நாளுக்கு நாள் நம் தமிழ்சினிமாவின் பரிணாமமும் மாறிக் கொண்டே இருக்கிறது. பத்து வருடத்திற்கு முன்னாலே வெளிவந்த நமது இளைய தளபதியின் முதல் ஹிட்டின் முத்தான, கொத்தான கிளைமேக்ஸ்
"நீங்க ஏன் இன்னொரு பொண்ணை லவ் பண்ணக் கூடாது"
"காதல்ங்கிறது செடியில பூக்கிற பூ மாதிரிங்க.. அது எனக்கு ஏற்கெனவே பூத்திருச்சி.. அப்படியே விட்டுருங்க..."
(லலலலலலலலலலலலலாலாலாலாலா)
"அந்த செடியில கூட ஒரு பூ பூத்தவுடனே இன்னொரு பூ பூக்கிறது இல்லையா, அது மாதிரி நீங்க ஏன் உங்கள மாத்திக்ககூடாது.."
(னனனனனனன்னனனனன்னனனனன்னனன்ன...)
"மத்தவங்களுக்கு வேணா காதல் இன்னொரு பூவா இருக்கலாம். எனக்கு அப்படியில்லை.. ஒரு தடவை தான். திரும்ப அத எடுத்த செடியில எடுத்து ஒட்டவைக்க முடியாது. நான் அப்படியே இருந்திடறேன்.."
நூறு தடவை லலலலலலல வுடன் A film by Vikraman என்று கோழிகிறுக்கலில் எண்ட் கார்டு போடப்படும். அப்போது அதிரிபுதிரியான ஹிட். இப்போது ரிலீஸ் ஆகியிருந்தால் 10 நாள் தாண்டுவதற்கே தலையால் தண்ணீ குடிக்க வேண்டி இருக்கும். அதை ஏற்றுக் கொள்ளும் மனநிலையிலும் ரசிகன் இல்லை. "பொக்கை வாய் ஃபிகர் போயிடுச்சேன்னு சந்தோசப்பட்டுகிட்டு ஹோம்லி ஃபிகர் சங்கீதாவ கரெக்ட் பண்ணுவானா.. அதை விட்டுப்புட்டு செடி, கொடி, பூன்னு ஃபீல் பண்றான். சரியான லூசுப்பையன்.. " என்று எல்லாரையும் கேவலமாக திட்டிவிட்டு பர்ஸை தடவிவிட்டு வெளியே போய்விடுவான்.
இன்று அவன் எதிர்பார்ப்பதெல்லாம் 7/ஜி ரெயின்போ காலனி மாதிரியான உணர்வுப்பூர்வமான கதை, இல்லையென்றால் காக்க காக்கவில் வருவது போல ஸ்டைலான காதல்..
"ஏன் மாயா ஏன்? நான் மத்தவங்க மாதிரி ரொம்ப ஜாலியான பையன் எல்லாம் கெடையாது. நமக்குள்ள அப்படி என்ன"
"ஏன்னா எனக்கு உங்கள பிடிச்சி இருக்கு. உங்க ஸ்டைல், கம்பீரம், பார்வை எல்லாம் பிடிச்சிருக்கு. உங்கள கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுகிறேன். I want to make love to you. உங்கள மாதிரி ரெண்டு குழந்தைங்க பெத்துக்கணும். ஒரு நாள், உங்க மடியில அப்படியே செத்துடணும். செய்வீங்களா அன்புச்செல்வன்?" (அப்படியே நேருக்கு நேராக கண்களைப் பார்த்து)
"சரி. இன்னைலர்ந்து சரியா 7வது நாள்ல கல்யாணம் பண்ணிக்கலாம்"(உதட்டில் வழியும் ஆத்மார்த்த அனுமதித்தலுடன்)
இந்த இடத்தில் ஜோதிகாவின் ரியாக்சன் அவருடைய "தி பெஸ்ட்" ஆக இருக்கும்.
இந்த மாதிரியான பெப்பியான காதல், ரொமான்ஸ், நிதர்சனக் கதைகளைத் தான் விரும்புகிறார்கள். இந்த மாதிரி சராசரி ரசிகனின் ரசனை நாளுக்கு நாள் மாதிரிக் கொண்டு இருக்கிறது. ஒரு பக்கம் மிகவும் இயல்பான 'காதல்', 'சுப்ரமணியபுரம்' போன்ற படங்கள், ஷங்கர் மாதிரியான டைரக்டர்களிடம் இருந்து வரும் ஃபேண்டஸியான படங்கள், குத்து மசாலா ஹீரோஸ் விஜய், விஷால் போன்றோரின் என்று அடுத்த கட்டத்தை தடுக்கும் படங்கள், பேரரசு, எஸ்.ஜே.சூர்யா படங்கள்.... இவ்வளவு தான் சினிமாவா.. நாம் மட்டும் தான் சினிமாவைக் கொண்டாடுகிறோமோ.. நாம் மட்டும் தான் சினிமாவில் இருந்து அரசியல் கனவுகளை அனுமதிக்கிறோமோ.. இப்படி 'நாம் மட்டும் தான்' என்று சொல்லிக் கொண்டு என்ன கேள்வி கேட்டுக் கொண்டாலும், அதற்கு ஒரே பதில் "நோ"
உலகெங்கும் எத்தனை மொழிகள் இருக்கிறதோ, அத்தனை மொழி மக்களும் சினிமா எடுக்கிறார்கள். பின்னே அவர்களுக்கும் ஒரு பொழுதுபோக்கு அம்சம் வேண்டாமா. ஓ.கே. அவர்கள் எப்படி எடுக்கிறார்கள். நம் மாதிரி வைரத்தை வைக்கும் இடத்தில் தான் குப்பையையும் வைக்கிறார்களா? அவர்களின் சென்டிமென்ட் என்ன? அவர்கள் படைப்பின் அளவுகோல் என்ன? அவர்கள் காதலின் எல்லை என்ன? இப்படி எத்தனை என்ன என கேள்வி கேட்டாலும் அதற்கான பதில் கிடைக்க எவ்வளவு பிரயத்தனம் எடுக்க வேண்டும். எவ்வளவு DVD கடை ஏறி இறங்க வேண்டும். அப்படியே எடுத்தாலும் அது 'அந்த' மாதிரி படமாக இருந்தால், மனைவியிடமும் குழந்தையிடமும் வாங்கிக் கட்டிக் கொள்ள தயாராக இருக்க வேண்டும். இவ்வளவு கஷ்டம் தேவையா? கண்டிப்பாக தேவையில்லை.
