காதலிக்கு காதலனிடம் பிடித்த 10!

1) "ஐ மிஸ் யூ டா" என்று ரொம்ப ரியலாக ஃபீல் பண்ணிக் கொண்டிருக்கும் போது, "இப்ப எப்படி வர்றது.. ப்ளீஸ்மா.. புரிஞ்சிக்கோ" என்று இழுத்துக் கொண்டு போய், எதிர்பாராதவிதமாக திடீரென்று "கீழே தான் இருக்கேன், வா" என ஷாக் கொடுப்பது, அந்த ஆச்சர்ய பரவச மின்னல்களை கண்ணில் காணலாம். ஆளே இல்லாத தெரு என்றால் லைட்டாக வந்து மார்பில் சாய்வாள். இல்லையென்றால் உள்ளங்கையைப் பற்றிக் கொண்டு கண்களால் சிரிப்பாள். (அடிக்கடி பண்ணினால், உஷார். வேலை வெட்டி இல்லாதவன் என்று நினைக்கக் கூடும்).
2) வொயிட் க‌ர்ச்சீப் ரொம்ப க்ளீனாக‌‌ இருந்து கொண்டு, எப்ப‌வாவ‌து எடுத்து வேர்வையை ஒற்றித் துடைக்கும்போது ஓர‌க்க‌ண்ணால் ர‌சிப்பாள். (துப்பட்டா ஓரத்தில் கை வைத்தால், க‌ன்ன‌ம் சிவ‌க்கும்.)

3) அவ‌ளுக்கு பிடித்த‌ பெர்ஃப்யூம் ரொம்ப‌ மைல்டாக‌ யூஸ் ப‌ண்ண‌லாம். (பொதுவாக‌ காத‌ல‌னின் விய‌ர்வை ம‌ண‌ம் பிடிக்காத‌ பெண்க‌ள் அரிது. அழுக்கு ட்ரெஸ்ஸின் க‌ப்போடு வ‌ருப‌வ‌னை கேவ‌ல‌மாக‌ திட்டும் அபாய‌ம் உண்டு. நாள் முழுவ‌து ஷாப்பிங் என‌ அங்கு இங்கு அலைந்து திரிந்து வ‌ரும்போது, பைக்கின் பின்னால் உட்கார்ந்துகொண்டு எதேச்சையாக நுகர்வது போல் நுகர்ந்து ர‌சிப்பாள், அது க‌விதை)

4) ப‌ர்த்டேவில் வ‌ழ‌க்க‌ம்போல் ட்ரெஸ், க்ரிஸ்ட‌ல் வொர்க்ஸ், டெடிபிய‌ர் என‌ ஜ‌ல்லிய‌டிக்காம‌ல், இன்னோவேட்டிவாக ஏதாவது ப‌ண்ணினால் மிக‌வும் ர‌சிப்பாள். இந்த‌ கால‌த்தில் ல‌வ் லெட்ட‌ர் கொடுக்கும் க‌ல்ச்ச‌ர் எல்லாம் இம‌ய‌ம‌லை ஏறிவிட்ட‌து. இப்போது அதை ரெண்டு மூன்று ப‌க்க‌த்திற்கு எழுதி கொடுக்க‌லாம். கவிதை எழுதிக் கொடுக்கலாம். அவ‌ள் ச‌ண்டை போட்ட‌ காலேஜ் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் யாரையாவ‌து முன்னால் நிறுத்தி ஷாக் கொடுக்க‌லாம். டிப்ஸ் வேண்டும் என்றால் த‌னியாக‌ தொட‌ர்பு கொள்ள‌வும்.

5)ச‌க‌ட்டுமேனிக்கு சைட் அடிக்காம‌ல் ம‌ற்றும் திற‌ந்த‌ மேனியுட‌ன் வ‌ரும் ஜிகிடிக‌ளை நாக்கை தொங்க‌போட்டு பார்க்காம‌ல் ஜென்டிலாக‌ இருக்கும்போது, ரொம்ப‌ பெருமையாக‌ உண‌ர்வாள். அழ‌கான‌ ட்ரெஸ்ஸோடு ஹோம்லியாக‌ வ‌ரும் ஃபிக‌ரைக் காட்டி, "இந்த‌ ட்ரெஸ் ந‌ல்லா இருக்குல்ல‌.. நெக்ஸ்ட் டைம் ஷாப்பிங் போகும்போது வாங்க‌லாம்" என்று சொன்னால் மட்டும் போதும், ச‌ண்டையே போட‌ மாட்டாள்.
6) கோவிலில் அவ‌ள் சீரியஸாக‌ சாமிக் கும்பிட்டுக் கொண்டிருக்கும்போது, நீங்க‌ள் அவ‌ளையே ர‌சித்து பார்த்துக் கொண்டிருக்க‌ வேண்டும். அவ‌ள் சாமி கும்பிட்டு க‌ண்ணை திற‌க்கும்போது, நீங்க‌ள் ப‌ட‌ப‌ட‌ப்புட‌ன் க‌ண்க‌ளை மூடி பாவ்லா ப‌ண்ணினால், ர‌சிப்பாள்.

