"சிந்து, தீபாவளிக்கு புது டிரெஸ் எதுவும் எடுக்கலியா? இன்னும் ஒரு வாரம் தானே இருக்கு?"
"என்கிட்ட மலை மாதிரி குமிஞ்சு இருக்கற ட்ரெஸ்ல என்ன எடுக்கிறதுனே தெரியல? போன மாசம் வேற ரெண்டு செட் எடுத்தேன். நீ ஏதாவது ஐடியா கொடேன்?"
"எனக்கெல்லாம் பொண்ணுங்க ட்ரெஸ் பத்தி எதுவும் தெரியாது. நல்லா அவங்க போட்டிருந்த கொஞ்சம் நேரம் சைட் அடிப்பேன். அவ்வளவு தான். அதுவும் சுரிதார் சைட்ல ரொம்ப லாங்கா கட் பண்ணிட்டு, ரொம்ப டைட்டா பேண்ட் போட்டு திரியுற பொண்ணுங்கள அவங்க போற இடத்துக்கெல்லாம் போய் சைட் அடிப்பேன்."
"நாய் மாதிரி தான.. வெட்கமா இல்ல.. இப்படி என்கிட்டயே சொல்றதுக்கு? இடியட்"
"இதில என்னம்மா தப்பு? இது வாலிப வயசு. நாங்க எல்லாம் பாக்குறதுக்குத் தான அவங்க அப்படி போட்டு திரியுறாங்க. முதல்ல அவங்கள நிறுத்த சொல்லு. நான் நிறுத்துறேன்."
"சரி சரி போதும் போதும் உன் பஞ்ச். நான் நைட் யோசிச்சிட்டு மார்னிங் சொல்றேன். நாம பர்சேஸ் போகலாம்"
"ஒகே.. குட் நைட்"
~
"ஹலோ, என்ன சைலண்டா வர்ற.. எனக்கு ஒரு சான்டல் கலர் டீஷர்ட், காஃபி கலர் டஃப் ஜீன்ஸ். முடிவு பண்ணிட்டேன். உனக்கு என்ன?"
பில்லியனில் உட்கார்ந்துகொண்டு வானத்தை பார்த்து யோசித்துக் கொண்டே, "முடிவு பண்ணிட்டேன் வினோத். நீ மட்டும் அத பார்த்த ஷாக் ஆகிடுவே."
"ம்ம்ம்ம்.. பாக்கலாம்.. போத்தீஸ் தான.."
"ஆமா.."
~
"வினோத், சரி நீ போய் உன்னோடத எடுத்திட்டு இரு.. நான் செலக்ட் பண்ணிட்டு இருக்கேன்."
"ஓகே.."
பத்து நிமிடங்கள் கழித்து செல்போனில் கால்.
"வினோத், உடனே ட்ரையல் ரூம் வா... என் ட்ரெஸ்ஸ பாத்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லு.."
"ஓ.கே.."
உள்ளே போனால், ஜகன் மோகினியில் வரும் குட்டி பேய்கள் போல, ஒயிட் அண்ட் ஒயிட்டில் சிரித்தாள். மாஸ்க் மட்டும் தான் மிஸ்ஸிங்.
"ஐயோ, என்ன கொடுமை இதெல்லாம்? இது தான் நீ சொன்ன ஷாக்கா?"
"சம்திங் சம்திங் பார்த்திருக்கியா?"
மிரண்டு போய், "வாட் நான்சென்ஸ்? உன் மேல சத்தியமா என் லைஃப்ல அதெல்லாம் பார்த்ததே இல்ல.. தப்பு. அதுவும் இல்லாம அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான்"
"செருப்பால அடிப்பேன். நான் கேட்டது 'சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்' ன்னு ஜெயம் ரவி, த்ரிஷா நடிச்ச படம்"
"ஓ.. அதுவா" மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டு, "ரெண்டு வருஷம் முன்னாடி பார்த்தது. சரியா நியாபகம் இல்ல"
"அதுல ஒரு பாட்டுல த்ரிஷா போட்டு இருப்பா, நியாபகம் இருக்கா?"
