திக்.. திக்.. திக்..

நள்ளிரவு 1 மணியைத் தாண்டிய நிசப்தமான, மெர்குரி விளக்கின் அடர்மஞ்சள் பூந்தமல்லி சாலை. திடீரென்று தூரத்தில் நாய் ஊளையிடும் சப்தம் அடிவயிற்றில் புளியைக் கரைத்தது. இன்னும் 15 நிமிடத்தில் அந்த இடத்தை நெருங்கிவிடுவார்கள். இருவரும் பல வீட்டில் திருடி பழுத்த அனுபவம் இருந்தாலும் இன்றோ ஏனோ ஒரு வித பயத்துடன் மிரண்டு கொண்டே வேலையைத் தொடர்ந்தார்கள். காரணம் இன்று அவர்கள் கைவைத்த வீடு, அண்ணாநகரில் ரொம்ப பளபளவென இருக்கும் மேட்டுக்குடிமகனின் வீடு என்று மட்டும் அவர்களுக்கு தெரிந்தது.

அந்த திருடர்கள் மொத்தம் இருவர். குமார் தான் இந்த கேங்கின் தலைவன். வடசென்னையின் ஸ்ட்ரீட் தாதாவாக இருந்து, சின்ன சின்ன திருட்டு, டாஸ்மாக்கில் தகராறு என்று கொஞ்சம் ரவுடியாக பேர்பெற்றவன். அவனுடைய சிஷ்யன், ரைட் ஹேண்ட் , அல்லக்கை எல்லாம் முரளி. செங்கல்பட்டில் இருந்து வீட்டை விட்டு ஓடிவந்தவன். கொஞ்சம் 'அந்த' சகவாசமும் உண்டு.

இரவு 1.35 மணி என்று நோக்கியாவின் செங்கல் மாடலை வைத்து டைம் சரிபார்த்துவிட்டு, பெரிய காம்பவுண்ட் சுவரை ஏறுவதற்கு தயாரானார்கள். முரளி கீழே குனிந்து, 'தல'க்கு படிக்கட்டு ஆனான். முன்னால் நேபாளி குறட்டைவிட்டு தூங்கிக் கொண்டிருந்தான். பின்னால் தோட்டத்தின் வழியாக உள்ளே போய்,பைப் மூலமாக ரெண்டாவது மாடிக்கு தாவி குதித்தனர். மெதுவாக சப்தமில்லாமல், ஒருவழியாக லாக்கரைக் கண்டுபிடித்து விட்டனர். சில பல முயற்சிகளுக்கு பிறகு, லாக்கரின் நெம்புகோலை தட்டிவிட்டான் குமார். உள்ளே 500 ரூபாய் நோட்டுகட்டுகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து முரளிக்கே மயக்கமே வந்துவிட்டது. மொத்தமாக எத்தனை எடுத்தார்கள் என்று தெரியவில்லை. அள்ளிப் போட்டார்கள். இன்னும் ஆசை அடங்கவில்லை. கீழே உள்ள சின்ன கதவைத் திறந்து நகையை எடுத்து முண்டா பனியனுக்குள் எடுத்து போட்டுக் கொண்டனர்.

ஒரு டைமண்ட் மோதிரம். அதையும் விட்டுவைக்கவில்லை. எடுத்து கையில் போட்டுபார்த்தான். செட்டாகவில்லை. அதை எடுத்து கழுத்தில் கட்டியிருந்த நாலு பக்கம் கறுப்பு கரை வச்ச கர்ச்சீப்பில் மடித்து லுங்கியின் முடிச்சாக கட்டி தொங்கவிட்டுக் கொண்டான் முரளி. இரவு 2.30 இருக்கும். வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் வெளியே வந்துவிட்டனர். முரளிக்கு எட்டவில்லை.. ரெண்டு முறை தவ்விதவ்வி ஒருவழியாக சுவர் உச்சியை பிடித்துவிட்டான். இறங்கிய நேரத்தில் ரெண்டு நாய் ஒன்றாக சேர்த்து குரைத்ததில் உறைந்து போய்விட்டனர். பின்னால் திரும்பிப் பார்த்து தங்களைப் பார்த்து இல்லை என்று நம்பிக்கை வந்தவுடன் போன உயிர் திரும்பி வந்தது. 200 அடி அப்படியே தூக்கக் கலக்கத்தில் நடந்து செல்வது போல் நடந்து சென்று, ஓரத்தில் நிறுத்தி வைத்திருந்த ஷேர் ஆட்டோவை கிளப்பிக் கொண்டு விரட்டினர்.