7) பேச‌ எதுமே இல்லாம‌ல் இருக்கும்போது, ரெண்டும் பேரும் "அப்புற‌ம், அப்புற‌ம்" என்று சொல்லி போர‌டிக்காம‌ல் "அப்புற‌ம் உங்க‌ ஆஃபிஸ்ல‌ அந்த‌ சொட்டைத் த‌லைய‌னுக்கு என்ன‌ ஆச்சி?" என்று உற்சாக‌த்துட‌ன் தொட‌ர்ந்தால் அவ‌ளுக்கும் உற்சாக‌ம் தொற்றிக் கொள்ளும். (புறம் பேசுவதை விரும்பாத‌ பெண்கள் எவ‌ர்?)

8)எவ‌னுட‌னாவ‌து வெட்டியாக பேசிக் கொண்டிருப்ப‌தை, ரொம்ப‌ மெல்லிய‌ குர‌லில் அத‌ட்டினால் அந்த‌ பொஸ‌ஸிவ்னெஸ் ரொம்ப‌ ர‌சிப்பாள். (எல்லை, வாய்ஸ் மாடுலேஷன் எல்லாம் ரொம்ப‌ ரொம்ப‌ முக்கியம், பாஸ். இல்லைன்னா கிளி பறந்து போயிடும்)

9)ஈ.சி.ஆர் ரில் ஆள் க‌ம்மியாக‌ இருக்கும் பீச்சில் வ‌ண்டியை நிறுத்தி, அவன் bare body யுட‌ன் குளிப்ப‌தை (த‌னுஷ் ரேஞ்சில் மார்பு, அஜித் ரேஞ்சில் தொப்பை இருந்தாலும்) வைத்த‌ க‌ண் வாங்காம‌ல் ர‌சிப்பாள், அவ‌ள் க‌ரையில் இருந்து கொண்டு.

10)Most important point, காத‌லிக்கு காத‌லினிட‌ம் மிக‌வும் பிடித்த‌து எது? மீசை! ந‌றுக்கென்று ஷார்ப்பாக அடிக்கடி ட்ரிம் பண்ணிக்கொண்டு இருப்ப‌வ‌னிட‌ம் இருக்கும் மேன்லினெஸ்ஸை எப்ப‌வும் ர‌சிப்பாள். (இது ஒவ்வொரு பெண்ணிற்கும் வேறுப‌டும்.)

இவை அனைத்தும் தென் த‌மிழ‌க‌த்தில் இருந்து வ‌ந்திருக்கும் பெண்க‌ளை ம‌ன‌தில் வைத்து எழுதிய‌து, ஏனென்றால் நான் ம‌துரைக்காரன்.

டிஸ்கி: வேற‌ என்ன‌ங்க‌ நான் சொல்ல‌ப் போறேன். இது என் அனுப‌வ‌ம் எல்லாம் கெடையாது. ச்சும்மா, க‌ற்ப‌னை. ந‌ம்பவா போறீங்க‌?

*******************************************

8 comments:

இராகவன் நைஜிரியா said...

நம்பிட்டோமில்ல...

அண்ணே உங்களை நம்பாம வேற யார நம்புவோம்..

ஒட்டுப் போட்டுட்டேன்... தமிழ் மணம், தமிழிஷிழ் இரண்டிலும்..

மகேஷ் said...

கணேஷ் டச்!

சரவணகுமரன் said...

நம்பிட்டோம்...

சரவணகுமரன் said...

சூப்பர்.... இடையில் டிப்ஸ்களாக மாறிவிட்டது...

VISA said...

அருமையான அனாலிசஸ்.

என்னா ஆச்சு எல்லாருக்கும். ஒரே பத்து பத்தா போட்டு குத்துறாயிங்க....

கிரி said...

சுவாராசியமா இருக்கு....

கணேஷ் நடத்துங்க.. பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடலாம்.. நான் உங்களை சொல்லைனு சொன்னா நம்பவா போறீங்க :-)

கணேஷ் said...

இராகவன் நைஜீரியா, மகேஷ், சரவணகுமரன், சரவணகுமரன்(ரெண்டு போட்டதுக்கு ரெண்டு. ஹி ஹி), VISA, கிரி மற்றும் வந்து விசிட் பண்ணின அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி, நன்றி, நன்றி!

கிறுக்கன் said...

பொம்பளை எழுதினத படிச்ச பீலிங்

Related Posts with Thumbnails