புருவ வளைவுகளை
நேர்த்தியாக செதுக்கி
சுண்டி இழுத்தவளிடம்
விழுந்த மனம்
மதியத்தில் தெற்றுப்பல்
மாலாவிடம் தெறித்த
சிரிப்பில் சிக்கியது
ஒரு வழியாக
வீட்டிற்கு வந்தால்
முறைப் பெண்
புதிதாக இளமையாக
அழகிய தாவணியுடன்
வந்ததும் அதன்
அவள் மடிப்பில்
மடிந்தது
*
*
*
இப்படியான எனது
பதின் பருவத்து
காதல் நெருப்பு
ஒருவர் கை மாறி
ஒருவர் கை செல்லும்
ஒலிம்பிக் தீபம்
போல் அணையாமல்!
******************************
பதின்பருவத்து நெருப்பு!
Labels:
அய்யோ கவிதை,
கவிதை
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
ஐயோ கவிதை கவிதை கவிதை !!!
மொத்தத்துல நம்ம ஜொள்ளுக்கெல்லாம் பதின்ம பருவத்து நெருப்புன்னு இலக்கிய சொல்லாடலா! பதின்ம பருவத்துக்கு பிறகும் விடும் ஜொல்லுக்கு என்ன பேரு ராசா?
நிதர்சனங்கள் கவிதையாக! அருமை!! அருமை!! வாழ்த்துக்கள்.
//காதல் நெருப்பு
ஒருவர் கை மாறி
ஒருவர் கை செல்லும்
ஒலிம்பிக் தீபம்
போல் அணையாமல்!//
Super o Super.. Toooooooo good
Nice Kavithai..
Try some more.....
good
நன்றி நேசமித்ரன்.! ஐயோ ஆமா :)
நன்றி தமிழ் நாடன்! இலக்கியம், சொல்லாடல் எல்லாம் பெரிய வார்த்தை. நான் அவ்வளவு வொர்த் இல்லைங்கோ. :) நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில், எனக்கு சத்தியமாக தெரியாது. :)
நன்றி ரோஸ்விக்!
நன்றி இராஜலட்சுமி பக்கிரிசாமி! ட்ரை பண்ணுகிறேன்.
நன்றி SUREஷ்!
ஹி ஹி ஹி.... மச்சி, காலேஜ்ல பார்த்த மாதிரியே இருக்கியே?
:)
நல்லாருக்கு கணேஷ்.
Nice...
Post a Comment