சோம்பேறி காதலியும், அவள் தலையெழுத்தும்

"டேய்ய்ய்"

"என்னடி"

"என்ன பிடிச்சிருக்கா"

"ம்ம்.. அதை ஏன் இப்போ கேட்குற"

"பயமா இருக்கு"

"ஏன்?"

"நாம தப்பு பண்ணல தான"

"எத்தன வாட்டி கேட்ப?"

"கேட்கும்போதெல்லாம் சொல்லு"

"இல்ல. தப்பு பண்ணல"

"ஆனாலும் பயமா இருக்குடா"

"நான் இருக்கேன்ல அப்புறம் என்ன?"

"அதுவும் கூட ஒரு காரணம்"

"உன்ன திருத்தமுடியாதுடி"

"சரி சரி ஸாரி"

"ம்ம்.."

"சிரிடா ப்ளீஸ்"

*
*

"ஒரு நிமிஷம்"

"என்னடி?"

"கண்டிப்பா இத பண்ணியே ஆகணுமா? வேணாம்டா ப்ளீஸ்!"

"அழாதடி.. ஒண்ணும் இல்ல.."

"வெளியே தெரிஞ்சா அசிங்கம்டா"

"யாருக்கும் தெரியாது. கமான்.."

*
*
*
*

"சரி. தென்.. ஷேல் வீ?"

"யாராவது இருக்காங்களான்னு பாரு"

"உன்ன கொல்லப் போறேன்"

"சரி ரைட். ஸ்டார்ட்.."

"ஒரு நிமிஷம்"

"என்னடி?"

"வெளியே தெரிஞ்சா அசிங்கம்டா"

"அழாதடி.. ஒண்ணும் இல்ல."

"ம்ம்..இப்ப ஓ.கேவான்னு பாரு"

"நல்லா ஃபுல்லா கவர் பண்ணிக்கோடி"

"இப்படியெல்லாம் நான் இருந்ததே இல்ல"

"இனிமேலாவது ஒழுங்கா குளிப்பியா?"

"ம்ம்ம் குளிப்பேன்"

"அழாதே.. ரெகுலரா தலைக்கு ஷாம்பூ போட்டு ரெகுலரா குளிச்சி இருந்தேன்னா, டேண்ட்ரஃப் வந்து இருக்காது. அது முத்திபோய் இப்படி தலை முடிய எடுக்குற அளவுக்கும் வந்திருக்காது. உன்னைக் கட்டிக்கிட்டு... மொட்டை"

பல்சர் பறக்கிறது, வீல் என்று மனைவியின் அலறலுடன்.

************

5 comments:

சென்ஷி said...

:-((

என்னக்கொடுமை இது!!!

மகேஷ் said...

அய்யோ அய்யோ...

இராயர் அமிர்தலிங்கம் said...

உண்மையில் இது மொக்கையான பதிவு தான்.
ஆனால் உங்களுக்கு தான் அது பிடிக்காதே!!!!!

cheena (சீனா) said...

நல்லாருக்குப்பா - எதிர் பார்த்த முடிவு தான் - ஆனா இப்படி இருக்கும்னு எதிர் பாக்கலே -

வெற்றி said...

நல்ல பதிவு…!

http://vetripages.blogspot.com....._6845.html
எனது கன்னி எழுத்து முயற்சிக்கு உங்க‌ள் பின்னூட்ட‌ம் வ‌ழியாக‌வும்,ஓட்டு போட்டும் ஆத‌ர‌வு த‌ருக‌..!
குறைக‌ள் இருப்பின் பின்னூட்ட‌ம் வாயிலாக‌ச் சுட்டிக்காட்ட‌‌வும்.

Related Posts with Thumbnails