"அனு, காஃபி" "அனு, காஃபி" என்று பெட்டில் இழுத்துபோர்த்திய போர்வைக்குள் இருந்து ஹை டெசிபலில் கத்தினான் வினு என்கிற வினோத்.
"காஃபி எல்லாம் கெடையாது. சீக்கிரம் எந்திரிச்சி ரெடியாகு" என்று அனு என்கிற அனிதாவின் குரல் எதிரொலித்தது. பெட்ரூமில் உள்ள அட்டாச்ட் பாத்ரூமில் இருந்து வந்தது.
"ஏன்?"
"இன்னிக்கி என்ன நாள்னு மறந்து போச்சா?"
""
எந்த பதிலும் வரவில்லை.
வெளியே வந்தவள், அவன் போர்வையை துகிலுரித்தாள். தலைகீழ் y ஷேப்பில் குப்புறப்படுத்திருந்தான்.
"சீக்கிரம் கெளம்புன்னு சொன்னேன்ல? டைம் இப்பவே 11.30. 2 மணிக்கு அங்க இருக்கணும்"
"எதுக்குடி?" இன்னும் கண்களை மூடி தூங்கிக் கொண்டு தான் இருந்தான்.
கண்ணாடி முன் மேக்கப் பண்ணிக் கொண்டிருந்தாள் அனு.
"உங்க அக்கா வீட்டுக்கு விருந்துக்கு வர்றோம்ன்னு ப்ராமிஸ் பண்ணி இருந்தோம்ல. மறந்து போச்சா?"
"ஓ.. என் அக்காவுக்கு அறிவே இல்ல. மூணு வாரமா எல்லார் வீட்டுக்கும் கல்யாண விருந்துக்கு போய் டயர்டாகி இங்க வந்தா, இங்கேயும் இவ டார்ச்சர் பண்றா? "
"உன் அக்கா தான உன்னை மாதிரி தான் இருப்பாங்க..? முணுமுணுத்தாள்.
அவள் அடித்த யார்ட்லியின் மணம் அவன் மூக்கினுள் நுழைந்து நாளமில்லா மற்றும் நாளமுள்ள சுரப்பிகளை நாலாவது கியரில் இயங்க வைத்தது. திரும்பி அனுவை பார்த்த்த்... துக் கொண்டிருந்தான். அனுவின் காஸ்ட்யூம் ப்ளஸ் மேக்கப் வொர்க் அரையும் குறையுமாக தொடர்ந்து கொண்டிருந்தது.
"அனு........" வாய்ஸ் மாடுலேஷனில் லைட்டாக எஸ்.ஜே.சூர்யா எட்டிப் பார்க்க, கட்டில் ஓரம் புரண்டு படுத்துக் கொண்டே அவள் அருகில் வந்தான்.
திரும்பி பார்த்தவள் ஷாக்காகி, "ஹேய், கிட்ட வராதே. கொன்னுடுவேன்."
"ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்"
"ஹேய் லுக், நான் இப்ப கெளம்புறதுக்கே 8 மணிக்கே எழுந்திரிச்சி ரெடி ஆகிட்டு இருக்கேன். இனிமே மறுபடியும் நான் குளிச்சி கெளம்புனா, நாம லஞ்சுக்கு போக மாட்டோம். டின்னருக்கு தான் போவோம். "
"ஸோ வாட்.. அவகிட்ட நான் பேசிக்குறேன்.." முன்னேறினான்.
அவள் துள்ளிக் குதித்து ஓடுகிறாள். இவனும் பின்னாலேயே..
மாறி மாறி கபடி ஆட்டம் தொடர, "ஹேய் இங்க பாரு, கிட்ட வராதே.. இல்லைன்னா நான் கத்தி ஊரைக் கூட்டிடுவேன்"
"இந்த கோலத்துலயா..?" அதிர அதிர சிரித்துக் கொண்டே விரட்டினான்.
அந்த நேரத்தில் ஒரு ஃபோன் கால்.
"ஹலோ"
"டேய் வினோத், நான் அக்கா பேசுறேன்..........."
"என்ன சொல்ற.. சரியா கேட்கலை.. சத்தமா பேசு." சொல்லிவிட்டு தவுசண்ட்ஸ் வால்ட்ஸ் பல்பு பிரகாசத்துடன் ஃபோனில் ஸ்பீக்கரை ஆன் பண்ணினான்.
"டேய், என் கொலீக் சித்ராவோட அப்பா இறந்துட்டாரு. நாங்க அவசரமா கெளம்பி போறோம். நெக்ஸ்ட் வீக் விருந்துக்கு வாங்கடா.. ஸாரி.. அனுகிட்டயும் சொல்லிடு.. சரியா?"
"ஓ.கே. ஒண்ணும் ப்ராப்ளம் இல்ல. நான் அப்புறம் கூப்பிடுறேன்." ரிசீவரை வைத்துவிட்டு, மூலையில் இருந்த அனுவை பார்த்து கண்ணடித்தான்.
அவள் கண்ணடித்துக் கொண்டே வெட்கத்துடன், வினுவை நோக்கி ஓடிவந்தாள்.
***********************
ஜிலீர் காதல் சடுகுடுகுடு!
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
nalla varnanai
nice one.
Post a Comment