'கடலை' எனப்படுவது யாதெனில்..

கடலை. கல்லூரியில் செமஸ்டர், அசைன்மென்ட், லேப், ப்ராக்டிகல், அரீயர்ஸ் போன்ற சொல்களை விட மிக அதிகமாக புழங்கும் சொல். இந்த சொல்லை சொல்லாமல் இருந்தால் அவன் கல்லூரி மாணவனே இல்லை என்ற அவப்பெயருக்கு ஆளாக நேரிடலாம். இதில் ஆண், பெண் பாகுபாடு இல்லை. குறிப்பாக, லேடீஸ் ஹாஸ்டலில் தான் இந்த சொல் அதிகமாக பயன்படுத்தப்படும். பாய்ஸ் ஹாஸ்டலிலும் சரி, லேடீஸ் ஹாஸ்டலிலும் சரி, இந்த கடலை போடுவார்கள் தனித் தீவாக இருப்பார்கள். யாரும் சீண்டக் கூட மாட்டார்கள். அது அப்படியே கம்பெனி, மேரேஜ் லைஃப் என்று போனாலும், கடலை என்ற சொல்லை கேள்விப்பட்டால், அது ஏன் கேள்விப்பட்டால், பஸ் ஸ்டாண்டில் எவனாவது வேர்க்கடலை விற்றால் கூட, திடீரென கல்லூரி லைஃப் ஒரு செகண்ட் க்ராஸ் ஆகும். பின்னர் ஒரு செகண்டில் திரும்ப அதே வேலை, பொண்டாட்டி/புருஷன் டென்ஷன், ஸோ அன்ட் ஸோ....
காலேஜில் ஃபர்ஸ்ட் இயரில் கடலை போடுபவனை கன்னா பின்னாவென கிண்டல் செய்யும் ஒருவன், காலேஜ் முடிவதற்குள் எவளுடனாவது கடலை போட்டுக் கொண்டு பேரைக் கெடுத்து, சேது விக்ரம் மாதிரி மாறி விடுவான். Vice versa also applicable :) இது காலேஜின் விதி. இதைக் கடந்து யாராலும் வந்து இருக்க முடியாது. மாறி வ‌ந்து இருந்தால், அவ‌ன்/ள் அப்நார்ம‌ல். மாத்ரூபூதம், நாராய‌ண‌ ரெட்டி மாதிரி டாக்ட‌ர்க‌ளிட‌ம் செக் ப‌ண்ணினால் ஷேம‌ம்.

இந்த‌ க‌ட‌லை நோய்க்கு ஆண்/பெண் வித்தியாச‌ம் எல்லாம் கெடையாது. க‌ட‌லை போடுவ‌தில் ஒரு மிக‌ப்பெரிய‌ அட்வான்டெஜ் என்ன‌வென்றால், ல‌வ் ப‌ண்ணியே தீர‌ வேண்டும் என்ற‌ க‌ட்டாய‌ம் எல்லாம் இல்லை. ரெண்டு பேருக்குமே பிடித்திருக்கிற‌து என்றால் ம‌ட்டுமே அது ல‌வ்வில் முடியும். அது 5% ஒன்லி. ம‌த்த‌ப‌டி பிடிக்க‌வில்லையென்றால், ஈஸியாக‌ க‌ழ‌ற்றிவிட்டு வேற‌ ஒரு ஆளைத் தேடிப் போக‌லாம். இது தான் எல்லாரையும் ஈர்க்கும் அதிச‌ய‌ம். ம‌ற்ற‌ப‌டி, ஏதாவ‌து ஒரு ஆளுக்கு ம‌ட்டும் ல‌வ் வ‌ந்து, அடுத்த ஆளுக்கு வ‌ர‌வில்லையென்றால், ரொம்ப‌ சிம்பிள். க்ளைமேக்சில் ஹீரோயின்ஸ் சொல்வ‌து மாதிரி, "உன்னை ந‌ல்ல‌ ஒரு ஃப்ரெண்டா ம‌ட்டும் தான் நென‌ச்சி இருந்தேன். ம‌ற்ற‌ப‌டி ந‌ம‌க்குள்ள வேற‌ ஒண்ணும் வேணாமே ப்ளீஸ்" என்று டைய‌லாக் பேசி நைசாகக் க‌ழ‌ன்று விட‌லாம். இது முடிந்த‌வுட‌ன் வேற‌ ஒரு க‌ட‌லை பார்ட்ன‌ர் கிடைக்கும் வ‌ரை, ந‌ன்றாக‌ ஃபீல் ப‌ண்ண‌லாம். அது ஒரு நைஸ் ஃபீலிங்.

பாகுபாடு இன்றி பார்க்கும் எல்லாரிடமும், கடலை போடுபவனு/ளுக்கு ஒரு பார்ட்னர் கூட அமையாது. இது காலேஜின் மோசமான தலையெழுத்து. வருடத்திற்கு ஒரு ஃபிகர் என்று வாழ்பவனது வாழ்வில் ஒரு நல்ல நச் ஃபிகர் அமையும். அதுவும் காலேஜ் லைஃப் முடிந்தவுடன் கழன்றுவிடும். மற்றவனுக்கெல்லாம், லேப் அசைன்மென்ட் எழுத ரிக்கார்ட் நோட் கொடுக்கும் அளவுக்கு மட்டுமே ஒரு அட்டு ஃபிகர் அமையும்.

