"என்னங்க...." என்று அனு அலறினாள். காதல் படத்தின் க்ளைமேக்சில் சந்தியா பெரிய கூச்சல் போடுவாளே, அப்படி கற்பனை பண்ணிக் கொள்ளுங்கள்.
அவள் போட்ட சத்தத்தில் ராம், கையில் வைத்திருந்த N72வை கீழே போட்டுவிட்டான். மிகவும் பதறிப்போய், "என்னடி ஆச்சி?, எங்க இருக்க?" என்றான்.
"காணோம்"
"எதை காணோம்? எதையும் தொலைச்சிட்டியா? இப்ப நீ எங்க இருக்க?"
"வீட்டில தான். எனக்கு அழுகை அழுகையா வருது. அரைமணி நேரமா தேடிக்கிட்டு இருக்கேன். சீக்கிரம் வர்றீங்களா?
"என்னத்த தேடிக்கிட்டு இருக்க?"
"உங்க அம்மா அப்பா எப்ப வர்றாங்க?"
"மதியம் 3.30க்கு வந்திடுவாங்க.. வைகைல.. நீ மதியம் தான் ஆஃபிஸ்க்கு லீவ் போட்டு வர்றேன்னு சொன்ன? இப்ப என்ன பண்ணிக்கிட்டு இருக்க வீட்டுல?"
"அய்யோ.. போச்சி போச்சி.. அவங்க வர்ற நேரம் பாத்து தானா இப்படியெல்லாம் நடக்கணும்" குரல் உடைந்து அழ ஆரம்பித்தாள்.
"என்னடி? ஒண்ணும் புரியல.. சரி இன்னும் 20 மினிட்ஸ்ல வீட்டுல இருப்பேன். கூல் டவுன்."
**
"என்னம்மா ஆச்சி?" கதவை திறந்த உடனே கேள்வியுடன் அவளை ரூம் ரூம்மாக தேடிக் கொண்டு வந்தான்.
பெட்ரூமே கலைந்து கன்னாபின்னாவென இருந்தது. உள்ளே, "சின்னத்தம்பி" குஷ்பு போல முடியெல்லாம் கலைந்து எல்லாவற்றையும் கலைத்துக் கொண்டிருந்தாள்.
"போலீஸ்ல கம்ப்ளைன் கொடுக்கலாமா அனு? "
"அதெல்லாம் ஒண்ணும் வேணாம். நேத்து கூட நான் பாத்தேன்"
"எதுவும் நகை எதுவும் காணோமா?"
"ஆங்.. ஆங்.." என்று ஏறெடுத்து பார்த்தவளை புதியவர்கள் யாராவது பார்த்தால் பைத்தியம் என்று தான் நினைப்பார்கள்.
"ஏன் இப்படி இவ்வளவு டிஸ்டர்ப்டா இருக்க? இரு... நானும் தேடுறேன்." அவளை லைட்டாக கட்டிப்பிடித்து ஆறுதல் சொல்லிவிட்டு,
அவனும் அவன் பங்குக்கு ஷெல்பில் அடுக்கி வைத்திருந்த போர்வை, தலையணை எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக எடுத்து உதறி போட்டுக் கொண்டிருந்தான்.
"அய்யய்யோ இன்னும் ஹால்ஃப் அன் ஹவர்ல அவங்க வந்திடுவாங்களே? அதுக்குள்ள கண்டுபிடிச்சாகணும் ராம்?"
"அவங்க வர்றதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?"
"போன வாட்டி அதை போடாம ஷோகேஸ்ல வச்சிருந்ததுக்கு உங்க அம்மா தாளிச்சி கொட்டிட்டாங்க..? இந்த தடவையும்னா, என்ன மருமகளே இல்லன்னு சொல்லிடுவாங்க..?
"அவங்க வாங்கிக் கொடுத்த நெக்லெஸ்ஸா..? அதைத் தான் லாக்கர்ல வச்சிருந்தியேடி..?
"இதுக்கெல்லாம் காரணம் நீ தான். மவனே, உன்னை முதல்ல கொல்லணும்.. அது முதல்ல கெடைக்கட்டும் அப்புறம் வச்சிக்கிறேன் உன்ன?
"அடிப்பா.....வி.. நாலு மீட்டிங்க கட் பண்ணிட்டு பதறி போய் வந்தா..."
"வெயிட் வெயிட்.. அதை எடுத்துக் கொடுங்க.. " அவன் கையில் இருந்த தலையணையை வாங்கினாள். உறையை உருவினாள். கீழே விழுந்தது.
மஞ்சள் வாசம் மாறாத தாலியை கையில் எடுத்துக் கொண்டு, "அப்பாடா.... இப்பத் தான் உயிரே வந்தது" என்று கழுத்தில் போட போனாள். சில விநாடிகள் யோசித்துவிட்டு..
"நீங்களே கழுத்தில போடுங்க.." புதுசாக முளைத்த வெட்கத்துடன், அவன் கையில் திணித்தாள்.
"உன் முதுகுல தான் போடணும்..லூஸூ"
"ஏன்? ஏன்? நீ தான் நேத்து நைட் குத்துதுன்னு கழட்டி போட்ட.. என் தப்பா சொல்லு.. சொல்லு என் தப்பா?"
"ஓ.. அப்படியா.. அவங்க வர்றதுக்குத் தான் இன்னும் ஹால்ஃப் அன் ஹவர் இருக்கே.. அதுவரைக்கும்...." எக்ஸ்பிரஸ் தடம்புரண்டது.
"அடி செருப்பால?... " என்று சொல்லிக் கொண்டே ஹாலுக்குள் புள்ளிமானாக துள்ளிக் குதித்து ஓடினாள் அனு. பின்னாலேயே ராம்.
**************************
புது வெட்கம் வருதே.. வருதே..!
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
(ஏன்? ஏன்? நீ தான் நேத்து நைட் குத்துதுன்னு கழட்டி போட்ட.. என் தப்பா சொல்லு.. சொல்லு என் தப்பா?")
Ha Ha Ha
I agree Agree
அனுபவக் கற்பனைக்கதையா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
Post a Comment