முன்னால் சென்றவனின்
பின்னால் உட்கார்ந்து
போன சுரிதார் பெண்ணின்
இரண்டு முழ மல்லிகை
மகரந்தம்
மறுபடியும்
சொல்லிவிட்டு
போகிறது
உன் பிரிவை
பரபரப்பான சாலைகளின்
பேரிரைச்சல் இடையிலும்
*****
இறந்த காலத்தின் கேள்விகள்
சுழற்றி அடித்து என்னை
என்னுள் தேடிக் கொண்டிருக்க
நிகழ் காலத்தின் கேள்விகள்
ஏளனச் சிரிப்புடன்
எள்ளி நகையாடுகின்றது
இறந்த இறந்த காலத்திற்கான
பதில்களின் வடிவம்
பதியும்போது
கேள்விகளின் வண்ணம் மங்கி
கேள்விக்குறி புதிதாய்
முளைக்க
இறந்த காலத்திற்கு சென்ற
நிகழ் காலத்தின் கேள்விகளில்
இன்னும் கேட்கிறது அதே
ஏளனச் சிரிப்பு!
*********************
சுட சுட இரண்டு கவிதை!
Labels:
அய்யோ கவிதை,
கவிதை
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
//முன்னால் சென்றவனின்
பின்னால் உட்கார்ந்து
போன சுரிதார் பெண்ணின்//
intha ponna parthachula.. itha correct panna vendiyathu thaane.. atha uttutu feelings a paarunga
முதல் கவிதை நச்.
இரண்டாவது கவிதை டச்.
வாங்க இராஜலெட்சுமி!
//intha ponna parthachula.. itha correct panna vendiyathu thaane.. atha uttutu feelings a paarunga
:( :( :(
வாங்க VISA!
Thanks a lot :(
//Rajalakshmi Pakkirisamy said...
//முன்னால் சென்றவனின்
பின்னால் உட்கார்ந்து
போன சுரிதார் பெண்ணின்//
intha ponna parthachula.. itha correct panna vendiyathu thaane.. atha uttutu feelings a paarunga//
இது நல்லாயிருக்கே கதை.... அப்புறம் முன்னால் போனவன் இதேபோல முன்னால் பின்னால்னு பொலம்பவா?
முன்னால் / பின்னால்
நிகழ்காலம்/இறந்தகாலம்/ இறந்த இறந்தகாலம்....
இங்க என்னா கிராமர் கிளாசு நடக்குதா நைனா?
முதல் கவிதை அருமை கணேஷ்!
வாங்க தமிழ்நாடன்!
//அப்புறம் முன்னால் போனவன் இதேபோல முன்னால் பின்னால்னு பொலம்பவா?//
ராஜலட்சுமிக்கு தான் வேலை இல்லைன்னு கலாய்க்கறாங்கன்னா, நீங்களுமா? :):) :)
//முதல் கவிதை அருமை கணேஷ்!//
Thanks Sir!
Post a Comment