க்ரூப்பாக‌ அதாவ‌து ஃபைவ் ஸ்டார் மாதிரி மூணு ப‌ச‌ங்க‌, ரெண்டு பொண்ணு என்று சுற்றுப‌வ‌ர்க‌ளில், யாருக்கும் தெரியாமல் மினிம‌ம் கியார‌ண்டியாக‌ ரெண்டு ஜோடி உஷார் ஆகிவிடும். கடைசி ஒருவ‌னுக்கு லாலிபாப் தின்ற‌து போக‌ குச்சி ம‌ட்டுமே. இப்ப‌டி திரிப‌வ‌ர்க‌ளை ம‌ட்டும் ந‌ம்ப‌வே கூடாது.

இந்த‌ க‌ட‌லையை ரொம்ப‌ யூஸ்ஃபுல்லா யூஸ் ப‌ண்ற‌ ஒரு க்ரூப் இருக்கு. அதாவ‌து க‌ட‌லை போடுற‌ பொண்ணுகிட்ட‌யே, அந்த‌ காலேஜ்ல சூப்பர், ந‌ச் ஃபிக‌ர்கிட்ட‌ ல‌வ் லெட்ட‌ர், கிஃப்ட் ஐட்ட‌ம்ஸ் பாஸ் ப‌ண்ணுவாய்ங்க‌. அதே மாதிரி தான் பொண்ணுங்க‌ளும். க‌டைசில‌ அவ‌ன், "காத‌ல் கொண்டேன்" த‌னுஷ் மாதிரி சைக்கோவா திரிவான். இதெல்லாம் காலேஜ் வாழ்க்கையின் இன்றிய‌மையாத‌ அங்க‌ம்.

இதுல‌ ஒரு மோச‌மான‌ க்ரூப் ஒண்ணு இருக்கு. அதாவ‌து ஒரு டைம்ல‌ ஏர்டெல்ல‌ ல‌வ்வ‌ர் பேக்னு ஒண்ணு இருந்துச்சி. எப்ப‌டின்னா, ஒரு ந‌ம்ப‌ர்ல‌ இருந்து இன்னொரு ஏர்டெல் ந‌ம்ப‌ருக்கு ம‌ட்டும் எப்ப‌ பேசுனாலும் ஃப்ரீ. இதை ல‌வ் ப‌ண்றேன்னு சுத்திக்கிட்டு இருக்க‌ ஜோடி போட்டுக்கிட்டு ப‌ண்ற‌ அள‌ப்ப‌றை தாங்காது. அந்த‌ பொண்ணை தூங்க‌ விட‌மாட்டான், சாப்பிட‌ விட‌ மாட்டான். அது ஏன், பாத்ரூம் கூட‌ போக‌ விட‌மாட்டான். அந்த‌ அள‌வுக்கு. ஒரு படத்துல‌ க‌வுண்ட‌ம‌ணி சொல்ற‌ மாதிரி, "ரெண்டு பேரும் இப்பிடியாம்"ன்னு ரெண்டு கை விர‌லையும் ஒண்ணா சேர்த்து, பிணைந்து சொல்வார்ல. அந்த மாதிரி திரிவாய்ங்க‌. இவிங்க‌ தான் அந்த‌ செட்டின் மெகா காமெடி பீஸ்.

இத‌ற்கு விதிவில‌க்கு ஒன்று உண்டு. க‌ட‌லையும் இருக்காது. செல்ஃபோன் பேட்ட‌ரி வாய்விட்டு அழும் அள‌வுக்கு புகையும் கெடையாது. ஆனால் ஆல் ஆஃப் தி ச‌ட‌ன், ஒரு நாள் நாங்க‌ ரெண்டு பேரும் ல‌வ் ப‌ண்றோம்ன்னு காலேஜேயே இன்ச் இன்ச்சா அள‌ப்பாங்க‌. கேட்டால், அவ‌ங்க‌ க‌ண்ணாலேயே பேசி ல‌வ் ப‌ண்ணாங்க‌ளாம்(மௌனம் பேசியதே சூர்யா சொல்வது போல்). முடிய‌ல‌டா சாமி, ரீல் அந்து போச்சி என்ற‌ அள‌வுக்கு அவ‌ர்க‌ள் பில்ட‌ப் இருக்கும்.

