கன்னி ராசி!

இடம் 1: ஆஃபிஸ் பார்க்கிங் & ஸ்மோக்கிங் ஏரியா.

'மச்சி, நான் டூவீலர் வாங்கி 9 மாசம் ஆச்சி. இன்னும் ஒரு பொண்ணைக் கூட பின்னால வச்சி அப்படியே ஜாலியா போனதே இல்லைடா.என்னை மாதிரியே என் வண்டியும் பேச்சிலரா இருக்கு' என ஆற்றாமையில் பொங்கினான் என் நண்பன், புகையை ஊதிக் கொண்டே. நான், 'மச்சி, ஒண்ணும் கவலைப்படாதடா. If you don't mind, உன் வண்டியத் தர்றீயா. வெளில ATM வரைக்கும் போக வேண்டியிருக்கு. 2 மினிட்ஸ்ல வந்திருவேன். 'ஓ.கே டா. நேரா இங்கேயே வந்துடு. நான் உனக்காக வெயிட் பண்றேன்.'.

திரும்பி வந்தேன். பில்லியனில் அனிதா. வண்டியை பார்க் பண்ணிவிட்டு, அவள் அவனுக்கு 'ஹாய்' சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டாள். அதைப் பார்த்து ஷாக்காகி வாயைப் பிளந்தான். 'என்னடா நடக்குது. உனக்கும் மட்டும் எப்படிடா' என்று டென்ஷனை பொறுமையாகக் கொட்டினான்.

'எல்லாம் என் ராசி மச்சி' என்று தோளைக் குலுக்கினேன்.

இடம் 2: பஸ்.

'ஸார் என்ன இது? இப்படி இன்டீசன்டா லேடீஸ் சீட்ல உட்கார்ந்து இருக்கீங்க. எந்திரீங்க' என்று ஒரு கண்ணாடி அணிந்த அப்பாவியை அதட்டி எழுப்பினாள் கார்ப்பரேட் ஐடி கார்டை கழுத்தில் மாட்டியிருந்த‌ ஒரு ஆன்ட்டி.

நான் கொஞ்ச தூரத்தில் நின்றிருந்தேன். இரண்டொரு ஸ்டாப் தள்ளி வண்டி நின்றவுடன், அவள் அருகே இருந்தவள் எழுந்து போய்விட்டாள். சுற்றும் முற்றும் ஒரு முறை பார்த்துவிட்டு, என்னைப் பார்த்து, "நீங்க வந்து உட்காருங்க" என்று என்னைப் பார்த்து அழைத்தாள்.

போய் கம்ஃபர்டபிளாக உட்கார்ந்த பின், தலையை தூக்கினால் அந்த அப்பாவி, என்னை எரித்து விடுவதுபோல் பார்த்துக் கொண்டிருந்தான்.

தோளை சிலுப்பி, புன்முறுவலுடன் சிரித்துவிட்டு வேறுபக்கம் திரும்பிக் கொண்டேன்.

இடம் 3: நான் தங்கியிருக்கும் ரூம், இரவு நேரம்.

எல்லாரும் 7 மணிக்கே ஆஃபிஸில் இருந்த வந்துவிட்டு, சீரியஸாக கிரிக்கெட் மேட்ச் பார்த்துக் கொண்டிருந்தனர். நான் வந்த போது நேரம் 9. ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிவிட்டு, ஃபேஸ் வாஷ் பண்ணிக் கொண்டிருந்த போது, மாடி வீட்டு ஹவுஸ் ஓனர் அம்மா, "கணேஷ், கணேஷ், கணேஷ்" என கத்தி கூப்பிட்டுக் கொண்டிருந்தார். அவர் கத்திய சத்தத்தில் முச்சந்தி விநாயகரே எழுந்து வந்து, "என்ன மாமி, அவசரம்" என்று கேட்டிருப்பார்.

நான் அவசரம் அவசரமாக ஷார்ட்ஸில் காலை நுழைத்து, பனியனுடன் வாசல் நோக்கி ஓடி வந்தேன். "வீட்ல குலோப்ஜாமூன் பண்ணோம்டா. நீங்க சாப்பிடுறதுக்கு கொண்டு வந்தேன்" என்று டப்பாவை நீட்டினாள். "ம்ம் சரிம்மா. தேங்க்ஸ்" செயற்கையாக சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு உள்ளே வந்தேன்.

ரூம்மேட்ஸ் மூன்று பேரும் கொலைவெறியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். "நாங்க மூணுபேரும் வந்து ஒரு மணிநேரம் மேல ஆச்சி. எங்ககிட்ட எல்லாம் கொடுக்காம அது மட்டும் ஏன் நீ வந்ததக்கு அப்புறம் உன்கிட்ட கொடுக்கிறாங்க?" என்று அவர்கள் பார்வையை ரீட் பண்ணினேன்.

வழக்கம்போல் அசட்டுத்தனமாக சிரித்துவிட்டு, நான் காலிபண்ணியது போக மிச்ச டப்பாவை அவர்களுக்குக் கொடுத்தேன்.

இடம் 4: அதே இடம், இரவு நேரம் 11 மணி.

