரி பாடியா :-) :-) ??????// சார், நல்லாத் தானே பேசிட்டு இருந்தீங்க. திடீர்ன்னு ஏன் காமெடி பண்றீங்க :)
*********************
நன்றி சின்ன அம்மிணி!
அதெல்லாம் சரி.// எதெல்லாம் சரி? :)
கணேஷ்- சியாமளாவை அம்போன்னு விட்டுட்டீங்க.// கணேஷ், சியாமளாவை அம்போன்னு விட மாட்டான் :)
மெகா தொடர் மாதிரி வருஷக்கணக்குல தொடர்ற மாதிரி ஏதாவது ஐடியாவா? :)// கம்பெனி தாங்காது. அவங்களுக்கு கல்யாணமும், குழந்தையும் பிறக்கும் வரை மட்டும் தொடரும். அதன் பின் முற்றும் :)
************************
நன்றி Rajalakshmi Pakkirisamy!
Thanks Ganesh!// You are always welcome :)
*************
நன்றீ ஊர்சுற்றி!
நன்றி ப்ரியா!
Nice one Ganesh.
Smiles,
Priya.//
உங்கள் கமெண்ட்க்கு ஸ்பெஷல் தேங்க்ஸ் :)
****************
நன்றி ☀நான் ஆதவன்☀ said...
என் சட்டைய வேற சியாமளா கேட்டாங்கன்னு சொல்லியிருக்கீங்க. //
இதெல்லாம் எப்ப நடந்துச்சி? சட்டை???
எனக்கும் ஏதாவது ரோம் இருக்கா?// ரோல் தான? ஹீரோ பேரை மாத்திடலாமா? ஆதவன் என்கிற கணேஷ்?
*****************
நன்றி Shankar!
Kirukkal kooda nalla than iruku.//
உனக்கும் ஸ்பெஷல் தேங்க்ஸ் :)
*******************
நன்றி கரிசல்காரன்!
Nice One// இந்த பதிவில் மூன்றாவது Nice என்ற கமெண்ட் :)
சியாமளா இத படிச்சா என்ன ஆகும் ??//
வந்து போட்ட முதல் கமெண்ட்லயே இப்படி பத்த வைக்கலாமா? நீங்களும் அந்த தொடரை தொடர்ந்து படிக்கிறீங்களா? க்ரேட். எனக்கு சொன்னேன் :)
**********************
:-)))
எப்படில்லாம் எழுதறிங்க. ம்..
நன்றி பா.ராஜாராம்!
:-)))//
நீங்கள் ரசித்தது, எனக்கு பெரும் மகிழ்ச்சி :)
*********************
நன்றி Anbarasu Selvarasu!
எப்படில்லாம் எழுதறிங்க. ம்..//
நீங்க கூட தான் சூப்பரா கமெண்ட் போடுறீங்க.. அந்த கடைசி ம், ஏதேதோ அர்த்தங்களை சொல்கிறது :)
***********************
Post a Comment