கவிதையா? கதையா? காத்திருக்கிறேன்!

வீட்டு முற்றத்தில் பூத்த ஒற்றை ரோஜா மொட்டு

புதிய டூ வீலரின் பில்லியன் சீட்

பூஜையறையின் குத்துவிளக்கு

ஃபோட்டோ இல்லாத புதிய ஃபோட்டோ ஃப்ரேம்

செஸ்போர்டின் எதிரே காலியான குஷ‌ன் சீட்

கிங்க் ஃபிஷர் ஃபில்டர் சிகரெட் பாக்கெட்

ஃபிரிட்ஜில் ரெண்டு கிங்ஃபிஷ‌ர் பீர் பாட்டில்

டேபிளில் பெட்காஃபி குடிக்க ரெண்டு புதிய மக்

தின்று தின்று வளர்த்த தொப்பை

விசாலமான இரட்டை படுக்கை அறை

அனைத்தும்
முறையே
வாங்குவ‌த‌ற்கும்
அணைப்பதற்கும்
ஒளிர்வதற்கும்
நிர‌ப்புவ‌த‌ற்கும்
ஆடுவதற்கும்
நிறுத்துவ‌த‌ற்கும்
உடைப்பதற்கும்
கொடுப்ப‌த‌ற்கும்
க‌ரைப்ப‌த‌ற்கும்
க‌ரைவ‌த‌ற்கும்
காத்திருக்கிறேன்
உன‌க்காக‌
காத‌லி!
சீக்கிர‌ம்
காத‌லி!

********************************(ப்ளீஸ், என்னை யாராவது தடுத்து நிறுத்துங்க... என்னை பார்த்தா எனக்கே பயமா இருக்கு.)
********************************

4 comments:

நட்புடன் ஜமால் said...

ஏன் ராஸா பயம்...

VISA said...

என்ன இரண்டு பேரும் சேந்து பீர் குடிச்சிட்டு தம் அடிக்க போறேளா?

SUREஷ் (பழனியிலிருந்து) said...

உங்கள் பெயர் இங்கு அடிபடுகிறது நண்பரே

Vetri said...

ஐயா நல்லா எழுதறே! அப்படியே மெய்ண்டைன் பண்ணு........

Related Posts with Thumbnails