நேரம் 3.55 இருக்கும். நேராக அவர்கள் சென்றது கொட்டிவாக்கத்தின் சேரி கடற்கரை. நாலைந்து கட்டுமரபடகுகள், கிழிந்து போன மீன்வலைகளும், தரை முழுவதும் கொஞ்சம் கொடிபோல் படர்ந்திருக்கும் பகுதி. சில்லென்று மூஞ்சியில் அறைந்த கடற்கரை காற்றை உள்வாங்கிக் கொண்டு ரெண்டு பேரும் சிசர்ஸ் பத்தவைத்து எஞ்சாய் பண்ணினர். நல்ல இடத்தை தேடினார்கள். அந்த செங்கல் தான் இப்போது டார்ச் லைட். ஒருவழியாக ஒரு இடத்தை ஃபிக்ஸ் பண்ணிவிட்டு, பெரிய பாலிதீன் பையில் எல்லாத்தையும் மொத்தமாக போட்டு, அதை ஆழமாக குழி தோண்டி புதைத்தனர். அடையாளத்திற்கு, அந்த இடத்தைச் சுற்றி சுற்றி இருவரும் மாறி மாறி காலைக்கடனை அதிஅதிகாலையிலேயே முடித்துவிட்டு திருப்தியுடன் நடையைக் கட்டினர்.

"அண்ணே, நீங்க‌ வீட்டுல‌ ஒரு க‌ட்டிங்க‌ போட்டுட்டு தூங்குங்க‌. நான் அப்ப‌டியே ராணி வீட்டுக்கு லைட்டா போயிட்டு வ‌ந்துர்ரேன்"

"டோம‌ரு ம‌வ‌னே, இந்த‌ கால‌ங்கார்த்தால‌யே உன‌க்கு கேக்குதா.. வேற‌ எங்கேயும் திரியாத‌டா.. காலையில இட்டிலி வாங்கியாந்த்துட்டு வந்து எழுப்பு.. என்ன?"

"ச‌ரிண்ணே"

*
*
*

அந்த‌ மாடிவீட்டின் இர‌ண்டாது ஃப்ளோரில், க‌ட்டிலில் ராணியுட‌ன் ந‌ன்றாக‌ தூங்கிக் கொண்டிருந்தான் முர‌ளி. செங்க‌ல் அல‌றிய‌து. அலார‌ம் வைத்து இருந்தானாம். ம‌ணி அப்போது 8.30 இருக்க‌லாம். அவ‌ளை ஒதுக்கி த‌ள்ளிவிட்டு, பாத்ரூம் போனான். முக‌த்தைத் துடைக்க‌ துண்டை தேடினான். கொடியில் இருந்த‌ துண்டை உருவினான். ரெண்டு மூணு துணிக‌ள் கீழே விழுந்தது. அவ‌ளும் எழுந்தாள்.

"என்ன‌ ராணி.. ரொம்ப‌ பிசி போல.. போன‌ வார‌ம் ஃபுல்லா ஆளைக் காணோம்."

"ஆமாய்யா.. போன‌வார‌ம் பெங்க‌ளூரு போனேன்.. பெரிய‌ இட‌ம் வ‌ர‌ சொல்லுச்சு.." எழுந்து டி.வியை ஆன் பண்ணினாள்.

ராணி பேரில் ம‌ட்டுமில்லை, பார்ப்ப‌த‌ற்கும் ராணி மாதிரி இருப்பாள், அந்த‌ விஷ‌ய‌த்திலும். அவ‌ள் தொழிலில் அவ‌ள்தான் கிங்.. ஸாரி.. க்வின். ஏக‌ப்ப‌ட்ட‌ டிமாண்ட்.