ச‌ரி, இதெல்லாம் விடுங்க‌.. இந்த‌ கொடுமையான‌ ப‌ழ‌க்க‌த்துக்கு க‌ட‌லை என்று எப்படி பேர் வ‌ந்துச்சின்னு தெரியுமா? அதே ச‌ந்தேக‌த்தை, நான் அசோக் ந‌க‌ர் முண்ட‌க்க‌ண்ணி அம்ம‌ன் கோவில் ப‌க்க‌த்தில் இருக்கும் ஜோசிய‌ரிட‌ம் கேட்டேன். அவ‌ர் சொன்ன‌து என்ன‌வென்றால், "த‌ம்பி, நீ ஒரு க‌ட‌லையை உடைச்சின்னா, உள்ளே ரெண்டு ப‌ருப்பு இருக்கும். அந்த‌ ரெண்டு ப‌ருப்பும் எப்ப‌டி இருக்கும்? ரெண்டும் எதிரெதிரா, ரெண்டுக்கும் ஒரு சின்ன‌ இட‌த்துல‌ கான்டாக்ட் மாதிரி இருந்தாலும், உண்மையிலேயே கொஞ்ச‌ம் இடைவெளி இருக்கும். அதை உடைச்சி பார்த்தா ம‌ட்டும் தான் தெரியும். அது மாதிரி, பைய‌னும் பொண்ணும் ரொம்ப‌ நேர‌ம் சிரிச்சி, சீரியஸா பேசிக்கிட்டு இருந்தா பார்க்குற‌வ‌ங்க‌ளுக்கு அவ‌ங்க‌ ல‌வ் ப‌ண்றா மாதிரி தெரியும். ரெண்டு பேரையும் கொஞ்ச‌ம் த‌னியா நோண்டுனா தான், உண்மையான‌ மேட்ட‌ர் தெரியும். க‌ட‌லையை குலுக்குனாலும் ச‌த்த‌ம் வ‌ரும். இவ‌ங்க‌ ரெண்டு பேரையும் ஒண்ணா பார்த்துட்டாலும், ரெண்டு பேர்கிட்ட இருந்து ஓவ‌ர் ச‌வுண்ட் வ‌ரும். அதே மாதிரி, க‌ட‌லை ப‌ருப்ப வ‌றுத்தாலும் ஒரு மாதிரி தீயிற‌ ஸ்மெல் வ‌ரும். ரெண்டு பேரும் ஓவ‌ரா குலையிற‌த‌ பார்த்தாலும், பார்க்குற‌வ‌ன் ஸ்டொம‌க் ப‌ர்ன் ஆகி புகை, ஸ்மெல் வ‌ரும்" என்று நீண்ட‌ விள‌க்க‌ம் கொடுத்தார். ஏதோ புரிந்த‌வ‌னாக, நாட்டுக்கு ச‌ம்ப‌ந்த‌மான‌ விஷ‌ய‌த்தை,அதி முக்கியமாக‌ ப்ளாக் ந‌ல்லுல‌க‌ ம‌க்க‌ளுக்கு சொல்லுகிறேன்.

ச‌ரிடா, இவ்வ‌ள‌வு வியாக்ஞான‌மா பேசுறீயே, இதுல‌ நீ எந்த‌ கேட்ட‌கிரி? அப்படின்னு கேட்க‌லாம். அந்த‌ லாலிபாப் தின்ற‌து போக‌ குச்சியோடு ஒருவ‌ன் இருப்பான்னு சொன்னேன்ல‌, அந்த‌ கேட்ட‌கிரி தான் நான். :(

****************************************

13 comments:

VISA said...

என்னா ஒரு கண்டு பிடிப்பு மாப்பு. "நமக்கெல்லாம் கடல்ல தூக்கி போட்டுடுவேன்னு" மிரட்டினா கூட கடல போட ஒருத்தி வரமாட்டேங்குறா என்ன பண்ண.

cheena (சீனா) said...

சிறந்த ஆய்வுக் கட்டுரை - கடலையினை ஆய்ந்தறிந்து அருமையாக இடுகை இட்டமைக்கு பாராட்டுகள்

நிலாமதி said...

நல்லா யிருகுங்க. சிரிச்சேன்

Santhosh said...

நல்லா இருக்கு ஆராய்ச்சி கட்டுரை :)

kanagu said...

நல்லதொரு ஆராய்ச்சி..

அந்த விளக்கம் சூப்பர்... :))

நானும் ரொம்ப நாளா தேடிட்டு இருந்தேன்.. :))

லெமூரியன்... said...

ஹலோ கலக்குறீங்க...! அருமையான ஆய்வு..!

கணேஷ் said...

வந்து பாராட்டிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள் பல!

ஊர்சுற்றி said...

கடலையை இவ்ளோ குளோஸ்அப்ல பார்த்தது இல்லீங்க. நல்லா எழுதியிருக்கீங்க. :)

Bharkavi said...

nee ezhudha vendiya kavadhai dhaan.

Bharkavi said...

nee ezzhudha vendiya post dhaan :P

goma said...

ஐய்ய்ய்ய்யோ
ஒரு ஆளுக்கு ஒரு கடலை போதும் போலிருக்கே.....

commomeega said...

நான் ரொம்ப நாள் யோசித்து,மண்டைய ஒடைச்சி, பல நாள் குழம்பி தவித்து,பல அகராதி தேடி கிடைக்காத விளக்கத்தை இப்போது தான்,உங்கள் இடுகை மூலம் தெரிந்து கொண்டேன் .நன்றி .

Shrek said...

Super Thala..i got the the URL from Cable's blog and your writings are amazing..

Related Posts with Thumbnails