அப்படியே ஜாலியா ஞாயிற்றுக்கிழமை (07-ஜூன்-2009) ஈவினிங் கெளம்பி எல்டாம்ஸ் ரோட்டில் இருக்கும் பார்வதி ஹாலுக்கு வந்திடுங்க. சென்னை பதிவர்கள் குழு, இலவசமாக உலக சினிமாவின் தலைசிறந்த படங்களை வெள்ளை ஸ்கிரீனில் காட்டுகிறார்கள். சென்னை பதிவர்கள் குழுவின் அடுத்த முயற்சி. ஆதரவு தாருங்கள். உங்கள் மனம் கவர்ந்த பதிவர்களையும் சந்தித்து நண்பர்கள் ஆக்கிக் கொள்ளுங்கள். இது ஒவ்வொரு வாரமும் தொடரும்
ஒரு கோக் விளம்பரம் பார்த்து இருக்கிறீர்களா?. ஒரு கடை காத்து வாங்கிக் கொண்டு இருக்கும். கோக் வாங்கினால் சமோசா இலவசம் என்று ஊழியன் சோர்வாக வெளியே ஒரு போர்டு வைப்பான். அதை கம்பீர் இப்படி மாற்றுவார், "ஒரு கோக் வாங்கினால் நண்பன் இலவசம்". காத்து வாங்கிக்கிட்டு இருந்த கடை அப்படியே கூட்டத்தில் அள்ளும். அதே போல் உங்க ரசனைக்கு ஏற்ற படங்கள் இருக்கிறதோ இல்லையோ, நாலு நல்ல நண்பர்கள் கண்டிப்பாக கிடைப்பார்கள். அட்லீஸ்ட் ஒரு நண்பன், அதுக்கு நான் கியாரண்டி.
இந்த மாதிரி பதிவு போடுமாறு அன்பு கட்டளை இட்ட தோழருக்கு உளமார்ந்த நன்றிகள்!
நாள்: 07-ஜூன்-2009, 5.00PM
இடம்: பார்வதி ஹால், எல்டாம்ஸ் ரோடு, சென்னை
லேண்ட்மார்க்: கிழக்கு பதிப்பகம் எதிரில்.
தொடர்பு: கணேஷ் 98418 63306
உன் ஃபோன் நம்பர போடுற அளவுக்கு நீ பெரிய ஆளா என்று யாரும் கேட்க வேண்டாம். இதுவும் ஒரு டெம்ப்ளேட் மாதிரி. எனக்கு ஒண்ணும் தெரியாது. மேலதிக விபரத்திற்கு எனக்கு கால்... பண்ண வேண்டாம். மீறி பண்ணினால், நான் தோழருக்கு கால் டைவர்ட் செய்வேன். டெரர் ஆயிடூவீங்க.. ஜாக்கிரதை.. :)
*******************
உலக சினிமாவைக் கொண்டாடுவோம்... வாங்க!!
Labels:
Bloggers Meet,
World Cinema
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
oru grouppa thanya alayaraanga...
கட்டாயம் கால் பண்றேன் மச்சி
ஹலோ டைம் என்னனு போடவே யில்லை
:-))
விக்ரமன் படத்துல இந்த வசனங்களை கூட சகிச்சுக்கலாம்..
ஆனா ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை அனைத்து படத்திலும் வரும் ஒரே மாதிரியான சகிக்க முடியாத இசை!! யப்பா! முடியலடா! சாமி..தாங்காது
//அதிஷா said...
ஹலோ டைம் என்னனு போடவே யில்லை//
டைம் சேர்த்தாச்சி..
//கட்டாயம் கால் பண்றேன் மச்சி//
"என்ன தான் நீ வெட்டியா இருந்தாலும் உன் செல்லுல இருந்து உன் நம்பர்க்கு கால் பண்ண பிஸி டோன் தான் வரும். "
இந்த SMS ஜோக் நான் நினைவுக்கு வருகிறது மச்சி..
நன்றி அதிஷா..
கட்டாயம் கால் பண்றேன் அண்ணா
சரியா இரவு 12 மணிக்கு கால் பண்ணுறேன்...
நீங்க வெறும் கணேஷா ...இல்ல....
கண்டிப்பா பாக்கலாம்
//அந்த செடியில கூட ஒரு பூ பூத்தவுடனே இன்னொரு பூ பூக்கிறது இல்லையா, அது மாதிரி நீங்க ஏன் உங்கள மாத்திக்ககூடாது.."//
அடுத்த பூ பூக்கும்போது வந்து கலந்துகொள்கிறேன் தல..,
Post a Comment