"ஏன்யா எல்லாத்தையும் கீழே த‌ள்ளுன‌..? எடுத்துபோடு"

எடுத்து போட்டான். ஒரு க‌ர்ச்சீப்பும் கீழே இருந்த‌து. நாலுபக்கம் கரைவைத்த அதை எடுத்துப் பார்த்துவிட்டு,

"ஏய், இது என்னுடைய‌து தான‌..."

"ஆமாம்யா.. போன‌வாட்டி வ‌ந்து நீ என்னோட‌ க‌ர்ச்சீப்ப‌ எடுத்துட்டு போயிட்ட‌.."

அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மாக‌ இடுப்பைத் துலாவினான். இல்லை. அய்யோ..எங்கே விழுந்திருக்கும்.. பெட்டையும் தேடினான்.

டி.வி.யில் "நேற்று இரவு சென்னை அண்ணா நகரில், காவல்துறை இணை ஆய்வாளர் வீட்டில் இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கமும், 50 பவுன் நகையும் திருடர்கள் புகுந்து கொள்ளையடித்து போய்விட்டனர். காவல்துறை, திருடர்களை வலைவீசி தேடிக் கொண்டிருக்கிறது."

அதை பார்த்ததும் முரளியின் குலை நடுங்கிவிட்டது.

"அடிக்க‌டி என் கெர்ச்சீப் காணாம‌ போகுதுய்யா.. எல்லாத்துலயும் ஆசை ஆசைய்யா, என்பேர‌ ஊசிவ‌ச்சி தைச்சி இருப்பேன்.. என்ன‌ய்யா, எதையோ தின்ன‌ மாதிரி முழிக்கிற‌.."

"ஒண்ணும் இல்ல‌.. நான் கெள‌ம்புறேன்"

*
*
*
"அண்ணே, நாம‌ கைவ‌ச்ச‌து எஸ்.பி வீடுண்ணே... போச்சு நாம‌ தொலைஞ்சோம்.."

"என்ன‌டா சொல்ற.."

"ஆம‌ண்ணே.. டி.வி.ல‌ நியூஸ் ஓடுது பாரு..."கிட்டத்தட்ட அழுதுவிட்டான்.

"ச‌ரி ச‌ரி.. நீ கெள‌ம்பி செங்க‌ல்ப‌ட்டு கெள‌ம்பி போயிடு.. நான் க‌ட‌லுக்குள்ள‌ போயிடுறேன்.."

"அண்ணே.. அப்புபு......புற‌ம்....."

"என்னடா முழுங்குற‌"

"அந்த‌ வைர‌ மோதிர‌ம், கெர்ச்சீப்பு காணோம்.. அங்கேயே தாவிக் குதிக்கும்போது விழுந்திருக்கும்ன்னு நெனைக்கிறேன்.."

"டேய்ய்ய்ய்ய்ய்ய் டோமரூ.. என்னடா இப்புடி பண்ணிட்ட‌... "

"சரி ஒண்ணும் ப்ராப்ள‌ம் இல்ல‌.. நீ கெள‌ம்பி போயிடு... நான் கால் ப‌ண்ண‌னுதுக்க‌ப்புற‌ம் வா.."

"ச‌ரிண்ணே.."

*
*
*
*

"என்ன‌ சார்.. இப்ப‌ போலீஸ் வீட்டுல‌யே கொள்ளைய‌டிச்சி இருக்காங்க‌.. இப்ப‌டி இருந்தா ம‌க்க‌ளுக்கு எப்ப‌டி நீங்க‌ பாதுகாப்பு கொடுப்பீங்க‌.. "

"திருட‌ங்க‌ளை க‌ண்டுபிடிச்சிட்டீங்க‌ளா சார்... ட்ரேஸ் பண்ணிட்டீங்களா?"

"இதையாவ‌து சீக்கிர‌ம் க‌ண்டுபிடிப்பீங்க‌ளா சார்?"