"'கோழி, வெடக் கோழி' பாட்டுலயா. அதுல அவ போட்டிருக்கிற ட்ரெஸ் இப்படியெல்லாம் இருக்காதே"
"இடியட். படத்துல அந்த பாட்டு மட்டும் தான் இருக்கா? நான் சொல்றது, 'உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்'ல ஒயிட் குர்தா, பேண்ட், ரெட்ல ஒரு ஷால் வச்சி ஆடுவாளே. அதான் ட்ரை பண்ணேன். பட் இது கொஞ்சம் லூஸ்"
"அது மட்டுமா"
"என்ன?"
"கொஞ்சம் இல்ல, ரொம்பவேன்னு சொன்னேன்"
"ம்ம்.. நான் அதே மாதிரி செலக்ட் பண்ணாம போக மாட்டேன்."
"குட் ஸ்பிரிட், நான் என் ட்ரெஸ்ஸ எடுக்கப் போறேன்."
எஸ்கேப்பாகி ஓடினால், பின்னால் அவள் அங்கே இருந்த ஒரு பெண் வேலையாளிடம், 'சம்திங் சம்திங்' கதையை சொல்லிக் கொண்டிருந்தாள்.
அரைமணி நேரம் கழித்து, "வினோத், எதுவுமே எனக்கு செட் ஆக மாட்டேங்குது" புலம்பிக் கொண்டே
"ஹேய் அது த்ரிஷா உடம்புக்கு செட் ஆச்சின்னா அதுக்கெல்லாம் வேற ரீசன்ஸ். உன் ஜம்போ மீல்ஸ் பாடிக்கு சுரிதாரும், நாலு மீட்டர் ஷாலும் தான் லாயக்கு. ஒழுங்கு மரியாதையா அதத் தேடு. டைம் வேஸ்ட் பண்ணாத"
"நான்சென்ஸ். உன்கிட்ட போய் கேட்டேன் பாரு"
மீண்டும் அரைமணி நேரம் கழித்து, ட்ரையல் ரூம் வரச்சொல்லி கால்.
"இப்பவே இந்த கொடுமைன்னா, கல்யாணத்துக்கப்புறம் நினைச்சாலே பயமாயிருக்கு" என எல்லாக் கடவுளிடமும் அங்கலாய்த்துக் கொண்டே , அவளைத் தேடி போனேன்.
அங்கே சைடில் ரொம்பவே லாங்காக கட் பண்ணின சுரிதார் டாப்ஸுடன், ஓயிட் கலர் டைட் பேண்ட் போட்டு முன் நின்றாள்.
வெட்கத்துடன், ஓரக்கண்ணால் "எப்படி?" எனக் கேட்டது ஆயிரம் கவிதை.
அவன் முன்முறுவலுடன், "ஃபென்டாஸ்டிக்" என இரண்டு விரலை மடித்து சொன்னது, தனிக்கவிதை.
டிஸ்கி: இது சத்தியமாக சிறுகதை இல்ல. அட் தி சேம் டைம், என் அனுபவமும் இல்லை. காதலி கிடைக்காத எலிஜிபிள் பேச்சிலர் நான். (ஹி..ஹி. ஒரு விளம்பரம்)
******************************
ஷாப்பிங் போன காதலனும் காதலியும்!
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
கணேஷ் நல்லா எழுதி இருக்கீங்க..சுவராசியமா இருந்தது :-)
தேங்க்ஸ் கிரி.. நீங்களாவது வந்து ஏதாவது சொல்லிட்டு போனீங்களே! ;)
sorringnna .. avolov suvarashyama illai...
காதலி கிடைக்காத எலிஜிபிள் பேச்சிலர் நான். //
கடைசியா முக்கியமான மேட்டர சொல்லிட்டீங்களா... சீக்கிரமே காதலி கிடைத்து நீங்க டி. நகர்ல இருக்குற கடைகள் முழுக்க ஏறி இறங்க வாழ்த்துக்கள்.
romba nalla iruku ganesh...
:)
எதிர்பாரத முடிவு.
Post a Comment