கிரிக்கெட் மேட்ச்-ம் முடிந்துவிட்டது. ஒருவன் ஃபோனை எடுத்து மொட்டை மாடிக்கு போய்விட்டான். இன்னொருவன் வராண்டாவில் "Walk & Talk" பண்ணிக் கொண்டு இருந்தான். டைம் பாஸ் ஆகவில்லை. நான் லேப்டாப்பை ஓபன் பண்ணினேன். ரொம்ப நாளாக "நான் ரொம்ப பிஸ்ஸீ" என்று சூரியன் பட கவுண்டமணி போல் ஓவர் ரவுசு பண்ணிக் கொண்டிருந்த தோழி ஆன்லைனில் வந்து, "ஹாய்" என்றார்.

லேப்டாப் மானிட்டரைப் பார்த்து அதே வழக்கமான சிரிப்பைக் கொட்டிவிட்டு, திரும்ப "ஹாய்" அடித்தேன். தொடர்....ந்தது.

பின்குறிப்பு: இதில் என்னவோ நுண்ணரசியல் இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் மிகச்சரி. நுண்ணரசியல் மட்டும் அல்ல, நிறைய பெண்ணரசியலும் உள்ளது. மேலே சொன்னது எல்லாம் பாதி உண்மைகள். மீதி உண்மைகள் கீழே!

இடம் 1: ATM ல் பணம் எடுத்துவிட்டு திரும்பும்போது, பாய்ஃப்ரெண்டுடன் லஞ்ச் முடித்துவிட்டு குமரகம் ஹோட்டலில் இருந்து வந்தவ‌ள், மெயின் ரோட்டில் இருந்து DLF உள்ளே திரும்ப ரொம்ப தூரம் நடப்பதற்கு சோம்பேறித்தனம் பட்டுக்கொண்டு, என்னிடம் "ஒரு ஹாய், நாலு சிரிப்புகள்" பரிமாறிவிட்டு பின்னால் தொற்றிக் கொண்டாள். ஆஃபிஸ் வந்ததும் கழற்றிவிட்டு எஸ்கேப் ஆனாள்.

இடம் 2: ஜன்னலோர இருக்கையில் மழைத்தண்ணீர் உள்ளே சட சடவென அடித்துக் கொண்டிருக்க, என் சாந்த சொரூபமான முகத்தை பார்த்தவுடனே முடிவு பண்ணி, என்னை உள்ளே உட்கார வைத்து தற்காத்துக் கொண்டாள் கார்ப்பரேட் ஆன்ட்டி.

இடம் 3: போன தடவை மாமி கொடுத்த டப்பாக்களை சக ரூம்மேட்ஸ் இன்னும் கழுவி தரவில்லை. நான் ஒரு முறை கழுவிக் கொடுத்தேன். அதை நினைவில் வைத்து, என்னை அழைத்துக் கொடுத்தார் ஹவுஸ் ஓனர் மாமி.

இடம் 4: மேலே போனவனும், வராண்டாவில் இருந்தவனும் தம்தம் காதலிகளுடன் கடலை போட்டுக் கொண்டிருந்தனர். ஒன்றும் தேறாத, என்னை மாதிரி நல்லவனை, அந்த மெகா மொக்கை தோழி ஹாய் சொல்லி முடித்தவுடன், சொன்னாள், "லூசுப் பையா?".

கன்னி ராசியிலும் பல கண்டங்கள் உள்ளன.

******************************************

10 comments:

Rajalakshmi Pakkirisamy said...

//மொக்கை தோழி ஹாய் சொல்லி முடித்தவுடன், சொன்னாள், "லூசுப் பையா?".//

super o super..

தமிழ் நாடன் said...

இது ரொம்ப ராசியில்லாத கன்னியோ!

Vetri said...

interesting!

லெமூரியன்... said...

ha ha ha .....C O O L..!

Sanjai Gandhi said...

கண்டங்களுக்கு என் கண்டனங்கள்..

//லூசுப் பையா?".//

ஹிஹி.. சொன்னது யார்னு தெரியுமே.. :))

கணேஷ் said...

வாங்க‌ Rajalakshmi!

Thank you!

வாங்க தமிழ்நாடன்!

ஆமாங்க, ரொம்பவே ராசியில்லாத கன்னி!

வாங்க Vetri!

Thanks a lot :)

வாங்க லெமூரியன்!

Thanks a lot ;)

வாங்க SanjaiGandhi,

//ஹிஹி.. சொன்னது யார்னு தெரியுமே.. :))

அப்பாடா, உங்களுக்காவது தெரிந்ததே? யாரு? :) :) :)

Sanjai Gandhi said...

////ஹிஹி.. சொன்னது யார்னு தெரியுமே.. :))

அப்பாடா, உங்களுக்காவது தெரிந்ததே? யாரு? :) :) :)//

ஹாஹா.. அதான் பழய ரிப்ளைல ஹிண்ட் குடுத்திருந்திங்களே.. :)

கணேஷ் said...

@SanjaiGandhi,

ஹா ஹா ஹா!!!, You are really great :) :) :)

கிரி said...

இப்படியாவது ஏதாவது நடக்குதே!

ஊர்சுற்றி said...

நிகழ்வுகளை அழகாக வர்ணித்துள்ளீர்கள்.

Related Posts with Thumbnails