ரசித்த பாடல்: "கரிகாலன் காலைப் போல" மற்றும் சில‌

சமீபத்தில் நான் மிகவும் ரசிக்கும் பாடல்,வேட்டைக்காரன் படத்தின் "கரிகாலன் காலைப் போல" என்னும் பாடல். பாடிய இருவரில் ஆண் குரல் அவ்வளவாக பிடிக்கவில்லை. ஆனால் பெண்குரல் கிறங்கடிக்கிறது. தேடிப்பார்த்ததில் சங்கீதா என தெரிகிறது. அவர் பாடிய மற்ற பாடல்களைத் தேடிக் கொண்டிருக்கின்றேன். பாடல்வரிகளும் பல இடங்களில் ஓவர் கிக். உதாரணம்

ஆண்குரல்: மாராப்பு பந்தலிலே மறைச்சி வச்ச சோலை!
பெண்குர‌ல்: சோலை இல்ல‌ சோலை இல்ல‌, ஜ‌ல்லிக்க‌ட்டு காளை

என்ன‌ ஒரு க‌ற்ப‌னை! க‌விஞ‌ர் வாழ்க! அனுஷ்கா வாழ்க‌!

சில‌ இட‌ங்க‌ளில் புரிய‌வில்லை

ஆண்குர‌ல்: வ‌ல‌ம்புரி ச‌ங்கு போல ப‌ள‌ப‌ள‌க்குது க‌ழுத்து
பெண்குர‌ல்: க‌ழுத்து இல்ல‌ க‌ழுத்து இல்ல‌ க‌ண்ண‌தாச‌ன் எழுத்து!

ஙே! க‌ழுத்துக்கும் க‌ண்ண‌தாச‌ன் எழுத்துக்கும் என்ன‌ ச‌ம்ப‌ந்த‌ம் என்று விடிய‌ விடிய‌ யோசித்து பார்த்த‌தில் ஒன்றும் புரிய‌வில்லை.

ஆனால் அந்த‌ ல‌ட்டு மாதிரியான‌ குர‌ல், ஏதோ ப‌ண்ணுகிற‌து. இர‌ண்டாவ‌து ப‌ல்ல‌வி முடிவில், "ம‌ச்ச‌ம் இல்ல‌ ம‌ச்ச‌ம் இல்ல‌ நீ விட்டு வைச்ச‌ ம‌ச்ச‌ம்" என்று முடிக்கும் போது, உட‌னே இத‌ற்கு அனுஷ்காவின் ந‌டிப்பை(?) பார்க்க‌வேண்டும் என‌ ஆசை அதிக‌மாகிக் கொண்டே போகிற‌து. ஆனந்த விகடனும், "விஜய் படத்தில் இப்படி ஒரு ரசனையான பாடலா?" என்று ஆச்சர்யப்பட்டுக் கொண்டது உப தகவல்!

ஹும்ம்.. சீக்கிர‌ம் ரிலீஸ் ப‌ண்ணுங்க‌ப்பா..

ரிலீஸ் என்ற‌வுட‌ன் ம‌றுப‌டியும் நினைவுக்கு வ‌ருவ‌து, மிகுந்த‌ மிகுந்த‌ ஆர்வ‌த்துட‌ன் எதிர்பார்க்கும் "ஆயிர‌த்தில் ஒருவ‌ன்". டிரையில‌ரைக் கூட‌ க‌ண்ல‌ காட்ட‌ மாட்டேங்குறாங்க‌. இந்த‌ பட‌த்தின் பாட‌ல்க‌ளின் வ‌ரிக‌ளை தூக்க‌த்தில் எழு.ப்பிக் கேட்டால் கூட‌ சொல்லும் அள‌வுக்கு கேட்டு விட்டேன். ஆனால்...செல்வ‌ராக‌வ‌னுக்கே வெளிச்ச‌ம்.

அத‌ற்குள் அவ‌ர் அடுத்த‌ ப‌ட‌த்தின் ஷூட்டிங்கிற்கு விக்ர‌ம், சுப்ர‌மணிய‌புர‌ம் சுவாதியுட‌ன் வெளிநாடு போய்விட்ட‌தாக‌ செய்தி.

ஹும்ம்.. சீக்கிர‌ம் ரிலீஸ் ப‌ண்ணுங்க‌ப்பா..// ரீப்பீட்டு.

"சிவா ம‌ன‌சுல‌ ச‌க்தி" ப‌ட‌த்தில் "ஒரு அட‌ங்காப்பிடாரி மேல‌ நானே ஆசைப்ப‌ட்டேன்" பாட‌லை யாராவ‌து க‌வ‌னித்து பார்த்திருக்கிறீர்க‌ளா? வெளிநாட்டில் ரெண்டு பேரும் த‌ண்ட‌ர்பேர்ட் ஓட்டிக் கொண்டு ஆர‌ம்பாகுமே?
அதில் இர‌ண்டாவ‌து ப‌ல்ல‌வியின் ஆர‌ம்ப‌த்தில் ஷ‌ங்க‌ர் மகாதேவ‌ன் பாடுவார்

"அடிக்கடி ஆணவம் கொல்வதினாலே
நான்வெஜ்ஜில் அவளுக்கு பிடித்தது கொழுப்பு"

இந்த‌ வ‌ரிக‌ளின் போது கேம‌ராவின் கோண‌த்தைப் பார்த்து இருக்கிறீர்க‌ளா? இது டைர‌க்ட‌ர் யோச‌னையா இல்லை கேம‌ராமேனுடைய‌தா? தெரியவில்லை. ஆனாலும்

எப்ப‌டி எல்லாம் யோசிக்கிறாய்ங்க‌ப்பா....?


ரசிக்க:


*******************************

4 comments:

சரவணகுமரன் said...

எனக்கும் பிடிச்ச பாட்டு...

http://www.saravanakumaran.com/2009/10/blog-post_05.html

//க‌ழுத்துக்கும் க‌ண்ண‌தாச‌ன் எழுத்துக்கும் என்ன‌ ச‌ம்ப‌ந்த‌ம் //

இரண்டுலயும் ‘ழுத்து’ இருக்கே? இதுக்கு மேல என்ன பாஸ் யோசிக்க போறாங்க. பாட்டு முழுக்கவே அப்படித்தான். ஹைலைட் - சங்கீதா தான்.

தமிழ் நாடன் said...

மத்தவங்க யோசிக்கறது இருக்கட்டும். நீங்க இதெல்லாம் ரூம் போட்டு யோசிச்சீங்களோ?
ஹா! ஹா!

மகேஷ் said...

Karikalan song enakkum pidikkum... good one

ரேவதி சீனிவாசன் said...

ஹெலோ கணேஷ், ரொம்ப......யோசிக்கிரீங்க போல. எனக்கும் கரிகாலன் பாட்டு ரொம்ப புடிக்கும். சங்கீதா வேற யாரும் இல்ல. "dilamo dilamo.....", "ஏன் எனக்கு மயக்கம்......"- நான் அவன் இல்லை.. இந்த பாட்டெல்லாம் பாடுனாங்கல்ல அவங்கதான்......

Related Posts with Thumbnails