இப்ப‌டி கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தன‌ர் ப்ர‌ஸ், டி.வி. ரிப்போர்ட்ட‌ர்ஸ். ந‌டுவே எஸ்.பி ப‌தில் எதுவும் சொல்லாம‌ல் அமைதியாக‌ நின்று கொண்டிருந்தார்..

கொஞ்ச‌ம் க‌ர‌க‌ர‌ப்பான‌ குர‌லை ச‌ரிசெய்து கொண்டே, "கொள்ளைய‌டிச்ச‌வ‌ங்க‌ள‌ நாங்க‌ க‌ண்டுபிடிச்சிட்டோம்.. இன்னும் ரெண்டு ம‌ணிநேர‌த்துல‌ அவ‌ங்க‌ளையும், அவ‌ங்க‌ கொள்ளைய‌டிச்ச‌ பொருளையும் கொண்டு வ‌ந்துருவோம்..." சொல்லிக் கொண்டே நகர்ந்தார். வ‌ழுக்கைத்த‌லையில் விய‌ர்த்த‌ விய‌ர்வையை ஒட்டி எடுத்தார் க‌ர்ச்சீப்பில்.. க‌ர்ச்சீப்பின் ஒரு ஓர‌த்தில் தெரிந்தாள், "ராணி"

*************************

உரையாடல் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது.
*************************

13 comments:

நாமக்கல் சிபி said...

நல்ல ஃப்ளோ!

சென்ஷி said...

:)

கடைசியில கொஞ்சம் புரியாத மாதிரி இருந்தது. மறுபடி படிச்சு பார்த்தப்பட்ட சீச்சீ கதைன்னு தோணுச்சு! :)))

வெற்றி பெற வாழ்த்துக்கள் தலைவா

Jeeves said...

வாழ்த்துகள் தலைவா

மங்களூர் சிவா said...

nice!

முரளிகுமார் பத்மநாபன் said...

வாழ்த்துக்கள் கணேஷ்,
கதை நல்லா இருக்கு. போலீசு...... போலீசு.....

அனுஜன்யா said...

கலக்கல் நடை கணேஷ். முடிவு, குற்றக் கதைகளின் இலக்கணத்துடன் கச்சிதமாக இருக்கு. Good show.

அனுஜன்யா

பட்டாம்பூச்சி said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்!!

சுரேஷ் குமார் said...

//
மெர்குரி விளக்கின் அடர்மஞ்சள் பூந்தமல்லி சாலை
//
தல.. மெர்குரி வெளக்கு ஒரு மாதிரியான வென்மைல தானே வெளிச்சத்த கக்கும்..

சோடியம் வேப்பர் வெளக்கு தான் அந்த மஞ்ச கலர்'ல கக்கும்னு நெனைக்கிறேன்..

சரி தானே..?

சுரேஷ் குமார் said...

//
திடீரென்று தூரத்தில் நாய் ஊளையிடும் சப்தம்
//
ஹீ.. ஹீ..
நாயெல்லாம் இப்படி பண்ணினா, அப்புறம் நரி என்னப்பா பண்ணும்..

சுரேஷ் குமார் said...

கதை நல்லா இருக்குபா..

வெற்றிபெற வாழ்த்துக்கள்..

கும்க்கி said...

ஏம்ப்பா சுரோசு..

பொதச்சு வச்சுபோட்டு ஆய் போற சீக்ரெட்லாம் இப்போதான்யா தெர்து. நல்ல கத.ஆனா உனக்கும் உ த மாதிரி இடம் போத்லையோன்னு தோனுது.
நானும் வாழ்த்திகிறேன்பா...

மந்திரன் said...

ரொம்ப நல்லா இருக்கு ..வெற்றி பெற வாழ்த்துக்கள்

கே.ரவிஷங்கர் said...

கதை விறு விறுன்னு போகுது.
அட்டகாசமான நடை.Crime thriller.


க்டைசி டிவிஸ்ட் சூப்பர்.

Related Posts with Thumbnails