இறந்ததின் நினைவுகளும் நினைவுகளின்
இறந்தவையும் நேர்கோட்டில் சேரும்
பின்னிரவில் தோன்றியதாக இருக்கலாம்
எப்போது மனிதனாகலாம்?
கிழிந்த இலையில் கிடைத்த
நாலு வெந்த அரிசியில்
ரெண்டை கிழிந்த சட்டையில் உள்ள
சக ஒருவனுக்கு கொடுத்தவன்
மனநலம் உள்ளவனா?
அவனின் மனநிலை நலமா
பார்ப்பவர்களுடையதா?
அப்போதாவது மாறியிருக்கலாம்
குட்டிகளுடன் கூக்குரலிட்ட நாலு
நன்றியுள்ளவைகளை நட்புடன்
சாக்குப்பையின் குடைவைத்து காத்த
இடுப்பில் துணியுடனும் தலையில்
சடையுடனும் உள்ள நாடோடியா?
அவன் எந்த நாட்டை விட்டு
எந்த நாடு ஓடியவனோ
அவன் பரதேசியா?
எந்த பரந்த தேசங்கள் பல
கடந்து வந்தவனோ?
அவன் எவனாக இருந்தாலும்?
அப்போதாவது மாறியிருக்கலாம்
நாலுகடை ஏறி நான்கு கை
ஏந்தும் முதியவரின் தள்ளாமை
தடுத்தும் தடுக்காமல்
நாற்பது பேரின் வேடிக்கையான
அடிபட்டவனின் முகத்தில்
தெளித்த சோடா
நாற்பதில் ஒருவனான
என் ஞானத்திலும்
தெளித்திருந்தால்?
தெளியாது என் ரத்த
சொந்தமில்லை பின்னே
முதியவரின் மூத்த
தலைமுறையாக இருக்குமோ?
உறைக்கிறது ஊறுகாயோ உண்மையோ?
அப்போதாவது மாறியிருக்கலாம்
நாளைக்கு என் ரத்தத்தின்
பள்ளி பெரும்செலவும், அதன்
தாய் ரத்தத்தின் காப்பீட்டுக்கும்
கட்டவேண்டிய கடைசிநாள்
அய்யோ எங்கே நான் தேடவேண்டிய
மனிதன் அவன் இறங்கிவிட்டான்
இறந்தும் விட்டான் முற்றும்
இதுவரை அடித்த திரவமும்
*******************************
எப்போது மனிதனாகலாம்?
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment